01. ஹலோ இந்தியாவோட ஆளுங்கட்சியா?... நாங்கதான்... பாகிஸ்தான்ல இருந்து ஆளுங்கட்சி பேசறோம்....
02. ம்ம்... சொல்லுங்க...
01. இங்க உள்நாட்ல நிம்மதியா ஜனங்கள ஏமாத்த முடியல, பதவியை அனுபவிக்க விடமாட்றானுங்க. ஏகப்பட்ட பிரச்சினை, குழப்பம், ஊழல். மதவாதிங்க தொல்லை வேற. என்ன பண்றதுன்னு தெரியல?
02. இங்கயும் அதான் நிலைமை. எல்லா பக்கமும் கிழிச்சி தொங்க விட்றானுங்க. என்ன பண்றதுன்னு தெரியல?
01. பேச்சு வார்த்தைல பிரச்சினைய முடிச்சா இங்க எங்க கத? தப்பிக்க வேற வழி தெரியல. உங்ககூட சண்டைன்னாதான் எங்க நாட்ல தேசபக்தி பொங்குது. அப்பதான் ஜனங்க எதையும் கேள்வி கேட்காம தேசபக்தில மிதக்குறாங்க. நாங்களும் ஹீரோ ஆவறோம்...
02. இங்கயும் நாங்களும் அப்டித்தான். உள்நாட்ல பிரச்சினை வந்தா திசை திருப்ப வேற வழி தெரியல
01. அருணாச்சல்ல சீனா அத்துமீறி நுழையுது, இலங்கை ராணுவம் உங்க மீனவர்களை அடிக்குது, சுடுது. அதையெல்லாம் ஏன் கண்டுக்க மாட்றீங்க?
02. உங்க தீவிரவாதிகளை அழிக்காம விட மாட்டோம்...
01. உங்கள நாங்களும் விட மாட்டோம். நியூக்ளியர் போடுவோம்...
No comments:
Post a Comment