26.10.14

மாணவர்கள் தாக்குதல்

ஒறவுகளே... டாஸ்மாக் கடை முன்னாடி கல் தடுக்கி விழுந்தாலும் உலகம் நம்மை போதையில விழுந்தான்னுதான் பேசும்.

சரிங்கண்ணே நீங்க எதுக்கு டாஸ்மாக் கடை பக்கமா போனீங்களாம்?

ஒருமுறை கேட்டுப்பாருங்கள்


உறக்கம் வராத இந்த ராத்திரியில், மனிதரில் இத்தனை நிறங்களா என்ற படத்தில் ஷ்யாம் இசையில் ஜானகியும் வாணிஜெயராமும் சேர்ந்து பாடிய "பொன்னே பூமியடி" என்ற பாடலை என் பால்யகால கிராமத்து நினைவுகளோடு தொடர்ச்சியாக 20 தடவையாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். mp3 கோப்பாக இணையத்தில் முழுமையாக கிடைக்கவில்லை. யூ ட்யூப்-லிருந்துதான் தரவிறக்கம் செய்தேன். ஏகாந்தவேளையில் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இசை மிகப்பெரிய போதையேதான்...!

(அதிகம் கேட்டிராத உங்களை மயக்கும் பாடல் ஏதேனுமிருந்தால் எனக்கு பரிந்துரை செய்யுங்கள் நண்பர்களே)

மூச்...

லட்சம் பிரச்னைய வெச்சிக்கிட்டு தமிழர்களுக்காக போராடுற அண்ணண் சீமானுக்கு புலிப்பார்வை பட நிகழ்ச்சியில என்ன வேலைன்னு நீங்கவெல்லாம் கேட்கக்கூடாது...

காலமும் மாறவில்லை, களமும் மாறவில்லை

சிங்களர்களுக்கு கோபம் வந்தால் மீதம் இருக்கிற தமிழர்கள் நிலை என்னாகும் என முன்பொருமுறை கலைஞர் பேசினார். சிங்களர்களுக்கு கோபம் வராமல் போராடவேண்டுமென்றார். 

இப்போது கத்தி படத்திற்கு எதிராக போராடும் மாணவர்களைப் போல, படத்திற்கு ஆதரவாக "போராளி விசய்" ரசிகர்களும் போராட்டம் செய்தால் என்னாகும் என பச்சைத்தமிழன் சீமான் பேசுகிறார்.

தமிழனுக்கு ஆதரவாக காலமும் மாறவில்லை, எதிரான களமும் மாறவில்லை.

இப்படியும் இருக்கலாம்தான்

காதலியிடமும் மனைவியிடமும் பலரும் பணிந்து பம்மிப்போவதற்கு காரணம், நம்மளயும் ஒருத்தி காதலிக்கிறாளே / கல்யாணம் பண்ணிக்கிட்டாளே என்ற ஆச்சரியமாகவும் இருக்கலாம்.

இந்த நூற்றாண்டில் மாறலாம்...

இந்தியன் என்று கூறிக்கொண்டு நம்மை ஆண்டுகொள்ள நாமே ஹிந்திக்காரர்களிடம் குனிந்துகொள்வது பெரும் வெட்கக்கேடு. இந்த நூற்றாண்டில் இது மாறலாம்.

ஆகச்டு 15

சின்ன வயதில் கொடியேற்றி மிட்டாய் வாங்கி சாப்பிடும்போது இருந்த தேச வரலாற்று அறிவை அப்படியே பொத்தி பொத்தி பலரும் பாதுகாத்து வருவதை சிறப்புக் கண்ணாடிகள் எதுவுமின்றி இன்று ஆங்காங்கே வெறுங்கண்ணாலேயே காணலாம்...

என்னென்ன?

ஆதிகால முட்டாள்தனங்களிலிருந்து நம் நாட்டு மக்கள் விடுபட இந்த நாடு எடுக்கும் முயற்சிகள் என்ன?

மிகச்சரியான சிந்தனை


உண்மையான விடுதலை

"இந்த மண்ணில் பிறந்த மக்களின் உண்மையான விடுதலைக்கு பாடுபட்டவர் தந்தை பெரியாரே...!"

ஆகச்டு 15

உண்மை என்னன்னா... "பார்ப்பனர்கள்"தான் இந்த நாளை சுதந்திர நாளாக கொண்டாட எல்லாவகையிலும் உரிமையுள்ளவர்கள். நமக்கு வேறொரு நாள் வரும்...

ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...!

”மணிமேகலை” சோனியாவும் மாண்புமிகு மௌனகுரு மன்மோகன் சிங் அவர்களும் பத்து வருடங்களாக அயராமலும் சற்றும் மனம் தளாராமலும் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் ஆற்றிய கோடானு கோடி நல்ல காரியங்களையெல்லாம், தற்போதைய நம் பிரம்மாச்சாரி (?) பிரதமர் அவர்கள் ஆறு மாதத்திலேயே ஆற்றிவிடுவார்போலிருக்கிறதே...!

எல்லா போராளிகளும் இப்படி தினம்தினமும் மாறி மாறி சேறு பூசி சாணி பூசி சண்டை போட்டு ஆவேசமாக விளையாடிக்கொண்டிருந்தால் உண்மையிலேயே போராடப்போவது யார்தான்?

காஞ்சி ஜெயேந்திரா காப்பாத்துப்பா...!

எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு கதாநாயகனை தேடுவதே தமிழர்களின் பிரச்னையாகிவிட்டது. அதேமாதிரி கதாநாயகன் ஆவதற்காகவே நிறைய பேர் போராட்டம் செய்ய வருகிறார்கள். ஒரு பாலியல் தொழிலாளி நடிகை ஆனால் மவுசும் விலையும் கூடுவதைப்போல, செயல் வடிவமற்று ஈழத்திற்காக போராடினாலே "கதாநாயக போராளி" பட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
 
எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடினாலும்கூட கண்டுகொள்ள ஆளில்லாத மண்ணில் ஆளாளுக்கு ஒரு கொடி, கொள்கை, பட்டினிப் பட்டாளம்.

கடவுள்

கடவுள் - ”முட்டாள்களின் கதாநாயகன்”

அற்புத செய்தி...

”நரேந்திர மோடி போன்று உறுதியான பிரதமர் ஒருவர் இலங்கைக்குத் தேவை என்று ராவணா சவிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.”

லங்கா கி மோடி சர்க்கார்

சாதனைகள் இதோ...

பதவியேற்ற குறுகிய காலத்தில் ஈழத்திற்கும் தமிழர்களுக்கும் நமது ”மாண்புமிகு பாரத பிரதமர் மோடி” செய்த சாதனைகள் இதோ.... (?)

ஈழம்

1. மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வது தொடர்கிறது.

2. இலங்கை அரசுடன் உள்ளார்ந்த நட்புறவை மேற்கொள்வது.

3. ஈழத்தில் உள்ள மக்கள் தற்போது அமைதியாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் பேசுவது.

4. இலங்கையில் உள்ள ஆன்மீக மற்றும் புராதன சின்னங்களைப் பாதுகாக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

5. ஆந்திராவில் இலங்கை அரசுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஒதுக்கீடு, தொழில் தொடங்கவாம்!

6. மூன்று முறை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் இந்தியா வந்துள்ளார். ஈழத்தமிழர்கள் பற்றி எந்த ஒரு பேச்சும் பேசவில்லை.

7. அகதிகளை திருப்ப அனுப்பும் திட்டத்திற்கு ஆதரவு.

8. அய்நாவின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை.

9. ராஜபக்சேவிற்கு ஆதரவாக அய்நா குழுவிற்கு விசாவழங்க மறுப்பு

10. இலங்கையில் நடக்கவிருக்கும் இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்க விருப்பது.

தமிழகம்

11. ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு

12. பொது பட்ஜெட்டில் தமிழகம் புறக் கணிப்பு.

13. இந்தித் திணிப்பு

14. சமஸ்கிருத வாரம் கட்டாயம் என்று கொண்டு வந்தது

15. நாடாளுமன்றத்தில் தமிழக உறுப் பினர்கள் கோரிக்கை புறக்கணிக்கப்படுவது

16. நதிநீர் தொடர்பான சிக்கல்களில் அமைதிகாண்பது

17.தமிழக அணைகளையும் நதிகளை யும் கேரளாவிற்கு சொந்தமானது என அறிக்கையில் குறிப்பிடுவது.

18. தமிழக மீனவர் பிரச்சினைகள் குறித்த தொடர் கடிதங்களுக்கு இதுவரை தீர்விற்கான பதில் அளிக்காதது.

19. முக்கிய வளர்ச்சிப்பணிகளுக்கான குழுவில் தமிழ் நாட்டிற்கான பிரதிநிதித் துவம் கொடுக்காதது.

20. முக்கிய தொழில் வளர்ச்சித் திட் டத்தில் தமிழகத்திற்கு பங்கு அளிக்காதது,

21. எழுவர் விடுதலை (ராஜீவ் கொலை வழக்கு) தொடர்பான வழக்கில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்தது.

இது தேவையா?

இன்னைக்கு பேப்பர பார்த்தா போலிசுக்காரங்க அரசியல் தலைவருங்கன்னு எல்லார் கையிலயும் கயிறு கட்டிட்டு நிக்கிறாளுங்க மார்வாடிங்க. ஏதோ ”ராக்கி”யாம்.

இப்ப வடநாட்டுல அதிகமா கற்பழிப்பு நடக்குது. ஆதிகாலத்துலயிருந்தே இது தொடர்ந்துகிட்டு இருக்குதுபோல. அதனால அந்த பொண்ணுங்கயெல்லாம் பார்க்குற ஆம்பளைங்க எல்லாருக்கும் கையில ஒரு கயிற கட்டி தன்னை அக்கா தங்கச்சியா நெனச்சிக்க சொல்றாங்க. அவங்க ஊருக்கு அது தேவைதான். இங்க எதுக்குய்யா புதுசா?

வாழ்க்க முழுக்க இங்கயே வாழ்ந்துக்கிட்டிருக்குற அதுங்க எதாச்சும் தமிழை ஒரு மொழியா மயிரளவாவது மதிக்குதுங்களா? அட பொங்கல் திருநாளையாவது கொண்டாடுதுங்களா?

நம்மூருலயும் இப்ப ஆங்காங்க இப்படி கற்பழிப்புகள் நடக்குதே என்ன பண்ணலாங்கிறீங்களா?

அதுக்காக இப்படி கயிறுகட்டி பூசி மழுப்பாம கட்டிப்போட்டு அடிக்கணும். இப்படி கண்ட கண்ட மார்வாடிங்க பண்பாட்டையெல்லாம் ஏத்துக்கக் கூடாது.

நீங்கள்தான்

"உண்மையில் இந்தக் கடவுள்களின் பலமே நீங்கள்தான்"

பெரியாரால் பலர்

பலர் பெரியாரால் வாழ்கிறார்கள்.
பெரியார் தன் கருத்துக்களால் வாழ்கிறார்.

கலைஞர் ஒரு பெரியாரிஸ்ட்?

தனக்கு சிலை வைப்பதை பெரியார் முதலில் மறுத்தார். எதிர்த்தார். தொண்டர்கள் விடாப்பிடியாக அவரை வற்புறுத்தவே, அப்படி வைப்பதென்றால் கடவுள் இல்லை என்ற தனது கொள்கை விளக்கத்தை சிலைக்குக்கீழே கட்டாயம் எழுதிவைக்கும்படி சொன்னார். தஞ்சாவூரில் அப்படி எழுதிவைக்கப்பட்ட ஒரு பெரியார் சிலையை திறக்க கலைஞரின் அப்போதைய தனிச்செயலாளர் போட்ட நிபந்தனையால் கடவுள் மறுப்பு கல்வெட்டை பெயர்த்தெடுத்துவிட்டு அவர் வந்துபோன பிறகுதான் அதைப் பதித்தார்கள். இது வரலாறு. ஓட்டு அரசியலுக்காக பலவகையிலும் பார்ப்பனியத்துடன் பெரியார் காலத்திலேயே சமரசம் செய்துகொண்டார் கலைஞர் என்பதே உண்மை. அதற்குச் சான்று என்னவெனில் பெரியாரையோ அண்ணாவையோ அவர்களது கொள்கைகளையோ வரலாற்றையோ சிறிதும் தெரியாத அடுத்தடுத்த தலைமுறைகள் இப்போதைய திமுக கட்சிப் பொறுப்புகளில் கோலோச்சுவதுதான்...

ஆனால் அதுகூட...

இனி ஒரு பிரபாகரன் தோன்றினாலொழிய தமிழனுக்கு விடிவில்லை. ஆனால் அதுகூட கருணாக்கள் தோன்றாமல் இருந்தால்தான்...

இன்னொரு படுகொலை நடக்கலாம்

யாருக்கும் தெரியாமல் ஒரு அதிகாலையில் முருகன் சாந்தன் பேரறிவாளன் மூவரையும் தூக்கில் போட்டுவிட்டு, புதைத்துவிட்டு பிறகு அறிவிக்கப்போகிறான் ஹிந்திக்காரன். அப்போதும் சாதிப்பெருமையின் போதையில் மிதந்துகொண்டிருக்கப்போகிறான் தமிழன்.

எதிரிகள் வெளியில் இல்லை

சீமானுக்கு எதிரிகள் வெளியில் இல்லை. வரலாற்றை அரைகுறையாய் உள்வாங்கிக்கொண்டு அரைகுறையாய் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு புலிக்கொடி மீது பலரின் வெறுப்பையும் வளர்த்துக்கொண்டு கூடவே இருக்கிறார்கள். தமிழர்களை எதிர்க்கும் வேற்று மொழிக்காரர்களுக்கு மகிழ்ச்சிதான்...

சீமான்?...

பெரியாரும் திராவிட இயக்கமும் தேவைப்பட்டது கலைஞருக்கு. பிரபாகரனும் புலிகள் இயக்கமும் தேவைப்படுகிறது சீமானுக்கு. பாவம் தமிழர்கள்...

யாருக்குன்னா?...

தமிழக்காரனுங்க ஹிந்தி படிச்சா நல்லது.
யாருக்குன்னா?...

இங்க பொழைக்கிற ஹிந்திக்காரனுங்களுக்கு.

கோவேந்தன்?

