6.8.18

மியான்ம‌ர்

மியான்ம‌ர் - நீண்ட‌ கால‌மாக‌ க‌ம்யூனிஸ்டுக‌ளின் வெற்றிக‌ர‌மான‌ ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ ஒரேயொரு தெற்காசிய‌ நாடு.

ப‌ல‌ மொழிக‌ள் பேசும் ப‌ல்லின‌ போராளிக‌ளை ஒன்று திர‌ட்டி போராடிய‌ ப‌ர்மிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி, அதே கார‌ண‌த்தால் உடைந்து போன‌து துர‌திர்ஷ்ட‌மான‌து. இறுதி வ‌ரையில் அர‌ச‌ ப‌டைக‌ளால் கைப்ப‌ற்ற‌ முடியாத‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தை வைத்திருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி, அதே பிர‌தேச‌த்தை சேர்ந்த‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தோற்க‌டிக்க‌ப் ப‌ட்ட‌து.

இந்த‌க் கிள‌ர்ச்சிக்குப் பின்னால், டெங்சியோபிங் த‌லைமையில் உருவான‌ முத‌லாளித்துவ‌ சீனா இருந்த‌து. ப‌ர்மிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் த‌லைவ‌ர்க‌ளுக்கு சீனாவில் அடைக்க‌ல‌ம் கொடுத்து விட்டு, முன்பிருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேசத்‌தில் குறுந் தேசிய‌வாத‌ ச‌க்திக‌ளை தூண்டி விட்ட‌து. முன்னாள் க‌ம்யூனிஸ்ட் போராளிக‌ள், தீவிர‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

மியான்ம‌ர் நாட்டில் ந‌ட‌க்கும் வ‌ல்ல‌ர‌சுப் போட்டி இன்று நேற்று தொட‌ங்கிய‌த‌ல்ல‌. பிரித்தானியா, இந்தியா, சீனா, அமெரிக்கா, ர‌ஷ்யா எல்லாமே க‌ட‌ந்த‌ கால‌த்தில் த‌ம‌து செல்வாக்கை செலுத்தி வ‌ந்துள்ள‌ன‌.

கால‌னியாதிக்க‌ கால‌ முடிவில் இருந்து தொட‌ரும் க‌தையின் புதிய‌ அத்தியாய‌மே ரொஹிங்கியா இன‌ப் பிர‌ச்சினை. இல‌ங்கையில் ந‌ட‌ந்து கொண்ட‌தைப் போல‌, இங்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம் இர‌ண்டு ப‌க்க‌மும் விளையாடுகிற‌து. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிற‌து.

Kalai Marx
ஆகஸ்டு 31, 2017

மனித சமூகத்தின் அவமானம்

அல்லா என்றொருவன் இருந்தால் மியான்மர் முஸ்லீம் படுகொலைகளை உடனடியாக நிறுத்தட்டும். அங்கு அன்பும் மகிழ்ச்சியும் பரவட்டும்.
 
ஆகஸ்டு 31, 2017
 
 

ஓடாத வண்டிக்கு 2 ஓட்டுநர்கள்

"ஓடாத வண்டிக்கு 2 ஓட்டுநர்கள்"

தமிழ்நாடு 
இபிஎஸ் / ஓபிஎஸ்
 
ஆகஸ்டு 28, 2017

தொடரும் ஜாதிக் கொடூரம்

இது 2017 ம் ஆண்டு. அதாவது அறிவியல் மிகவும் வளர்ந்து அதை அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கும் காலகட்டம். விண்வெளியை மனிதன் கைவசப்படுத்திக் கொண்டிருக்கும் காலம். பரந்து விரிந்து கிடக்கும் பூமியை மனிதன் தன் அறிவால் சிறிய பந்து போல் சுருக்கியுள்ள காலகட்டம்.

ஆனால் இங்கோ கூட்டமாய் சென்று அப்பாவி மக்களின் குடிசையை இன்னமும் ஜாதியின் பேரால் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஜாதிவெறியை வளர்க்க கட்சிகள், தலைவர்கள், தொண்டர்கள். இத்தனை காவல் நிலையங்கள், இத்தனை நீதிமன்றங்கள் இருந்தும் இதெல்லாம் வெளிப்படையாக தொடர்ந்து நடக்கின்றன.

நாகரிகம் உள்ள, சிந்திக்கும் அறிவு உள்ள மனிதர்கள் யாரும் இதை எப்போதும் ஆதரிப்பதில்லை. இதையெல்லாம் நியாயமென்று எவன் பேசினாலும் அவன் மனித ஜென்மமே அல்ல.

தொடர்ந்து தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் தாக்கப்படுகின்றன; கொளுத்தப்படுகின்றன.

