6.8.18

மியான்ம‌ர்

மியான்ம‌ர் - நீண்ட‌ கால‌மாக‌ க‌ம்யூனிஸ்டுக‌ளின் வெற்றிக‌ர‌மான‌ ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ ஒரேயொரு தெற்காசிய‌ நாடு.

ப‌ல‌ மொழிக‌ள் பேசும் ப‌ல்லின‌ போராளிக‌ளை ஒன்று திர‌ட்டி போராடிய‌ ப‌ர்மிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி, அதே கார‌ண‌த்தால் உடைந்து போன‌து துர‌திர்ஷ்ட‌மான‌து. இறுதி வ‌ரையில் அர‌ச‌ ப‌டைக‌ளால் கைப்ப‌ற்ற‌ முடியாத‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தை வைத்திருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி, அதே பிர‌தேச‌த்தை சேர்ந்த‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தோற்க‌டிக்க‌ப் ப‌ட்ட‌து.

இந்த‌க் கிள‌ர்ச்சிக்குப் பின்னால், டெங்சியோபிங் த‌லைமையில் உருவான‌ முத‌லாளித்துவ‌ சீனா இருந்த‌து. ப‌ர்மிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் த‌லைவ‌ர்க‌ளுக்கு சீனாவில் அடைக்க‌ல‌ம் கொடுத்து விட்டு, முன்பிருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேசத்‌தில் குறுந் தேசிய‌வாத‌ ச‌க்திக‌ளை தூண்டி விட்ட‌து. முன்னாள் க‌ம்யூனிஸ்ட் போராளிக‌ள், தீவிர‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

மியான்ம‌ர் நாட்டில் ந‌ட‌க்கும் வ‌ல்ல‌ர‌சுப் போட்டி இன்று நேற்று தொட‌ங்கிய‌த‌ல்ல‌. பிரித்தானியா, இந்தியா, சீனா, அமெரிக்கா, ர‌ஷ்யா எல்லாமே க‌ட‌ந்த‌ கால‌த்தில் த‌ம‌து செல்வாக்கை செலுத்தி வ‌ந்துள்ள‌ன‌.

கால‌னியாதிக்க‌ கால‌ முடிவில் இருந்து தொட‌ரும் க‌தையின் புதிய‌ அத்தியாய‌மே ரொஹிங்கியா இன‌ப் பிர‌ச்சினை. இல‌ங்கையில் ந‌ட‌ந்து கொண்ட‌தைப் போல‌, இங்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம் இர‌ண்டு ப‌க்க‌மும் விளையாடுகிற‌து. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிற‌து.

Kalai Marx
ஆகஸ்டு 31, 2017

மனித சமூகத்தின் அவமானம்

அல்லா என்றொருவன் இருந்தால் மியான்மர் முஸ்லீம் படுகொலைகளை உடனடியாக நிறுத்தட்டும். அங்கு அன்பும் மகிழ்ச்சியும் பரவட்டும்.
 
ஆகஸ்டு 31, 2017
 
 

ஓடாத வண்டிக்கு 2 ஓட்டுநர்கள்

"ஓடாத வண்டிக்கு 2 ஓட்டுநர்கள்"

தமிழ்நாடு 
இபிஎஸ் / ஓபிஎஸ்
 
ஆகஸ்டு 28, 2017

தொடரும் ஜாதிக் கொடூரம்

இது 2017 ம் ஆண்டு. அதாவது அறிவியல் மிகவும் வளர்ந்து அதை அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கும் காலகட்டம். விண்வெளியை மனிதன் கைவசப்படுத்திக் கொண்டிருக்கும் காலம். பரந்து விரிந்து கிடக்கும் பூமியை மனிதன் தன் அறிவால் சிறிய பந்து போல் சுருக்கியுள்ள காலகட்டம்.

ஆனால் இங்கோ கூட்டமாய் சென்று அப்பாவி மக்களின் குடிசையை இன்னமும் ஜாதியின் பேரால் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஜாதிவெறியை வளர்க்க கட்சிகள், தலைவர்கள், தொண்டர்கள். இத்தனை காவல் நிலையங்கள், இத்தனை நீதிமன்றங்கள் இருந்தும் இதெல்லாம் வெளிப்படையாக தொடர்ந்து நடக்கின்றன.

நாகரிகம் உள்ள, சிந்திக்கும் அறிவு உள்ள மனிதர்கள் யாரும் இதை எப்போதும் ஆதரிப்பதில்லை. இதையெல்லாம் நியாயமென்று எவன் பேசினாலும் அவன் மனித ஜென்மமே அல்ல.

தொடர்ந்து தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் தாக்கப்படுகின்றன; கொளுத்தப்படுகின்றன.

காஞ்சிபுரம் அருகே நல்லூரில் நடந்த இது ஏதோ இருதரப்பு மக்களுக்கிடையிலான பிரச்சினை மட்டுமல்ல. இன்றைய சமூகத்தின் அவமானம்.

இதைக் கண்டும் காணாமல், கண்டிக்காமல், தீர்வுக்கு வழி தேட முனையாமல், மாற்ற உழைக்காமல் எவர் தமிழ்த்தேசியம் பேசினாலும் அது ஏட்டு சுரக்காயே.

அனைத்து மக்களையும் அறிவுடையோர்களாக்கி, பூமியில் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு போக வைக்கும் கட்சியும் நற்சிந்தனை கொண்ட தலைவனும் ஆட்சியும் இங்கே ஏற்படும் காலம் எந்த காலமோ?
 
ஆகஸ்டு 27, 2018
 

 

இன்னும் மனிதர்களை மனிதர்களாக ஆக்காத 70 ஆண்டு சுதந்திரம்

"ஜாதி, மதம், பக்தி, காதல், புனிதம், பண்பாடு, கடவுள், விதி, நல்ல நேரம், கெட்ட நேரம், சூனியம், கற்பு, சொர்கம், நரகம், சகுனம், சடங்கு, முன்பிறவி, மறுஜென்மம்....

இயற்கையை தவறாக விளங்கிக்கொண்டு இப்படி எதற்கும் பயனற்ற அற்ப காரணங்களால் தினமும் நடக்கும் தனி மனித படுகொலைகளின் மூலம் இந்தியா ஒரு காட்டுமிராண்டிகளின் நாடு என்பது உறுதிபட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கே இருக்கும் கோயில்கள், கல்வி நிலையங்கள் எல்லாமும் தொழில் நிறுவனங்களாக இருப்பதன் வெளிப்பாடுதான் இது.

இந்த நாட்டின் 70 ஆண்டுகால சுதந்திரம் இன்னும் மனிதர்களை மனிதர்களாக உணர்த்தி யாவரையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்க சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. எளிய மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.
 
ஆகஸ்டு 26, 2017
 

 

'பெரியார் - காமராசர்' பிறந்தநாள் விழா 2017

'பெரியார் - காமராசர்' பிறந்தநாள் விழா
அனைவரும் வருக...!!!

“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார், க.க.நகர், சென்னை – 78.

நாள் : 06-09-2017 மாலை 6 மணி
இடம் : க.க. சாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை – 78

காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசை முழக்கத்துடன் துவங்கி சுமார் 1000 மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், திருக்குறள் புத்தகம், பள்ளிப் பைகள் மற்றும் ஊக்க விருதுகள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.

நிறுவனர்கள் :
வீ. பொற்கோவன்
குமணன்

தலைவர் :
வழக்கறிஞர் ப. அமர்நாத்

செயலாளர் :
கரு. அண்ணாமலை

துணைத் தலைவர் :
விநாயகமூர்த்தி மாசிலாமணி

துணைச் செயலாளர் :
ராமாபுரம் சுப்பிரமணியன்

பொருளாளர் :
விருகை செல்வம்

தேர்வுக்குழு உறுப்பினர்கள் :

ஜெயசீலன், மணிமொழியான், துரைராசு, கண்ணன், மணிபாரதி கிரேசி விஜயகுமார், மூவேந்தன், சிலம்பு சிவாஜி, தமிழ்ச்சிற்பி, குமார்

உதவி பெறுவோர் விவரம் :

கும்மிடிப்பூண்டி தமிழீழ அகதிகள் முகாம் – 300 மாணவ மாணவியர்கள்

புழல் தமிழீழ அகதிகள் முகாம் - 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி – 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி – 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் அரசு துவக்கப்பள்ளி – 100 மாணவ மாணவியர்கள்

தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் 1000 ரூ பரிசுத்தொகை

தமிழில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காமராசர் விருது மற்றும் 500 ரூ பரிசுத்தொகை

குறிப்பு :

பொதுவுடைமை இயக்கம் / திராவிட இயக்கம் / தமிழ்த்தேசிய இயக்கம் / சாதி மறுப்பு & சுயமரியாதை திருமணம் புரிந்தோர் / முற்போக்கு அமைப்புகள் / துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்களின் குழந்தைகளுக்கு உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும். (உதவி வேண்டுவோர், அரசு பள்ளிகள் / தமிழ்வழிக் கல்வி பயில்பவர்களாக இருத்தல் வேண்டும்.)

***

“கற்க” கல்வி அறக்கட்டளை, தமிழ்வழிக் கல்வி உதவி மையம் சார்பாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும்
கல்விப் பணிகளின் விவரம் :

தொடக்கம் : 10-05-2013

01. ரயில்வே (RRB) loco pilot தேர்வு சிறப்பு இலவசபயிற்சி – 2014

02. குடிமைப்பணி தேர்வுக்கு எழுதும் மாணவர்களுக்கு study circle –2015

03. உதவி ஆய்வாளர் தமிழ்நாடு காவல்துறை தேர்வு – இலவச பயிற்சி வகுப்பு –2015

04. அஞ்சல்துறை தேர்வு (postal dept ) - இலவச பயிற்சி வகுப்பு – 2015

05. 2015 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் மஞ்சைமகத்து வாழ்க்கை பள்ளி சீரமைப்பு - 2016

06. கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - இலவச பயிற்சி வகுப்பு –2016

07. 2016 புயலால் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி சீரமைப்பிற்கு தொகை 65,000 ரூபாய் மற்றும் 35,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. - 2016

08. குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி smart class –2017

08. துரைப்பாக்கம் கண்ணகிநகர் சிறுவர்களுக்கு மாலை நேர தனிப்பயிற்சி வகுப்புகள் –2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.