"கோவேந்தன்" என்ற தமிழ் பெயர்தான் "கோவிந்தன்" என்றாகியிருக்குமோ?

இது உண்மையா?

”நமக்கு நேரம் நல்லா இருந்துச்சின்னா பக்கத்துல போனாலும் நாய் கண்டுக்காது. ஆனா நேரம் கெட்டுப்போயிருந்துச்சின்னா ஒட்டகத்துமேல உக்கார்ந்துக்கிட்டு போனாலும் ஓடிவந்து கடிக்கும்” (அடிக்கடி ஒரு நண்பர் இப்படி சொல்றாரு...)

நேரடி அந்நிய முதலீடு?

இந்த நேரடி அந்நிய முதலீடுன்னு சொல்றாங்களே அப்படின்னா உண்மையான அர்த்தம்?

நம்மூரு அரசியல்வாதிகள் வெளிநாட்டில் பதுக்கி வெச்சிருக்கிற கருப்பு பணத்த இந்தப்பேர்லதான் உள்நாட்டுக்கு கொண்டுவந்து வெள்ளையா மாத்திக்கிறாங்க. இப்படி முதலீடு செய்யப்படுற துறைகள் என்னென்னன்னு கவனிச்சா இது புரியும்

மறுபடி பார்ப்பனீயமே வெல்லும்

"இயக்கங்களின் & கட்சிகளின் வாழ்வுதனை பார்ப்பனீயம் கவ்வும். மறுபடி பார்ப்பனீயமே வெல்லும்"

இது இந்திய இயக்கங்களின் & கட்சிகளின் வரலாறு. உங்களின் எந்த இயக்கங்களும் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

என்னவென்பது?

கடந்த பொங்கலுக்கு பேனர் வைத்தது தொடர்பாக ஒரு கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட இரு சமுகத்தினரிடையே 20 நாட்களாக சாதிச்சண்டையாம். காவல்துறை ஒருபக்கச் சார்பாக செயல்படுவதாக தகவல். பிரச்னையை தீர்க்க எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளை பாதிக்கப்பட்ட தரப்பிடம் சொல்லி சட்டரீதியாக அதை சந்திக்க சில தொடர்புகளையும் ஏற்படுத்த முயன்றேன். பெரும் அறிவியல் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்திலும் சில கட்சிகள் வலுவான கொள்கையின்றி இப்படியான வெட்டி சாதிப்பூசல்களால் மட்டுமே தங்களை வளர்த்துக்கொள்வதை என்னவென்பது?

பெரியாருக்கும் மரணமேயில்லை

"ஆடி வரா கன்னியம்மா
ஓடி வரா கன்னியம்மா"

இந்த ஆடி மாதம் முழுமைக்கும் ஆங்காங்கே ஒலிக்கும் அம்மன் பாடல்களை கேளுங்கள். பெரும்பாலும் இப்படியான ரைமிங்கில்தான் இருக்கிறது. இப்படி பாட்டெழுதி இசையமைத்து பக்தியை பரப்பும்; அதை வாங்கி ஒலிப்பானில் அலறவிட்டு ஊர் முழுக்க பக்திமணம் பரப்பும்; கேட்டு பக்தியில் திளைக்கும் அனைத்து மக்களையும் நினைக்கையில் கூடவே நினைவுக்கு வருகிறார் பெரியார்.

இந்த மண்ணில் கடவுளுக்கு மரணமில்லாதவரையில் பெரியாருக்கும் மரணமேயில்லை என்பதுதான் நிதர்சனம்.

அரசாங்க வேலை தேடக் காரணம்?

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஊழல் மோசடி என தவறு செய்த அரசு அலுவலர்களுக்கு கடந்த காலங்களில் எங்கேனும் கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?

அரசாங்க நிர்வாகச் சீர்கேடுகளுக்கும், எல்லோரும் அரசாங்க வேலை தேடுவதற்கும் இதுவே முதன்மையான காரணம்.

வலு குறையும்போதுதான்

"வலு குறையும்போதுதான் பெரும்பாலானோர் நியாயத்தின் பக்கம் நிற்கிறார்கள் "

பசுக்களை நேசிப்போம், புண்ணியம் பெறுவோம்

"ஸ்ரீசங்கரா"ன்னு ஒரு தொலைக்காட்சி. மல்லிப்பூ மாலைகள் போடப்பட்ட ஒரு பசுவுக்கும் கன்றுக்கும் காவித்துணி போர்த்திய சாமியார் ஒருவர் தட்டு நிறைய வெட்டிய ஆப்பிள் பழங்களையும் உரித்த வாழைப்பழங்களையும் வைத்துக்கொண்டு பயந்தபடி வாயில் ஊட்டிக்கொண்டிருக்கிறார். பக்கத்தில் 'பசுக்களை நேசிப்போம், புண்ணியம் பெறுவோம்'னு ஒரு மாமி சொல்றாங்க.

# மாடு மேய்ச்சே வாழ்ந்து மடியும் எங்க சனங்களுக்கு இதுவரைக்கும் அப்படியெல்லாம் புண்ணியம் கெடச்சமாதிரி தெரியலிங்க மாமி. உங்களுக்கு ரொம்ப புண்ணியம் வேணுமின்னா அந்த சாமியாரோட முகவரி கொடுங்க எங்க வீட்டு எல்லா பசுமாடுகளையும் ஓட்டி வர்றோம்... (எருமைகளை நேசிச்சா பாவம் கிடைக்குங்களா?)

கடவுளுக்கும் ஒரு எல்லையுண்டு

இந்திய ஆடுகளையும் கோழிகளையும் கடவுள் கைவிட்டுவிட்டார். அவைகளை அவர் காப்பாற்ற நினைத்தால் சகல மக்களும் கடவுளை கைவிட்டுவிடுவார்கள்.

அல்லா-யேசு-சிவன்
யாருக்கும் ஒரு எல்லையுண்டு.

திணிக்கலாமா?

கல்லிடம் மட்டுமே பேசப்படும் மொழியை கல்வியில் திணிக்கலாமா?

எதிர் பலன்

"அளவுக்கு மீறிய உற்சாகமும், கண்மூடித்தனமான துணிவும் பயனளித்துவிடாது என்பதோடு எதிர்ப்பான பலனைக் கொடுக்கக் கூடியதாகவும் ஆகிவிடலாம்." - பெரியார்

திருமணம் எனும் நிக்காஹ்

அருமையான திரைக்கதை. நேர்த்தியான படப்பிடிப்பு. இஸ்லாம் பற்றிய எளிமையான விளக்கங்கள். யாரையும் குறை சொல்லாத தெளிவான காட்சியமைப்புகள். கடைசி 15 நிமிடத்தில் மட்டும் ஒரு சிறு தேக்கம். திருப்தியான படம். பாருங்கள்...

வரவேற்கிறேன்... ஆதரிக்கிறேன்...

தீவிர தமிழின தமிழிய வெறிகொண்ட சகோதரர்களை உளமாற மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன். பெரியார் மீதான அவதூறுகளுக்கு மட்டும் பதிலெழுத கடமைப்படுகிறேன்.

தமிழர்கள்

இந்தியா - இலங்கையின் அடிமை நாடு

டெல்லி - கொழும்பின் ஏவல் நாய்

ராஜபக்சே - இந்திய பிரதமர்களைவிட திறமையானவன்

தமிழர்கள் - இலங்கை மற்றும் இந்தியாவின் முதன்மை எதிரிகள்

உங்காளுங்களுக்குதானே

சமஸ்கிருதத்தையும் தமிழையும் ஒன்றுபோல் பாவிக்கவேண்டும் - இல.கணேசன்

# பாஸ், உங்காளுங்களுக்குதானே சொல்றீங்க!..

தமிழனுக்காக என்ன கிழிச்சார் பெரியார்?

ஈயம் பூசுன மாதிரியும் தெரியணும், பூசாமயேவும் திரியணும். அவாளுக்கு சொம்பும் அடிக்கணும், சொம்பு அடிக்காதமாதிரியும் காட்டிக்கணும். சாமியவும் கும்புட்டுக்கணும் அப்படியே முற்போக்காவும் காட்டிக்கணும். வரலாற்றை கரைச்சி குடிச்சவன் மாதிரியும் காட்டிக்கணும். என்ன பண்ணலாம்?

"தமிழனுக்காக என்ன கிழிச்சார் பெரியார்?"

20 லட்சம் ராணுவ வீரர்கள்

இலங்கை ராணுவத்தில் சுமார் 20 லட்சம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். நம்பமுடிகிறதா?

இந்திய நாட்டு ராணுவத்தையும் சேர்த்துத்தான்.

ஆண்டவனைப் பார்க்க முடியுமா?

முயற்சி செய்தால் நிச்சயமாய் பார்க்க முடியும். 10 வருடம் இந்த நாட்டை ஆண்ட மன்மோகன்சிங்கைப் பார்ப்பதொன்றும் பெரிய கடினமில்லை.

தந்தை பெரியார் எப்போதும் பெண்களின் பக்கம்தான்...

"இரண்டு பெண் குழந்தைகள் இருப்பவர்கள்கூட ஆண் குழந்தை வேண்டும் என்று முயற்சிக்கிறார்களே" என்று தந்தை பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு தந்தை பெரியார் அளித்த பதில் என்ன தெரியுமா?

"இந்த எண்ணம் மக்கள் மனசிலேருந்து மாற வேண்டும் என்றால், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் என்றும் ஆண்களுக்கு 50 சதவீதம் என்று இருக்க வேண்டும். ஒரு அலுவலகத்தில் 100 பேர் வேலை செய்தால் 50 பெண்கள் இருக்கிறார்களா என்று கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதைச் செய்யும்படி சொல்ல வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால், ஆண் இருந்தாலும் பெண் இருந்தாலும் ஒண்ணுதான் என்ற நினைப்பு பெற்றோருக்கு வரும். இன்றைக்கு ஆண்கள் மட்டுமே வேலைக்கு போகிறார்கள். பெண்கள் எல்லாம் வீட்டில் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு சம்பாதித்து போடுவதற்கு ஆண் குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை நாம் சரிசமமா பண்ணிட்டா போதும்."

"அப்படி செய்தால் ஆண்கள் எதிர்க்க மாட்டார்களா?" என்று கேட்டார்கள். அதற்கு தந்தை பெரியார் சட்டென்று அளித்த பதில் என்ன தெரியுமா?

"எப்படி எதிர்ப்பார்கள்? அட, நீங்கதான் எப்படி எதிர்ப்பீங்க? உங்கள் மகளுக்கும், உங்க தங்கைக்கும் வேலை கிடைக்கும் என்றால், எப்படி எதிர்ப்பீங்க? அதனால் 50 சதவீதம் வேலை வாய்ப்பு பெண்களுக்கு என்று சட்டமே போட்டுவிடுவது ரொம்ப நல்லது" என்றார்.

தி மைக் போராளீஸ் பொரட்சி

நீதிக் கட்சியும், அதற்குப் பின்னான திராவிட இயக்கமும் தமிழ்ச் சமூகத்துக்கான பல்வேறு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தது, சமூகம், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் என்று அந்த இயக்கம் முன்னிறுத்திய பல்வேறு நன்மைகளுக்கான கருத்தியல் இன்று வரைக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாடுகளில் ஏதாவது ஒரு வகையில் உதவிக் கொண்டிருக்கிறது என்கிற அடிப்படை உண்மையை இந்த வறட்டு இணையக் கூச்சல்கள் ஒரு போதும் மறைத்து விட முடியாது என்பதை நமது இளைஞர்கள் உணர வேண்டிய காலம் இது.


வேறு எந்த அரசியல் முகாந்திரமும் இல்லாமல் நீர்த்துப் போய் இந்துத்துவ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் எல்லாச் சாதிகளும் திராவிட இயக்கம் என்கிற உயிர் காக்கும் படகிலேயே பயணம் செய்யத் துவங்கின. மொழிக்கான அரசியலில் தீவிரப் பங்கேற்பு நிகழ்த்தி உரிமைகளை நிலைநாட்டியது இதே திராவிட இயக்கமும் அதன் தலைவர்களும் தான் என்பதை ஏனோ இன்றைய தமிழ்த் தேசியப் போராளிகள் நினைவில் கொள்வதே இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடுகளை சட்ட வடிவமாக்கி ஆட்சி அதிகாரத்தை நோக்கி மீண்டும் நகர்த்தியது இதே திராவிட இயக்கங்களும் அதன் தலைவர்களும் தான் என்று சொன்னால் காத்து கேட்காதது போல நகர்ந்து விடும் போராளிகள் நிறைந்த சமூகம் நமது சமூகம்.

பட்டியலிட முடியாத சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது திராவிட இயக்கங்களின் கருத்தாக்கம், கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை உரிமைகளில் இருந்து ஆட்சி அதிகாரம் வரைக்கும் பல்வேறு தமிழ்ச் சாதிகளை நகர்த்திக் கரை சேர்த்த அதே திராவிட இயக்கத்தை புழுதி வாரித் தூற்றுவது என்பது இன்றைக்கு ஒரு நவநாகரீக அடையாளமாக மாறிப் போயிருக்கிறது. எந்த இயக்கத்தையும் விமர்சனம் செய்வதையோ அல்லது மீளாய்வுக்கு உட்படுத்துவதையோ குற்றமாகக் கருத முடியாது, அதே வேளையில் அடிப்படைப் புரிதல் இல்லாத முரணான புழுதி தூற்றும் படலத்தை ஆதரிக்கவும் இயலாது.

திராவிடம் என்பது தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த பல்வேறு சமூகப் பொருளாதார மாற்றங்களை உண்டாக்கிய ஒரு கருத்தாக்கம், அந்தக் கருத்தாக்கம் மிகுந்த கவனத்தோடும், அடிப்படைப் புரிதல்களோடும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும், காலத்துக்கு தேவையான நன்மை விளைவிக்கும் மாற்றங்களை திராவிட இயக்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதும் கூடத் தமிழ் தேசியச் சிந்தனையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். மாறாக வரலாற்றுப் புரிதல்களும், அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத தமிழ்த் தேசியப் போராளிகளின் அடையாளமாக திராவிட எதிர்ப்பு அரசியல் இப்போது மாறி இருக்கிறது.

