1.10.12

சாட்டை திரைப்படம்...


செப் 25, 2012 சாட்டை படம் பார்த்தேன்...

# ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் சீர்கெட்டு இயங்கும் அரசாங்கப் பள்ளிக்கூடங்களின் பரிதாப நிலையை எண்ணி வருத்தப்படும் நமது கோபம், நாட்டின் கல்வி வளர்ச்சியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்த அரசாங்கத்தின் பக்கம் ஏன
ோ திரும்புவதில்லை? மக்களின் கல்வி அறிவைப் பற்றி அரசே கவலைப்படாதபோது தனியார்காரனுக்கு என்ன தலையெழுத்தா? கல்வியையும் மருத்துவத்தையும் தனியாரிடம் சிக்கவைத்து அயோக்கியத்தனம் செய்வது அரசாங்கம்தானே!... ஆனால் படத்தில் அதைப்பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

மதிப்பெண் எடுப்பதே அறிவாளித்தனம் என்பதாய் இருக்கும் இப்போதைய கல்வி முறை சரியா? தவறா? என்பதைப்பற்றியும் குறிப்பிடவில்லை.

ஆனால், பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் சரியாக; அக்கறையாக இருந்தால் அரசாங்கப் பள்ளிகளிலும் தேர்ச்சி வீதம் கூடும் என்பதைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.

சாதிகளின் வெட்டிப்பெருமைகளையும், சாதிவெறி பிடித்த, காட்டுமிராண்டி கால கூட்டத்தையொத்த மக்களின் கேவல வாழ்க்கையை கிராமியப் படங்களாய் சித்தரித்து அடிக்கடுக்காய் வெளிவரும் படங்களுக்கு மத்தியில் மாணவர்களிடம் பெற்றோர்களும், வாத்திகளும் கையாளவேண்டிய அணுகுமுறைகளைப் பற்றி சொல்வதற்காய் இப்படத்திற்கு மரியாதை கொடுக்கலாம். இந்தப் படத்தின் புதுமுக இயக்குனர் அன்பழகனை நிச்சயம் பாராட்டலாம்...

கண்டிப்பாக ஒருமுறை பாருங்கள். செலவு செய்ததற்கு கண்டிப்பாக ஒரு திருப்தி கிடைக்கும்...

No comments:

Post a Comment