16 வயது இளம்பெண் கற்பழித்து எரிக்கப்பட்டுள்ளார். கற்பழித்தால் 101 தோப்புக்கரணமும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் கொடுத்தால் போதும். இந்த தீர்ப்பைக்கூட ஏற்கமுடியாமல் ஆத்திரப்பட்டு கற்பழித்த கும்பல் அந்த 16 வயது பெண்ணை உயிரோடு எரித்துக் கொலைசெய்த சம்பவம் பா.ஜ.க ஆளுகின்ற ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
உன்னாவ் மற்றும் கதுவா சம்பவங்கள் நாட்டையே உலுக்கினாலும், பலாத்கார சம்பவங்கள் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை என்பதையே, பா.ஜ.க அரசு இது தொடர்பாக ஆக்கபூர்வமாய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் சட்ரா மாவட்டம் ராஜா கந்துவா எனும் கிராமத்தில் 8 ம் வகுப்பு படித்த, 16 வயது சிறுமியை தனது உறவினரின் திருமண வீட்டிலிருந்து தூக்கிச்சென்று 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். உறவினர்கள் பஞ்சாயத்தில் முறையிட கற்பழித்தவர்களுக்கு 101 தோப்புக் கரணமும் , பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடாக அளிக்கும்படியும் ஊர் பஞ்சாயத்து உத்தரவிட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த குற்றவாளிகள், பாதிக்கப்பட்டப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அந்தச் சிறுமியை உறவினர்கள் கண்முன்னே உயிரோடே தீவைத்து எரித்துள்ளனர்.
மைனர் பெண்கள் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக பராளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவந்ததாக அறிவித்து பெருமை பட்டுக்கொள்ளும் மத்திய அரசு, நடைமுறையில் தொடருகின்ற கற்பழிப்புகளை தடுக்க யாதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை.



No comments:
Post a Comment