காஞ்சிபுரம் அருகே நல்லூரில் நடந்த இது ஏதோ இருதரப்பு மக்களுக்கிடையிலான பிரச்சினை மட்டுமல்ல. இன்றைய சமூகத்தின் அவமானம்.

இதைக் கண்டும் காணாமல், கண்டிக்காமல், தீர்வுக்கு வழி தேட முனையாமல், மாற்ற உழைக்காமல் எவர் தமிழ்த்தேசியம் பேசினாலும் அது ஏட்டு சுரக்காயே.

அனைத்து மக்களையும் அறிவுடையோர்களாக்கி, பூமியில் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு போக வைக்கும் கட்சியும் நற்சிந்தனை கொண்ட தலைவனும் ஆட்சியும் இங்கே ஏற்படும் காலம் எந்த காலமோ?
 
ஆகஸ்டு 27, 2018
 

 

இன்னும் மனிதர்களை மனிதர்களாக ஆக்காத 70 ஆண்டு சுதந்திரம்

"ஜாதி, மதம், பக்தி, காதல், புனிதம், பண்பாடு, கடவுள், விதி, நல்ல நேரம், கெட்ட நேரம், சூனியம், கற்பு, சொர்கம், நரகம், சகுனம், சடங்கு, முன்பிறவி, மறுஜென்மம்....

இயற்கையை தவறாக விளங்கிக்கொண்டு இப்படி எதற்கும் பயனற்ற அற்ப காரணங்களால் தினமும் நடக்கும் தனி மனித படுகொலைகளின் மூலம் இந்தியா ஒரு காட்டுமிராண்டிகளின் நாடு என்பது உறுதிபட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கே இருக்கும் கோயில்கள், கல்வி நிலையங்கள் எல்லாமும் தொழில் நிறுவனங்களாக இருப்பதன் வெளிப்பாடுதான் இது.

இந்த நாட்டின் 70 ஆண்டுகால சுதந்திரம் இன்னும் மனிதர்களை மனிதர்களாக உணர்த்தி யாவரையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்க சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. எளிய மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.
 
ஆகஸ்டு 26, 2017
 

 

'பெரியார் - காமராசர்' பிறந்தநாள் விழா 2017

'பெரியார் - காமராசர்' பிறந்தநாள் விழா
அனைவரும் வருக...!!!

“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார், க.க.நகர், சென்னை – 78.

நாள் : 06-09-2017 மாலை 6 மணி
இடம் : க.க. சாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை – 78

காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசை முழக்கத்துடன் துவங்கி சுமார் 1000 மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், திருக்குறள் புத்தகம், பள்ளிப் பைகள் மற்றும் ஊக்க விருதுகள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.

நிறுவனர்கள் :
வீ. பொற்கோவன்
குமணன்

தலைவர் :
வழக்கறிஞர் ப. அமர்நாத்

செயலாளர் :
கரு. அண்ணாமலை

துணைத் தலைவர் :
விநாயகமூர்த்தி மாசிலாமணி

துணைச் செயலாளர் :
ராமாபுரம் சுப்பிரமணியன்

பொருளாளர் :
விருகை செல்வம்

தேர்வுக்குழு உறுப்பினர்கள் :

ஜெயசீலன், மணிமொழியான், துரைராசு, கண்ணன், மணிபாரதி கிரேசி விஜயகுமார், மூவேந்தன், சிலம்பு சிவாஜி, தமிழ்ச்சிற்பி, குமார்

உதவி பெறுவோர் விவரம் :

கும்மிடிப்பூண்டி தமிழீழ அகதிகள் முகாம் – 300 மாணவ மாணவியர்கள்

புழல் தமிழீழ அகதிகள் முகாம் - 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி – 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி – 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் அரசு துவக்கப்பள்ளி – 100 மாணவ மாணவியர்கள்

தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் 1000 ரூ பரிசுத்தொகை

தமிழில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காமராசர் விருது மற்றும் 500 ரூ பரிசுத்தொகை

குறிப்பு :

பொதுவுடைமை இயக்கம் / திராவிட இயக்கம் / தமிழ்த்தேசிய இயக்கம் / சாதி மறுப்பு & சுயமரியாதை திருமணம் புரிந்தோர் / முற்போக்கு அமைப்புகள் / துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்களின் குழந்தைகளுக்கு உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும். (உதவி வேண்டுவோர், அரசு பள்ளிகள் / தமிழ்வழிக் கல்வி பயில்பவர்களாக இருத்தல் வேண்டும்.)