09. வியாசர்பாடி கன்னிகாபுரம் பள்ளி மாணவ மாணவியர்க்கு தனிப்பயிற்சி -2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.

தமிழ் மொழி வளரவும், தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவும், எளியோருக்கு உதவும் நல்லெண்ணமும் கொண்ட சமூக அக்கறையாளர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்கொடை வழங்குவதற்கான வங்கி விவரம் :

KARKA,
A/C NO : 62418336742,
STATE BANK OF HYDERABAD,
IFSC code – SBHY0020946

தொடர்புக்கு :

“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார்,
க.க.நகர், சென்னை – 78.

கரு.அண்ணாமலை : 94440 11124

குமணன் : 98413 55818
 
ஆகஸ்டு 24, 2017
 
 

அண்ணாதுரை பாடல் படப்பிடிப்பு

பாடல் படப்பிடிப்பு இனிதே முடிந்தது. நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டருடன்...
 
ஆகஸ்டு 24, 2017
 
 

கேவலமான அதிமுக

"வரலாறு காணாதளவு மிகக் கேவலமான நிலையில் தமிழக ஆட்சி"
 
ஆகஸ்டு 20, 2017
 
 

200 கீமீ-க்குள் 5 அணைகள்...?

செய்தி:

"காவிரியில் 200 கீமீ-க்குள் 5 அணைக்கட்டுகள். தமிழ்நாடு பாலைவனமாகிறது."

அதிமுக எந்த மாநில கட்சி? 
எதிர்க்கட்சின்னு ஒன்னு இருக்கா? 
தமிழ்நாட்ல மொத்தம் எத்தனை கட்சிகள்? தலைவர்கள்? 
எதுக்குய்யா இன்னும் இத்தனை கட்சிகள்?...
 
ஆகஸ்டு 19, 2017
 
 
 
 

சங்கிகளின் இடஒதுக்கீட்டுப் பார்வை

எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா, ஆனா எனக்கு சீட்டு கிடைக்கல, என்னை விட கம்மி மார்க் எடுத்த பொண்ணு டாக்டர் சீட் கிடைச்சிருச்சு. பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு முறை வரணும்

இந்த பதிவு எழுதிய தோழருடன் அந்தபக்கம் விவாதம் ஓடுது. ஆனா அது அவர் ஒருவர் மனநிலை மட்டுமல்ல. பல சங்கிகளும் அப்படி தான் பேசிட்டு திரியுங்க

எனக்கு கிடைக்கல என்பதில் எவ்வளவு வலி. ஆனால் பல நூறு ஆண்டுகளகாக செருப்பு அணியக்கூடாது, மேல் சட்டை அணியக்கூடாது, பெண்கள் மேலாடை அணியக்கூடாது. பண்ணையம் என்னும் அடிமை தொழில் தான் செய்யவேண்டும் என்று ஒடுக்கிவைக்கப்பட்ட அந்த சமூகத்தில் ஒரு பெண் டாக்டர் ஆவது அந்த சமூகத்திற்கே எவ்வளவு வலி நிவாரணி..

எதுக்கு பல நூற்றாண்டுகளா போகனும். இப்பவும் பல கிராமங்களில் இரட்டை குவளை இருந்துட்டு தான் இருக்கு. ஒடுக்கப்பட்ட பிரிவினரை வயசு வித்தியாசம் இல்லாமல் சிறுவன் கூட பெயர் சொல்லி அழைக்கும் அவலம். சாதி பெயருடன் கெட்டவார்த்தை சேர்த்து அழைக்கும் அவலம். ஊர் தெருவுக்குள் பிணம் எடுத்துசெல்லக்கூடாது. சாமி ஊர்வலம் அவர்கள் தெருவுக்கு வராது என்று எத்தனை பிரிவினைகள்

யாரோ ஒருத்தர் பொருளாதாரரீதியா வளர்த்துட்டாருப்பா, நீங்க அந்த வீட்டில் பெண் எடுத்துக்கொள்கிறீர்களா? அல்லது பெண் கொடுக்கமுடியுமா? இப்போ உங்களுக்கு எது தடை? அதான் அவர்கள் பொருளாதாரரீதியா மேலே தானே இருக்காங்க. அப்போ தடை வேற சாதி/ அப்படி தானே. அது எந்த சாதியாக இருந்தாலும் நீங்கள் சாதி பார்ப்பீர்களேயானால் அந்த சாதிய சிந்தனை உங்களை விட்டு அகலும் வரை சாதியரீதியான இடஒதுக்கீடு இருந்தே தீரும்.

ஒரு சாதி மறுப்பாளன் ஏன் சாதியரீதியிலான இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் எங்கிறார்கள். சாதியின் பெயரால் ஒரு சமூகத்தை ஒடுக்கி வைத்து, தாழ்ந்தபட்டவர் என்ற மனநிலைக்கு தள்ளிய பொழுது அந்த புத்தி இருக்கவேண்டும். நான் சாதிமறுப்பாளனா ஆக்க்கரணமே உங்களை போன்ற ஆதிக்கசாதிவெறி பிடித்த சாக்கடைகள்

Raj Arun
 
ஆகஸ்டு 18, 2017

ஆன்மீகம் - அறிவியல்

ஒருவனை விஷப்பாம்பு தீண்டிவிட்டால் உடனடியாக ஆடுதீண்டாப்பாளையை தின்னக் கொடுத்து விஷத்தை முறிக்கச் செய்து அவன் உயிரைக் காப்பாற்றலாம். அதே அவனிடம் ஆடுதீண்டாப்பாளையை நினைத்துக்கொண்டே இருக்கச் சொன்னால் விஷம் முறியுமா? உயிர்தான் பிழைக்குமா?

உழைப்பவர்களும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களும்தான் இந்த பூமியின் எல்லா நல்ல / தீய விளைவுகளுக்கும் காரணம். இந்த உலகை; வாழ்க்கையை முழுமையாய் ரசிக்க மதங்களோ ஆன்மீகமோ தேவையில்லை. குறைந்தபட்ச அறிவியல் பார்வையே போதுமானது.

மத தத்துவங்கள் தங்கள் புரூடாக்களுக்கு ஒவ்வொரு தலைமுறையிலும் விதவிதமான முகமூடிகள் அணிந்துகொண்டே தப்பிப் பிழைத்து வருகிறது.

அறிவியலோ மிக நேர்மையாக தன் குறைகளை ஒப்புக்கொண்டு தன்னை புனரமைத்துக்கொண்டே இருக்கிறது.

"எண்ணங்களே வாழ்வை மாற்றும் என்பது ஆன்மீகம். எண்ணிக்கொண்டே இருப்பதனால் மட்டும் வாழ்க்கை மாறிவிடாது, அதன்மீது 'போதிய' உழைப்புச் சக்தியை செலுத்தினாலே மாறும் என்பது அறிவியல்."

அறிவியல் யதார்த்தமானது. ஆன்மீகம் யாதார்த்தத்திற்கு எதிரானது.
 
ஆகஸ்டு 18. 2017
 

 

'பாரதிராஜா' - போலி மீட்பர்


'பாரதிராஜா' - போலி மீட்பர் 
 
- B.R.மகாதேவன்

பக்கம் 112, விலை 100 ரூ, நிழல் வெளியீடு.

ஒரு இயக்குநரை சந்திக்கச் சென்றிருந்தபோது அவர் அலுவலகத்தில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். படித்துவிட்டுத் தருவதாய் வாங்கி வந்தேன். வாசித்தேன்.

இதில் பாரதிராஜா அவர்கள் இயக்கிய "கருத்தம்மா, முதல் மரியாதை, மண் வாசனை, வேதம் புதிது, பதினாறு வயதினிலே" என்ற திரைப்படங்களைக் குறித்து விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் என்பது ஒரு இயக்குநரின்; கதாசிரியனின் கற்பனை உலகம். அதற்குள் சொல்லப்பட்ட நியதிகளை வைத்து மட்டும் ஒருவருக்கு பிடித்துள்ளது / பிடிக்கவில்லை அல்லது இன்னும் இப்படி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று விமர்சனம் வைப்பது தவறில்லை. ஆனால் அவர் எப்படி இப்படி யோசித்திருக்கலாம்? இப்படித்தான் யோசித்திருக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு அவர்களே தனியாக படம் இயக்கலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை.

இப்புத்தகத்தில் முன்வைக்கப்படும் சில விமர்சனங்கள் யாதெனில்...

* பாரதிராஜாவின் படங்களில் இருப்பது அசலான கிராமங்கள் இல்லை. அவரது கற்பனையில் உருவான போலியான கிராமங்கள்தான். கதாபாத்திரங்களும் அவ்வாறே. கிராமத்துப் படங்களை அவருடைய படங்களை வைத்து அளவிடுதல் கூடாது. 

* 16 வயதினிலே மிக சாதாரணமான படம்.

* அவசியமே இல்லாதபோதும் ஜாதி அடையாளங்களை கதாபாத்திரங்களுக்கு வெளிப்படையாக வைக்கும் வழக்கத்தை கொண்டுவந்தது அவர்தான். 

