மியான்மர் - நீண்ட காலமாக கம்யூனிஸ்டுகளின் வெற்றிகரமான ஆயுதப் போராட்டம் நடந்த ஒரேயொரு தெற்காசிய நாடு.
பல மொழிகள் பேசும் பல்லின போராளிகளை ஒன்று திரட்டி போராடிய பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி, அதே காரணத்தால் உடைந்து போனது துரதிர்ஷ்டமானது. இறுதி வரையில் அரச படைகளால் கைப்பற்ற முடியாத கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி, அதே பிரதேசத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களால் தோற்கடிக்கப் பட்டது.
இந்தக் கிளர்ச்சிக்குப் பின்னால், டெங்சியோபிங் தலைமையில் உருவான முதலாளித்துவ சீனா இருந்தது. பர்மிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு சீனாவில் அடைக்கலம் கொடுத்து விட்டு, முன்பிருந்த கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குறுந் தேசியவாத சக்திகளை தூண்டி விட்டது. முன்னாள் கம்யூனிஸ்ட் போராளிகள், தீவிர தேசியவாதிகளாக மாற்றப் பட்டனர்.
மியான்மர் நாட்டில் நடக்கும் வல்லரசுப் போட்டி இன்று நேற்று தொடங்கியதல்ல. பிரித்தானியா, இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா எல்லாமே கடந்த காலத்தில் தமது செல்வாக்கை செலுத்தி வந்துள்ளன.
காலனியாதிக்க கால முடிவில் இருந்து தொடரும் கதையின் புதிய அத்தியாயமே ரொஹிங்கியா இனப் பிரச்சினை. இலங்கையில் நடந்து கொண்டதைப் போல, இங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டு பக்கமும் விளையாடுகிறது. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறது.
Kalai Marx
ஆகஸ்டு 31, 2017
No comments:
Post a Comment