22.7.17

NEET 2017 லாபம் யாருக்கு...?

மொத்தம் 6027 மருத்துவ இடங்களில்,

SC மாணவர்கள் பெற்ற இடங்கள் ​82,

ST மாணவர்கள் பெற்ற இடங்கள் 11.

கிட்டத்தட்ட 1500 SC, ST மக்கள் மருத்துவர் ஆவதை தடுத்திருக்கிறது நீட் தேர்வு.

BC, MBC ரொம்ப மகிழ்ச்சியடைய வேண்டாம். அதிக எண்ணிக்கையில் மருத்துவ படிப்பை இழந்தது நீங்கள் தான்.

"இனி மருத்துவமனைகள் மேலும் மிகப்பெரிய பணம் கொழிக்கும் தொழிற்சாலைகளாக மறப்போகிறது"

21.7.17

NEET

"இத்தனை கட்சிகள் தலைவர்கள் இருந்தும் இந்தியாவில் தமிழ்நாட்டின் கல்வி உரிமையும் பறிபோனது"

தமிழ்நாடு உயர் நீதிமன்றம்...?

நீதிபதியாக வேற்று மொழிக்காரனை நியமித்துவிட்டு "தமிழ்நாடு உயர்நீதிமன்றம்" என்பது நியாயமா?

NEET

"தமிழர்களின் வரிப்பணத்தில் கட்டிய 22 அரசு  மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 05% மட்டுமே தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்காம்"

மீதி...?

"கற்க" கல்வி அறக்கட்டளை

நண்பர்களுக்கு வணக்கம்...!!!

இன்று (18-07-2017) மாலை 5 மணிக்கு சென்னை க.க.நகரில் "கற்க" கல்வி அறக்கட்டளை சார்பாக நடக்கவிருந்த " 1000 மாணவர்களுக்கு உதவி & காமராசர் பிறந்தநாள் விழா" வேறொரு நாளில் நடத்தும்பொருட்டு தள்ளி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

16-07-2017 அன்று கும்மிடிப்பூண்டி தமிழீழ அகதிகள் முகாம் சென்று உதவி தேவைப்படும் 180 மாணவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் நமது தோழர்கள். இதேபோல் புழல் தமிழீழ அகதிகள் முகாமிலிருந்தும் மாணவர்களை தொடர்புகொள்ள வேண்டியுள்ளது.

மொத்தம் சுமார் 1000 மாணவர்களுக்கு உதவ திட்டமிட்டிருப்பதாலும், GST வரிவிதிப்பு முறையால் புத்தகப்பைகளை சிறுக சிறுக வாங்கி சேகரித்து தயார் செய்யவேண்டி இருப்பதாலும் நிகழ்ச்சியை திட்டமிடபடி நடத்த மேலும் சில நாட்கள் தேவைப்படுகிறது.

உதவ விருப்பமுள்ள நண்பர்கள் கீழ்க்குறிப்பிட்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்களால் இயன்றளவு உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் மொழி வளரவும், தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவும், எளியோருக்கு உதவும் நல்லெண்ணமும் கொண்ட சமூக அக்கறையாளர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்கொடை வழங்குவதற்கான வங்கி விவரம் :

KARKA,
A/C NO : 62418336742,
STATE BANK OF HYDERABAD,
IFSC code – SBHY0020946

தொடர்புக்கு :

“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார்,
க.க.நகர், சென்னை – 78.

கரு.அண்ணாமலை : 94440 11124
குமணன்                    : 98413 55818

நன்றி...

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமா?

பாகிஸ்தான், பதான்கள் என்கிற பழங்குடியினர் போர்வையில் கஷ்மீரை கைப்பற்ற திட்டமிட்டபோது நடுவில் காப்பாற்ற போன இந்தியா மன்னர் ஹரிசிங்கோடு செய்து 1947 அக்டோபர் 26 அன்று இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது இதன் சாரம் என்னவெனில்,

1. பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகியன மட்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்,

2. ஊடுருவல்காரர்களை விரட்டிய பின் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்,

3. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்தியாவுடனான இந்த இணைப்பு இறுதியாகும்

இதனடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை நேரு வானொலியில் நவம்பர் 2 அன்று அறிவித்தார்

ஆனால் 1956 நவம்பர் 17 ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்டது

ஆனால் 1957 ஜனவரி 27 அன்று ஐ.நா சபை “ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டத்தை எந்த வகையிலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒருமித்த கருத்தாக கருத முடியாது” என்ற அறிவித்தது. அதாவது இந்த இணைப்பை ஐ,நா சபை அங்கீகரிக்க வில்லை

இன்றுவரை கஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமைக்கான கருத்துக்கணிப்பு நடத்தபடவே இல்லை.