சமூக மாற்றங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு கருத்தாக்கத்தை நிலப்பரப்பு சாராத ஒரு போருடன் மட்டுமே ஒப்பீட்டளவில் நோக்குவதை ஒரு போதும் ஒப்புக் கொள்ள முடியாது. தவறுகள் இழைக்காத தனி மனிதர்களும், இயக்கங்களும் இருந்ததுமில்லை இனி இருக்கப் போவதுமில்லை, தனி மனிதத் தவறுகளையும், இயக்கத்தின் கோட்பாட்டுத் தவறுகளையும் சரி செய்து காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை உள்ளீடு செய்து வழி நடத்திச் செல்லும் நிலை இல்லை என்றாலும் கூட மாற்றுக் கோட்பாடுகளுக்கான மாற்று இயக்கங்களுக்கான உள்ளீடுகளை வெற்றி பெற்ற இயக்கங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்வதே அரசியலில் சரியான வழிமுறையாக இருக்கக் கூடும், முற்றிலுமாக வேரறுப்போம், இலையருப்போம் என்று கூச்சலிடுவது நமது அரசியல் அறியாமையே வெட்ட வெளிச்சமாக்கும்.

வெள்ளைச் சட்டை அரசியல் செய்யும் ஒரு மனிதராக பெரியார் எப்போதும் இருந்திருக்கவில்லை என்கிற வரலாறே அறியாத பலர் தான் இன்று அவரைக் குறித்த அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார்கள். அவருடைய காலத்தில் அவரது கண்ணுக்கு முன் நிகழ்ந்த பல்வேறு சமூகச் சிக்கல்களுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்த ஒரு போராளியாகவே கடைசி வரை இருந்தார் என்பதை அவரது வரலாற்றை அறிந்தவர்கள் உணரக் கூடும்.

காலராவினால் இறந்து போன தனது சக மனிதனின் பிணங்களை அவர் நோய்க்கு அஞ்சி வீதியில் விட்டுச் செல்கிற சுயநலவாதியாக இருக்கவில்லை, தன்னந்தனியாக தனது தோள்களில் பிணங்களைச் சுமந்து அடக்கம் செய்த அற்புதமான மனிதர் அவர், பெண்ணுரிமைகளுக்காகவும், மூட நம்பிக்கை மற்றும் பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்புக்காகவும் பல முறை அவர் தாக்குதல்களை எதிர் கொண்டிருக்கிறார், ஒரு போதும் குறிப்பிட்ட சாதிக்குக் கோடி பிடித்த தலைவராக அவர் இருந்திருக்கவில்லை, தமிழ்ச் சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் அவரது கோட்பாடு பயனளித்தது. பயனளிக்கிறது.

நூற்றுக்கணக்கான பொதுக் கூட்டங்கள், நூற்றுக்கணக்கான போராட்டங்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், நூல்கள், தொடர்ந்து சமூகம் சமூகம் என்று இயங்கிய ஒரு மாமனிதரை விமர்சனம் செய்யும் போது ஒரு கணம் நின்று நிதானியுங்கள், சிறுநீரகம் செயலிழந்து கடுமையான வலி உங்களை வதைத்துக் கொண்டிருக்கும் போது, குழாய்களால் மருத்துவர்களின் உதவியோடு சிறுநீர் கழித்துக் கொண்டே "ஐயோ, அம்மா, வலிக்குதே, வலிக்குதே ஒலிபெருக்கியில் குரல் எழுப்பியபடி ஒரு சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், விடுதலைக்காகவும் உரையாற்ற முடியுமா???, அவர் தனது கடைசி களத்தில் அப்படித்தான் செய்தார்.

பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் உரியது, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள், தமிழ்த் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சாமானியர்கள், அறிவு ஜீவிகள் என்று யார் வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும், ஆனால் அந்த மனிதர் இந்த சமூகத்துச் செய்திருக்கும் அளப்பரிய சமூகப் பொருளாதார நன்மைகளையும், அர்ப்பணிப்பு உணர்வையும் நிராகரிப்பதென்பது வரலாற்றை மறுதலித்து வேறு திசையில் பயணிப்பது போன்றது.

தமிழ்த் தேசியத்தின் தேவைகள் அதிகரித்திருப்பதாக நம்பும் இளைஞர்கள், தமிழ்த் தேசியத்தின் மூலமாகவே நமக்கான உரிமைகளும், மேம்பாடும் நிலைத்திருக்கிறது என்று அதனூடே பயணிக்கும் இயக்கங்கள் தங்கள் இன்றைய இருப்பை திராவிடம் என்கிற கோட்பாட்டுக் கருவியின் வழியாகவே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த உன்மையிலிருந்துதான் தமிழ்த் தேசியம் தனது பயணத்தைத் துவக்க வேண்டும். — தி மைக் போராளீஸ் பொரட்சி..... உணர்கிறார்.

Arivazhagan Kaivalyam

ஒவ்வொரு மனநோயாளிக்குப் பின்னாலும்

ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் இருக்கும் காமராசர் சிலைக்கு முன்பாக சாலையில் தேங்கிக்கிடக்கும் அழுக்கடைந்த மழைநீரை 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அள்ளிக்குடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதிர்ச்சியுடன் நெருங்கிச் சென்று கவனித்தேன். அவர் ஒரு மனநோயாளியாக இருந்தார்.

THE COW என்றொரு ஈரானியத் திரைப்படம். அதுவொரு மனநோயாளியைப் பற்றியது. அதில் தான் வளர்த்த ஒரே பசுமாடு காணாமல்போக அதனால் அவர் அப்படியாகிறார். தெருக்களில் குழந்தைகள் எல்லாம் கேலிசெய்தபடி துரத்த அவர் கதை தொடங்கும்.

இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்த முதல்நாளில் இப்படத்தைக் பார்த்துவிட்டு ஒரு பக்கத்தில் படத்தைப் பற்றி எழுதிக்காட்டச் சொன்னார். அப்படியே எழுதிக் கொடுத்தேன். இறுதியில் எழுதிய வரிகள் நினைவில் இருக்கிறது.

"நாம் காணும் ஒவ்வொரு மனநோயாளிக்குப் பின்னாலும் பாசம் மிக்க ஈரமானதொரு கதையிருக்கலாம். அல்லது பெரும் நம்பிக்கை துரோகம் இருக்கலாம். நம்மைவிடவும் மென்மையான மனதுடன் வாழ்ந்த இவர்களின் நம்பிக்கை துரோகத்திற்கு இவர்களின் கடவுளும் காரணமாகயிருக்கலாம்"

விஜய் அவார்ட்ஸ்

தன் ஆதாய வியாபாரத்திற்காக தனியார் தொலைக்காட்சிகள் செய்யும் சினிமா அரசியலில், தகுதிக்கு மீறி சம்பளத்தை உயர்த்திக் கேட்டு வேற்றுமொழிக்காரர்கள் வளரவும், உள்ளூர் தயாரிப்பாளர்கள் ஒடுங்கிப்போகவும் கூடாது என்பதும் கவனத்தில்கொள்ள வேண்டுமல்லவா?

வருவதற்கு முன் ஆயிரம் கேள்வி கேள்

"என் இயக்கத்திற்கு வருவதற்கு முன் ஆயிரம் கேள்வி கேள்.
ஆனால் வந்தபின் வேலைசெய்" - பெரியார்

உற்றுக் கவனியுங்கள்

உங்களுக்கு ஆறுதல் சொல்பவனை உற்றுக் கவனியுங்கள்.
அவனுக்குள் ஒரு சிறு மகிழ்ச்சி ஒளிந்திருக்கும்.

இன்னும் சில ஆண்டுகளில்

" எல்லா தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்குவது கடினம் என்றால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவை ஒரே நாடாகப் பார்ப்பதும் கடினமாகத்தான் இருக்கும். "

- அறிஞர் அண்ணா .

இன்றைய இரவின் போதிமரம்

Editing முடிந்து நீண்டதூரம் செல்லவேண்டிய இணை இயக்குனர் நண்பர் ஒருவருக்கு எனது வண்டியை கொடுத்து அனுப்பிவிட்டு என் அறைக்கு நடந்தே வந்துவிட்டேன். அறைக்கு வந்தபின்தான் ஞாபகம் வந்தது, வண்டி சாவியுடன் அறையின் சாவியும் பிணைந்திருப்பது. மொட்டைமாடி வானமும் நட்சத்திரங்களும்தான் இன்றைய இரவின் போதிமரம். (ஜூலை 19, 2014)

இரைச்சல்

ஏழைகளின் உலகமும் செல்வந்தர்களின் உலகமும் அமைதியாக இயங்க,
நடுத்தர சனங்களின் வாழ்வோ இரைச்சலில்.

பெரியாரும் பிரபாகரனும் தோன்றுவது அரிதானது

இன்னொரு தமிழன் தப்பு பண்ணா நாம தமிழன் இல்லைன்னு ஆகிடுவோமா? அப்படித்தான் நாம திராவிடன் இல்லன்னு சொல்றதும்...

கலைஞர் மேலயிருக்குற உங்க கோபம் நியாயமானதுதான். அதுக்காக திராவிடக் கருத்தியலே வேணாம்னா எப்படி? ஈழத்து கே.பி, கருணாவால நாம தமிழன்னு சொல்லிக்காம இருக்கமுடியுமா?

"வரலாற்றில் சுயநலக்காரர்களும் துரோகிகளும் தோன்றுவது இயல்பானது. பெரியாரும் பிரபாகரனும் தோன்றுவது அரிதானது."

ஏதோ தோணுச்சு

"நான் ஏன் பிறந்தேன் எனத் தெரியவரும் நாளில் 
அனேகமாக நான் இறந்துபோயிருக்கக் கூடும்"

நாம் தமிழர் சகோதரர்களுக்கு

தெலுகர் என்பதற்காகவே வைகோ-வை ஆதரிக்கும் எனக்குத் தெரிந்த சிலரும் இன்னும்பல இந்து வெறியர்களும் தேர்தல் சமயத்தில் சீமான் மீதும் நாம் தமிழர் மீதும் காழ்ப்புணர்வுடன் பல பதிவுகள் பதிந்தபோது வமபடியாய் ஒடிப்போய் பதில் கொடுத்தேன். தமிழை தாழ்த்தி பதிவிட்டவர்களை கண்டறிந்து எச்சரித்திருக்கிறேன். திராவிட கருத்தியலை ஆதரிப்பதால் தமிழ் உணர்வு இருக்காது என்றும் தெலுகராகவே இருப்பார்கள் என்றும் எண்ணுவது தவறு. மொழி உணர்வுக்காய் போராடுங்கள். தோழமை உணர்வோடு பதிவிடுங்கள். பொத்தாம்பொதுவாக திராவிடம் என அவதூறு செய்யாதீர். மாற்றுமொழியினரை எப்படி ஒரங்கட்டுவது என கன்னடர்களைப் போன்று திட்டமிடுங்கள். ஏதோ பெரியாரியம், தமிழ்த்தேசியத்துக்கெதிரானது என கட்டமைக்க முயலாதீர்.

அப்புறம் எதுக்கு நாங்க திராவிடத்தை சுமக்கப்போறோம்?

மாற்று திராவிட மொழிக்காரர்களால்தான் தமிழன் இழப்பை சந்தித்தான். அதனால் திராவிடக் கருத்தியல் தேவையில்லை. - அண்ணன் பெருமாள் தேவன்

# தேவர் சாதியை சேர்ந்த ஒருத்தரால நீங்க இழப்பை சந்திச்சீங்கன்னா அதுக்கப்புறம் நீங்க தேவர்னு சொல்லாம தவிர்த்திடுவீங்களா? அப்படி சொல்லிக்காம இருப்பதால நீங்க அந்த இனக்குழுவா இல்லாம ஆகிடுவீங்களா?

இந்துன்னு சொன்னா இந்திக்காரன் உள்ள வரான். அது பரவாயில்லையா? அவனுங்களால நாம சந்திச்ச இழப்பு அதிகமில்லையா? இந்துன்னு மட்டும் இன்னும் நீங்க சொல்லிக்கிட்டு இருப்பதேன்? இந்த ஏமாற்றத்தால எங்க எப்ப யாரை எதிர்த்தீங்க? திராவிடத்திற்கெதிரா கையை உயர்த்தும்போது இந்துத்வாவுக்கு எதிராவும் கையை உயர்த்தனுமில்ல. இதுதானே நியாயம்? இந்தத் தெளிவு வந்தா அப்புறம் எதுக்கு நாங்க திராவிடத்தை சுமக்கப்போறோம்? சொல்லுங்கண்ணே சொல்லுங்க...

மரியாதைகளால் வாழ்வதில்லை பெரியார்

//பெரியாருக்கு கொடுக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையையும் உங்களைப் போன்ற திராவிட தற்குறிகளால் கிடைக்காது// - நமது பெரியாரிய தோழர் ஒருவரிடம், நாம் தமிழர் கட்சி சகோதரர் ஒருவர்.

முட்டாள்கள் எந்த காலத்திலும் பெரியாருக்கு மரியாதை கொடுக்கமாட்டார்கள் என்பது யாவருக்கும் தெரியும். அப்படியான மரியாதைகளால் வாழ்வதில்லை பெரியார். தர்க்கரீதியான அறிவுத்தேடலிலும் எதிர்ப்பிலும் வாழ்பவர் அவர். நேரடியாக அவரது பன்முக கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்ற கடவுள் நம்பிக்கையாளர்களே பல்வேறு முகமுடி போட்டுக்கொண்டு அவதூறு கிளப்புகிறார்கள். ஏறக்குறைய எல்லா விமர்சனக்காரர்களின் முதல் புள்ளியும் இதுதான். எமது கவலை என்னவெனில், மேலோட்டமான உணர்ச்சியால் மட்டுமல்லாது ஆழமான தமிழ் உணர்வோடு தலைவர் பிரபாகரனுக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையையும் எதிர்காலத்தில் உங்களைப்போன்ற தற்குறிகளால் கேலியாகிவிடக்கூடாது என்பதுதான். வெறுப்பொன்றுமில்லை தோழமையுடன் சொல்கிறேன் சகோதரரே.

