"எங்கள் போற்றுதலுக்குரிய பெரியார், ‘தமிழ்நாடு
தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். நாங்கள் செவிசாய்க்கவில்லை.
அன்பிற்கினிய அண்ணா, ‘திண்ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’
என்று மேடைதோறும் முழங்கினார். அவரை நாங்கள் ஆட்சியில் அமர்த்தி அழகு
பார்த்தோம். ஆனால், அவருடைய பிரிவினைக் கோரிக்கையை நிரா கரித்தோம்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், ‘சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழரசு
காண்போம்’ என்று எங்கள் கைகளைப் பிடித்து
வேண்டினார். தேசிய மயக்கத்தில் இருக்கும் நாங்கள் அவரைத் திரும்பிப்
பார்க்கவும் மறுத்தோம். இன்றும், ‘தமிழ்த் தேசியம்’ பேசுபவர்களை நாங்கள்
பெரிதாக ஆதரித்து விடுவது இல்லை. இன்றுவரை இந்தியராய் இருப்பதற்கு நாங்கள்
கொடுத்திருக்கும் விலை மிக அதிகம். ஆனால், இறுதிவரை நாங்கள் இந்தியராய்
நீடிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது ! "
-தமிழருவி மணியன்
No comments:
Post a Comment