சசிகலாவோ அல்லது வேறு யாரோ அதிமுக-வின் பொதுச்செயலாராகவோ அல்லது தமிழக முதல்வராகவோ ஆகக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. யாரும் என்ன பதவிக்கு வேண்டுமானாலும் வர மக்களாட்சியில் உரிமையுள்ளது. இது ஜெ.வுக்காக மக்கள் செலுத்திய வாக்கில் உருவான ஆட்சி. இவர்களுக்காக அல்ல. இவர்களின் பலம் என்ன? இவர்களை மக்கள் ஆதரிக்கிறார்களா? என்பதை இவர்கள் புரிந்துகொண்டு நடக்க, ஆட்சியைக் கலைத்துவிட்டு மக்களிடம் முன் கூட்டியே அறிவித்துவிட்டு ஒரு தேர்தலில் நின்று வரவேண்டும். இதுதான் ஜனநாயக முறையிலானது.
ஜெ.வுக்கு மாற்றாக மக்கள் தம்மை ஏற்றுக்கொண்டார்களா? என்பதை உணராமல் 'மகாகணம் பொருந்திய சர்வ வல்லமை'யாக தங்களை இவர்களே எண்ணிக்கொண்டால் தமிழ்நாட்டின் எதிர்காலம் மிக மோசமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
செய்வார்களா?
இவர்கள் செய்வார்களா?
(இப்பதிவை தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் பின்னூட்டத்தில் வந்து நகைச்சுவை காட்ட வேண்டாம்)
No comments:
Post a Comment