21.7.17

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமா?

பாகிஸ்தான், பதான்கள் என்கிற பழங்குடியினர் போர்வையில் கஷ்மீரை கைப்பற்ற திட்டமிட்டபோது நடுவில் காப்பாற்ற போன இந்தியா மன்னர் ஹரிசிங்கோடு செய்து 1947 அக்டோபர் 26 அன்று இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது இதன் சாரம் என்னவெனில்,

1. பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகியன மட்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்,

2. ஊடுருவல்காரர்களை விரட்டிய பின் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்,

3. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்தியாவுடனான இந்த இணைப்பு இறுதியாகும்

இதனடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை நேரு வானொலியில் நவம்பர் 2 அன்று அறிவித்தார்

ஆனால் 1956 நவம்பர் 17 ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்டது

ஆனால் 1957 ஜனவரி 27 அன்று ஐ.நா சபை “ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டத்தை எந்த வகையிலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒருமித்த கருத்தாக கருத முடியாது” என்ற அறிவித்தது. அதாவது இந்த இணைப்பை ஐ,நா சபை அங்கீகரிக்க வில்லை

இன்றுவரை கஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமைக்கான கருத்துக்கணிப்பு நடத்தபடவே இல்லை.

No comments:

Post a Comment