தற்குறித்தனம்

நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கிறேன்னு ஒருத்தரு பிரபாகரனையோ தமிழ்த்தேசியத்தையோ விமர்சிச்சா சரியா? அது தற்குறித்தனமில்லையா? அப்படித்தானே நீங்க கருணாநிதியையும் திராவிடக் கட்சிகளையும் பற்றி விமர்சிக்க பெரியார் மீது அவதூறு கிளப்புவதும்.

16.7.14

எதிர்கால தமிழ் சமூகத்தின் பேராபத்து

சாதி உணர்வு என்பது மனநோய். தன் சாதி மட்டுமே உயர்ந்தது என்றும் மற்றவர்களைவிட தன்சாதியே பெருமை வாய்ந்தது என்றும் வெட்டிப்பெருமையில் ஆழ்த்தும். 

இம்மனநோய் பீடித்த சிலர் தங்களை சமூக அக்கறைவாதிகளாக காட்டிக்கொள்ள தங்கள் வசதிக்கு "தமிழ்ப்போர்வையையும், தமிழ்த்தேசியத்தையும்" உடன் இழுத்துக்கொள்வது எதிர்கால தமிழ் சமூகத்தின் பேராபத்து.

அவன் இவன்

அவன் commission வியாபாரி
இவன் wholesale வியாபாரி

ஐந்தாண்டு முடிவில் உணரலாம் 
"மன்மோகன்சிங் ஒரு மாமனிதன்"

very confused...

புகார் கொடுத்து 20 நாளாச்சு. Asst Commissioner-ஐயும் நேர்ல சந்திச்சு வேண்டுகோள் விடுத்தாச்சு. தொலைஞ்சுபோன என் ஐபோன் திரும்ப கிடைக்குமான்னு தெரியல. ஆனா சைபர் க்ரைம் போலிசைப்பற்றி எல்லா சினிமாவுலயும் பெருமையா சொல்றாங்க. very confused...

எதிர்கால தலைமுறைகளுக்கும் பெரியார்தானே தேவைப்படுவார்...

ஆரியத்திற்கு எதிரான குறியீட்டின் பெயர்தானே திராவிடம். சூழ்ச்சியுடன் திணிக்கப்பட்ட ஆரியப் பண்பாடுகளுக்கு எதிராக போராட எவனும் எந்தக்காலத்திலும் இல்லாதபோது பெரியார் அதைச் செய்தார். அவரைப் பொறுத்தவரையில் இந்தியாவில் வாழ்பவர்கள் இரு குழுவினர். ஒன்று (ஆரியர்) பார்ப்பனர், மற்றொன்று (திராவிடர்) பார்ப்பனரல்லாதோர். இந்த நிலையிலிருந்தே தொடங்கிய அவரது அரசியல் நிலைப்பாடு மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபோது "தமிழ்நாடு தமிழருக்கே" என்றானது. தன்னைத்தேடி முதல்வர் பதவி வந்தபோதும்கூட அதை ஏற்க அவர் விரும்பவே இல்லை. இன்றைக்கு பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் தலைவர்களை ஆதரிப்பவர்களெல்லாம் அவரை பூதக்கண்ணாடி கொண்டு விமர்சிப்பது பெரும் வேடிக்கை.

தமிழர்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டுமென்றார். தமிழர் விவகாரங்களில் தமிழரல்லாதோர் முடிவெடுக்கும் முறைமை ஒழிக்கப்படவேண்டுமென்றார். பார்ப்பனரல்லாதோர்களிலிருக்கும் பல்வேறு சாதீய வேறுபாடுகளைப்போக்கவே இடஒதுக்கீடு வேண்டுமென்றார். பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க மட்டுமே திராவிடத்தை கையிலெடுத்தார். மற்றபடி மறையும்நாள்வரையில் தமிழனுக்காகத்தானே பாடுபட்டார்.

வெறுப்பால் தமிழை நீசபாஷை என்று சொன்னவரையும், அக்கறையால் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது தெளிவான அரசியல் பார்வையா?

நியாயப்படி இந்த மண்ணில் மாற்றம் கொண்டுவர விரும்புபவர்கள் எவராயினும் அவர்கள் பெரியாரை தவிர்த்து செல்வது சந்தேகத்திற்குரியதே.

ஆரியப் புராணப் புளுகுமூட்டைகளை நம்பி வளரப்போகும் நம் மண்ணின் எதிர்கால தலைமுறைகளுக்கும் பெரியார்தானே தேவைப்படுவார்.

நாலு நல்ல வக்கீல்களைப் பற்றி தெரிந்துகொள்வதும் நல்லது...

சேகுவேராவைப் படித்துவிட்டு முட்டியை உயர்த்திக்கொண்டு மட்டும் திரியாமல் அப்படியே உள்ளுரில் இருக்கும் நாலு நல்ல வக்கீல்களைப் பற்றி தெரிந்துகொள்வதும் நல்லது.

மர்மம் என்ன?

நிகழ்காலத்தில் பதவிக்காகவும் பகட்டுக்காகவும் தன் சாதிக்காகவும் கொள்கையற்ற விபச்சார அரசியல் செய்யும் கட்சிகளையும் தலைவர்களையும் விமர்சிக்க துணியாதவர்களின் கண்களுக்கு பெரியார் மட்டுமே குறையாக தெரியும் மர்மம் என்ன?

உத்வேகமாக எழுந்த கம்யூனிசம் நீர்த்துப்போனது எப்படி?

உத்வேகமாக எழுந்த கம்யூனிசம் பின்னாளில்; கட்சியில் பார்ப்பனர்களின் நுழைவுக்குப்பின் இந்தியாவில் நீர்த்துப்போனது. இன்றைக்கு ஏதோ கம்யூனிசம் கொஞ்சமாவது கட்டிக் காக்கப்படுகிறதென்றால் அது பார்ப்பனத்தன்மை இல்லாதாரோல்தான். இன்றைக்கு இங்கே தமிழ்த்தேசியத்தினுள் பார்ப்பனியம் நுழைந்துள்ளதோ என எண்ணும்படியாக உள்ளது.

இந்தியாவை ஆரிய நாடு என்று எழுதிய பாரதியின் வாரிசுகளுக்கு மட்டும்தான் திராவிடம் என்றால் கசக்கும். தமிழ் புரட்சிகளுக்கு ஏன் கசக்கிறது?

தெளிவான வரலாற்றறிவும் அரசியல் அறிவும் இருப்பவர்களால் அப்படி விமர்சிக்க முடியுமா?

தலைவர் பிரபாகரனின் படத்தையும் புகழையும் உடன் வைத்துக்கொண்டு யாரேனும் கீழ்த்தரமான அரசியல் செய்தால், அறிவும் அக்கறையும் உள்ளவர்கள் பிரபாகரனை விமர்சிப்பார்களா? இல்லை அப்படி கீழாய் நடந்துகொள்பவர்களை விமர்சிப்பார்களா? அப்படி பிரபாகரனை விமர்சித்தால் சரியா? தெளிவான வரலாற்றறிவும் அரசியல் அறிவும் இருப்பவர்களால் அப்படி விமர்சிக்க முடியுமா?

தலைவர் பெரியாரின் படத்தையும் புகழையும் உடன் வைத்துக்கொண்டு யாரேனும் கீழ்த்தரமான அரசியல் செய்தால், அறிவும் அக்கறையும் உள்ளவர்கள் பெரியாரை விமர்சிப்பார்களா? இல்லை அப்படி கீழாய் நடந்துகொள்பவர்களை விமர்சிப்பார்களா? அப்படி பெரியாரை விமர்சித்தால் சரியா? தெளிவான வரலாற்றறிவும் அரசியல் அறிவும் இருப்பவர்களால் அப்படி விமர்சிக்க முடியுமா?

ஆரிய மனோபாவத்துடன் பெரியாரை அணுகி தவறாக விமர்சித்து பரப்புரை செய்பவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

எங்கே தமிழ்? எதிலே தமிழ்?

தமிழர் தேவாலயங்களில் ஹீப்ரு இல்லை. தமிழ் இருக்கிறது. ஆனால் அதில் பல வார்த்தைகள் சமஸ்கிருத கலப்பு. மதத்திலும் வரணாஸ்ரம சாதி கலந்துவிட்டது. (எ.கா: ஸ்தோத்திரம், கிறிஸ்தவ நாடார் / கிறிஸ்தவ வன்னியர் / கிறிஸ்தவ தேவர்)

தமிழர் மசூதிகளில் அரபி இருக்கிறது. தமிழ் இல்லை. ஆனால் பிரச்சாரம் மட்டும் தமிழில் நடக்கிறது.

தமிழர்கள் கோயிலில் தமிழ் இல்லை. இன்னமும் சமஸ்க்ரிதம்தான் கோலோச்சிக்கொண்டிருக்கிறது.

சூட்சுமப் பின்னணி

63 நாயன்மார்களுக்கும் பார்ப்பன உருவத்திலேயே காட்சி தந்த சிவனின் சூட்சுமப் பின்னணி இன்றைய பிஜேபி வரையிலுமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஆரிய ரசிகர்கள்

நான் திமுக காரனல்ல, கருணாநிதி ஆதரவாளனுமல்ல, தெலுகருமல்ல. பச்சைத்தமிழன்தான். தெலுகர் நாடாள பாடுபட்டாரா பெரியார்? முதல்வராகி ஆள அவர்தான் நினைத்தாரா? அதிகாரத்திற்கு வர திறமையில்லாமல் போனதற்கு அடுத்தவர்களை குறை சொல்லல் அழகோ? இது அறிவுடைமையோ?

"நான் ஒரு இந்து. என் மதம் இந்து. நான் ஆரிய பணபாட்டு அடிமை. பார்ப்பனியம் நியாயமானது. பார்ப்பனர்கள் பிறவியிலேயே திறமையானவர்கள். வரணாஸ்ரம் தவிர்க்க முடியாதது. சாதி மத கடவுள் நம்பிக்கையை என்னால் கைவிட முடியாது. அதை தீவிரமாக ஆதரிக்கிறேன். சாதி எனபது பிறவிப்பெருமை. அதை ஒழிக்க நினைப்பது தேவையற்றது. எல்லாமே விதிப்படிதான், இதை மாற்ற முடியாது." 

இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பெரியாரை எதிர்க்க திராணியில்லாத ஆரிய ரசிகர்கள் 'தமிழ்' என்ற போர்வையுடன் புழக்கடை பக்கமாக வந்து பெரியாரை எதிர்ப்பு பேசுகிறார்கள். எதிர்காலத்தில் இவர்கள் சீமானுக்கும் விசுவாசமாக இருக்கப்போவதில்லை. (பெரியார் மீதான இவ்வளவு அவதூறுகளுக்கும் சீமானே எப்போதோ பதில் பேசிவிட்டார். அதைக்கூட இவர்கள் கேட்டதில்லையா?)

நானும் பச்ச்ச்ச்சைத் தமிழன்தான்...

பார்ப்பனர்களும் நாமும் வேறு என்பதுதான் திராவிடம். ஆரிய பண்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புக் குறியீடு. ஒரு பார்ப்பனனின் முன்னால் நான் திராவிடன். மாற்றுமொழிக்காரனின் முன்னால் நான் தமிழன். பார்ப்பனின் முன்னால் நான் தமிழன் என்றால் அவனும் தன்னை தமிழன் என்பான், ஆனால் திராவிடன் என அவனால் சொல்லவியலாது. இவ்வகையில் நான் திராவிட ஆதரவாளன். மற்றபடி நானும் பச்ச்ச்ச்சைத் தமிழன்தான்...

என்னவிதமான மனிதத்தன்மை?

சற்றும் தகுதியற்றவர்கள், தன் சாதியில் யாரோ ஒருவர் எதையோ எப்போதோ செய்ததை பிழைப்புக்காக தனக்கு சாதகமாக மாற்றி பெருமை பேசி பிறரை வேறுபடுத்தி வைப்பது என்னவிதமான மனிதத்தன்மை?

காரணம் என்ன?

ஒவ்வொரு சாதியிலும் தோன்றிய தியாகிகளை இன்றைக்கு அடுத்த சாதிக்காரர்கள் கண்டுகொள்ளாமைக்கான காரணம் என்ன?

ஒருவரைச் சொல்லுங்களேன் பார்ப்போம்...

தமிழ் உணர்வாளர்களை மதிக்கிறேன். பெரியார் மீது விமர்சனம் வைக்கும் சிலரின் பிற பதிவுகள் அவ்வாறு தோன்றுகிறது. அதனால்தான் இவர்கள் அக்கறையில் விமர்சிக்கிறார்களா இல்லை ஆரிய ரசனையுடன் விமர்சிக்கிறார்களா என குறிப்பிடுகிறேன். முதலில் ஏதேனும் அவரை படித்து தெரிந்துகொண்டு விமர்சிக்கிறார்களா என்றே ஐயம்கொள்கிறேன். அவரைத் தவிர்த்தால் பார்ப்பன புராணப்புரட்டுக்களின் முகத்திரையைக் கிழிக்கும் சிந்தனைப்பார்வையை தமிழர்கள் வேறு யாரிடமிருந்து பெறமுடியும்? ஒருவரைச் சொல்லுங்களேன் பார்ப்போம்...!

பெரியாரை விமர்சிக்க வாருங்கள்...

நீங்கள் ஆதரிக்கும் தலைவனின் பெயரையும் சிந்தனைகளையும் சொல்லிவிட்டு பெரியாரை விமர்சிக்க வாருங்கள்...

எப்படியான வரலாறு என்பது முக்கியமானது

வரலாறு தெரியாதவன் வரலாற்றை படைக்கமுடியாது - கன்பூசியஸ்

உண்மைதான். எப்படியான வரலாறு என்பது முக்கியமானது. அது அர்த்தமற்ற கொம்புசீவிவிடும் சாதிய வரலாறுகள் கிடையாது. இங்கு வெட்டிப்பெருமைகளும் வரலாற்றில் கலக்கப்படுகிறது. அதனால்தான் பெரியாரை விமர்சிக்கவும் யாருக்கும் தகுதி தேவைப்படவில்லை

இப்படியும் போராடலாமே டியர் பிரதர்ஸ்...

தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரச்னையே இல்லையா? முகநூல்ல மட்டும்தான் பிரச்னை இருக்கிறதா? வாயால் வடை சுடுவதை நிறுத்திவிட்டு ஏதேனும் உருப்படியாய் செய்தால் பாராட்டலாம். அரைகுறைகளாக வெட்டி விமர்சனம் செய்துகொண்டிராமல் தமிழ்த்தேசியத்தின் செயல்பாடாய் பல ஆக்கப்பூர்வமான செயல்புரியும் திரு. ராஜ்குமார் பழனிச்சாமி அவர்களை வெகுவாய் பாராட்டலாம். 

கொஞ்சம் இப்படியும் போராடலாமே டியர் பிரதர்ஸ்...

இரண்டு வகையான நீதிபதிகள்

இந்தியாவில் இரண்டு வகையான நீதிபதிகள் உண்டு. 

01. சட்டம் தெரிந்தவர்கள். 
02. சட்ட அமைச்சரை தெரிந்தவர்கள்.

(மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஒரு முறை இவ்வாறு குறிப்பிட்டாராம்.)

27.6.14

"பெரியாரை எதிர்ப்போம்"

உண்மையான அக்கறையுடன் தமிழ்த்தேசியம் பேசுபவர்களை நான் விமர்சிப்பதில்லை. ஆதரிக்கிறேன். பாராட்டுகிறேன். ஆனால் "தமிழர்களிலும் நாங்கள்தான் ஆளத் தகுதியுடையவர்கள்" என்ற சாதீய மனோபாவத்தோடு "தமிழ்த்தேசியத்தின்" பின்னால் ஒளிந்துகொண்டு பெரியாரை சகட்டுமேனிக்கு தவறாய் விமர்சிக்கும் அறிவாளிகளைத்தான் விமர்சிக்க நினைக்கிறேன். 

பெரியாருக்கு மாற்றாக அவர்களது சாதியில் யாரேனும் ஒரு சிந்தனைச் சிற்பி இருந்தால் ஆதரிக்காமலேயா இருப்போம் நாங்கள். 

அப்படியானவர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் குறிப்பிடும் உங்கள் தலைவரின் சிந்தனையை (?) சொல்லுங்கள். விவாதிப்போம். இந்த காட்சியைப் பாருங்கள். உங்கள் சாதியில் இப்படி யாராவது (பெரியாரியத்திற்கு நிகராக) மக்களை சிந்திக்க வைத்தவர்கள் தோன்றியிருந்தால் சொல்லுங்கள்.

பிறகு நாம் சேர்ந்தே 'பெரியாரை எதிர்ப்போம்'

http://www.youtube.com/watch?v=ZTVPK9tSY6g#t=376&hd=1

நன்றி: தோழர் வே.மதிமாறன் அவர்களுக்கு

நம் நோய்களுக்கான தீர்வு, நம் பாதங்களிலேயே...

நம் பாதங்களிலேயே நம் நோய்களுக்கா தீர்வு இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றுடன் அந்தந்த இடத்தில் ஒவ்வொரு கால்களிலும் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் நாள்பட நாள்பட எல்லா நோய்களும் கீனமடையும்.

 

26.6.14

சகோதரர்களே ஒன்றுபடுங்கள்...!

இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இருந்து இணைந்து செயல்படவேண்டிய பெரியாரியவாதிகளும் தமிழ்த்தேசியவாதிகளும் பரஸ்பரம் ஒருவரையொருவர் தேவையில்லாமல் விமர்சித்துக்கொள்வது வருத்தமாக இருக்கிறது.

தமிழர் என்ற ஓர்மைக்குள் வராமல் அதனிலும் சாதீய உணர்வில் சுகம் காண விழையும் அறிவாளர்கள் தங்களை தமிழ்த்தேசியவாதிகளாகவும், தமிழரல்லாத தமிழர்தம் இனத்தின்மீது விருப்பற்ற வேற்று மொழி பகுத்தறிவாளர்கள் பெரியாரியவாதிகளாகவும்  சந்தடிசாக்கில் எதிரெதிர் முகாம்களில் இணைவதுமே இதற்குக்காரணமாக இருக்கலாம். 

சகோதரர்களே ஒன்றுபடுங்கள்...!

“இனியவன் இறந்துவிட்டான்” – ஜீ.முருகன்

இன்று இக்கதையைப் படித்தேன்.

இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறைகளிலிலிருந்து மெல்ல மெல்ல விலகி பூர்ஷ்வாக்களாக மாறிப்போனதையும், தொழில் வளர்ச்சி என்ற பேரில் சிங்கூர் பிரச்னையில் மார்க்சிஸ்ட்கள் பின்பற்றிய வழிமுறைகளையும், ஆயுதங்களால் விவசாயிகளை ஒடுக்க முனைந்த விதத்தையும் கவனிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் போராளியின் மனப்பதிவை இக்கதையில் அருமையாகப் பதிந்துள்ளார் எழுத்தாளர் ஜீ.முருகன்.

‘புரட்சி’ மற்றும் ‘இனியவன்’ என்ற இருவரும் கம்யூனிஸ்ட் தோழர்கள். ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள். சுய வாழ்வைப் பற்றின எவ்வொரு தேடலும் திட்டமுமின்றி தன் இளமைக்காலங்களை கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்காக நாடகம் நடத்துவதிலும் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்துவதிலும், கட்சியின் முடிவுகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வதிலும் அர்ப்பணித்து செயல்படுகிறார்கள். கிராமத்திலிருந்த நிலங்களை விற்றதில் இனியவனுக்கு நகரத்தில் ஒரு வீடு மட்டும் இருக்கிறது. கட்சி தவிர வேறு எந்தத் தொழிலுமில்லை. கடன் பிரச்னையில் வீடு மூழ்கும் நிலையிலிருக்க, தற்போது பலவாறான பிரச்னைகளிலும் ஏனைய கட்சிகளைப் போல முடிவெடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கு, இவர்களுக்கு ஏமாற்றமும் வெறுப்பாகவும் மாற கட்சியிலிருந்து வெளியேறுகிறார்கள். மாற்றத்திற்கான முழு நம்பிக்கையாக கட்சியை மட்டுமே நினைத்துக்கொண்டு வீரியமாய் திரிந்தவர்களுக்கு இந்த ஏமாற்றம் பெரும் விரக்தியைத் தருகிறது. போலிசு சித்ரவதை, கைது, காட்டிக்கொடுப்பு, வழக்கு, சிறை என்று ஏற்கெனவே பலர் வெளியேறியிருக்க, கட்சியின் தற்போதைய செயற்பாடுகள் ஏற்படுத்திய இந்த விரக்தியில் தோழர் இனியவன் தற்கொலை செய்து கொள்கிறார். அவரது இறப்புக்கு வெறும் 25 பேர்கள்தான் வருகிறார்கள். வெயிலின் கடும் உக்கிரத்தால் சிவப்புத்துணி போர்த்தக்கூட அவகாசமில்லாமல் நகரத்திலேயே புதைக்கப்படுகிறது தொழர் இனியவனின் பிணம். இனியவனைப் புதைத்துவிட்டு வரும்போது ‘தோழர் புரட்சிக்கு’ பலவாறாக எண்ணங்கள் ஓடுகிறது.

“நம் குடும்பமே நம்மை வெறுக்கும்போது நமது கொள்கைகளுக்கும் இயக்கத்துக்கும் எப்படி சராசரி மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்? யாருக்காக நாம் போராடுகிறோமோ அவர்களே நம்மை புரிந்துகொள்ளாதபோது நமக்கு என்ன பாதுகாப்பு? எப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டுமென்றோ என்ன தேவையென்றோ தெரியாதவர்களுக்கு எதைப் பெற்றுத்தர நாம் போராடுகிறோம்?”

“சினிமா கதாநாயகர்கள் பேசும் புரட்சிகர வசனங்களால் பரவசமடைந்து திரையரங்கைவிட்டு வெளியே வந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு வெளியுலகின் நடமுறைகளோடு கலந்துவிடுவதைப்போல கம்யூனிஸ்டுகளின் புரட்சிகர நாடகத்தை வேடிக்கை பார்க்கும் மக்களும் கரைந்து போகிறார்கள்.”

கட்சியிலிருந்து வெளியேறியதும் ஒரு “எலக்ட்ரானிக்ஸ்” கடையில் வேலை பார்க்கிறான் புரட்சி. அவன் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரான ஒரு விதவையுடன் அவனுக்கு ரகசிய பழக்கம் இருக்கிறது. அவளுக்கு ஒரு சிறுவன் இருக்கிறான். இனியவனைப்போல, அந்தச் சிறுவனும் ‘மாண்புமிகு மணி’ என்னும் ஒரு நாயும் புரட்சிக்கு நெருங்கிய நண்பர்கள்.

இனியவனைப் புதைத்துவிட்டு வரும் வழியில் ஒரு தெருமுனையில் அரசுக்கு எதிரான ஒரு பிரச்சார நடகத்தை காண்கிறான். புதிதாக அரசாங்கத்தால் தொடங்கப்படயிருக்கும் “ரோபோ டாக்” என்ற தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துகளைப் பற்றி சில இளைஞர்களும் யுவதிகளும் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழில் வளர்ச்சிக்காக அந்தத் தொழிற்சாலையை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்து வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்க, தேவையற்ற தவறான அந்த பிரச்சாரத்தை எரிச்சலுடன் கடந்து செல்கிறான். இப்படித் தெருத்தெருவாய் தான் நடத்திய நாடகங்களை எண்ணிப் பார்க்கிறான்.

இரவில் தனியாளாக அவன் போதையில் நடந்து செல்வதை கவனிக்கும் ஒரு காவல்துறை வாகனம் அவனை விசாரணைக்கு அழைத்து வருகிறது. பழக்கமான காவலர் ஒருவரால் அவன் திருப்பி அனுப்பப்பட, அங்கே தெருமுனையில் நாடகம்போட்ட அந்த பிரச்சார இளைஞர்களை ஒரு ஆய்வாளர் கடுமையாக விசாரித்துக் கொண்டிருப்பதை தோழர் புரட்சி கவனிக்கிறான். குடும்பத்தை கவனிக்கச்சொல்லி அந்த இளைஞனுக்கு அறிவுரையையும், முதல்முறை என்பதால் எச்சரிக்கையையும் தருவதாகவும் அந்த அதிகாரி பேசுகிறார். 

வெளியே வந்து தன் நாயைத் தேட அது ஒரு வண்டியில் அடிபட்டு தலை நசுங்கி கோரமாக இறந்து கிடப்பதைக் கவனித்து அதிர்ச்சியடைகிறான் புரட்சி. அதை மிகவும் சிரமப்பட்டு ஒரு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு நடந்து வருகையில், ஒரு சைக்கிளில் தன்னைக் கடந்து செல்லும் ‘மதிவாணன்’ என்ற அந்த பிரச்சாரக்குழு தலைவனான இளைஞனை நிறுத்துகிறான். “ஏன் மாற்றத்தை வரவேற்காமல் எதிர்க்கிறீர்கள்? தொழிற்சாலை வந்தால் ஊரே அழிந்துவிடுமென்று உங்களுக்கெல்லாம் யார் சொன்னது? யார் தூண்டுதலால் இப்படி பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்று கடுமையாக தர்க்கம் செய்ய ஆரம்பிக்கிறான். அவன் தனக்குப் பசிக்கிறது என்று சொல்லியும் விடாமல் கேள்விகளால் துளைக்க அவன் பொறுமையாக அந்த தொழிற்சாலை பற்றியும் இதர கேள்விகள் பற்றிய எல்லா விவரமும் கூறுகிறான். இருவரின் தந்தைகளும் கம்யூனிஸ்ட் தோழர்கள். தன் தந்தை இறந்த பின்பு புரட்சியின் தந்தையால்தான் தான் பலவும் அறிந்ததாக சொல்கிறான். ‘அதைவிட அரசாங்கம் ஆளுக்கொரு தூக்குக்கயிறை இலவசமாக வழங்கலாம்’ எனும்படி அவன் சொல்லும் தகவல்கள் தோழர் புரட்சியை யோசிக்க வைக்கின்றன. அவனை மறுநாள் சந்திக்க வரும்படிக் கூறிவிட்டு புரட்சி செல்கிறான்.

வீட்டிற்குச் செல்லும் புரட்சி, நள்ளிரவில் தன் ரகசிய காதலியிடம் ஈடுபாடின்றி கலவி கொள்கிறான். வேறு ஏதேனும் பகுதிக்குச் சென்று குடியேறலாமென அவள் சொல்கிறாள். கலவி முடித்து மொட்டை மாடியில் வந்து தனியாய் படுக்கிறான். உற்சாகம் தராத கலவி, இளைஞனுடன் நடந்த தகராறு, நாயின் நசுங்கிய தலை, காவல் நிலையம், தெருமுனை நாடகம், புதிய தொழிற்சாலை எனப் பலவாறான எண்ணங்களினூடே இறந்துபோன தோழன் இனியவனைப் பற்றியும் தீவிரமாக ஏண்ணுகிறான். விடியற்காலை வரை ஏதேதோ கனவுகள்.

விடிந்ததும் அவனுக்கு வரும் ஒரு கனவில், “வானத்தில் ஒளிக்கோடுகளால் வரையப்பட்ட ஒரு நாயின் உருவன் தெரிகிறது. பிரமாண்டமான அந்த நாய் நகரத்தைப் பார்த்தபடி பிரகாசத்துடன் கால்மடக்கிப் படுத்திருக்கிறது. அதன் கண்களாகப் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிவப்பு நிற ஒளிப்புள்ளிகள் பீதியூட்டும்படி மின்னிக்கொண்டிருக்கின்றன.”

25.6.14

“நூறு நாற்காலிகள்” – ஜெயமோகன்

(ஒரு கலெக்டரின் உண்மைக் கதை)

நேற்று இக்கதையைப் படித்தேன்.

“இட ஒதுக்கீடு” முறையால் இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்கள் பலர் பலவாறான அரசுப் பதவிக்கும் அதிகாரத்திற்கும் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே அந்த அதிகாரத்துக்கு உரிய முறையில் பிற சாதி அரசு அதிகாரிகளால் மரியாதையாக நடத்தப்படுகிறார்களா என்பதைப் பற்றியதே இக்கதை.

