ஒருவன் பெரியாரை கிண்டல்படுத்தி எழுதியிருந்தான் அவனுக்கு என் பதில்...
"கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்று அவர் எல்லா மதத்தையுமேதான் சாடினார். பொதுவாக ஒரு மதத்தை எதிர்ப்பவர்கள் இன்னொரு மதத்தை ஆதரிக்கிறவர்களாக இருப்பார்கள். ஆனால் பெரியார் எல்லா முட்டாள்தனங்களையுமே எதிர்த்தார். தெருவுக்குத்தெரு சிலை வைத்துவிட்டு திருவிழா நாளில் மண்டை உடைத்துக்கொள்வதும், சாதிக்கொரு சாமியும், அறிவுக்குப் பொருந்தாத கதைகளும், கடவுளின் பேரால் மதத்தின் பேரால் சாதியின் பேரால் மனிதனை மனிதன் இழிவாக நடத்துவதும் உலகில் எந்த மதத்தில் மண்டிக்கிடக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். எனக்குத் தெரிந்து பெரியாரை படிக்காதவர்களே அவரை விமர்சனம் செய்கிறார்கள். இஸ்லாமியர்களிலும் பெரியாரியவாதிகள் இருக்கிறார்கள். அவர் ஏதோவொரு இஸ்லாமிய நாட்டிலோ அல்லது கிறிஸ்தவ நாட்டிலோ பிறந்திருந்தாலும்கூட இப்படித்தான் இருந்திருப்பார். அவர் ஒரு மதத்திற்கு மட்டும் எதிரியல்ல, எல்லா முட்டாள்தனத்துக்கும் மூடப்பழக்கத்திற்குமேதான் எதிரி. காந்தியைக் கொன்ற பார்ப்பனர்கள் தன்னை ஏன் கொள்ளவில்லை என்பதற்கு அவர் சொன்னதைப் படித்துப் பாருங்கள். சில பெரியரியவாதிகளின் செய்கைகள் முட்டாள்தனமாக இருக்கலாம், அதற்கு காரணம் அவர்கள் முழுமையாக பெரியாரை படிக்காதவராகவோ, அல்லது பிழைப்புக்காக பெரியார் பெயரால் தன சுயநலத்தை மறைத்துக் கொள்பவர்களாகவோ இருக்கலாம். ஆனால் பெரியார் மகத்தான மனிதர். அறிவை விரும்புகிறவன் அறியவேண்டிய மனிதர். எத்தனைதான் தற்குறிகள் தோன்றினாலும் எக்காலத்திலும் அவர் புகழ் மங்கப்போவதில்லை.

No comments:
Post a Comment