சாதியை ஒழிக்க வழி என்ற அம்பேத்கரின் நூலை மிக ஆய்ந்து படியுங்கள். அவர் தெளிவாக விளக்கியுள்ளார். பிற மக்களை குறை சொல்வதால் எதுவும் மாறிவிடாது. அவர்களும் ஜாதி என்ற கற்பனையில் அறியாமையில் வாழ்கிறார்கள், தொடர் அறிவு பிரச்சாரம் ஒன்றே மாற்றத்திற்கு வழி என.
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமையை யாவரும் ஏற்கும் நிலையை நோக்கி வழிகோல வேண்டும். ஒரே ஜாதியில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஜாதி வெறியர்களுக்கு எதிராக திருப்பி வெறிநாய்களை தனிமைபடுத்த வேண்டும்.
இயக்குநர் ரஞ்சித் அடிக்கடி சொல்வதைப்போல "கலந்துரையாடல்" நடக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் அல்லாது யாருக்கு அநீதி நடந்தாலும் வலுவாக குரல் கொடுத்து அவர்களுக்காகவும் போராடி கலக்க வேண்டும். எல்லோரையும் பொது அநீதிக்கு எதிராக திரும்பும் மனநிலைக்கு கொண்டுவர வேண்டும். ஆதிக்க ஜாதியில் பிறந்த ஜனநாயகவாதிகளை குறைசொல்வதை விட்டுவிட்டு அந்த எண்ணிக்கையை மேலும் கூட்ட வேலை செய்ய வேண்டும். அவர்களினூடாகத்தான் அங்கு ஊடுருவ முடியும்.
விமர்சனத்தை ஆக்கப்பூர்வமாக வைப்பதே மாற்றத்திற்கான வழி.
No comments:
Post a Comment