“நாயாடிகள்” என்று ஒரு சாதி. நரிக்குறவர்களில் ஒரு பிரிவு. தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் கீழாக நடத்தப்படும் ஒரு பட்டியல் பழங்குடி வகுப்பினர். பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இவர்கள் 50,000 பேர்களுக்கு மேலாக இருந்திருக்கிறார்கள். இவர்களை பகலில் யாரேனும் கண்டால் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்களாம். இவர்களை பார்த்தாலே தீட்டாம். மக்களுக்கு பயந்து இவர்கள் பகல் முழுதும் காடுகளிலேயே மிருகங்களைப்போல ஒளிந்து வாழ்ந்து இரவில் மட்டுமே வெளிவருவார்களாம். கழிவுகளில் கொட்டப்படும் உணவுப்பொருட்களையும் குப்பைகளில் கிடைக்கும் பொருட்களையுமே கொண்டு தம் வாழ்வை நடத்துகிறவர்கள்.

இக்கதை நடந்தகாலத்தை 1988 என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர்.

“நாயாடிகள்” சமூகத்திலிருந்து தர்மபாலன் என்பவர் ஐஏஎஸ் தேர்வெழுதி கலெக்டராக பணியாற்றுகிறார். காணாமல்போன தன் அம்மாவை கழுதைச்சந்தைக்குப் பக்கத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் பார்த்ததாக குஞ்சன் நாயர் என்பவர் வந்து சொல்ல, சாகக்கிடக்கும் வயதான பிச்சைக்காரர்களின் நடுவே தன் அம்மாவை அங்கே காண்கிறார் கலெக்டர். அடிக்கடி இப்படி நிறையபேரை அங்கே பிடித்துவருவார்களென்றும், யாருக்கும் மருத்துவம் பார்ப்பதில்லையென்றும், தீனி மட்டும் போட்டுவிட்டு அவர்களாகவே சாகும்வரைக்கும் வைத்திருந்து அப்புறப்படுத்திவிடுவதாகவும் தேவைப்பட்டால் பொதுவான ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது என்றும் மருத்துவர் மாணிக்கம் சொல்கிறார். மேலும் தானொரு தாழ்த்தப்பட்டவன் என்பதால் மருத்துவராக இருந்தும் தன்னை யாரும் மதிப்பதில்லை என்றும் போதுமான வசதிகள் செய்துத் தருவதில்லையென்றும் சீனியரான தன்னை போஸ்ட் மார்டம் செய்வதற்கே நியமித்ததாகவும் தானொரு “டிபார்ட்மென்ட் தோட்டி” என்பதாக நடத்தப்படுவதாகவும் சொல்கிறார். மருத்துவமனைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததால் பக்கத்திலிருக்கும் கால்நடை மருத்துவமனையிலிருந்துதான் இந்த ஆன்டிபயாடிக் மருந்துகளும் கொண்டுவரப்படுகிறது என்றும் சொல்கிறார். அவர் சொல்வது தனக்கும் நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதை ஆழமாய் உணரும் தர்மபாலன், சிறுநீர் வெளியேறாமல் சுய நினைவின்றி அசுத்தமாய் கிடக்கும் தன் தாயை சீர்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல உத்தரவிடுகிறார்.

மேலாடையின்றி திறந்த மார்போடு தன்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு குப்பைகளைப் பொறுக்கியபடி போகுமிடமெல்லாம் உடன் இழுத்துச்சென்ற தன் தாயை எண்ணிப்பார்க்கிறார். காலரா வந்து தங்கள் கூட்டம் கொத்துக்கொத்தாய் மடிந்தபோது தன் குடும்பத்து 10 உருப்படிகளில் தான் ஒருவர் மட்டுமே தப்பிக்கிறார். ஏழு வயதிலும் இடுப்பில் துணியில்லாமல் உடலெங்கும் சொறி சிரங்குகளோடு ஒரு நாள் சோறு வேண்டி சுவாமி பிரஜானந்தரின் ஆசிரமத்தை (நாராயணகுருவின் சீடரான சுவாமி ஏர்னஸ்ட் கிளார்க்-ன் சீடர்தான் சுவாமி பிரஜானந்தர்) தேடிப்போனபோது அங்கே இவனை தேங்காய் நார்போட்டு தேய்த்து குளிப்பாட்டி சோறு போடுகிறார்கள். தொடர்ந்து சோறு வேண்டுமானால் இங்கேயே தங்கி படித்தால்தான் என்று சொல்ல, அவனும் அவ்வாறே தங்கிவிடுகிறான். ஆனால் அம்மாவுக்கோ பிறரைக் கண்டால் பயம். தன் பிள்ளையை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறாள். தன்னுடன் அனுப்பிவிடவேண்டும் என்று பலமுறை ஆசிரமத்தின் வாசலில் அமர்ந்து அழுது அநாகரிகமாக நடந்துகொள்கிறாள். அவளிடமிருந்து விடுவிக்க இவனை தூரத்தில் வேறொரு ஆசிரமத்தில் சேர்த்து படிக்கவைக்கிறார்கள். ஆர்வத்துடன் படிப்பில் அக்கறை காட்டி வளரும் தர்மபாலனை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதச் சொல்கிறார் சுவாமி பிரஜானந்தர். அவ்வாறே தேர்வெழுதி அரசு அதிகாரியாகிறார் தர்மபாலன்.

தர்மபாலனின் சாதிப் பின்னணியைத் தெரிந்துகொள்ளும் அரசு ஊழியர்கள் யாரும் அவரை மதிப்பதேயில்லை. அவரால் யாரையும் உத்தரவிடமுடியவில்லை. சக ஊழியர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் ஒரு சமயம் அவரது தாயை அழைத்து வந்து அலுவலக வளாகத்திலிருக்கும் குப்பையில் கிடக்கும் உணவை அவர் பார்க்க ஊண்ணும்படிச் செய்கின்றனர். “எங்களின் கருணையால், எங்களின் நீதியுணர்ச்சியால், நீ இங்கு அமர வைக்கப்பட்டிருக்கிறாய். ஆகவே நீ எங்களிடம் நன்றியுடன் இரு. எங்களுக்கு விசுவாசமானவனாக இரு. நீ வேறு. உன் உண்மையான தகுதி இதுவல்ல” என்று இட ஒதுக்கீட்டால் பதவிக்கு வந்தவர்களை சக அலுவலர்கள் நடத்துவதை புரிந்துகொள்கிறார்.

தர்மபாலனின் நேர்முகத் தேர்வன்றுதான் பிரஜானந்தர் இறந்த செய்தி அவருக்குத் தெரிகிறது. “உன் தாய்க்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய்” என்ற பிரஜானந்தரின் வாக்குப்படி நெடுநாட்கள் பிரிந்திருந்த தன் தாயை எங்கெங்கோ தேடி கண்டுபிடிக்கிறார். தன்னுடன் தங்க வைக்கிறார். குப்பைமேட்டில் அலைந்து திரிந்து பழகிய தாய்க்கோ அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. கண்ட எச்சில் உணவுகளை தின்பதுமாக தோட்டங்களில் ஆங்காங்கே மலம் கழிப்பதுமாக அந்தத் தாய் அநாகரிகமாக நடந்துகொள்வது அவரது மனைவி சுபாவுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் குழந்தை ‘பிரேம்’-ஐ தூக்கிக்கொண்டுபோய் ஒரு உணவகத்தின் குப்பைத்தொட்டி எச்சில் உணவுகளை தன் தாய் ஊட்டிவிடுவதைக் கண்டு கடுமையாக அடித்துவிடுகிறார் தர்மபாலன்.

எல்லாவற்றையும் கண்டு பயந்து, ‘தன்னுடன் வந்துவிடும்படி’ தர்மபாலனிடம் அவளுக்குத் தெரிந்த “குறவர்” மொழியில் பேசி அழும் தன் தாயை நிர்கதியாய் கைவிடவும் முடியாமல், உடன்வைத்துக்கொள்ளவும் முடியாமல், அதே சமயம் அரசு அதிகாரியான தன் மனைவியின் நியாயமான உணர்வுகளையும் புறக்கணிக்கமுடியாமல் தர்மபாலன் திண்டாடும் ஒரு சமயம் அவள் காணாமல் போகிறாள். எங்கெங்கோ தேடித்தான் தற்போது கண்டுபிடித்து தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

அரசு ஆஸ்பத்திரியின் நிலையைக் கண்டித்து உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்லி தர்மபாலன் உத்தரவிட, அடுத்த நிலை அதிகாரிகளால் டாக்டர் மாணிக்கம் பணிநீக்கம் செய்யப்படுகிறார். எவ்வளவோ தியாக மனப்பான்மையுடன் பணிபுரிந்தும் தனக்குக் கிடைத்தது அவமானமும் பதவி நீக்கமும்தான் என டாக்டர் மாணிக்கம் சொல்ல தர்மபாலன் வருத்தப்படுகிறார். தாழ்த்தப்பட்ட அதிகாரிகளிடம் மரியாதை காட்டுவதை யாரும் ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை எனவும் அவர் சொல்ல தனக்கு நேர்ந்த தொடர் அவமானங்களையும் நினைத்து வேதனைப்படுகிறார் தர்மபாலன்.

தன்னுடன் வந்துவிட்டால் குப்பை மேடுகளில் “ராஜா” மாதிரி வைத்துக்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்த தன் தாயின் உயிர் ஒடுங்கும் வேளையில், சாதியின்பேராலும் இட ஒடுக்கீட்டின் பேராலும் தன்னை அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த போலியான “டிபார்ட்மெண்ட் தோட்டி” அதிகார பதவியை விட்டுவிட்டு செல்வதும் மேல்தான் என தீர்மானிக்கும் வேளை ‘தன் தாயைப் போன்ற பல பிச்சைக்கார கிழவிகளை புதைத்து அவர்களின் அத்தனை தாபங்களுடனும் மட்கி மண்ணாக்க வேண்டுமென்றால் எனக்கு இன்னும் “நூறு நாற்காலிகள்” வேண்டும்’ என்று உணர்கிறார் தர்மபாலன். ‘பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கீழே இருந்தவர்கள் எழ வேண்டும்’ என சுவாமி பிரஜானந்தர் சொன்னதை எண்ணிப் பார்க்கிறார்.

ஒரு கீழான சாதியிலிருந்து உயர் பதவிக்கு வந்த ஒருவர் தன் அதிகார மட்டத்தில் எதிர்கொள்ளும் சாதீய அடையாள ரீதியான / இட ஒதுக்கீட்டின் மீதான பிற சாதிக்காரர்களின் வெறுப்பை ஆழமாய் நேர்மையாய் பதிவுசெய்வதாய் நீளூம் இக்கதையின் பின் இணைப்பில் இட ஒதுக்கீட்டு முறையின் மீதான ஜெயமோகனின் வெறுப்பையும் சாதுரியமான எதிர்ப்பையும் இணைத்து வெளியிட்டுள்ளனர். அதாவது இட ஒதுக்கீட்டில் பதவி கிடைத்தாலும் அவர்களுக்கு போதுமான தகுதிகளை வளர்த்துக்கொள்ள அரசு எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்கிறார் எழுத்தாளர். இதனாலேயே பலர் அவமானங்களை சந்திக்க நேர்வதாக பல “கோட்டா” அதிகாரிகள் தன்னிடம் ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார் ஜெயமோகன். (?)



23.6.14

பெரியாரை குறை சொல்லும் அறிவாளிகளே, உங்களுக்குத் தெரியுமா?

இரயில் நிலையங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் "பிராமணர்கள் மட்டும்" என்ற அறிவிப்புப் பலகையோடு ஒரு அறை இருந்தது. அதைக் கண்டித்து "ஆளுகின்ற அரசுக்கு ஒரு மாதம் கெடு, வாய்தா தருகிறேன். அதற்குள் அந்த அறிவிப்புப் பலகையை எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் நான் கடுமையான போராட்டம் நடத்துவேன்" என்று டவுன்ஹால் பொதுக்கூட்டத்தில் அய்யா பெரியார் பேசினார். அவர் பேசி ஒருவாரத்திற்குள் அந்தப் பலகைகள் அகற்றப்பட்டன. 

- "பெரியார் தொண்டர் திருச்சி வீ.அ.பழனி" என்ற நூலிலிருந்து...

இதுதான் பெரியார் வழியா?

தனக்கு சிலை வைப்பதை பெரியார் மறுத்தார். தொண்டர்கள் விடாப்பிடியாக உறுதியாக வற்புறுத்த அப்படி சிலை வைக்கவேண்டுமானால் அதன் கீழே கட்டாயம் கடவுள் மறுப்பு வாசகங்களை எழுதி வைக்கும்படிச் சொன்னார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தஞ்சாவூரில் அய்யா பெரியாரின் சிலை திறப்பு விழாவுக்கு வர சம்மதித்தார். சிலை வைக்கப்பட்டிருந்ததை அவருடைய செயலாளர் வந்து பார்த்துவிட்டுப் போனவுடன், சிலைக்குக் கீழே கடவுள் மறுப்புக் கல்வெட்டு இருப்பதை நீக்கினால்தான் திறப்பேன் என்று சொல்லிவிட்டார். அந்தக் கல்வெட்டை அகற்றிவிட்டு அவர் சிலையைத் திறந்துவிட்டுப் போன இரண்டு மூன்று நாட்கள் கழித்துத்தான் மறுபடியும் கல்வெட்டை வைத்தார்கள்.

இதுதான் பெரியார் வழியா? 

- "பெரியார் தொண்டர் திருச்சி வீ.அ.பழனி" என்ற நூலிலிருந்து...

20.6.14

“பால்யகால சகி” – வைக்கம் முகமது பஷீர்

இன்று காலை இக்கதையைப் படித்தேன்.