***

“கற்க” கல்வி அறக்கட்டளை, தமிழ்வழிக் கல்வி உதவி மையம் சார்பாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும்
கல்விப் பணிகளின் விவரம் :

தொடக்கம் : 10-05-2013

01. ரயில்வே (RRB) loco pilot தேர்வு சிறப்பு இலவசபயிற்சி – 2014

02. குடிமைப்பணி தேர்வுக்கு எழுதும் மாணவர்களுக்கு study circle –2015

03. உதவி ஆய்வாளர் தமிழ்நாடு காவல்துறை தேர்வு – இலவச பயிற்சி வகுப்பு –2015

04. அஞ்சல்துறை தேர்வு (postal dept ) - இலவச பயிற்சி வகுப்பு – 2015

05. 2015 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் மஞ்சைமகத்து வாழ்க்கை பள்ளி சீரமைப்பு - 2016

06. கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - இலவச பயிற்சி வகுப்பு –2016

07. 2016 புயலால் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி சீரமைப்பிற்கு தொகை 65,000 ரூபாய் மற்றும் 35,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. - 2016

08. குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி smart class –2017

08. துரைப்பாக்கம் கண்ணகிநகர் சிறுவர்களுக்கு மாலை நேர தனிப்பயிற்சி வகுப்புகள் –2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.

09. வியாசர்பாடி கன்னிகாபுரம் பள்ளி மாணவ மாணவியர்க்கு தனிப்பயிற்சி -2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.

தமிழ் மொழி வளரவும், தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவும், எளியோருக்கு உதவும் நல்லெண்ணமும் கொண்ட சமூக அக்கறையாளர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்கொடை வழங்குவதற்கான வங்கி விவரம் :

KARKA,
A/C NO : 62418336742,
STATE BANK OF HYDERABAD,
IFSC code – SBHY0020946

தொடர்புக்கு :

“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார்,
க.க.நகர், சென்னை – 78.

கரு.அண்ணாமலை : 94440 11124

குமணன் : 98413 55818
 
ஆகஸ்டு 24, 2017
 
 

அண்ணாதுரை பாடல் படப்பிடிப்பு

பாடல் படப்பிடிப்பு இனிதே முடிந்தது. நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டருடன்...
 
ஆகஸ்டு 24, 2017
 
 

கேவலமான அதிமுக

"வரலாறு காணாதளவு மிகக் கேவலமான நிலையில் தமிழக ஆட்சி"
 
ஆகஸ்டு 20, 2017
 
 

200 கீமீ-க்குள் 5 அணைகள்...?

செய்தி:

"காவிரியில் 200 கீமீ-க்குள் 5 அணைக்கட்டுகள். தமிழ்நாடு பாலைவனமாகிறது."

அதிமுக எந்த மாநில கட்சி? 
எதிர்க்கட்சின்னு ஒன்னு இருக்கா? 
தமிழ்நாட்ல மொத்தம் எத்தனை கட்சிகள்? தலைவர்கள்? 
எதுக்குய்யா இன்னும் இத்தனை கட்சிகள்?...
 
ஆகஸ்டு 19, 2017
 
 
 
 

சங்கிகளின் இடஒதுக்கீட்டுப் பார்வை

எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா, ஆனா எனக்கு சீட்டு கிடைக்கல, என்னை விட கம்மி மார்க் எடுத்த பொண்ணு டாக்டர் சீட் கிடைச்சிருச்சு. பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு முறை வரணும்

இந்த பதிவு எழுதிய தோழருடன் அந்தபக்கம் விவாதம் ஓடுது. ஆனா அது அவர் ஒருவர் மனநிலை மட்டுமல்ல. பல சங்கிகளும் அப்படி தான் பேசிட்டு திரியுங்க

எனக்கு கிடைக்கல என்பதில் எவ்வளவு வலி. ஆனால் பல நூறு ஆண்டுகளகாக செருப்பு அணியக்கூடாது, மேல் சட்டை அணியக்கூடாது, பெண்கள் மேலாடை அணியக்கூடாது. பண்ணையம் என்னும் அடிமை தொழில் தான் செய்யவேண்டும் என்று ஒடுக்கிவைக்கப்பட்ட அந்த சமூகத்தில் ஒரு பெண் டாக்டர் ஆவது அந்த சமூகத்திற்கே எவ்வளவு வலி நிவாரணி..