ஆசை

விருப்பமாகத்தான் இருக்கிறது …..

பிறர் மனம் புண்படாமல்
பேசத்தான் ஆசையாக இருக்கிறது
உண்மையை நியாயத்தை
எப்படி பேசாமல் இருப்பது ?

யாரோடும் பகைமை பாராட்டாமல்
வாழத்தான் ஆசையாக இருக்கிறது
கண்ணெதிரே நடக்கும் அநீதிகளை
எப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது ?

எச்சூழலிலும் கோபம் தலைக்கேறாமல்
பொறுத்திடத்தான் ஆசையாக இருக்கிறது
கடையனுக்கும் கடையனை ஏறிமிதிக்கையில்
எப்படிச் சீறிச்சினந்தெழாமல் இருப்பது ?

சட்டத்திற்கு அடங்கிய குடிமகனாய்
இருக்கத்தான் ஆசையாக இருக்கிறது
ஆதிக்க அதிகாரம் காப்பதே சட்டமாயின்
எப்படி கொதித்தெழாமல் இருப்பது ?

பிக்பாஸ்

அப்பல்லோ மருத்துவமனையில் என்ன நடந்தது? எப்படி நடந்தது? வெங்கையா நாயுடுக்கு ஏன் தமிழ்நாட்டு மேல் திடீர் அக்கறை? சிறையில் ராம்குமாருக்கு என்ன நடந்தது? எப்படி நடந்தது? அந்த 570 கோடி கண்டெய்னர் இப்ப எங்கே உள்ளது? கல்வி நிலையங்களின் கொடுமையால் மாண்டுபோன மாணவ மாணவிகளின் மரணத்திற்கு வழங்கப்பட்ட நீதி என்ன? இனி அப்படி எதுவும் நடைபெறாமல் இருக்க வழி என்ன? ஜாதியின் பேரால் நிகழ்த்தப்படும் தொடர் ஆணவக்கொலைகளுக்கு எதிராக அரசின் மௌனம்? மாநில மொழிப் பாடங்களை படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்? ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் யாராருக்கு எவ்வளவு லாபம்? ஒரே தலைமுறையில் வளங்களை சுரண்டி நிலங்களை பாலையாக்கினால் இனி  வாழவரும் அடுத்த தலைமுறைகளின் கதி?

இப்படி கோடிக்கணக்கான பேர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தேடவும் பதில் தரவும் வக்கற்ற ஊடகங்களும், ஊரெங்கும் பிக்பாஸ் பற்றிய பேச்சென்பதும் உணர்த்துவது என்னவென்றால் அடிப்படையில் இது இன்னும் நாடாகவே ஆகவில்லை; இன்னமும் யாருக்கோ காலணி நாடாகவே இருக்கிறது என்பதுதான்.

"உள்ளூரில் இருந்தே இந்தியாவை ஆண்டுகொள்ளலாம் என்றுதான் 1947-ல் வெள்ளையர்கள் வெளியேறி இருக்கிறார்கள்"

எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வு

"பணமில்லையென்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 வருடமாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சட்டசபையில் மேசை தட்ட மாதம் 1 லட்சம்"

வல்லரசு..?

"இவ்வளவு பெரிய ராணுவம், காவற்துறை.
.
இருந்தும் பயப்படுவதோ போராளிகளின் துண்டறிக்கைகளுக்கு...!!!

இதுலவேற
"சீனாவோட போர்"
"பாகிஸ்தானோடு போர்...!!!"

கோயிலுக்குப் போனால்...

"அந்த ஊரு சிவன் கோயிலுக்குப் போனா நல்லது நடக்குமாம்.

அந்த ஊருலயே பொறந்தவங்களுக்கெல்லாம் நல்லதேவா நடக்குது?"