* இரவு பகல் காலங்கள் பெரும்பாலும் அவர் படங்களில் குழப்பமாகவே காட்டப்பட்டிருக்கும்.

* எந்தப் பிரச்சினையை முக்கியமாக எடுக்கிறாரே அதை நேர்மையாக அணுகாமல் அதிலிருந்து நழுவி வேறொரு முடிவுடன் வழக்கமான தன் அருளுரையுடன் படத்தை முடித்திருப்பார்.

* கிராமங்களில் ஜாதி சார்ந்த பிரச்சினைகளே இல்லாதபடி மறைத்திருப்பார்.

* வேதம் புதிது தெளிவான சிந்தனையில்லாத படம்.

* கருத்தம்மா - சிசுக்கொலையை அழுத்திச் சொல்வதிலிருந்து விலகி நிற்கும் படம்

இப்படி பலவாறாக மேற்சொன்ன படங்களைப் பற்றி விமர்சனம் வைக்கிறார் புத்தக ஆசிரியர். வெறும் விமர்சனம் மட்டும் வைக்காமல், அப்படங்களின் மையப் பிரச்சினை எதுவோ அதை இப்படிக் கையாண்டிருக்கலாம் என்றும் எழுதியிருக்கிறார். அதில் சில நன்றாகவும் இருக்கிறது.

நாம் மிகவும் ரசித்த படங்களை ஒருவர் எந்தக் கோணத்தில் விமர்சனம் வைத்திருக்கிறார் என்று அறியும் ஆவலே இந்தப் புத்தகத்தை வாசிக்க வைத்தது. சில ஏற்புடையதாகவும் பல ஏற்கத்தக்கதல்லாததாகவும் இருக்கிறது.

பல்வேறு விமர்சன கோணங்களை விரும்புபவர்கள் ஒருமுறை வாசிக்கலாம். விரயம் ஒன்றுமில்லை.
 
ஆகஸ்டு 16, 2017

இந்திய சுதந்திர நாள்....?



கேவலம் இந்த 70 ஆண்டில் ஜாதிப் பிரச்சினைகளுக்குகூட தீர்வு ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் ஜாதிவெறி படுகொலைகள் தொடர்கிறது. இதுதான் கல்வியறிவு வளர்ந்ததாய் மார்தட்டிக் கொள்ளும் இந்நாட்டின் பெருமையோ?

மாபெரும் அவமானம்; அவலம்.

ஜாதிகள் அழியக்கூடாது என்றும், இது ஹிந்து மத உரிமை என்றும் சட்டமியற்றி போற்றி பாதுகாக்கும் இதெல்லாம் ஒரு நாடென்று ஆகுமா?


தனியார் கல்வி, தனியார் மருத்துவம், கார்ப்பரேட் முதலாளிகள், போராடினால் மிரட்டப்படும் மக்கள்...

"சுதந்திரத்திற்கு உயிர் நீத்த ஈகியர்களே மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் வரலாற்றை அவர்கள் அர்த்தமற்றதாக்கி விட்டார்கள். தாய் நாடு என்று நம்பிக்கொண்டிருப்பவர்களின் தாய்மொழிக்கு நீங்கள் ஏற்படுத்திய பாராளுமன்றில் அனுமதியில்லையாம்."

"எல்லா ஜாதி மத ஆதிக்க பிற்போக்கு ஹிந்தி சமஸ்கிருத மேலாதிக்க நரிகளிடமிருந்தும் எங்களுக்கு வேண்டும் விடுதலை"

அதுவரை இதுவொரு குருட்டு சடங்கே.
 
ஆகஸ்டு 15, 2017

நல்ல அரசு எது?

"எல்லா மாநில முதல்வர்களும் பிரதமரும் குடியரசு தலைவரும் பாதுகாப்பாளர்கள் யாருமே இல்லாமல் நாட்டில் எங்கும் எந்த மூலையிலும் சுதந்திரமாக என்றைக்கு நடமாடுகிறார்களோ அன்றுதான் மக்களுக்கான நல்ல அரசு இந்தியாவில் அமைந்திருக்கிறது என்று பொருள்"

இதற்கு எத்தனை நூறு வருடங்கள் ஆகுமோ?...

ஆகஸ்டு 15, 2017

வாஸ்து கோளாறு...?


"கிளம்பும்போது எலுமிச்சைப் பழத்தை சரியாக வைத்திருக்க வேண்டும்"

ஆகஸ்டு 12, 2017

வீரமுனை படுகொலை நினைவுநாள்


400-க்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் இலங்கை முஸ்லிம்களால் கொன்று குவிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவுநாள் இன்று.

வீரமுனை பிள்ளையார் கோவிலுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடிய முஸ்லீம் ஊர்காவற் படையினர் ஜிகாத் ஆயுதக்குழுவினரின் கோர தாண்டவத்தால் வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) 27 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

சம்மாந்துறை பிரதேசத்தில் முஸ்லிம்களால் நிகழ்ந்த இனஅழிப்பின் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவர்களை குறிவைத்து உள்ளே நுழைந்த முஸ்லீம் ஊர்காவல் படைகள் பிள்ளையார் கோவிலுக்குள் தமிழர்களை வெட்டியும் சுட்டும் பெரும் படுகொலையை நிகழ்த்தினார்கள்.
 
ஆகஸ்டு 12, 2017

நீதித்துறையில் சீர்திருத்தம் அவசியம் வேண்டும்


"குடந்தையில் 94 குழந்தைகள் எரிந்து சாக காரணமானவர்கள் விடுதலை"

நீதிபதிகளின் வரவு செலவு / சொத்துக் கணக்கு / உறவினர்களின் சொத்து விவரம் என்று எல்லாவற்றையும் மாதாமாதம் தணிக்கை செய்து, நியாயமாக வாழாத நீதிபதிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து கடுமையாக தண்டிக்கிற சட்டம் ஒன்று வந்தாலொழிய இனி நீதியைக் காப்பாற்ற இந்த நாட்டில் வழியில்லையோ என்று தோன்றுகிறது.

பெரியார் சொன்னார்...

"பொய் சொல்லி பல ஆண்டுகள் வாதாடி பிழைப்பு நடத்துகிறவன் திடீரென நீதிபதியாகிவிட்டால் மட்டும் திருந்திவிடுவானா?" என்று.

சென்னை நீதிமன்றத்திலேயே நீதிபதியை கண்டித்து அறிக்கை வாசித்திருக்கிறார் பெரியார். இனி இப்படியெல்லாம் இதெல்லாம் இந்த நாட்டில் நடக்குமா என்பது தெரியவில்லை, வாய்ப்பில்லை.

'நீதித்துறையில் சீர்திருத்தம் அவசியம் வேண்டும்' என்பதே இந்த சூழல் உணர்த்தும் கருத்து.
 
ஆகஸ்டு 10, 2017

பிரதமர் & முதல்வர்களின் முக்கியப் பணிகள்...?

வலுவற்ற; ஏழை எளிய; ஒடுக்கப்பட்ட; நடுத்தர மக்கள் மீதே எப்போதும் கம்பு சுத்துவதுதான் பிரதமர் & முதல்வர்களின் முக்கியப் பணிகளோ?
 
ஆகஸ்டு  10, 2017

ரேஷன் கட்டுப்பாடு

"ஏழை எளிய மக்கள் அடிப்படை உணவுப் பொருட்கள் பெறவும் முட்டுக்கட்டை போடுவதெல்லாம் ஒரு நாடா?"
 
அரசாங்கம் என்பது யாருக்காக?...
 
ஆகஸ்டு 10, 2017

தமிழ்...

'பாராளுமன்றத்துலகூட தமிழ் பேச அனுமதி இல்லையாம்'

என்ன ....க்கு இங்க அந்த தேர்தல வெக்கிறானுங்க? இவனுங்களும் அங்க போய் தூங்கறானுங்க?
 
ஆகஸ்டு 10, 2017

கடவுள்...?

இந்த "சேட்டுகளுக்கு" மட்டும் விசேஷமாய் படியளக்கிறவன் எந்த கடவுள்?
ஆகஸ்டு 08, 2017

திராவிடர் இயக்க எதிர்ப்பு

வரலாற்றைத் திருத்தும் துவக்கப்புள்ளி திராவிட இயக்கத்திலிருந்து துவங்குகிறது. அதைத் தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கு பலமில்லாத நிலையில் அதை குறை சொல்வது நியாயமில்லை.

05% கூட திராவிடக் கருத்தியலில் யாருமில்லை. 95% வீதம் மக்களை ஆள்வது பார்ப்பனீயக் கருத்தியலே. இதை எதிர்க்க தமிழ்த்தேசியத்தில் என்ன அடங்கியுள்ளது? அப்படி பலம் வாய்ந்ததாக அறிவியல்பூர்வமாக இருந்தவொன்று எப்படி பார்ப்பனீயத்தாலும் திராவிடத்தாலும் வீழ்ந்தது?

சிந்திக்க வைக்காத கருத்துக்கள் இல்லாத எதையும் எப்படி கருத்தியலாக இருக்கவியலும்?

பாவம் மக்கள். அவர்களின் கற்பனையான கண்மூடித்தனமான அறியாமையில் கட்டமைக்கப்பட்டுள்ள பார்ப்பனீய ஆன்மீக உலகிலிருந்து விடுவிக்க ஆளைக் காணோம். நாள், நட்சத்திரம், நேரங்காலம், மந்திரம், சூனியம் என்று பயந்துகொண்டு இன்னமும் சமூகம் மாறாமல்தான் கிடக்கிறது.

தேர்தல் அரசியல் முறையின் சீரழிவையும் திராவிடக் கருத்தியலுடன் இணைத்து விமர்சிப்பது, எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்பவர்களுக்கு அவசியமானதாக இருக்கலாம். இந்த மாற்றத்தையும் கொண்டுவர ஆளில்லாமல் கிடந்த சமூகம் இது என்று புரிந்தவர்களுக்கு இது தேவைப்படுவதில்லை.