எதுக்கு பல நூற்றாண்டுகளா போகனும். இப்பவும் பல கிராமங்களில் இரட்டை குவளை இருந்துட்டு தான் இருக்கு. ஒடுக்கப்பட்ட பிரிவினரை வயசு வித்தியாசம் இல்லாமல் சிறுவன் கூட பெயர் சொல்லி அழைக்கும் அவலம். சாதி பெயருடன் கெட்டவார்த்தை சேர்த்து அழைக்கும் அவலம். ஊர் தெருவுக்குள் பிணம் எடுத்துசெல்லக்கூடாது. சாமி ஊர்வலம் அவர்கள் தெருவுக்கு வராது என்று எத்தனை பிரிவினைகள்

யாரோ ஒருத்தர் பொருளாதாரரீதியா வளர்த்துட்டாருப்பா, நீங்க அந்த வீட்டில் பெண் எடுத்துக்கொள்கிறீர்களா? அல்லது பெண் கொடுக்கமுடியுமா? இப்போ உங்களுக்கு எது தடை? அதான் அவர்கள் பொருளாதாரரீதியா மேலே தானே இருக்காங்க. அப்போ தடை வேற சாதி/ அப்படி தானே. அது எந்த சாதியாக இருந்தாலும் நீங்கள் சாதி பார்ப்பீர்களேயானால் அந்த சாதிய சிந்தனை உங்களை விட்டு அகலும் வரை சாதியரீதியான இடஒதுக்கீடு இருந்தே தீரும்.

ஒரு சாதி மறுப்பாளன் ஏன் சாதியரீதியிலான இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் எங்கிறார்கள். சாதியின் பெயரால் ஒரு சமூகத்தை ஒடுக்கி வைத்து, தாழ்ந்தபட்டவர் என்ற மனநிலைக்கு தள்ளிய பொழுது அந்த புத்தி இருக்கவேண்டும். நான் சாதிமறுப்பாளனா ஆக்க்கரணமே உங்களை போன்ற ஆதிக்கசாதிவெறி பிடித்த சாக்கடைகள்

Raj Arun
 
ஆகஸ்டு 18, 2017

ஆன்மீகம் - அறிவியல்

ஒருவனை விஷப்பாம்பு தீண்டிவிட்டால் உடனடியாக ஆடுதீண்டாப்பாளையை தின்னக் கொடுத்து விஷத்தை முறிக்கச் செய்து அவன் உயிரைக் காப்பாற்றலாம். அதே அவனிடம் ஆடுதீண்டாப்பாளையை நினைத்துக்கொண்டே இருக்கச் சொன்னால் விஷம் முறியுமா? உயிர்தான் பிழைக்குமா?

உழைப்பவர்களும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களும்தான் இந்த பூமியின் எல்லா நல்ல / தீய விளைவுகளுக்கும் காரணம். இந்த உலகை; வாழ்க்கையை முழுமையாய் ரசிக்க மதங்களோ ஆன்மீகமோ தேவையில்லை. குறைந்தபட்ச அறிவியல் பார்வையே போதுமானது.

மத தத்துவங்கள் தங்கள் புரூடாக்களுக்கு ஒவ்வொரு தலைமுறையிலும் விதவிதமான முகமூடிகள் அணிந்துகொண்டே தப்பிப் பிழைத்து வருகிறது.

அறிவியலோ மிக நேர்மையாக தன் குறைகளை ஒப்புக்கொண்டு தன்னை புனரமைத்துக்கொண்டே இருக்கிறது.

"எண்ணங்களே வாழ்வை மாற்றும் என்பது ஆன்மீகம். எண்ணிக்கொண்டே இருப்பதனால் மட்டும் வாழ்க்கை மாறிவிடாது, அதன்மீது 'போதிய' உழைப்புச் சக்தியை செலுத்தினாலே மாறும் என்பது அறிவியல்."

அறிவியல் யதார்த்தமானது. ஆன்மீகம் யாதார்த்தத்திற்கு எதிரானது.
 
ஆகஸ்டு 18. 2017
 

 

'பாரதிராஜா' - போலி மீட்பர்


'பாரதிராஜா' - போலி மீட்பர் 
 
- B.R.மகாதேவன்

பக்கம் 112, விலை 100 ரூ, நிழல் வெளியீடு.

ஒரு இயக்குநரை சந்திக்கச் சென்றிருந்தபோது அவர் அலுவலகத்தில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். படித்துவிட்டுத் தருவதாய் வாங்கி வந்தேன். வாசித்தேன்.

இதில் பாரதிராஜா அவர்கள் இயக்கிய "கருத்தம்மா, முதல் மரியாதை, மண் வாசனை, வேதம் புதிது, பதினாறு வயதினிலே" என்ற திரைப்படங்களைக் குறித்து விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் என்பது ஒரு இயக்குநரின்; கதாசிரியனின் கற்பனை உலகம். அதற்குள் சொல்லப்பட்ட நியதிகளை வைத்து மட்டும் ஒருவருக்கு பிடித்துள்ளது / பிடிக்கவில்லை அல்லது இன்னும் இப்படி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று விமர்சனம் வைப்பது தவறில்லை. ஆனால் அவர் எப்படி இப்படி யோசித்திருக்கலாம்? இப்படித்தான் யோசித்திருக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு அவர்களே தனியாக படம் இயக்கலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை.

