24.8.12
புது மதம்...
கேள்வி : நீங்களாவது ஒரு புது மதம் சொல்லுவதுதானே?
ஈ.வெ.ரா.:
நான் ஒரு புது மதத்தை போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான
கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள்.
ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில்
அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்றுதான் சொல்லுகிறேன்.
அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும்
சரி என்றுதான் சொல்லுகிறேன்.
கேள்வி: இருக்கிறதை மறைப்பதால் புதிதாக ஒன்றை காட்டவேண்டாமா?
ஈ.வெ.ரா.:
வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள்
என்றால், அதற்குப் பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க
வேண்டும். இந்து மதம் துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும்.
(சிதம்பரத்தில் நடந்த சுயமரியாதைக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. குடிஅரசு 4.2.1928.)
ஈழம் உருவாகுமா?
ஈழம் உருவாகுமா? ஒரு யதார்த்தமான கருத்து...
1. நெடுநாட்களாக விசாரணை செய்யப்படாமல் சிறப்பு முகாமில் அடைந்துகிடக்கும் ஈழத்தமிழர்களை க்யூ பிராஞ்ச் காவல் கொடுமையிலிருந்து விடுவிக்க அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்களிடம் யாதொரு தெளிவான செயல்திட்டமுமில்லை.
2. ஒரு அகதி முகாமிலுள்ள தமிழ் பெண்களை க்யூ பிராஞ்ச் காவலர்களே வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளியிருப்பது பற்றி எந்தக் கட்சிகளிடமும் எதிர்வினைகளில்லை.
3. தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியுள்ள பல ஈழ தமிழர்களுக்கு அருகாமையிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து நேரடியாகவும் மறைமுகமானதுமான நெருக்கடிகள் இருக்கிறது. எல்லா காவல் நிலையத்திலிருந்தும் இப்படியானவர்களின் தகவலை பணத்தால் திரட்டிக்கொள்ளும் வலிமை இங்குள்ள இலங்கைத் தூதரகத்திற்கு இருக்கிறது.
4. இங்குள்ள தமிழ் அகதிகளுக்கு வாடகை வீடு தரவோ, வங்கிக் கணக்கு துவங்கவோ, வேறு ஏதேனுமொரு அவசியமான உதவிக்கு நேர்மையாக உதவவும், தைரியமாக அணுகி உதவி கேட்கவும் எந்த இயக்கமும் ஏற்பாடு செய்திருப்பதாய் தெரியவில்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அவர்கள் பயந்து வாழவேண்டும்படியான நிலைதான் உள்ளது.
5. திபெத் அகதிகளுக்கு கிடைக்கும் உரிமையும், சலுகையும் தமிழ் அகதிகளுக்கு இங்கே கிடைக்கவில்லை. இந்த ஆதங்கம் எல்லா இயக்கத் தோழர்களுக்கும் இருந்தாலும் அதை செயலளவில் பெற்றுத்தரும் செயற்திட்டங்கள் யாருக்கேனும் இருப்பதாய்த் தெரியவில்லை.
6. மத்திய அரசோ, மாநில அரசோ ஈழத் தமிழர் பிரச்சனைகளை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. அல்லது தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களைக் கண்டு அச்சப்படவில்லை.
7. செய்தித்தாளில் வரும்படியான அளவுக்கோ அல்லது நாலு பேருக்குத் தெரியும்படியான அடையாளப் போராட்டங்கள்தான் இங்கே எல்லா இயக்கங்களாலும் நடத்தப்படுகிறது.
8. முன்னர் நடத்திய போராட்டத்தினால் எந்த விளைவும், மாற்றமும் ஏற்படாதபோது மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான போராட்டங்கள் அறிவிக்கப்படுகிறது, நடத்தப்படுகிறது. எல்லா கட்சிகளும் இப்படியே இருப்பதால் இதனால் யாதொரு இயக்கத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வருவதில்லை என்றே தோன்றுகிறது.
9. தம்மை நாடி வந்த ஈழ மக்களுக்கு இங்கே ஒரு விடிவைத்தர முடியாத நமது இயக்கங்கள் இலங்கையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
10. நம் தலைவர்களால் மேடையில் பேசப்படும் வீராவேசப் பேச்சுகளுக்கு நமது உளவுத்துறையோ அல்லது இங்கிருக்கும் ஆளுங்கட்சிகளோகூட அஞ்சாதபோது மகிந்த-கோத்தபயக்கள் எப்படி அஞ்சுவார்கள்?