மொழியை தீவிரமாக வளர்ப்பதால் மட்டும் ஒரு சமூகம் மேன்மையடைந்துவிடுமா?

திராவிட கட்சிகளின் அதே தேர்தல் சீரழிவுப்பாதை அரசியலில் நின்றுகொண்டு சிலரும் தமிழ்த்தேசியவாதம் பேசுகிறார்களே எது சரி?

தமிழ்த்தேசியம் என்பது அரசியல் விடுதலையா? பண்பாட்டு விடுதலையா? இந்தியாவின் காலணியாகவும் பார்ப்பனீய பண்பாட்டு காலணியாகவும் இருப்பவர்களுக்கு யாரேனும் ஏதேனும் கொஞ்சமாவது செயலில் செய்துகாட்டிவிட்டு பெரியாரை விமர்சிக்கட்டும்.
 
ஆகஸ்டு 08, 2017
 
 

அண்ணாதுரை பட இயக்குநர் குழு






இயக்குநர் சீனுவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடங்களில் நடிக்கும்; விரைவில் திரைக்கு வரவிருக்கும் "அண்ணாதுரை" திரைப்படத்தின் படப்பிடிப்பில் எங்கள் இயக்குநர் குழு....

ஆகஸ்டு 04, 2017

ஆடிப் பெருக்கு...?

ஆடிப்பெருக்குக்கு நல்வாழ்த்தாம்.

ஆத்துல தண்ணி வந்தா மகிழ்ச்சியடைவதில் நியாயம். ஆறே வறண்டு கிடக்கும்போதும் மகிழ்ச்சி என்றால் இதை என்னவென்பது?...

ஆகஸ்டு 03, 2017

சீமான் - உறவுகள் இன்னும் உழைக்க வேண்டும்...



இவ்வாறான பல மேடைப் பேச்சாளர்களை தமிழகம் கண்டுவிட்டது. இதிலொன்றும் புதிதில்லை. தலைவர் பிரபாகரனுக்கு மேடைப்பேச்சு என்ற பலமில்லை. அவர் நிறைய பேசியதே இல்லை.

இப்போதைய நெருக்கடிக்கு தேவை, களப்பணி மட்டுமே. அதில் மிகவும் பின்தங்கியுள்ளது நாம் தமிழர். இப்போதைக்கு எதையும் குறை சொல்லிக்கொண்டிருப்பதுதான் முகநூல் தம்பிகளின் முதன்மை பணியாக உள்ளது. இவர்களை முதலில் திருத்தினாலே மேலும் ஆதரவு கூடும். ஆனால், காலம் ஏற்படுத்தித் தந்திருக்கிற ஒரு அரசியல் வெற்றிடத்தை நாம் தமிழர் தவறவிடுவதாகவே தோன்றுகிறது.

சீமானைப் போலவே கரு.பழனியப்பனும் சிறந்த பேச்சாளர்தான்.

சமூக மாற்றத்திற்கு பாடுபட்டு முன்னம் தங்களின் உயிர் உடைமைகளை தியாகம் செய்தவர்கள் எல்லாம் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமையை என்ற ஒன்றை மட்டுமே கொண்டிருக்கவில்லை, கூடுதலாக தீவிர செயல்பாடும்.

தமிழர் வாழ்வுரிமை கட்சி அளவுக்குகூட நாம் தமிழர் கட்சி ஏனோ போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.

உறவுகள் இன்னும் உழைக்க வேண்டும்.

ஆகஸ்டு 03, 2017

நடிகர் தனுஷ் உதவி. அரசு அசிங்கப்பட வேண்டும்...




பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆளுக்கு 50 ஆயிரம் என 80 லட்சம் ரூபாய் உதவி செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

முதலில் இதற்கு இந்த அரசு அசிங்கப்பட வேண்டும். மனிதர்களிடம்தான் அதையும் எதிர்பார்க்க முடியும் என்பதால் இதுவும் வாய்ப்பில்லை.

தனுஷின் உதவியைப் பாராட்டுவோம். விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் ஏதேனுமாவது செய்பவர்களை விமர்சிப்பது நியாயமில்லை. அதே சமயத்தில் இது தனுஷின் அரசியல் முதலீடு ஆகாதவரையில் நல்லதே. இப்படி ஆராயாமல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் பொம்மையானதால்தான் விவசாயிகளுக்கு இந்த நிலை.

அரசியலுக்கு வருவது தனுஷின் பிறப்புரிமை. அதை இப்படி தொடர்ந்து விவசாயிகளுக்கான குரலாகவும் போராட்டங்களில் பங்கெடுப்பாகவும் மாற்றினால் நல்லதே.

ஆகஸ்டு 02, 2017

கௌரவம்...?

"உனது சாவு செய்தி கேட்டுகூட வர நேரமில்லாமல் தவிர்க்கப்போகிறவர்கள் முன் நீ எவ்வளவு கௌரவமாய் வாழ்ந்தும் என்ன பயன்?"

"நீ நீயாகவே இரு"

ஆகஸ்டு 02, 2017

சினிமா தொழிலாளர்கள் போராட்டம்...?

அவுட்டோர் ஷூட்டிங்கில் ஒரே ஒரு நாள் மட்டும் 'ஜிம்மி ஜிப்' வைத்தால், 5 பேருக்கு ஒருநாள் வேலைக்கான தினக்கூலி ( ஒரு பேட்டா ) 10,200 ரூபாய்.

சென்னையில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்குச் செல்ல பயணப்படி ( ரெண்டு பேட்டா ) 5 பேருக்கு 20,400 ரூபாய்.

வேலை முடிந்து படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை திரும்ப மீண்டும் பயணப்படி ( ரெண்டு பேட்டா ) 5 பேருக்கு 20,400 ரூபாய்.

ஆக...

ஒரேவொரு நாள் வேலைக்கான தினக்கூலி
5 பேருக்கு 10,200 ரூபாய்.

வந்து போக அதே 5 பேருக்கும் பயணப்படி 40,800 ரூபாய்.

மொத்தத்தில் ஒருநாள் வேலைக்கு 5 பேருக்கும் செலவிட வேண்டியது 51,000 ரூபாய்.

இதுபோன்ற 2 பயணப்படிகளை 1 என குறைக்கும்படி தயாரிப்பாளர்கள் கோருகிறார்கள்.

அதேபோல் 12 மணி நேரம் 1 கால்ஷீட் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தொழிலாளர்கள் தரப்பில் நிறைய நியாயம் உள்ளதுதான். ஆனால், எல்லா தயாரிப்பாளர்களும் நிரந்தர முதலாளிகள் அல்லர். எல்லா சங்கங்களும் தங்களை சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக நடிகர்களின் சம்பளத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முதலில் தெளிவானதொரு மணிகட்ட வேண்டும்.

ஆகஸ்டு 02, 2017

தோழர் கொளத்தூர் மணி கைது

எல்லா போலீசையும் பிஜேபியிலோ அல்லது அதிமுகவிலோ அல்லது ஏதேனுமொரு ஜாதி சங்கத்திலோ நேரடியாக இணைத்துவிடலாம். இன்னமும் முக்காடு எதற்கு?

தமிழக அரசு, முன்பைவிடவும் மிகக் கேவலமாக மாறிக்கொண்டிருப்பதன் இன்னொரு உதாரணம்.

ஆகஸ்டு 01, 2017



1.3.18

காறி உமிழும் அநீதிகள்

கல்வி நிலையங்கள்
நீதி மன்றங்கள்
நீதிபதிகள்
மெத்தப் படித்த காவல்துறை அதிகாரிகள்
கோயில்கள்
குலதெய்வங்கள்
தேசபக்தி
தேசிய இனம்
இன்னபிற....
எல்லாவற்றின் மீதும்
காறி உமிழ்ந்துகொண்டிருக்கிறது
எளிய மக்களின் மீது
ஜாதியின் பேரால்
தினசரி நிகழ்த்தப்படும்
வன்கொடுமைகளும் படுகொலைகளும்
 
july 31, 2017
 

பழமொழி

"குதிரை 5 ரூபாய்க்கு கிடைக்கனுமாம், அது சிட்டாவும் பறக்கனுமாம்"

தம்பியின் மகள்

ரோஷினி
july 28, 2017


சாத்தானும்கூட

"சாத்தானும் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை"
 
july 26, 2017

NEET - லாபம் யாருக்கு?

மொத்தம் 6027 மருத்துவ இடங்களில்,

SC மாணவர்கள் பெற்ற இடங்கள் ​82,

ST மாணவர்கள் பெற்ற இடங்கள் 11.

கிட்டத்தட்ட 1500 SC, ST மக்கள் மருத்துவர் ஆவதை தடுத்திருக்கிறது நீட் தேர்வு.

BC, MBC ரொம்ப மகிழ்ச்சியடைய வேண்டாம். அதிக எண்ணிக்கையில் மருத்துவ படிப்பை இழந்தது நீங்கள் தான்.

"இனி மருத்துவமனைகள் மேலும் மிகப்பெரிய பணம் கொழிக்கும் தொழிற்சாலைகளாக மறப்போகிறது"
 
july 22, 2017

is it..?

"அந்த ஊரு சிவன் கோயிலுக்குப் போனா நல்லது நடக்குமாம். அந்த ஊருலயே பொறந்தவங்களுக்கெல்லாம் நல்லதேவா நடக்குது?"
 
july 20, 2017

பயம் ஏனோ

"இவ்வளவு பெரிய ராணுவம், காவற்துறை.
.
இருந்தும் பயப்படுவதோ போராளிகளின் துண்டறிக்கைகளுக்கு...!!!

