23.8.12

சுதந்திரம் என்பது...


மேல்நாடுகளில் “சுதந்திர நாள்” சுதந்திர ஆண்டுவிழாவாக கொண்டாடுவதுபோல், நம் நாட்டில் சுதந்திர நாள், ஆண்டுவிழாவாக கொண்டாடப்படுவது – புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதைப் போலாகும்.

மேல் நாட்டார்கள் சுதந்திரம் பெற்றபின் பெற்ற நாளைக் குறிவைத்து கொண்டாடுகிறார்கள். நாம் அது போல கொண்டாட நமக்குச் சுதந்திரம் வந்துவிட்டதா? நாம் ஏதாவது சுதந்திரத்தை அனுபவிக்கிறோமா? என்பதைப் பற்றி நமக்குக் கடுகளவு யோசனையும் இல்லாமல் – நம்மை அடிமைபடுத்தி வைத்திருப்பவர்களின் சூழ்ச்சிக்கும் வஞ்சகத்திற்கும் ஆளாகி அடிமைத் தளையை இறுக்கிக் கொள்ள நாம் “ சுதந்திர விழா” கொண்டாடுகிறோம்.

இந்த நாட்டின் சுதந்திரம் பணக்காரர் மீது, ஏழை மூடமக்களை ஏவி விடுவதாக இருக்கிறதே ஒழிய – மனிதனை (நம்மை) நாயிலும், பன்றியிலும் கேடாக இழிவுபடுத்தி, கீழ்ஜாதி ஆக்கிய “கடவுள்”, “சாஸ்திரங்களையோ”, சட்டங்களையோ, மக்களையோ – ஏனென்று கேட்க நாதியில்லை.

சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? ‘நரக’ நாடா?

இதை ஒழிக்க பாடுபட இந்த நாட்டில் ஏதாவது உரிமை இருக்கிறதா? சுதந்திர நாட்டில் மனித சமுதாயத்தையே அடிமைபடுத்தி மடையர்களாக ஆக்கி வைத்திருக்கும் இனத்தினர் (பார்ப்பனர்) மந்திரியாய், தலைவராய், இருக்கின்றார்கள் என்றால் இது சுதந்திர நாடாகுமா?

- தந்தை பெரியார் (விடுதலை 15.08.1957)

No comments:

Post a Comment