இப்புத்தகத்தில் முன்வைக்கப்படும் சில விமர்சனங்கள் யாதெனில்...

* பாரதிராஜாவின் படங்களில் இருப்பது அசலான கிராமங்கள் இல்லை. அவரது கற்பனையில் உருவான போலியான கிராமங்கள்தான். கதாபாத்திரங்களும் அவ்வாறே. கிராமத்துப் படங்களை அவருடைய படங்களை வைத்து அளவிடுதல் கூடாது. 

* 16 வயதினிலே மிக சாதாரணமான படம்.

* அவசியமே இல்லாதபோதும் ஜாதி அடையாளங்களை கதாபாத்திரங்களுக்கு வெளிப்படையாக வைக்கும் வழக்கத்தை கொண்டுவந்தது அவர்தான். 

* இரவு பகல் காலங்கள் பெரும்பாலும் அவர் படங்களில் குழப்பமாகவே காட்டப்பட்டிருக்கும்.

* எந்தப் பிரச்சினையை முக்கியமாக எடுக்கிறாரே அதை நேர்மையாக அணுகாமல் அதிலிருந்து நழுவி வேறொரு முடிவுடன் வழக்கமான தன் அருளுரையுடன் படத்தை முடித்திருப்பார்.

* கிராமங்களில் ஜாதி சார்ந்த பிரச்சினைகளே இல்லாதபடி மறைத்திருப்பார்.

* வேதம் புதிது தெளிவான சிந்தனையில்லாத படம்.

* கருத்தம்மா - சிசுக்கொலையை அழுத்திச் சொல்வதிலிருந்து விலகி நிற்கும் படம்

இப்படி பலவாறாக மேற்சொன்ன படங்களைப் பற்றி விமர்சனம் வைக்கிறார் புத்தக ஆசிரியர். வெறும் விமர்சனம் மட்டும் வைக்காமல், அப்படங்களின் மையப் பிரச்சினை எதுவோ அதை இப்படிக் கையாண்டிருக்கலாம் என்றும் எழுதியிருக்கிறார். அதில் சில நன்றாகவும் இருக்கிறது.

நாம் மிகவும் ரசித்த படங்களை ஒருவர் எந்தக் கோணத்தில் விமர்சனம் வைத்திருக்கிறார் என்று அறியும் ஆவலே இந்தப் புத்தகத்தை வாசிக்க வைத்தது. சில ஏற்புடையதாகவும் பல ஏற்கத்தக்கதல்லாததாகவும் இருக்கிறது.

பல்வேறு விமர்சன கோணங்களை விரும்புபவர்கள் ஒருமுறை வாசிக்கலாம். விரயம் ஒன்றுமில்லை.
 
ஆகஸ்டு 16, 2017

இந்திய சுதந்திர நாள்....?



கேவலம் இந்த 70 ஆண்டில் ஜாதிப் பிரச்சினைகளுக்குகூட தீர்வு ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் ஜாதிவெறி படுகொலைகள் தொடர்கிறது. இதுதான் கல்வியறிவு வளர்ந்ததாய் மார்தட்டிக் கொள்ளும் இந்நாட்டின் பெருமையோ?

மாபெரும் அவமானம்; அவலம்.

ஜாதிகள் அழியக்கூடாது என்றும், இது ஹிந்து மத உரிமை என்றும் சட்டமியற்றி போற்றி பாதுகாக்கும் இதெல்லாம் ஒரு நாடென்று ஆகுமா?


தனியார் கல்வி, தனியார் மருத்துவம், கார்ப்பரேட் முதலாளிகள், போராடினால் மிரட்டப்படும் மக்கள்...

"சுதந்திரத்திற்கு உயிர் நீத்த ஈகியர்களே மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் வரலாற்றை அவர்கள் அர்த்தமற்றதாக்கி விட்டார்கள். தாய் நாடு என்று நம்பிக்கொண்டிருப்பவர்களின் தாய்மொழிக்கு நீங்கள் ஏற்படுத்திய பாராளுமன்றில் அனுமதியில்லையாம்."

"எல்லா ஜாதி மத ஆதிக்க பிற்போக்கு ஹிந்தி சமஸ்கிருத மேலாதிக்க நரிகளிடமிருந்தும் எங்களுக்கு வேண்டும் விடுதலை"

அதுவரை இதுவொரு குருட்டு சடங்கே.
 
