30.5.21

பெரியபாண்டி அவர்களுக்கு வீரவணக்கம்

காவல்துறையும் சட்டங்களும்தான் எளிய மனிதர்களுக்கு பாதுகாப்பு. அது பலவீனம் ஆகிவிடாதபடி பாதுகாக்க வேண்டியதில் மக்கள் / போராளிகள் எல்லோருக்கும் பொறுப்புள்ளது. அதில் குறையிருப்பின் அதை எதிர்த்துத்தான் போராடவேண்டுமேதவிர மொத்த காவல்துறையையும் பலவீனப்படுத்துவது ஜாதி மத வெறி மிகுந்த இந்த பிற்போக்கான நாட்டில் மிக மிக ஆபத்தானதாகவே ஆகும்.

வட மாநில காவல்துறையினர் நம் காவல்துறை அளவிற்கு எதிலும் அக்கறை காட்டுவதில்லை என்பதும், இனி வரும் நாட்களில் எல்லா போலிசாரும் கடமைக்காகவே ஈடுபாடின்றி ஒப்புக்கு பணிபுரியும் வாய்ப்பு அதிகம் என்பதையும் சில காவல்துறை நண்பர்களிடமிருந்து கேட்பது மிக வருந்தத்தக்கது.
14.12.2017



வீர மங்கைகள்

ஏற்ற கொள்கைக்காக ஈனமானத்தை துறக்கவும் துணிந்து வரவேற்கும் RK நகர் கொள்கை வீர மங்கைகள்...!!!

12.12.2017



பாரதி யார்?

 ''''ஆன்ற மொழிகளுக்குள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் ''''.
சீரிய சிந்தனை !
நேரிய பார்வை !
வீரிய உணர்வு !
பாரிய நோக்கு !
கூரிய மதி படைத்த "ஆரிய" பாரதியின் பாடல்கள் சில :
1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
2.ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்
ஆரிய நாடு எது?
3.பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்…….
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடென்றே அறி
ஆரியர் யார்?
4.சங்கு என்ற பாடலில்………………
பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்
ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!
5.பாஞ்சாலி சபதப் பாடலில்…………………
ஆரிய வேல் மறவர் – புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்
சீரியல் மதிமுகத்தார் – மணித்
தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்
6.வாழிய செந்தமிழ் பாடலில்…………………..
அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!
பாரத மாதா = ஆரிய மாதா
7.பாரத மாதா என்ற பாடலில்…………………….
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருட வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்
சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்
8.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்………………….
அணி அணியாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?
9.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…………… (மொகலாயர் பற்றி)
பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்
ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக
(பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)
10.லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்………………..
சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு
(சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)

11.12.2017



மிகக் கொடுமையான சோகம்

"தற்போது சென்னையிலேயே மிகக் கொடுமையான சோகம் யாருடையதெனில், ரா.கி.நகர் இடைத்தேர்தலில் வாக்கு பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுடையதே"

11.12.2017

RK நகர் தொகுதி மக்களின் தகுதி



ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் கட்சிகளின் தகுதி மட்டுமல்ல, அந்தத் தொகுதி மக்களின் தகுதியும் தெரியவரும்.

11.12.2017

செத்துட்டாங்களான்னு கன்ஃபார்ம் பண்ணவா?

எதுக்கு மாமி? எல்லாரும் செத்துட்டாங்களான்னு கன்ஃபார்ம் பண்ணவா?

10.12.2017



உண்மையான அதிமுக தலைவர்

கலைஞர் மீண்டு வந்து யாரை எதிர்த்து அறிக்கை வெளியிடுகிறாரோ அவர்தான் உண்மையான அதிமுக தலைவர். அதுவரைக்கும் யார்வேண்ணாலும் அப்படி சொல்லிக்கலாம்.

10.12.2017

தலையை சீவினால் 1 கோடி

திருமாவின் தலையை சீவினால் 1 கோடி பரிசாமே. ஒரு சீப்பு வாங்க 5 ரூவா போதாதா?
 
09.12.2017



சனியின் சிறப்புத் தூதர்கள்

சனி பகவான் தன் ஒட்டுமொத்த சக்தியையும் இறக்கி தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைத்த சிறப்புத் தூதர்கள். ஒருவேளை, ஏழரை சனீஸ்வரனேகூட பெருமையுடன் பொறாமைப்படக்கூடும் இவர்களைக் கண்டு.

08.12.2017




மக்கள் முகநூலில், நீதிபதிகள் நீதிமன்றத்தில்

மக்கள் முகநூலில் கருத்து சொல்லிக்கொண்டிருக்க, நீதிபதிகளும் நீதிமன்றத்தில் அமர்ந்து கருத்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நீதியும் நியாயமும் நாளுக்குநாள் பாடையை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

06.12.2017



விதி? மதி?

கர்மா என்பதும் பாவம் புண்ணியம் என்பதெல்லாமும் ஹிந்து மதம் பரப்பிய மிகப்பெரிய கற்பனை. விதியை மதியால் வெல்ல முடியுமா? முடியாதா? எல்லாமே விதிப்படிதான் என்பது உண்மையெனில், விதியை வெல்வது என்பது எப்படி உண்மையாகும்? அல்லது விதியை வெல்வது என்பதும் விதியெனில் வெல்வது என்பது எப்படி உண்மையாகும்?

06.12.2017


விஷால் வந்தா என்ன? எவன் வந்தா என்ன?

எவன் தேர்தலில் நின்னா என்ன? உங்ககிட்ட உண்மையான அரசியல் செயல்பாட்டுத் திறமை இருந்தா நீங்க எதுக்கு கண்டவனுக்கெல்லாம் பயப்படனும்?

தமிழ் தமிழன்னு மீடியாவுல பேசறானுங்க. "#ஜாதியா? #நீதியா?"ன்னு வந்தா மனசாட்சியே இல்லாம ஜாதிப் பக்கம் சைலன்ட்டா ஒதுங்கறானுங்க.
இதுக்கு விஷால் வந்தா என்ன?
எவன் வந்தா என்ன?

05.12.2017

"அண்ணாதுரை" பத்திரிகையாளர் சந்திப்பில்

இன்று காலை "அண்ணாதுரை" பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநருடன்...

01.12.2017



 



விளம்பரப்பூனை விஷால்

 நடிகர் / தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள். ஒரு ஆணியும் இன்னும் பிடுங்கவில்லை. இதில் RK நகர் தொகுதியிலும் போட்டியாம்.

எலி பிடிக்கும் திறனற்ற விளம்பரப்பூனை விஷால் ரெட்டி.

01.12.2017

"அண்ணாதுரை" திரைப்படம்

 நான் இணை இயக்குநராக பணிபுரிந்த "அண்ணாதுரை" திரைப்படம் இன்று வெளியாகிறது. 

30.11.2017


தவாக தோழர்களுக்கு பாராட்டுகள்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ராமேசுவரத்தில் மிக சிறப்பாக #மாவீரர்_நாள் நிகழ்வை நடத்த உழைத்த செயல்வீரர் சகோதரர் புலேந்திரன் கா.முருகானந்தம் அவர்களுக்கும் மற்ற தோழர்களுக்கும் பாராட்டுகள்.

29.11.2017