11. முன்னெப்போதும் இல்லாதவகையில் ஈழம் தற்போது எல்லாவகையிலும் சூறையாடப்படுகிறது. இன்னும் இங்கே கற்பனாவாதமே கொடிகட்டிப் பறக்கிறது. சிங்கள இனவாதிகள் நம்மை ஏளனத்தோடு பார்க்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பதே உண்மை.
12. தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழ் இல்லை.
13. தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அலுவலகங்களிலும் தமிழ் இல்லை.
14. தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ் ஒரு பொருட்டே இல்லை.
15. தமிழ் மீனவர்கள் சாவதைப் பற்றி இந்தியாவுக்கு கவலையில்லை. ஆனால் இந்திய ராணுவ மையங்கள் ஏராளமாக தமிழ்நாட்டில் இருப்பது என்ன நோக்கத்திற்காக?
16. இந்தியாவையோ, தமிழ்நாட்டு அரசையோ மயிரளவுக்குக்கூட மதிக்காமல் காஞ்சி மக்கள் மன்றம் வரை சென்று உளவு பார்த்து திரும்புகிறது இலங்கை தூதரக / புலனாய்வுத்துறை வாகனம்.
இன்னும் எழுதுவதற்கு ஓராயிரம் கொடுமைகள் இருக்கிறது. ஆனால் தட்டிக்கேட்கத்தான் தமிழனுக்கு வலிமையில்லை.
தானே அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்று போராடுகிறார் ஜெயலலிதா....
இழந்துபோன அரியணையை மீண்டும் கைப்பற்ற போராடுகிறார் கருணாநிதி....
சினிமா விளம்பரத்தையே மூலதனமாகக்கொண்டு முதல்வர் அரியணையைப் பெற்றுவிட போராடுகிறார் விஜயகாந்த்....
தன் கட்சியை வலுவாக்கிக்கொள்ள போராடிக்கொண்டேயிருக்கிறார் வைகோ....
அரசியலில் தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடுகிறார் திருமா....
சாதிக் கட்டுமானம் தன்னிடமிருந்து வழுவிவிடக் கூடாதென்று போராடிக்கொண்டிருக்கிறார் ராமதாஸ்....
புலிகளின் மீதான தமிழ் இளைஞர்களின் மரியாதையை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார் சீமான்....
குழப்பத்தையே கொள்கையாகக்கொண்டு, தேசிய இனங்களை மதிக்காமல் இல்லவே இல்லாத; போகவே முடியாத ஊருக்கு வழி ஏற்படுத்த போராடுகிறார்கள் பொதுவுடைமைவாதிகள்....
கொள்ளையடிப்பதற்கான இசை நாற்காலிப் போட்டியில் இடம்பிடிக்க போராடுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள்....
இந்தக்கட்சியும் இங்கே இருக்கிறது என்பதற்காகப் போராடுகிறார்கள் பா.ஜ.க வினர்....
ஆக, இங்கே தமிழுக்காகவும் தமிழீழத்திற்காகவும் இதுவரையில் நடத்தப்பட்ட போராட்டங்களினால் விளைந்த பயன் என்னவென்று தெரியவில்லை.
இந்த எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்ந்தால்கூட இந்திய மத்திய அரசோ, இலங்கை அரசோ தமிழர்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை. தமிழ், இந்திய ஆட்சி மொழியாகவும் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, ஆளாளுக்கு வெவ்வேறு திசையில், வெவ்வேறு வழியில் போராடிக்கொண்டிருப்பது நியாயமா? இதனால் கட்சி நடத்தும் இவர்களைத் தவிர தமிழ் மக்களுக்கு ஏதேனும் பயனிருக்கிறதா? உலகத்தமிழ் மக்களின் நிலைமையின்மீது இவர்களுக்கு உண்மையான கரிசனமும் அக்கறையும் இருந்தால் இப்படி தனித்தனியாய் செயற்பட முடியுமா? ஒரு பிரச்சனைகளின் அடிப்படையில்கூட இவர்கள் இணைந்து செயலாற்றாமல் இருப்பது எப்படி?
யார் பெரியவர்கள்? எந்த இயக்கம் பெரியது? என் தலைமையில்தான் மற்றவர்கள் இருக்கவேண்டும் – இம்மதிரியான உணர்விலிருந்து வெளியேறி மாற்றத்தையும், தமிழர்களுக்கெதிரான கொடுமைகளையும் மனதில் கொண்டு எப்போது செயல்படுவார்கள் நம் தலைவர்கள்?. இவர்கள் கோமாளித் தலைவர்கள் இல்லை என்பதை நாம் எப்படி நிரூபிப்பது? இல்லாவிடில் இவர்களை நம்பி பொருளையும், நேரத்தையும் இழக்கும் இளஞர்களுக்கு சமூகத்தில் என்ன மரியாதை? அதனால் தமிழ் சமூகத்திற்கு என்ன பயன்?