ஆகஸ்டு 15, 2017

நல்ல அரசு எது?

"எல்லா மாநில முதல்வர்களும் பிரதமரும் குடியரசு தலைவரும் பாதுகாப்பாளர்கள் யாருமே இல்லாமல் நாட்டில் எங்கும் எந்த மூலையிலும் சுதந்திரமாக என்றைக்கு நடமாடுகிறார்களோ அன்றுதான் மக்களுக்கான நல்ல அரசு இந்தியாவில் அமைந்திருக்கிறது என்று பொருள்"

இதற்கு எத்தனை நூறு வருடங்கள் ஆகுமோ?...

ஆகஸ்டு 15, 2017

வாஸ்து கோளாறு...?


"கிளம்பும்போது எலுமிச்சைப் பழத்தை சரியாக வைத்திருக்க வேண்டும்"

ஆகஸ்டு 12, 2017

வீரமுனை படுகொலை நினைவுநாள்


400-க்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் இலங்கை முஸ்லிம்களால் கொன்று குவிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவுநாள் இன்று.

வீரமுனை பிள்ளையார் கோவிலுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடிய முஸ்லீம் ஊர்காவற் படையினர் ஜிகாத் ஆயுதக்குழுவினரின் கோர தாண்டவத்தால் வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) 27 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

சம்மாந்துறை பிரதேசத்தில் முஸ்லிம்களால் நிகழ்ந்த இனஅழிப்பின் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவர்களை குறிவைத்து உள்ளே நுழைந்த முஸ்லீம் ஊர்காவல் படைகள் பிள்ளையார் கோவிலுக்குள் தமிழர்களை வெட்டியும் சுட்டும் பெரும் படுகொலையை நிகழ்த்தினார்கள்.
 
ஆகஸ்டு 12, 2017

நீதித்துறையில் சீர்திருத்தம் அவசியம் வேண்டும்


"குடந்தையில் 94 குழந்தைகள் எரிந்து சாக காரணமானவர்கள் விடுதலை"

நீதிபதிகளின் வரவு செலவு / சொத்துக் கணக்கு / உறவினர்களின் சொத்து விவரம் என்று எல்லாவற்றையும் மாதாமாதம் தணிக்கை செய்து, நியாயமாக வாழாத நீதிபதிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து கடுமையாக தண்டிக்கிற சட்டம் ஒன்று வந்தாலொழிய இனி நீதியைக் காப்பாற்ற இந்த நாட்டில் வழியில்லையோ என்று தோன்றுகிறது.

பெரியார் சொன்னார்...

"பொய் சொல்லி பல ஆண்டுகள் வாதாடி பிழைப்பு நடத்துகிறவன் திடீரென நீதிபதியாகிவிட்டால் மட்டும் திருந்திவிடுவானா?" என்று.

சென்னை நீதிமன்றத்திலேயே நீதிபதியை கண்டித்து அறிக்கை வாசித்திருக்கிறார் பெரியார். இனி இப்படியெல்லாம் இதெல்லாம் இந்த நாட்டில் நடக்குமா என்பது தெரியவில்லை, வாய்ப்பில்லை.

'நீதித்துறையில் சீர்திருத்தம் அவசியம் வேண்டும்' என்பதே இந்த சூழல் உணர்த்தும் கருத்து.
 
ஆகஸ்டு 10, 2017

பிரதமர் & முதல்வர்களின் முக்கியப் பணிகள்...?

வலுவற்ற; ஏழை எளிய; ஒடுக்கப்பட்ட; நடுத்தர மக்கள் மீதே எப்போதும் கம்பு சுத்துவதுதான் பிரதமர் & முதல்வர்களின் முக்கியப் பணிகளோ?
 
ஆகஸ்டு  10, 2017

ரேஷன் கட்டுப்பாடு

"ஏழை எளிய மக்கள் அடிப்படை உணவுப் பொருட்கள் பெறவும் முட்டுக்கட்டை போடுவதெல்லாம் ஒரு நாடா?"
 
அரசாங்கம் என்பது யாருக்காக?...
 
ஆகஸ்டு 10, 2017

தமிழ்...

'பாராளுமன்றத்துலகூட தமிழ் பேச அனுமதி இல்லையாம்'

என்ன ....க்கு இங்க அந்த தேர்தல வெக்கிறானுங்க? இவனுங்களும் அங்க போய் தூங்கறானுங்க?
 
ஆகஸ்டு 10, 2017

கடவுள்...?