இதுலவேற,
"சீனாவோட போர்"
"பாகிஸ்தானோடு போர்...!!!"
 
july 20, 2017

மேசை தட்ட சம்பளம் இவ்வளவா?

"பணமில்லையென்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 வருடமாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சட்டசபையில் மேசை தட்ட மாதம் 1 லட்சம்"

july 19, 2017

பிக்பாஸ்

அப்பல்லோ மருத்துவமனையில் என்ன நடந்தது? எப்படி நடந்தது? வெங்கையா நாயுடுக்கு ஏன் தமிழ்நாட்டு மேல் திடீர் அக்கறை? சிறையில் ராம்குமாருக்கு என்ன நடந்தது? எப்படி நடந்தது? அந்த 570 கோடி கண்டெய்னர் இப்ப எங்கே உள்ளது? கல்வி நிலையங்களின் கொடுமையால் மாண்டுபோன மாணவ மாணவிகளின் மரணத்திற்கு வழங்கப்பட்ட நீதி என்ன? இனி அப்படி எதுவும் நடைபெறாமல் இருக்க வழி என்ன? ஜாதியின் பேரால் நிகழ்த்தப்படும் தொடர் ஆணவக்கொலைகளுக்கு எதிராக அரசின் மௌனம்? மாநில மொழிப் பாடங்களை படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்? ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் யாராருக்கு எவ்வளவு லாபம்? ஒரே தலைமுறையில் வளங்களை சுரண்டி நிலங்களை பாலையாக்கினால் இனி வாழவரும் அடுத்த தலைமுறைகளின் கதி?

இப்படி கோடிக்கணக்கான பேர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தேடவும் பதில் தரவும் வக்கற்ற ஊடகங்களும், ஊரெங்கும் பிக்பாஸ் பற்றிய பேச்சென்பதும் உணர்த்துவது என்னவென்றால் அடிப்படையில் இது இன்னும் நாடாகவே ஆகவில்லை; இன்னமும் யாருக்கோ காலணி நாடாகவே இருக்கிறது என்பதுதான்.

"உள்ளூரில் இருந்தே இந்தியாவை ஆண்டுகொள்ளலாம் என்றுதான் 1947-ல் வெள்ளையர்கள் வெளியேறி இருக்கிறார்கள்"
 
july 18, 2017

NEET

தமிழகத்தின் அரசு மருத்துவக் 22
கல்லூரிகள்

இவைகளின் மொத்த இடங்கள். 2900


அனைத்திந்தியத் தொகுதி 15% 434

மாநிலத் தொகுதி 85% 2466

2466 ல் 85% சமச்சீர்க்கல்வி மாணவர் களுக்கு. த.நா அரசு ஆணைப்படி 2094

2466 ல் 15% சிபிஎஸ்சி மாணவர்க
ளுக்கு த.நா அரசு ஆணை. 370

தற்போதைய நிலை:

சமச்சீர்க் கல்வியில் பயின்ற மாணவர்கள்
5% இடம் பெறுவதே குதிரைக்கொம்பு. அதாவது, 2094 இடங்கள் பெற வேண்டியவர்களுக்கு 123 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 95% இடங்கள்.. அதாவது 370 இடங்கள் கிடைக்க வேண்டியவர்களுக்கு, 2343 இடங்கள் கிடைக்கும்.

இந்தப் பிரிவினர் மொத்தமே சுமார் 4000 பேர் மட்டுமே...

எப்படி இருக்கிறது சமூக நீதி... ?

இந்த அரசு யாருக்கானது என்று இன்னும் விளங்கவில்லையா... ? இதை விட வேறு சாட்சி வேண்டுமா...?

பிஜேபி யில் உள்ளவர்களுக்கு மனச்சாட்சி என்று ஏதேனும் உள்ளதா...?

நக்சலைட்டுகளை உருவாக்குபவர்கள் யார் ?

மொத்தத் தமிழகமும் இந்நேரம் வீதிக்கு வந்திருக்க வேண்டாமா... ?

ஏழைகளிடம் உள்ளதைப் பிடுங்கிப் பணக்காரர்களுக்குக் கொடுக்கும் உங்களை, உங்கள் கடவுள் தண்டிக்காதா... ?

உங்களுடைய கொள்கையே... ஒடுக்கப்பட்டோரும், உழவர்களும், கிராமப்புறத்தோரும், மேலேறி விடக்கூடாது என்பதுதானா..?

மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்...
இப்படிப் புறக்கடை வழியாக நீங்கள் உருவாக்கும் மருத்துவர்கள் நாளைக்குக் கிராமப்புறம் செல்வார்களா..? இவர்கள் திறமையான மருத்துவர்களாக உருவெடுப்பார்களா.. ?

அவ்வளவு இருக்கட்டும்... நீங்கள் மருத்துவம் செய்து கொள்ள இவர்களிடம் செல்வீர்களா..

மனித வளத்தை வீணடிக்கிறீர்களே... யாருக்கு இழப்பு... ?

சமுதாயத்தைச் சீரழிக்கிறீர்களே ...

Dr. Karmegan Muthuvel

july 18, 2017

NEET...

"தமிழர்களின் வரிப்பணத்தில் கட்டிய 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 05% மட்டுமே தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்காம்"

மீதி...?

july 16, 2017

பழமொழி

"பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒப்புக் கொள்வதில்லை"

தமிழ்நாட்டு உயர்நீதி மன்றமா?

நீதிபதியாக வேற்று மொழிக்காரனை நியமித்துவிட்டு "தமிழ்நாடு" உயர்நீதிமன்றம் என்பது என்ன நியாயம்?
 
july 15, 2017

போராடுபவர்கள் தொடர் கைது

IAS, IPS அதிகாரிகள் எல்லோரும் படித்துவிட்டுத்தான் பதவிக்கு வருகிறார்கள். பயன் என்ன?

ஊடகங்களின் வேசித் தனத்தை தடுத்து நிறுத்த ஆளில்லை. அது ஜனநாயகமாம். இயற்கையை பாதுகாக்க குரல் கொடுப்பதும் போராடுவதும் பிரச்சாரம் செய்வதும் தேச விரோதமாம்?...

போலிசு வேலைக்கு படிப்புத் தகுதி எதற்காக?
 
july 13, 2017
 

TFPC டிக்கெட் புக்கிங்

"தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவே ஒரு ticket booking app-ஐ வெளியிடலாமே. எந்தவொரு முதலீடும் இல்லாமல் யாராரோ சுரண்டுகிறார்களே"
 
july 13, 2017

என்னதான் பிரச்சினையோ?

சமஸ்கிருத வளர்ச்சிக்கென ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கும் டில்லிக்காரனுக்கு செம்மொழி தமிழ் வளர்ச்சி நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் வழங்க பணமில்லையாம்.
 
# என்னதாண்டா உங்களுக்கு பிரச்சினை நாய்களா?
 
july 11, 2017

நச்சை பரப்பும் பள்ளிகள்

"இனிமே பாருங்க, டென்மார்க், இஸ்ரேல் பசங்க எல்லாம் நம்ம பசங்களுக்கு பின்னாடிதான்"
 
july 09, 2017
 

கலவரம் வரும்...

"....... கலவரம் வரும் - பொன்னார்"

பொன்னார் சொல்ற மாதிரி உருவாகப்போற கலவரத்த அடக்குறது ஒரு விஷயமே இல்ல.

4 அண்டாவுல பிரியாணி செஞ்சி அதுல க்ளோரோபார்ம் கலந்தா போதும், ஆல் அவுட். அப்புறம் யாராலதான் எங்கதான் எதுக்குதான் கலவரம் பண்ண முடியும்?
 
july 09, 2017

“கற்க” கல்வி அறக்கட்டளை

“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார், க.க.நகர், சென்னை – 78.

114-வது காமராசர் பிறந்த நாள் விழா

நாள் : 18-07-2017 மாலை 5 மணி
இடம் : க.க. சாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை – 78

காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசை முழக்கத்துடன் துவங்கி சுமார் 1000 மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், திருக்குறள் புத்தகம், பள்ளிப் பைகள் மற்றும் ஊக்க விருதுகள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.

நிறுவனர்கள் :
வீ. பொற்கோவன்
குமணன்

தலைவர் :
வழக்கறிஞர் ப. அமர்நாத்

செயலாளர் :
கரு. அண்ணாமலை

துணைத் தலைவர் :
விநாயகமூர்த்தி மாசிலாமணி

துணைச் செயலாளர் :
ராமாபுரம் சுப்பிரமணியன்

பொருளாளர் :
விருகை செல்வம்

தேர்வுக்குழு உறுப்பினர்கள் :

ஜெயசீலன், மணிமொழியான், துரைராசு, கண்ணன், மணிபாரதி கிரேசி விஜயகுமார், மூவேந்தன், சிலம்பு சிவாஜி, தமிழ்ச்சிற்பி, குமார்

உதவி பெறுவோர் விவரம் :

கும்மிடிப்பூண்டி தமிழீழ அகதிகள் முகாம் – 300 மாணவ மாணவியர்கள்

புழல் தமிழீழ அகதிகள் முகாம் - 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி – 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி – 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் அரசு துவக்கப்பள்ளி – 100 மாணவ மாணவியர்கள்

தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் 1000 ரூ பரிசுத்தொகை

தமிழில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காமராசர் விருது மற்றும் 500 ரூ பரிசுத்தொகை

குறிப்பு :

பொதுவுடைமை இயக்கம் / திராவிட இயக்கம் / தமிழ்த்தேசிய இயக்கம் / சாதி மறுப்பு & சுயமரியாதை திருமணம் புரிந்தோர் / முற்போக்கு அமைப்புகள் / துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்களின் குழந்தைகளுக்கு உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும். (உதவி வேண்டுவோர், அரசு பள்ளிகள் / தமிழ்வழிக் கல்வி பயில்பவர்களாக இருத்தல் வேண்டும்.)

