6.8.18

திராவிடர் இயக்க எதிர்ப்பு

வரலாற்றைத் திருத்தும் துவக்கப்புள்ளி திராவிட இயக்கத்திலிருந்து துவங்குகிறது. அதைத் தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கு பலமில்லாத நிலையில் அதை குறை சொல்வது நியாயமில்லை.

05% கூட திராவிடக் கருத்தியலில் யாருமில்லை. 95% வீதம் மக்களை ஆள்வது பார்ப்பனீயக் கருத்தியலே. இதை எதிர்க்க தமிழ்த்தேசியத்தில் என்ன அடங்கியுள்ளது? அப்படி பலம் வாய்ந்ததாக அறிவியல்பூர்வமாக இருந்தவொன்று எப்படி பார்ப்பனீயத்தாலும் திராவிடத்தாலும் வீழ்ந்தது?

சிந்திக்க வைக்காத கருத்துக்கள் இல்லாத எதையும் எப்படி கருத்தியலாக இருக்கவியலும்?

பாவம் மக்கள். அவர்களின் கற்பனையான கண்மூடித்தனமான அறியாமையில் கட்டமைக்கப்பட்டுள்ள பார்ப்பனீய ஆன்மீக உலகிலிருந்து விடுவிக்க ஆளைக் காணோம். நாள், நட்சத்திரம், நேரங்காலம், மந்திரம், சூனியம் என்று பயந்துகொண்டு இன்னமும் சமூகம் மாறாமல்தான் கிடக்கிறது.

தேர்தல் அரசியல் முறையின் சீரழிவையும் திராவிடக் கருத்தியலுடன் இணைத்து விமர்சிப்பது, எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்பவர்களுக்கு அவசியமானதாக இருக்கலாம். இந்த மாற்றத்தையும் கொண்டுவர ஆளில்லாமல் கிடந்த சமூகம் இது என்று புரிந்தவர்களுக்கு இது தேவைப்படுவதில்லை.

மொழியை தீவிரமாக வளர்ப்பதால் மட்டும் ஒரு சமூகம் மேன்மையடைந்துவிடுமா?

திராவிட கட்சிகளின் அதே தேர்தல் சீரழிவுப்பாதை அரசியலில் நின்றுகொண்டு சிலரும் தமிழ்த்தேசியவாதம் பேசுகிறார்களே எது சரி?

தமிழ்த்தேசியம் என்பது அரசியல் விடுதலையா? பண்பாட்டு விடுதலையா? இந்தியாவின் காலணியாகவும் பார்ப்பனீய பண்பாட்டு காலணியாகவும் இருப்பவர்களுக்கு யாரேனும் ஏதேனும் கொஞ்சமாவது செயலில் செய்துகாட்டிவிட்டு பெரியாரை விமர்சிக்கட்டும்.
 
ஆகஸ்டு 08, 2017
 
 

No comments:

Post a Comment