இந்த "சேட்டுகளுக்கு" மட்டும் விசேஷமாய் படியளக்கிறவன் எந்த கடவுள்?
ஆகஸ்டு 08, 2017

திராவிடர் இயக்க எதிர்ப்பு

வரலாற்றைத் திருத்தும் துவக்கப்புள்ளி திராவிட இயக்கத்திலிருந்து துவங்குகிறது. அதைத் தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கு பலமில்லாத நிலையில் அதை குறை சொல்வது நியாயமில்லை.

05% கூட திராவிடக் கருத்தியலில் யாருமில்லை. 95% வீதம் மக்களை ஆள்வது பார்ப்பனீயக் கருத்தியலே. இதை எதிர்க்க தமிழ்த்தேசியத்தில் என்ன அடங்கியுள்ளது? அப்படி பலம் வாய்ந்ததாக அறிவியல்பூர்வமாக இருந்தவொன்று எப்படி பார்ப்பனீயத்தாலும் திராவிடத்தாலும் வீழ்ந்தது?

சிந்திக்க வைக்காத கருத்துக்கள் இல்லாத எதையும் எப்படி கருத்தியலாக இருக்கவியலும்?

பாவம் மக்கள். அவர்களின் கற்பனையான கண்மூடித்தனமான அறியாமையில் கட்டமைக்கப்பட்டுள்ள பார்ப்பனீய ஆன்மீக உலகிலிருந்து விடுவிக்க ஆளைக் காணோம். நாள், நட்சத்திரம், நேரங்காலம், மந்திரம், சூனியம் என்று பயந்துகொண்டு இன்னமும் சமூகம் மாறாமல்தான் கிடக்கிறது.

தேர்தல் அரசியல் முறையின் சீரழிவையும் திராவிடக் கருத்தியலுடன் இணைத்து விமர்சிப்பது, எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்பவர்களுக்கு அவசியமானதாக இருக்கலாம். இந்த மாற்றத்தையும் கொண்டுவர ஆளில்லாமல் கிடந்த சமூகம் இது என்று புரிந்தவர்களுக்கு இது தேவைப்படுவதில்லை.

மொழியை தீவிரமாக வளர்ப்பதால் மட்டும் ஒரு சமூகம் மேன்மையடைந்துவிடுமா?

திராவிட கட்சிகளின் அதே தேர்தல் சீரழிவுப்பாதை அரசியலில் நின்றுகொண்டு சிலரும் தமிழ்த்தேசியவாதம் பேசுகிறார்களே எது சரி?

தமிழ்த்தேசியம் என்பது அரசியல் விடுதலையா? பண்பாட்டு விடுதலையா? இந்தியாவின் காலணியாகவும் பார்ப்பனீய பண்பாட்டு காலணியாகவும் இருப்பவர்களுக்கு யாரேனும் ஏதேனும் கொஞ்சமாவது செயலில் செய்துகாட்டிவிட்டு பெரியாரை விமர்சிக்கட்டும்.
 
ஆகஸ்டு 08, 2017
 
 

அண்ணாதுரை பட இயக்குநர் குழு






இயக்குநர் சீனுவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடங்களில் நடிக்கும்; விரைவில் திரைக்கு வரவிருக்கும் "அண்ணாதுரை" திரைப்படத்தின் படப்பிடிப்பில் எங்கள் இயக்குநர் குழு....

ஆகஸ்டு 04, 2017

ஆடிப் பெருக்கு...?

ஆடிப்பெருக்குக்கு நல்வாழ்த்தாம்.

ஆத்துல தண்ணி வந்தா மகிழ்ச்சியடைவதில் நியாயம். ஆறே வறண்டு கிடக்கும்போதும் மகிழ்ச்சி என்றால் இதை என்னவென்பது?...

ஆகஸ்டு 03, 2017

சீமான் - உறவுகள் இன்னும் உழைக்க வேண்டும்...



இவ்வாறான பல மேடைப் பேச்சாளர்களை தமிழகம் கண்டுவிட்டது. இதிலொன்றும் புதிதில்லை. தலைவர் பிரபாகரனுக்கு மேடைப்பேச்சு என்ற பலமில்லை. அவர் நிறைய பேசியதே இல்லை.

இப்போதைய நெருக்கடிக்கு தேவை, களப்பணி மட்டுமே. அதில் மிகவும் பின்தங்கியுள்ளது நாம் தமிழர். இப்போதைக்கு எதையும் குறை சொல்லிக்கொண்டிருப்பதுதான் முகநூல் தம்பிகளின் முதன்மை பணியாக உள்ளது. இவர்களை முதலில் திருத்தினாலே மேலும் ஆதரவு கூடும். ஆனால், காலம் ஏற்படுத்தித் தந்திருக்கிற ஒரு அரசியல் வெற்றிடத்தை நாம் தமிழர் தவறவிடுவதாகவே தோன்றுகிறது.