மஜீத்துக்கு 9 வயது. சுகறாவுக்கு 7 வயது. இருவரும் பரம எதிரிகள். இந்த விரோதத்திற்குக் காரணம் மாம்பழக் காலங்களில் அந்த மாம்பழங்கள் சுகறாவுக்குக் கிடைக்காமல் மஜீத்துக்கு மட்டுமே கிடைப்பதும்தான். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்த சிறுவர்கள். இவர்களின் இரண்டு இசுலாமிய குடும்பங்களும் அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள். மஜீத்தின் வீட்டிலிருந்து பார்த்தால் சுகறாவின் வீடு தூரத்தில் தெரியும். மஜீத்தின் தந்தையோ அவ்வூரில் பெரும் பணக்காரர். வீடு வீடாய் பாக்குகளை வாங்கிவந்து சந்தையில் விற்று பிழைப்பு நடத்தும் ஒரு ஏழையின் மகள் சுகறா. மஜீத்தும் சுகறாவும் எப்போதும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

சுகறாவின் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் மாமரங்களிலிருந்து விழும் ஒரு மாம்பழமும் சுகறாவுக்கு கிடைப்பதில்லை. எப்போதும் மஜீத்து அவைகளை முன்கூட்டியே எடுத்துவிடுவான். சுகறா பார்க்கும்போது எச்சிலுடன் மாம்பழத்தை நீட்டி பரிகாசம் செய்வான். ஒருமுறை ஒரு மாமரத்தினடியில் விழுந்து கிடக்கும் மாங்காய் ஒன்றை எடுத்த சுகறா பின்னர் அது தேங்காய் சிரட்டை என்று அறிந்து அவமானப் படுகிறாள். மஜீத்து இதைப் பார்த்து சத்தமிட்டு சிரிக்கிறான். பதிலுக்கு சுகறாவும் கிண்டலாக சத்தமிட்டு அவமானப் படுத்திவிட “டி” என அழைத்து பேசுகிறான். அதனால் பெரிதும் அவமானம் அடைந்த சுகறா அவனை நகங்களால் பிராய்ந்துவிடுகிறாள். அவமானப்படும் மஜீத்து, ‘என்னால் மரம் ஏற முடியும். உன்னால் முடியாது’ என்று அவளைப் பார்த்து பரிகாசம் செய்கிறான். மேலும் அவளது வைக்கோல் வேய்ந்த குடிசையையும் தன் ஓட்டு வீட்டையும் ஒப்பிட்டு பரிகாசம் செய்கிறான். அவளது அப்பா பாக்கு வியாபாரி என்பதையும் தன் அப்பா மர வியாபாரி என்பதையும் சொல்லி கிண்டல் செய்கிறான். அவள் எதற்கும் கண்டுகொள்ளாமல் அன்றைக்கு அவன் பறித்த இரண்டு மாம்பழங்களை முதலில் பார்த்தது நான்தான் என வாதிடுகிறாள். அவள் மீண்டும் பிராண்டிவிடுவாளோ என்ற பயத்திலும் சற்று இரக்கத்திலும் அவளிடம் இரண்டு பழங்களையும் தருகிறான். அவள் ஒன்று மட்டும் போதுமென எடுத்துக்கொள்கிறாள். இருவருக்கிடையிலும் சமாதானம் துளிர்க்கிறது. ஒன்றும் ஒன்றும் எவ்வளவு என வாத்தியார் கேட்ட கேள்விக்கு “கொஞ்சம் பெரிய ஒண்ணு” என பதில் சொல்லும் மஜீத்தை அன்று முதல் அவள் அப்படியே அழைக்கிறாள். இப்படிச் சொல்லி அவன் கிண்டல் செய்யும்போதெல்லாம் அவன் சிரித்துக்கொள்வான்.

தான் எதிர்காலத்தில் பெரும் செல்வந்தனாக வாழ்வதுபோலவும் வானத்துக்கும் பூமிக்குமான ஒரு தங்க மாளிகையில் ஒரு ராஜகுமாரியுடன் வசிக்கப்போவதாகவும் அவன் அடிக்கடி கற்பனையில் கனவு காண்பான். அந்த ராஜகுமாரி நீதான் என் சுகறாவிடம் ஒருசமயம் அவன் சொன்னதைக் கேட்டு அவள் சந்தோஷப்படுகிறாள்.

அவனுக்கு வெகுவிமரிசையாக சுன்னத் கல்யாணம் நடக்கிறது. 1000 பேருக்கு பிரியாணி விருந்தளிக்கப்படுகிறது. முதலில் என்னவோ ஏதோவென அதைக்கண்டு பயந்து நடுங்கும் மஜீத்து சுகறாவிடம் அதைப்பற்றி சொல்லும்போது சற்றுகூட பயப்படவில்லையென நடந்ததை விவரமாக சொல்கிறான். அவளுக்கு காதுகுத்து நடக்கவிருப்பதை அவள் சொல்ல அந்த நாளில் யாருக்கும் தெரியாமல் அவள் வீட்டுக்கு செல்கிறான். காதுகுத்து எப்படியிருக்கும் என காணவந்ததாய் அவன் சொல்ல, சுன்னத் செய்யப்பட்ட நிலையுடன் வந்திருக்கும் அவனை உறவினர்கள் தூக்கிச்செல்கிறார்கள்.

உள்ளூர் படிப்பை முடித்து வெளியூர் சென்று படிக்கச் செல்கிறான் மஜீத். சுகறா பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறாள். அவளுடைய அப்பா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட, வருமானத்துக்கு வழியின்றி அம்மாவும் இரு தங்கைகளுடனும் சிரமப்படுகிறது சுகறாவின் குடும்பம். சுகறாவின்றி தான் மட்டும் படிக்கச் செல்வதும் அவளது குடும்ப நிலையும் அவனுக்கு பெரிதும் இரக்கத்தை ஏற்படுத்துகிறது. தன் பணக்கார அப்பாவின் மேல் எப்போதும் அவனுக்கு பயம் என்றபடியால் ஒருமுறை தன் அம்மாவிடம் சுகறாவையும் படிக்கவைக்கச் சொல்லி கேட்கிறான். சமயம் பார்த்து அவனது அப்பாவிடம் ‘இசுலாமியர்களின் கடமைகளை’ எடுத்துக்காட்டி அவனது அம்மா கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் எழுகிறது. ஏற்கெனவே தம்பி தங்கைகளின் குழந்தைகளென்று நமது குடும்பத்திலேயே 67 பேர் இருப்பதால் எல்லோரையும் காப்பாற்றுவது கடினம் என கறாராகச் சொல்லிவிடுகிறார் அவர். சுகறாவுக்கு எதுவும் செய்ய முடியாமல் மஜீத்து கவலைப்படுகிறான். பள்ளிக்கு செல்லும் வழியில் மஜீத்தின் காலில் பொத்தும் ஒரு முள்ளினால் அவனது கால் ஏகத்துக்கும் வீங்கிவிட ‘தான் விரைவில் செத்துப்போய்விடுவேன்’ என அவளிடம் சொல்கிறான். யாருமற்ற சமயத்தில் வரும் அவளுக்கும் அவனுக்கும் மெல்லியதான மோகம் அரும்ப உடல் அணைப்பில் நெருக்கம் ஏற்படுகிறது. பின் கட்டி உடைந்து கால் சரியாகிவிடுகிறது.

ஒருநாள், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது வயலுக்கு வரச்சொல்லி அப்பா சொன்னதை மறந்து விளையாடச் சென்றுவிடும் மஜீத்தை நையப் புடைக்கிறார் அப்பா. அப்பாவிடம் ஏற்கெனவே இருந்த வெறுப்பாலும், தற்போது அடிவாங்கிய அவமானத்தாலும் அவன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு கண்காணாத இடத்திற்குப்போக தீர்மானிக்கிறான். கிளம்பும்முன் சுகறாவைப் பார்த்துச் செல்ல எண்ணி பின்னர் வேண்டாமென்று முடிவுசெய்து புறப்படுகிறான்.

சுமார் 10 வருடகாலம் சொந்த ஊருக்குப் போகாமல் தேசாந்திரியாக எங்கெங்கோ அலைகிறான். யாருடனும் எவ்வித தொடர்புமில்லை.  வாழ்க்கை அலுத்துப்போக பலவருடங்களுக்குப் பிறகு பின்னொருநாள் ஊருக்குப்போக முடிவுசெய்கிறான்.

அவன் ஊரில் எல்லாமே மாறியிருக்கிறது. யாருக்கோ ஜாமீன் நின்றதற்காகவும் யோசிக்காமல் கையெழுத்து போட்டதற்காகவும் அவனது அப்பா தன் சொத்தையெல்லாம் இழந்துவிட்டிருக்கிறார். நெடுநாட்களுக்குப் பிறகு அவனைக் காணும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். அவனை எப்படியெல்லாம் வளர்த்தோம் என எண்ணிப்பார்க்கிறாள் அம்மா. வறுமையின் பெரும்பிடியில் வயதுக்கு வந்த இரு மகள்களோடு கஷ்டப்படும் அவனது தாயை எண்ணிக் கலங்குகிறான். சுகறாவுக்கு எப்போதோ கல்யாணம் ஆகிவிட்டதை அறிகிறான். ஒருமுறை அவளைப் பார்த்துவிட வேண்டுமென நினைத்து அவள் வருவாளா என எதிர்பார்க்கிறான்.

அவன் ஊருக்கு வந்த செய்தியறிந்து சுகறா அவனைப் பார்க்க வருகிறாள். உடல் மெலிந்து முகம் வற்றி ஒரு பல் விழுந்து அந்த மாமரத்து அருகில் நின்று இருவரும் பால்யகால நினைவுகளோடு பேசிக்கொள்கிறார்கள். நான் வரவே மாட்டேனென்று நினைத்தாயா என இவன் கேட்க, தனக்கு நம்பிக்கை இருந்ததாகவும் ஆனால் ஒரு வறுமைப்பட்ட குடும்பத்தின் இரண்டு தங்கைகளின் அக்காவால் இந்த சமூகத்தில் எதுவும் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள். தன் கணவனுக்கு ஏற்கெனவே ஒரு குடும்பம் இருப்பதையும் அவன்  ஒரு பயங்கரமான கோபக்காரன் என்பதையும் அடிக்கடி அடிப்பான் என்பதையும் அதனால் பல் விழுந்த கதையையும் சொல்லி தான் அங்கே ஒரு கூலிக்காரியாகவே இருப்பதாகவும் சொல்கிறாள். தன் ராஜகுமாரியின் கதையைக் கேட்டு கலங்குகிறான். இனி சுகறா அங்கே போகவேண்டாமென தன் அம்மாவிடம் சொல்கிறான் மஜீத். ஊர் பழியாகப் பேசுமென அம்மா சொல்ல, தான் அவளை கல்யாணம் செய்துகொள்வதாகச் சொல்கிறான். தங்கைகளுக்கு கல்யாணம் செய்துகொடுத்துவிட்டு பிறகு அவளைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி அம்மா கேட்டுக்கொள்கிறாள்.

செல்வந்தராக வாழ்ந்த தன் அப்பா தற்போது கௌரவம் பார்க்காமல் கடைத்தெருவுக்குப்போய் தேங்காய் நார் விற்பதைக் காண்கிறான். தனக்குத் தற்சமயம் பெருமளவிலான பணம்தான் தேவை என்பதை காலம்கடந்து உணர்கிறான். தன் அனுபவங்கள் அறிவு அனைத்தையும் பணமாக்குவது எப்படி என சிந்திக்கிறான். எந்த வழியும் புலப்படவில்லை. வெளியூர்களில் செல்வந்தர்களாக இருக்கும் முஸ்லீம்களிடம் உதவி கேட்கச் சொல்கிறாள் அம்மா. அதைப் பொருட்படுத்தாமல் எல்லோரிடமும் சொல்லிவிட்டு வெளியூருக்கு வேலைக்குக் கிளம்புகிறான். இருப்பதை விற்று அம்மா கொடுத்ததை வாங்கிக்கொண்டு சுமார் 1500 மைலுக்கு அப்பால் ஒரு நகரத்திற்குச் சென்று வேலை தேடுகிறான். எங்கே தேடினும் வேலை கிடைத்தபாடில்லை. கடும் அலைச்சலுக்குப் பின் ஒரு தோல் கம்பெனியில் ஆர்டர் எடுக்கும் வேலையொன்று கிடைக்க மாதம் 100 ரூபாய் அனுப்புகிறான்.

சீக்கிரம் தங்கைகளைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு சுகறாவை கல்யாணம் செய்துகொள்ள எண்ணி கடுமையாக உழைக்கிறான். இந்நிலையில் எதிர்பாராமல் நடக்கும் விபத்தொன்றில் ஒரு காலை இழக்கிறான் மஜீத். அந்த கம்பெனியில் இனி அவனுக்கு அந்த வேலை இல்லையென சொல்லும் முதலாளி, வேண்டுமானால் குமாஸ்தாவாக இருக்கச் சொல்கிறார். தனக்கு கணக்கு பலவீனம் என்பதால் மறுத்து வேறு வேலை தேட ஆரம்பிக்கிறான். முதலாளி கொடுத்த பணம் முழுவதையும் வீட்டுக்கு அனுப்பி, தான் அடுத்த கடிதம் எழுதும்வரை பதில் போடவேண்டாமென கடிதம் எழுதுகிறான். தனக்கு கால் போனதை மறைக்கிறான். ஒரு முஸ்லீம் பணக்காரரை சந்தித்து உதவி கேட்கிறான். அவர் ஏற்கெனவே 4 பள்ளிவாசல் கட்ட உதவிவிட்டதாகச் சொல்லி ஒரு ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அதை வாங்காமல் வெளியேறுகிறான். பின் ஒரு உணவு விடுதியில் பாத்திரம் கழுவும் வேலை கிடைக்கிறது. கடுமையாக உழைக்கிறான். ஊரில் எல்லோரும் சுகமென்றும் அவனைப் பார்க்கவேண்டும்போல் இருப்பதாகவும் சுகறாவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. ஊருக்குப்போனால் தன்னை எல்லோரும் “ஒற்றைக்கால் மஜீத்” என அழைப்பார்கள் என எண்ணி போவதைப்பற்றி யோசிக்க மறுக்கிறான். என்ன இருந்தாலும் “கொஞ்சம் பெரிய ஒண்ணு” என்றுதான் தன் ராஜகுமாரி அழைப்பாள் என மகிழ்கிறான். தினசரி வேலைகளினூடே வானத்து நட்சத்திரங்களோடும் மனதோடும் சுகறாவுடன் பேசிக்கொள்வான்.

சிலநாள் கழித்து அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. உடல்நிலை சரியில்லாமல் சுகறா இறந்துவிட்டதாகவும், அவனை ஒருமுறைப் பார்க்க எதிர்பார்த்திருந்ததாகவும் அவள் இருக்கும்வரை தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும், வீட்டைவிட்டு கடன்காரர்கள் உடனடியாக வெளியேறச் சொல்லிவிட்டதாகவும்   முஸ்லீம் செல்வந்தர்களிடம் உதவி கேட்குமாறும் அம்மா எழுதியிருப்பதைப் படித்து கலங்குகிறான். 