ஆதலால் தமிழர்களே...
எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் ஈழம் அமையும். ஆனால் தற்போது அதற்கான நம்பிக்கை ஓளி புலம்பெயர் தமிழர்களிடமிருந்துதான் தெரிகிறது. ஈழம் உருவானதென்றால் அது இலங்கையில் பிறந்த தமிழர்களாலேதான் நடக்கும். இங்கிருப்பவர்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. இங்கே யாராவது ஈழம் அமைத்துக் காட்டுகிறேனென்றால் அவர்கள் நம்மை ஏமாற்றிப் பிழைக்க நினைக்கிறார்கள் அல்லது நாம் அவர்களிடம் ஏமாந்துகொண்டிருக்கிறோம். ஒருவேளை ஒப்புக்கான அடையாளப் போராட்டங்களைத் தவிர்த்து, உண்மையான வலுவான செயற்திட்டம் நம்மவர்களால் செயற்படுத்தப்பட்டாலொழிய....
(நண்பர்களே... எந்தவொரு இயக்கத்தையும் குறைசொல்லும் நோக்கில் இதை எழுதவில்லை. எனக்குத் தோன்றிய கருத்தை பதிவு செய்கிறேன். – விநாயகமூர்த்தி மாசிலாமணி)
23.8.12
கறபழிக்கப்படும் காஷ்மீர் தேசப்பெண்கள்
கற்பழிக்கப்படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!
கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம்
பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம். இன்னும், இன்னும்.எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க மாட்டார்கள் இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது எவர் தமக்காக பேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இரங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து கஷ்மீரை நீக்கினாலும் கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை எதுவும் செய்து விடாது
ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள் காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்
உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது.
“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர். அந்த இராணுவ சிப்பாயின் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, ‘உன் ஆசைப்படியே நடக்கட்டும்’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தைத் தொடர்கிறான்”.
இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலே பதிவுசெய்யப்பட்ட சம்பவம்.
1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது.
சுதந்திரம் என்பது...
மேல்நாடுகளில் “சுதந்திர நாள்” சுதந்திர ஆண்டுவிழாவாக கொண்டாடுவதுபோல், நம் நாட்டில் சுதந்திர நாள், ஆண்டுவிழாவாக கொண்டாடப்படுவது – புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதைப் போலாகும்.
மேல் நாட்டார்கள் சுதந்திரம் பெற்றபின் பெற்ற நாளைக் குறிவைத்து
கொண்டாடுகிறார்கள். நாம் அது போல கொண்டாட நமக்குச் சுதந்திரம்
வந்துவிட்டதா? நாம் ஏதாவது சுதந்திரத்தை அனுபவிக்கிறோமா? என்பதைப் பற்றி
நமக்குக் கடுகளவு யோசனையும் இல்லாமல் – நம்மை அடிமைபடுத்தி
வைத்திருப்பவர்களின் சூழ்ச்சிக்கும் வஞ்சகத்திற்கும் ஆளாகி அடிமைத் தளையை
இறுக்கிக் கொள்ள நாம் “ சுதந்திர விழா” கொண்டாடுகிறோம்.
இந்த நாட்டின் சுதந்திரம் பணக்காரர் மீது, ஏழை மூடமக்களை ஏவி விடுவதாக இருக்கிறதே ஒழிய – மனிதனை (நம்மை) நாயிலும், பன்றியிலும் கேடாக இழிவுபடுத்தி, கீழ்ஜாதி ஆக்கிய “கடவுள்”, “சாஸ்திரங்களையோ”, சட்டங்களையோ, மக்களையோ – ஏனென்று கேட்க நாதியில்லை.
சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? ‘நரக’ நாடா?
இதை ஒழிக்க பாடுபட இந்த நாட்டில் ஏதாவது உரிமை இருக்கிறதா? சுதந்திர நாட்டில் மனித சமுதாயத்தையே அடிமைபடுத்தி மடையர்களாக ஆக்கி வைத்திருக்கும் இனத்தினர் (பார்ப்பனர்) மந்திரியாய், தலைவராய், இருக்கின்றார்கள் என்றால் இது சுதந்திர நாடாகுமா?
- தந்தை பெரியார் (விடுதலை 15.08.1957)
திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
ஒரு
வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே
தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத்
திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனேஅடையாளம் கண்டுகொள்ள உதவும்.
092123 57123 என்ற எண்ணுக்கு vahan>space<பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ் வந்துவிடும்.
இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)