***

“கற்க” கல்வி அறக்கட்டளை, தமிழ்வழிக் கல்வி உதவி மையம் சார்பாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும்
கல்விப் பணிகளின் விவரம் :

தொடக்கம் : 10-05-2013

01. ரயில்வே (RRB) loco pilot தேர்வு சிறப்பு இலவசபயிற்சி – 2014

02. குடிமைப்பணி தேர்வுக்கு எழுதும் மாணவர்களுக்கு study circle –2015

03. உதவி ஆய்வாளர் தமிழ்நாடு காவல்துறை தேர்வு – இலவச பயிற்சி வகுப்பு –2015

04. அஞ்சல்துறை தேர்வு (postal dept ) - இலவச பயிற்சி வகுப்பு – 2015

05. 2015 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் மஞ்சைமகத்து வாழ்க்கை பள்ளி சீரமைப்பு - 2016

06. கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - இலவச பயிற்சி வகுப்பு –2016

07. 2016 புயலால் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி சீரமைப்பிற்கு தொகை 65,000 ரூபாய் மற்றும் 35,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. - 2016

08. குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி smart class –2017

08. துரைப்பாக்கம் கண்ணகிநகர் சிறுவர்களுக்கு மாலை நேர தனிப்பயிற்சி வகுப்புகள் –2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.

09. வியாசர்பாடி கன்னிகாபுரம் பள்ளி மாணவ மாணவியர்க்கு தனிப்பயிற்சி -2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.

தமிழ் மொழி வளரவும், தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவும், எளியோருக்கு உதவும் நல்லெண்ணமும் கொண்ட சமூக அக்கறையாளர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்கொடை வழங்குவதற்கான வங்கி விவரம் :

KARKA,
A/C NO : 62418336742,
STATE BANK OF HYDERABAD,
IFSC code – SBHY0020946

தொடர்புக்கு :

“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார்,
க.க.நகர், சென்னை – 78.

கரு.அண்ணாமலை : 94440 11124
குமணன் : 98413 55818
 
july 09, 2017
 





 

Great Salute

எல்லையில் சீனப் படையும் இந்தியப் படையும் கைகலப்பில் ஈடுபடும் காணொளியைப் பார்க்கும்போது இரு தரப்பினர் மீதும் கவலை எழுகிறது.

இரு தரப்பு அரசியல்வாதிகளின் ; ஆட்சியாளர்களின் பிள்ளைகளும் எல்லைப் படையில் பணியாற்றும் சூழல் வரும் நாளில்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு.

"Great salute for our soldiers"
 
july 09, 2017

முக்கியப் பிரச்சினையாமே...?

"செய்தி: முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு"

# பதஞ்சலி ஏற்றுமதி மற்றும் மாட்டுக்கறி ஏற்றுமதி தொடர்பாக இருக்குமோ...???
 
july 08, 2017
 

எல்லைக்கு ஆர்.எஸ்.எஸ்....?

"ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை சீன எல்லைக்கு அனுப்பத் தயார் - தொகாடியா"

# இதுல போருக்குப் போகப்போற உங்காளுங்கோ கித்னா பேரு ஜீ...???
 
july 07, 2017
 

வாழ்க்கை சிக்கலானதா?

வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ்வது ; உண்மையில் மிக எளிமையானது.

எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கை கோட்பாடுகளுக்குள்ளும், விருப்பு-வெறுப்புகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் இருந்தாலே போதுமானது.

அப்படி சிக்கிக்கொள்ளாமல் இருக்க இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை என்ற சற்று ஆழமான & தெளிவான புரிதல் மட்டுமே தேவை.

உதாரணமாய்...

ஒரு காலத்தில் தமிழ்த்திரை உலகில் எம்ஜியார் & சிவாஜி கணேசன் என்ற இரு பெரும் நடிகர்கள் கோலோச்சினர்.

இவர்களுக்கென தனித்தனி ரசிகர் மன்றங்களும் இருந்தன.

இருவரின் ரசிகர்களும் ஏதாவதொரு டீக்கடை பெஞ்சில் நிச்சயமாய் சந்தித்துக் கொண்டிருப்பர்.

அப்போது அங்கு என்ன நடந்திருக்கும் என சற்று கற்பனை செய்து பாருங்களேன்.

எம்ஜியார் பெரிதா? சிவாஜி பெரிதா? என வாய்ச்சண்டையில் ஆரம்பித்து அது கைச்சண்டையாய் மாறி போலிஸ், கேஸ் என பிரச்சனை திவிரமாகியிருக்குமா? இல்லையா?

இத்தகைய சண்டைகள் நிகழ்ந்திருக்காது என யாராவது மறுத்துக் கூற முடியுமா?

இப்போது அவர்கள் இருவருமே காலமாகிவிட்டனர்.

அவர்களின் ரசிகர்களிலும் பெரும்பாலோர் காலமாகிவிட்டனர்.

இன்னும் ஒரு இருபது முப்பது ஆண்டுகளில் அவர்களின் ரசிகர்கள் அனைவருமே காலமாகிவிடுவர்.

அவர்களுக்கு முன்னால் புகழ்பெற்ற நடிகர்களாய் இருந்த M.K தியாகராஜ பாகவதர், T. R. மகாலிங்கம், M.K. ராமசாமி போன்றோரை நம் தலைமுறையினர் மறந்து விட்டதைப் போல இன்னும் ஒரிரு தலைமுறைகளுக்குப் பிறகு இவர்களும் மறக்கப்படுவார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

அப்படி மறக்கப்படுவது உறுதியென்றானபின் அந்த டீக்கடை பெஞ்சில் நடந்த அடிதடி ரகளையில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? ஆழ்ந்து சிந்தியுங்கள்.

எதற்காக இந்தக் கொள்கை கோட்பாடுகள், விருப்பு வெறுப்புகளில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும்?

வாழ்க்கை ஒரு விளையாட்டு. வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்.

சாட்சி பாவமாய் மாறி வாழ்க்கையை வேடிக்கை பார்க்கத்தொடங்கினால் வாழ்க்கையில் கொண்டாட்டத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை எனப் புரிந்துவிடும்.

வாழ்க்கையுடனான என்னுடைய அணுகு முறை இதுதான்.

கொள்கை கோட்பாடுகள், விருப்பு வெறுப்புகள், ஜாதி, மதம், இனம், தேசம்,மொழி என எந்தக் குறுகிய எல்லைகளுக்குள்ளும் என்னை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை.

நீங்கள் ரஜினி ரசிகரானால் நான் உங்களிடம் கமலைப் பற்றி பெருமையாகப் பேசுவேன் & vice versa

நீங்கள் ராமராஜனை வெறுத்தால் நான் அவரின் சிறப்புகளை பட்டியலிடுவேன்.

நீங்கள் வேதாத்திரி மகரிஷியை போற்றினால் நான் ஜக்கி வாசுதேவை வேண்டுமென்றே போற்றுவேன்.

நீங்கள் கடவுள் இல்லை என்று சொன்னால் நான் உண்டு என வாதிடுவேன்.

உண்டு என்றால் இல்லை என வாதிடுவேன்.

உருவ வழிபாடு தவறு என்று சொன்னால் சரி என ஆயிரம் காரணங்களைச் சொல்ல என்னால் முடியும்.

சரி என்று சொன்னால் தவறு எனச்சொல்ல ஆயிரம் காரணங்கள் உண்டு.

சைவமா? அசைவமா? எது சிறந்தது?

இந்துமதமா? கிறிஸ்துவமா? இஸ்லாத்தா? பௌத்தமா?

யார் எதை ஆதரித்தாலும் எதிர் வாதங்கள் என்னிடம் உண்டு.

நேற்று சைவம் என்று பேசியவன் இன்று அசைவம் என்று பேசுவேன்.

எனக்கு எதுவும் ஒரு பொருட்டில்லை.

ஏனெனில் எனக்கு எல்லாமே ஒரு விளையாட்டுதான். கொண்டாட்டம்தான்.

எனவே வாதங்களில் தோற்றுவிட்டாலும் நான் வருத்தப்படுவதில்லை.

எதுவும் அர்த்தமற்றவை என்பதை நான் தெளிவாய் அறிவேன்.

சுத்த சைவர்கள், ஆளில்லாத ஒரு தீவில் சில நாட்கள் மாட்டிக்கொண்டால் அங்கு கிடைக்கும் மீனைத்தவிர வேறு எதை உண்ண முடியும். அங்கு Survival தானே முக்கியம். சைவக் கோட்பாடு காற்றில் பறந்துவிடும்தானே?

அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், பாலுறவு போன்றவை கிடைக்காவிட்டால் நீங்கள் எத்தகைய உயரிய அறநெறிகளை கடைபிடிப்பவராயினும், அவையனைத்தையும் கைவிட்டு ஒரு கொலை பாதகனாய் மாறிவிடுவீர்கள்.

ஒவ்வொரு வாதத்திற்கும் மறுக்கமுடியாத ஒரு எதிர்வாதம் நிச்சயமாய் உண்டு.

அப்படியெனில் இங்கு எது சரி? எது தவறு?

உங்களுடைய எந்தக்கொள்கையும் கோட்பாடுகளும் மரணப்படுக்கையில் வெகு நிச்சயமாய் உதவிக்கு வராது. உடனும் வராது.

ஜாதி, மதங்களைக் கொண்டு இங்கு ஆயிரமாயிரம் போர்கள் எந்தவித அர்த்தமும் இல்லாமல் நடந்தேறியிருக்கின்றன. நடந்துகொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் மிக உக்கிரமாய் நடந்த சைவ, வைணவப் போர்கள் இன்று உங்களுக்கு முட்டாள் தனமாய் தெரிகிறதல்லவா?