சீமானைப் போலவே கரு.பழனியப்பனும் சிறந்த பேச்சாளர்தான்.

சமூக மாற்றத்திற்கு பாடுபட்டு முன்னம் தங்களின் உயிர் உடைமைகளை தியாகம் செய்தவர்கள் எல்லாம் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமையை என்ற ஒன்றை மட்டுமே கொண்டிருக்கவில்லை, கூடுதலாக தீவிர செயல்பாடும்.

தமிழர் வாழ்வுரிமை கட்சி அளவுக்குகூட நாம் தமிழர் கட்சி ஏனோ போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.

உறவுகள் இன்னும் உழைக்க வேண்டும்.

ஆகஸ்டு 03, 2017

நடிகர் தனுஷ் உதவி. அரசு அசிங்கப்பட வேண்டும்...




பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆளுக்கு 50 ஆயிரம் என 80 லட்சம் ரூபாய் உதவி செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

முதலில் இதற்கு இந்த அரசு அசிங்கப்பட வேண்டும். மனிதர்களிடம்தான் அதையும் எதிர்பார்க்க முடியும் என்பதால் இதுவும் வாய்ப்பில்லை.

தனுஷின் உதவியைப் பாராட்டுவோம். விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் ஏதேனுமாவது செய்பவர்களை விமர்சிப்பது நியாயமில்லை. அதே சமயத்தில் இது தனுஷின் அரசியல் முதலீடு ஆகாதவரையில் நல்லதே. இப்படி ஆராயாமல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் பொம்மையானதால்தான் விவசாயிகளுக்கு இந்த நிலை.

அரசியலுக்கு வருவது தனுஷின் பிறப்புரிமை. அதை இப்படி தொடர்ந்து விவசாயிகளுக்கான குரலாகவும் போராட்டங்களில் பங்கெடுப்பாகவும் மாற்றினால் நல்லதே.

ஆகஸ்டு 02, 2017

கௌரவம்...?

"உனது சாவு செய்தி கேட்டுகூட வர நேரமில்லாமல் தவிர்க்கப்போகிறவர்கள் முன் நீ எவ்வளவு கௌரவமாய் வாழ்ந்தும் என்ன பயன்?"

"நீ நீயாகவே இரு"

ஆகஸ்டு 02, 2017

சினிமா தொழிலாளர்கள் போராட்டம்...?

அவுட்டோர் ஷூட்டிங்கில் ஒரே ஒரு நாள் மட்டும் 'ஜிம்மி ஜிப்' வைத்தால், 5 பேருக்கு ஒருநாள் வேலைக்கான தினக்கூலி ( ஒரு பேட்டா ) 10,200 ரூபாய்.

சென்னையில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்குச் செல்ல பயணப்படி ( ரெண்டு பேட்டா ) 5 பேருக்கு 20,400 ரூபாய்.

வேலை முடிந்து படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை திரும்ப மீண்டும் பயணப்படி ( ரெண்டு பேட்டா ) 5 பேருக்கு 20,400 ரூபாய்.

ஆக...

ஒரேவொரு நாள் வேலைக்கான தினக்கூலி
5 பேருக்கு 10,200 ரூபாய்.

வந்து போக அதே 5 பேருக்கும் பயணப்படி 40,800 ரூபாய்.

மொத்தத்தில் ஒருநாள் வேலைக்கு 5 பேருக்கும் செலவிட வேண்டியது 51,000 ரூபாய்.

இதுபோன்ற 2 பயணப்படிகளை 1 என குறைக்கும்படி தயாரிப்பாளர்கள் கோருகிறார்கள்.

அதேபோல் 12 மணி நேரம் 1 கால்ஷீட் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தொழிலாளர்கள் தரப்பில் நிறைய நியாயம் உள்ளதுதான். ஆனால், எல்லா தயாரிப்பாளர்களும் நிரந்தர முதலாளிகள் அல்லர். எல்லா சங்கங்களும் தங்களை சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக நடிகர்களின் சம்பளத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முதலில் தெளிவானதொரு மணிகட்ட வேண்டும்.

ஆகஸ்டு 02, 2017

தோழர் கொளத்தூர் மணி கைது

எல்லா போலீசையும் பிஜேபியிலோ அல்லது அதிமுகவிலோ அல்லது ஏதேனுமொரு ஜாதி சங்கத்திலோ நேரடியாக இணைத்துவிடலாம். இன்னமும் முக்காடு எதற்கு?

தமிழக அரசு, முன்பைவிடவும் மிகக் கேவலமாக மாறிக்கொண்டிருப்பதன் இன்னொரு உதாரணம்.

ஆகஸ்டு 01, 2017