24.8.12

புது மதம்...


கேள்வி : நீங்களாவது ஒரு புது மதம் சொல்லுவதுதானே?

ஈ.வெ.ரா.: நான் ஒரு புது மதத்தை போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்றுதான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகிறேன்.

கேள்வி: இருக்கிறதை மறைப்பதால் புதிதாக ஒன்றை காட்டவேண்டாமா?
ஈ.வெ.ரா.: வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்குப் பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும். இந்து மதம் துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும்.

(சிதம்பரத்தில் நடந்த சுயமரியாதைக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. குடிஅரசு 4.2.1928.)

No comments:

Post a Comment