"ஓம் நமச்சிவாயா"

எனச்சொல்லாமல்

"ஓம் நமோ நாராயணாய"

எனச்சொன்னதால் பெருமாள் சிலையோடு கட்டப்பட்டு கடலில் தூக்கியெறியப்பட்டான் ஒரு வைணவன்.

என்ன ஒரு மடத்தனம்? இதனால் யாருக்கு என்ன பிரயோசனம்?

இன்று அந்தத் தியாகத்திற்கு என்ன மதிப்பு?

வாழ்க்கையை கொள்கை கோட்பாடுகளுக்காக தியாகம் செய்வதைக் காட்டிலும் ஒரு முட்டாள்தனம் எதுவுமில்லை.

நமக்கு முன்னால் கோடான கோடி மக்கள் இங்கு வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் எத்தனையோ வேறுபட்ட ஜாதி, மதங்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகளே இங்கு இல்லையே.

நாம் வாழ்ந்ததற்கான சுவடுகளும் நிச்சயமாய் இருக்கப்போவதில்லை.

உங்கள் சுவாசம், இதயத்துடிப்பு என எதுவும் நம் கையில் இல்லை.

ஆனால் அகந்தை மட்டும் தலைக்கேறி நிற்கிறது.

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் இருப்பு ஒன்றே உண்மையானது.

இங்கு நீங்கள் வாழ்க்கையை கொண்டாடுவதைத் தவிர வேறு சாதிப்பதற்கு எதுவுமில்லை.

வாழ்க்கையை ஒரு குதிரைப் பந்தயம் போல வாழ்வதை நிறுத்துங்கள்.

உணர்வு ரீதியாய், உங்களுக்காய் வாழுங்கள்...

ஆடுங்கள். பாடுங்கள். கொண்டாடுங்கள்...

july 06, 2017

ஹிந்துத்வா

மத்தவங்களைவிட நாமவெல்லாம் ஒரு விசேஷ வம்சம்; பெரிய முடின்னு நினைக்கிறதுக்கு பேருதான் "ஹிந்துத்வா"
 
july 05, 2017

மோடி மிக நல்லவர்

"கருப்பு பணம் பதுக்கினால் கடும் தண்டனை - மோடி எச்சரிக்கை"

சொந்த கட்சிக்காரர்களையே கடுமையாக எச்சரிப்பதற்கு உண்மையிலேயே பாராட்டுகள்.
 
july 03, 2017

ஒரே மருந்து

இந்த முதல்வர் பதவியை வெச்சிக்கிட்டு இனிமே ஒன்னும் புடுங்க முடியாதுன்னு டெல்லிக்காரன் சொல்றான். தெரிஞ்சும் ஏதோ பெருசா பில்டப் கொடுக்குறாங்க இந்த ஆளுங்கட்சிக்காரங்களும் எதிர்க்கட்சிக்காரங்களும்.

இதுவாவது பரவாயில்ல, அடுத்த முதல்வரா அவரு அல்லது இவரு வந்தா எல்லாம் சரியாகிடும்னு இன்னமும் நம்பிக்கிட்டு கதை அளந்து கொடி தூக்கிக்கிட்டு இருக்காங்க சிலர்.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை எல்லாருக்கும் பொதுவா; ஞாயத்துக்கு பக்கமா, மக்களின் மகிழ்ச்சியான அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டுற தலைவன் ஒருவனும் தென்படவில்லை. யாராவது இருக்கலாம், இல்லவே இல்லைன்னு சொல்லல. இன்னும் தென்படவில்லை.

ஜாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், கடவுள், விதி, பரிகாரம், ஜாதகம் எல்லாமும் கொஞ்சம்கூட ஒழிஞ்ச மாதிரி தெரியல. கல்வி, பயன் தருதான்னும் தெரியல.

எல்லா மாணவர்களுக்கும் பொதுவுடைமை மற்றும் நாத்திகக் கல்வியும் சேர்த்து பயிற்றுவிப்பதுதான் இந்தியாவிலிருக்கும் நோய்க்கு ஒரே மருந்து.

இது நடப்பது எந்த நாளோ?...
 
july 01, 2017

பிக்பாஸ் அரசியல்...?

தமிழ் மண்ணில் இவ்வளவு பிரச்சினைகள் உள்ளபோது "பிக்பாஸ்" போன்ற நிகழ்ச்சிகளை இங்கே ஒளிபரப்புவதும், அதை ஆதரித்து எழுதுவதும் கேவலமான மனநோய் இல்லையா?
 
june 30, 2017

கல்வி நிலையங்கள் எதை வளர்க்கிறது?

"மாடுகளின் பேரால் இதுவரையில் மொத்தம் 28 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்"

கல்வி நிலையங்கள் என்னவிதமான அறிவை வளர்க்கிறது இங்கே?..
 
june 30, 2017

பூணூல் கயிறு

"இந்தியாவில் அடைபட்டிருக்கும் பல தேசிய இனங்களுக்கான தூக்குக் கயிறு"

"எளிய மக்களின் திறமைக்கு மதிப்பில்லாமல் அவர்களின் ஜாதியை வைத்தே மதிப்பு தரும் கீழான பொதுப்புத்தியை தலைமுறைதோறும் பரப்பிக்கொண்டிருக்கும் வைரஸ்"
 
june 29, 2017 

தீவிர ஹிந்துத்வா ஏன்?

ரிஃபாத் ஷரூக் என்ற தமிழக மாணவர் உருவாக்கிய உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள் நாசா அமைப்பின் மூலமாக விண்ணில் ஏவப்பட்ட தகவல் எந்த வடநாட்டு செய்தி ஊடகங்களிலாவது முதன்மை செய்தியாக வந்துள்ளதா? இந்த கேடுகெட்ட அரசின் , அதன் கைப்பாவையாக செயல்படும் ஊடகங்களின் கள்ளமவுனம் எதை காட்டுகிறது? இஸ்லாமியராக இல்லாமல் இவர் ஒரு பிராமணராக பிறந்திருந்தால் இவரை நாடே கொண்டாடியிருக்கும். இந்தியாவின் முதல் சுதந்திரப்போரை தொடங்கிவைத்தவர்கள் இஸ்லாமியர்கள். இந்தியாவின் கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள் என்று பல கலை,கலாச்சார நவீனங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு மகத்தானது. இப்போதும் ஓர் இஸ்லாமிய பெயர் இந்தியாவை தலைநிமிர வைத்துள்ளது. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து எண்ணற்ற பிராமணர்கள் அமெரிக்கா சென்றார்கள். அடுத்த பத்தாண்டுகளில் கல்விகற்ற மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் பின்னாலேயே அங்கு சென்றார்கள். இப்போதெல்லாம் அங்கு பிராமணர்களுக்கும் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும்தான் கடும்போட்டி. திறமைக்கோ, அறிவுக்கோ பிறப்போ,குலமோ ஒரு காரணம் இல்லை. எந்த ஜாதியில் பிறந்தவனும் அறிவில், திறமையில் ஜொலிக்கலாம். இதை பிராமணர்கள் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ அமெரிக்கர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். இப்போது வெளிநாட்டுக்கு சென்ற பிராமணர்கள் பலருக்கும் அங்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் இந்தியாவில் ஒற்றைக்கலாச்சாரம் ஒன்றை கொண்டுவந்து தங்கள் இருப்பை பலமாக நிறுவ முயற்சி செய்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் சமீபமாக இங்கு நடக்கும் எல்லா தாக்குதல்களும். நான் ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். இன்னும் முப்பதாண்டுகள் ஆனாலும் இந்தியா முன்னேறாது. முன்னேறவும் விடமாட்டார்கள். ஓரளவு வாய்ப்பும், கல்வியும் இருந்தால் நீங்கள் எல்லாரும் தயவுசெய்து உங்கள் திறமையை மதிக்க தெரிந்த ஏதாவது வெளிநாட்டுக்கு சென்றுவிடுங்கள்.

Vinayaga Murugan
june 24, 2017

வளர்ச்சி

முன்பெல்லாம் மனிதனுக்கு மரணம் நேர்வது 4 வழிகளில், இப்போதெல்லாம் 400 வழிகளில். ஆமாம், உலகம் வளர்ச்சி அடைந்துள்ளதுதான்.
 
june 23, 2017

இந்தியா Vs பாகிஸ்தான்

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை. அது பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக நடத்தப்படும் ஒரு தனியார் அமைப்பு. இதில் பெரும் ஊழலும் பண மோசடியும் அடிக்கடி நடப்பதும், இது தொடர்பாக இந்திய அரசு யாரையும் தண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதும் ஊரறிந்த ஒன்று. இதில் மட்டுமல்ல, உயர் ஜாதிக்காரர்களின் அதிகாரத்தில் இருக்கும் எல்லா துறைகளிலுமே ரகசியமாக ஊழலால் சிக்கியிருப்பதை கவனிக்கலாம். இந்தியாவில் பார்ப்பானையும் பணக்காரர்களையும் தண்டிக்க முடியாது என்பது அரசியல் நோக்கர்களுக்கு விளங்கும். மேலோட்டமான இந்திய பக்தர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. எனவே கிரிக்கெட்டில் இந்தியா வெல்வதற்கும் தோற்பதற்கும் தேசிய உணர்வுடன் கலந்து ஈயம் பூசுவது பார்ப்பனீயத்தின் தந்திரம். தேசிய உணர்வும் அவர்களுக்கு லாபகரமான வணிகம்தான்.

