அநேக ஆன்மீக விஷயங்களைக் கடந்தபின்னர்தான் நாத்திகம் முளைக்கிறது.
நாத்திகவாதிகளின் மீதான வெறுப்பும், நாத்திககக் கருத்துக்களின் மீதான பண்பற்ற அணுகுமுறையும், விவாதங்களுமே வெளிப்படுத்திவிடுகிறது ஆன்மீகத்தின்; ஆன்மீகவாதிகளின் சாதாரண முகத்தை.
ஆன்மீகம், மிகப்பெரிய கற்பனை.
சற்று கேள்விகளிலிருந்தும் ஆன்மீகத்தை அணுகுங்கள். மனித அறிவிற்கு அதுவே அழகு.
முதலில் ஆன்மீகப் போர்வையில் மக்களின் அறிவை சீரழிக்கும் காட்டேரிகளை இல்லாதொழிக்க கடவுளிடம் சொல்லுங்கள்.
கடவுளுக்காகவும் மதங்களுக்காகவும் மட்டுமன்றி கொஞ்சமேனும் மக்களுக்காகவும் போராடச் சொல்லுங்கள் பார்ப்போம் சாமியார்களையும் ஆன்மீகவாதிகளையும்.
ஆன்மீக பூமி என்று கதையளக்க்கப்படும் இந்த நாடு சமூக ஒழுக்கத்தில், சுற்றுப்புற சுகாதாரத்தில், கல்வியறிவில், பாலியல் அணுகுமுறையில்; சமத்துவத்தில் இன்னும் மேல்நாடுகளைவிடக் கீழாய் இருப்பதைக் கவனியுங்கள்.
No comments:
Post a Comment