முஸ்லீம் கிறித்தவர்களைவிடவும், இன்னபிற ஏனைய இனக்குழுக்களைவிடவும் பார்ப்பனர்கள் மிகவும் மைனாரிட்டி. இதை மறைத்துக்கொள்ளவே எல்லோரையும் ஹிந்து என்ற வட்டத்துக்குள் அடைத்து தங்கள் ஆதிக்கத்தை காப்பாற்றிக் கொண்டார்கள். இந்தியாவின் பூர்வகுடி மக்களின் வாழ்க்கை முறைக்கும் இவர்களுக்கும் என்றைக்குமே தொடர்பில்லை. ஆனாலும் எல்லோரையும் தந்திரமாக தங்களுக்கு கீழே அடைத்து ஜாதியாக பிரித்து புராணக்கதைகள் புகுத்தி மிக நுண்ணிப்பாக இன்றுவரை தங்கள் ஆதிக்கத்தை காப்பாற்றி வருகின்றனர்.

காந்தியின் படுகொலை சாதாரணமாக ஆவதும், ராஜீவ்காந்தி படுகொலை பூதாகரமாக்கப்பட்டதையும் கவனியுங்கள். சங்கர ராமன் படுகொலையில் தொடர்புடையதாக கைதான ஜெயேந்திரருக்கு கிடைத்த நீதியையும், ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாருக்கு கிடைத்த நீதியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

"ஹிந்து" என்று சொல்லப்படுபவர்களுக்கு விரோதமாகவும், எளியவர்களை புனிதத்தின் பேரால் அடித்துக் கொலை செய்தபடி ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதையும் கவனியுங்கள்.

இதைத்தான் தன் கவிதைகளில் "ஆரிய பூமி" என்று அப்போதே தெளிவாக எழுதினான் பாரதி.

ரஜினி முதல்வராகவும், மீண்டும் மோடியே பிரதமராகவும், அத்வானி ஜனாதிபதியாகவும் வரவேண்டும் என்று என் முந்தைய பதிவுகளில் நான் எழுதக் காரணம், இந்தியாவின் பார்ப்பனீய முகமூடி எல்லாருக்கும் விரைவாக புரியவரும் என்பதற்கே. அடிக்கடி நல்லவர்கள் என்று யாரையாவது நினைக்க வைத்து பொதுத் தேர்தல்களால் தொடர்ந்து தப்பித்துக் கொள்கிறது இந்த முகமூடி. மேலும் இத்தனை முற்போக்கு இயக்கங்கள் இயங்கியும் மக்களுக்கு வராத விழிப்புணர்வை இவர்கள் தானாக உருவாக்கிவிடுவார்கள். அல்லது மக்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள் என்பதற்கே.
 
june 18, 2017

IAS தேர்வு / வெற்றி

உலகமகா அறிவை சேகரித்து தேர்வெழுதி பதவிக்கு வருகிற கலெக்டர்கள்தான் அரசின் எல்லா நிர்வாகத் தலைமையிலும் அமர்ந்திருக்கிறார்கள்; வழி நடத்துகிறார்கள். ஆனாலும் எங்கும் ஊழல் எதிலும் ஊழல், கொள்ளை. நேர்மையான; வெளிப்படையான செயல்பாடு எங்கும் காணோம்.

நிலைமை இப்படியிருக்க, புதிதாக ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களை எதற்காக கொண்டாடுகிறது பத்திரிகைகள்? இது என்ன உளவியல்?..
 
june 18, 2017

புறக்கணிப்பு பற்றி ஓஷோ

யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்........???

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன.......???

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா.......???

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு

நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.

அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

இயற்கையை நேசி.

வலிகள் மறையும்.

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில்
நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார்.

இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை.

அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை.

அது இயல்பாய் இருக்கிறது.

அது போல் இயல்பாய் கடமையைச் செய்

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்

*ஒஷோ*

இரு நண்பர்கள்

"2000 ரூபாய் தாளில் நேனோ சிப்ஸ்" புகழ் எஸ்.வி.சேகர், பாஜக மேலிடத் தலைவர் அமித்ஷா அவர்களுடன் கைகுலுக்கியபோது...
 
june 12, 2017 

கருத்துக் கணிப்பு

விரைவில் "தந்தி டிவி" யின் logo இவ்வாறு மாற்றப்பட வேண்டுமென 99% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

(எங்ககிட்டயேவா...?!!!)
 
june 11, 2017
 

தூணிலும் திரும்பிலும் ப்ளாஸ்டிக்

"ப்ளாஸ்டிக் இன்றி அமையாது உலகு"

june 11, 2017

அண்ணன் மகனும் தம்பியின் மகளும்


june 10, 2017


கருத்துக் கணிப்பு...

"அடுத்து நடைபெறவுள்ள அமெரிக்க மற்றும் ரஷ்ய தேர்தல்களில் பெரும்பான்மையான இடங்களை வென்று BJP ஆட்சியை பிடிக்க வேண்டும் என 70% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்" 
 
- தந்தி டிவி கருத்துக் கணிப்பு  
 
june 10, 2017

எந்த ஏரியா கருத்துக் கணிப்பு?

"70% பேர் ஹிந்தி கற்க விரும்புகிறார்கள்" - தந்தி டி.வி

# நியாயமா பார்த்தா ஹிந்திக்கு ஆதரவு 100% பேர்னு வந்திருக்கனும். சௌகார் பேட்டையில ஏதோ 30% பேராவது தமிழ்க்காரங்க இருக்குறாங்கபோல.
 
june 10, 2017

எல்லாமே ஹிந்திதான்

'ஹிந்தி தெரியாததால் என்னால் இரும முடியவில்லை'
 
june 10, 2017

இதென்ன அறிவியல்?

10 கோடிக்கும் மேலாக மக்கள் வாழும் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இவ்வளவு அறிவு என்றால் அந்த மக்களின் எதிர்காலம்...??

(இது பொய்யான படம் என்று தெரிகிறது. ஆனால் செய்தி பொய்யானதில்லை)
 
june 09, 2017
 

சாரு நிவேதிதா ஒரு ஞானி

"இந்தி தெரியாததால் 50 ஆண்டுகள் பின் தங்கிவிட்டோம்" - சாரு நிவேதிதா

# "எழுத்தாளர்னா அறிவாளியாதான் இருக்கனுமா? அரைவேக்காடா இருக்க கூடாதா?"ன்னு கேட்கிறாரு.

இவரு எழுதுனத படிச்சவங்கயெல்லாம் எத்தனை நூற்றாண்டுகள் பின் தங்கி இருக்காங்களோ தெரியல. நல்லகாலம், அநேகமா 99% எந்தவொரு தமிழ் இலக்கிய வாசகர்களுக்கும் இந்த பேராபத்து நேர்ந்திருக்காது என்பதால் தப்பித்தார்கள்.
june 09, 2017

அரசு போல் வருமா?

ஆயிரந்தான் தனியார் சொகுசு பேருந்துகள் இருந்தாலும் மக்கள் வசதியுடன் பயணிக்க இம்மாதிரியான சொகுசு அளிக்கும் அரசுப் பேருந்து போல் வருமா?

குறைந்த கட்டணம் / நிறைந்த சேவை

june 07, 2017

வாழ்க்கை எனது...

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!

இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.

அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனை பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!

எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!

அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!

அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!!

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!

நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!

ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டுகொள்ள வேண்டும்????

யார் இவர்கள்????

என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்????

நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!

அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!

அதுவும் வெகு தொலைவில் இல்லை!

சர்வமும் ஒருநாள் அழியும்!

மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!

கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!

தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.

நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதேபோல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப்போவதில்லை. இது தான் வாழ்க்கை.

"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்"
 
(படித்ததில் பிடித்தது)

june 07, 2017


 

இப்போது ஏன் குரங்குகளிலிருந்து மனிதன் தோன்றவில்லை?

"குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் எனில் இப்போது ஏன் குரங்குகளிலிருந்து மனிதன் தோன்றவில்லை?" என்று கேட்கிறார் ஒரு நண்பர்.

தி.நகரில் ஏன் இன்று எந்த துணிக்கடையும் தீப்பிடிக்கவில்லை என்று கேட்டால் என்ன பதில்?

இயற்கை விதிகளின் ஏதேனும் இரு ஆற்றல்கள் சந்தித்துக்கொள்வதிலோ இணைவதிலோ மோதுவதிலோ எதிர்ப்பதிலோ ஏதேனும் ஒரு மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒருவன் தாம்பரம் வழியாக சென்னை வந்தான் எனில் தாம்பரத்திற்கு அவனுடன் வந்தவர்கள் யாருமே ஏன் சென்னை வரவில்லை?.. என்று கேட்டால் என்னவென்பது?

ஒரு முறை பரிணாம வளர்ச்சி இவ்வாறு நடந்துள்ளது. அவ்வளவுதான்.

நாம் கடந்து வந்த வழி இது என்பதுதான் இதன் பொருள்.

ஏன் எல்லோருமே இந்த வழியில் வரவில்லை? வருவதில்லை? என்றால் பெரிய பதில் ஒன்றும் இல்லை.

எல்லா பெண்களுக்குமா குழந்தை பிறக்கிறது?

சூரியன் வெடித்துதான் கோள்கள் உருவானது எனில் இப்போது ஏன் கோள்கள் உருவாகவில்லை என்றால்? பூமி இப்படி உருவானது அவ்வளவுதான்.

இது இயற்கை.

தேவையும் அதற்கேற்ற தோதான சூழலும் உருவாகும்போது எதுவும் எதுவாகவும் மாறக்கூடும் இன்றும்.

அப்படி மாறியது மனிதனாக இருக்கிறது. மீண்டும் இதே மனித மாற்றம் மட்டும்தான் நடக்கும் என்பதும் உறுதியில்லை.

june 04, 2017