தன் வாழ்க்கை சூனியம் ஆகிப்போனதாக உணர்கிறான். துயரமும் மகிழ்ச்சியும் கலந்த இந்த வாழ்வைப் பற்றியும் கணநேரத்தில் கடந்துபோன காலம் பற்றியும் யோசிக்கிறான். “தன் தாயும் தந்தையும் எங்கே போவார்கள்? யார் உதவி செய்வார்கள்? வாழ்க்கை அர்த்தமிழந்துப் போனதா யா அல்லா? கருணைமயமான இறைவனின் கரங்கள் எங்கே?  என பலவாறான எண்ணங்களோடு பாத்திரங்களை கழுவி வைத்தபடி சுகறாவுக்கும் தனக்குமான பழைய நினைவுகளை அசைபோடுகிறான். முன்னம் வேலைதேடி ஊரைவிட்டு கிளம்பும்போது செம்பருத்தி மரத்தைப் பிடித்தபடி சுகறா தன் காதருகே எதையோ சொன்னாள். ஒரு வண்டியின் ஹார்ன் சத்தத்தால் அது அப்போது கேட்காமல் போனது. இப்போது கண்ணீருடன் யோசிக்கிறான், “அவள் கடைசியாகச் சொல்ல நினைத்தது என்னவாக இருக்கும்?”

12.6.14

சிறுவயதில் எழாத கேள்வி

இன்று மதியம் படப்பிடிப்பின் இடைவெளியின்போது ஒரு பாறையின் மீது சிவப்புநிற ஓணாண் ஒன்றைப் பார்த்தேன். சிறுவயது நினைவுகள் சிலநொடி திரும்பியது. 

தாகத்திற்கு தண்ணீர் கேட்ட ராமனுக்கு தண்ணீரைத் தராமல் "சிறுநீர்" கொடுத்ததாக தூக்கிலிடப்பட்ட; அடித்துக்கொல்லப்பட்ட ஓணாண்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா?

இந்தப்பாவம் ராமனைச் சேருமா? ராமன் கதையை எழுதியவனைச் சேருமா? ராமனையும் ஓணாணையும் இணைத்து கதை சொன்னவனைச் சேருமா? இக்கதையை சிறுவர்களிடம் பரப்பியவர்களைச் சேருமா? ஓணாணைக் கொன்றவர்களைச் சேருமா? 

சிறுவயதில் எழாத கேள்வி இப்போது எழுகிறது. "தாகத்திற்கு யாரிடம் தண்ணீர் கேட்க வேண்டும் என்ற இங்கிதம்கூட தெரியாமல், ஓணாணிடமாபோய் தண்ணீர் கேட்கவேண்டும் ராமன்? ஓணாணிடம் தண்ணீர் கேட்டால் அதனால் வேறெதைத்தான் தரமுடியும்?"

சிறுவயதில் கொல்லப்பட்ட ஓணாண்கள் அவ்வப்போது இப்போதும் நினைவுக்கு வருகிறது. மனம் சலனப்படுகிறது. 

"ராமன், ஓணாண்களுக்கும் வில்லனாக இருப்பதன் காரணம்தான் என்னவோ?"

9.6.14

"இயற்கைக்கு யாவரும் சமமே"

இதோ... இவர்களது இனத்திற்கும் கடவுளுடன் இணைக்கப்பட்ட ஒரு கதையிருக்கலாம். அதில் போதையேறி தங்கள் குழுவின் பெருமைகளைப் பேசி பேசி இவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் யதார்த்தம் இதுதான். கடவுள் என்ற ஒருவன் எந்த காலத்திலும் தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை... 

"இயற்கைக்கு யாவரும் சமமே"

8.6.14

மாற்றுக்கருத்தாளர்கள் என்றால் எதிரிகளா?

மாற்றுக்கருத்து / எதிர்கருத்து என்பது வேறு. நட்பு கொள்வது என்பது வேறு. இதை பலரும் குழப்பிக்கொள்கிறார்கள். எல்லோருமே எல்லாவற்றிற்கும் சண்டைபோட வேண்டுமென்பது அவசியமா? கருத்துக்களை பரிமாற்றிக்கொள்ளக்கூட தெளிவில்லாதவர்கள் அப்படி என்னதான் சாதிக்கப்போகிறார்கள்?

5.6.14

மாநில பிரிவினை

வடதமிழ்நாடு ஏன் வேணும்னு அவரு ஒற்றை வார்த்தையில தெளிவா சொல்லிட்டாரு. ஆனா பாருங்க அதுக்கு என்னென்னமோ பொதுப்பிரச்னையை எல்லாம் துணையா இழுத்துக்கிட்டு நியாயப்படுத்த தீயா வேலை செய்றாங்க கட்சிக்காரங்க.

சங்கம் ஆரம்பிச்சு கட்சி ஆரம்பிச்சும் முன்னேற்ற முடியாததையெல்லாம் மாநிலத்தை பிரிச்சாத்தான் முன்னேற்ற முடியும்னா...
ஒரு பேருந்து விபத்தில் செத்துப்போனவர்களில் எங்கள் சாதிதான் அதிகம்னு அறிக்கைவிட்டு அக்கறைப்படும் கட்சி, அதிகாரத்திற்கு வந்து எல்லோருக்காகவும் என்ன சாதிக்கப்போகிறது?
ஒரே மொழி பேசும் மக்களுக்குள் பிரிவினை வருவது என்பது முன்னேற்றமா? ஏற்கெனவே பிராந்திய, சாதீய, குழு மனப்பான்மையில் வாழும் தமிழினத்திற்கு இது ஆரோக்கியமானதா? ஹிந்திக்காரனுக்கு கூடுதலான விசுவாச அடிமைகளாக மாற இத்தனை பிரச்சாரமா?

முதல்வராகி எல்லா சாதியையும் ஆள்வது இருக்கட்டும்; முதலில் எதிர்க்கட்சியாகக்கூட வராமல்போவது ஏன்?

4.6.14

ஏலகிரியில் பார்த்த ஒரு சிறு கோயில்




இன்று காலை படப்பிடிப்புக்காக ஏலகிரி வந்தேன். காலையில் படப்பிடிப்பு தளத்திற்கு போகும் வழியில் ஒரு மாரியம்மன் கோயிலைப்பார்த்தேன். கழுமரங்களைப் போன்ற அமைப்புடன் 6 தூண்கள் மற்றும் கோயில் கோபுரத்தின் முன்புறம் உள்ள சாமி சிலைகளினூடே ராணுவ உடை தரித்த இரண்டு சிப்பாய்களின் சிலையும் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக வேலூர் மாவட்ட மேற்குப் பகுதிகளில் முன்னம் ஏற்காடு சென்றபோது வழியெல்லாம் இப்படி சற்று வித்யாசமான சிலைகள் அமைந்த பல குலசாமிக்கோயில்களை பார்த்திருக்கிறேன். நான் வேலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவன்.

நிச்சயம் இவை எல்லாவற்றின் பின்னணியிலும் இந்த மண்ணின்; மக்களின் சுவாராஸ்யமான கதைகள் இருக்கக்கூடும். ஆனால் இந்த பெருதெய்வங்களைப்போல அல்லாமல் அதன் கதைகளில் நேர்மைத்தனம் இருக்கலாம் என்பதே நிதர்சனம்.

2.6.14

"பாமக" - என் விமர்சனம்

பாமக-வின் மீது எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் என் கிராமத்து அரசியலைப் பொறுத்தவரையில் நான் பாமக-வையே ஆதரிக்கிறேன். ஏனெனில் என் கிராமத்தில் அதிமுக, திமுக-விற்கு மாற்றாக வேறு யாரும் இல்லை. முன்னொரு காலத்தில் திமுக மட்டுமே தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. பின்னர் பாமக. 1998-ம் ஆண்டு மிகப்பெரும் சாதிக்கலவரம் வந்து இரு தரப்பிலும் சுமார் 50 பேர் 5 வருடங்களாக வழக்குக்காக அலைந்து கொண்டிருந்தனர். இருப்பது இரண்டு சாதிதான். வழக்கில் சிக்கியவர்கள் எல்லோரும் விவசாயிகள்தான். கடைசியில் வழக்காட முடியாமல் இரு தரப்பினருமே ஒத்துப்போய் வழக்கை கைவிட்டனர். சண்டைக்கு முன்பு எல்லோரும் மாமன் மச்சான்களாய் எந்த பிரச்னைகளுமின்றி உறவுக்காரர்களாகவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். பாமக வந்த பின்புதான் இப்படியானது. அதற்குப்பின்பு இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்றது. எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்தாடியது. மேலும் சாதீய அடக்குமுறையும்கூட. ஒப்பீட்டளவில் அதிமுக தரப்பின் வன்னிய சாதி வெறியைக்காட்டிலும் வெளிப்படையான பாமக மேல் என்று தோன்றியது. எவ்வாறெனில் எதிர் தரப்பினரை ஒன்றுபடுத்தவாவது உதவக்கூடும். மேலும் கடந்த பஞ்சாயத்து தேர்தலில் பாமக-வை ஆதரிப்பதென எங்கள் நண்பர்கள் கூடி முடிவெடுத்தோம். எப்படியாயின் அதிமுக கிராமத்தில் மீண்டும் வந்துவிடக்கூடாது என உறுதியாக இருந்தோம். இது ஒருவகையில் எங்களுக்கும் ஆபத்துத்தான். ஏனெனில் மீண்டும் ஒரு சாதிப்பிரச்னை வந்தால் அதற்கு நாங்களே எங்கள் தரப்பிற்கு பகையாகிவிடுவோம். இருந்தும் பாமக-வினரை எந்தளவிற்கு நம்ப முடியுமென்ற உறுதியில்லை. 1998-க்குப் பிறகு கிராமத்தின் பெரும்பாலான கிழக்குப்பகுதி இளைஞர்களுடன் நமக்கு பழக்கமில்லை. சைக்கிளிலிருந்து பனியன் சட்டைவரை சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்ளும் இளைஞர்களைத்தான் பார்த்துவருகிறேன். தீவிர தமிழ் பற்றுடன் அதில் யார் இருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்தாலும் சந்திக்கும் ஆற்றல் இருக்கிற காரணத்தால் பாமக-வில் இருந்த நம்பிக்கையான சிலருடன் ஓரிரவு நிலா காய்ந்த ஒரு வெட்ட வெளியில் அமர்ந்து பேசினோம். எந்த நிபந்தனையுமின்றி வெளிப்படையாகவே பேசினேன். எதிர் காலத்தில் எந்தவொரு தரப்பிலும் யார் வாழ்வும் சாதியால் சீரழிந்துவிடக்கூடாது என்றே இன்றுவரையிலும் எண்ணுகிறேன். 

தேர்தல் பிரச்சாரத்தில் நண்பர்களுடன் வீடுவீடாய் சென்று பாமக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தோம். இதில் உடன்பாடில்லாத என் சாதித்தரப்பு உறவினர்கள் சிலர் எனக்கு இன்றுவரையிலும் நிரந்தர பகையாகிவிட்டார்கள். என் பங்காளித் தரப்பில் நின்ற ஒருவரை எதிர்த்து கிராம நலனைக் கருத்தில் கொண்டு பாமக சார்பாகவே செயல்பட்டோம். தேர்தல் நாள் நெருங்குவதற்குள் பங்காளித்தரப்பில் உள்கட்ட நெருக்கடி தீவிரமானது. வெறும் ஓரிரு நண்பர்களுடன் தேர்தலன்று காலையிலிருந்து மாலைவரை பாமக-விற்கு ஓட்டு கேட்டேன். தேர்தல் முடிவு வரும்வரையில் பெரிய மன உளைச்சல். மறுநாளே என் சாதியாட்களுக்குள் பெரும் சண்டை. இருந்தும் எல்லாம் தாண்டி பாமக வெற்றி பெற்றது. நிம்மதியாயிருந்தது. நாங்கள் ஆதரித்த அனைவரும் வெற்றி பெற்றனர். பின்பு வேறொரு பிரச்னை. துணைத்தலைவர் பதவி எங்கள் சாதிக்கு தரக்கூடாது என பாமக இளைஞர் தரப்பில் சிலர் பிரச்னை செய்வதாக. மீண்டும் இரு தரப்பிலும் அதே மாதிரி ஒரு இரவு ஏரிக்கரையில் அமர்ந்து பேசினோம். உங்களுக்குள் பிரச்னை என்றால் எந்தப் பதவியும் வேண்டாமென நாகரீகமாகவே மறுத்தோம். ஆனால் எங்கள் தரப்பினருக்கு இதுவொரு கௌரவப் பிரச்னையாகிவிட்டது. இது நடக்காது போனால் மீண்டும் நாங்கள் யாரிடமும் ஓட்டு கேட்க செல்ல முடியாது. முதலிலேயே பதவி வேண்டுமென்று நிபந்தனையும் விதிக்கவில்லை. பின் ஊர் ஒற்றுமைக்காக எங்கள் தரப்பில் துணைத்தலைவர் ஆனார் எனது நண்பர். 

எது எப்படியோ, இன்றுவரையில் மூன்று வருடங்களாக எந்தப் பிரச்னையுமில்லை. ஊர் அமைதியாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளைவிடவும் பல திட்டங்கள் திறமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது கிராமத்திற்கு செல்லும்போது இதை கண்டிருக்கிறேன். யாருக்கு போன் செய்தாலும் ஏதாவது பிரச்னையா எனக் கேட்டுவிட்டுத்தான் அடுத்ததைப் பற்றி பேசுவேன். சுமார் 2500 பேர் மக்கள்தொகைக் கொண்ட என் கிராமத்தில் 100 வன்னியர்கள்கூட எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை. ஆனால் எல்லோரைப் பற்றியும் தெரியும். எல்லோரின் செயற்பாடுகளையும் கவனிப்பேன். அதற்கேற்ற வகையில் யாரிடம் விசாரித்தாலும் தற்போதைய தலைவர் பற்றி நல்லவிதமாகவே சொல்கிறார்கள். இது தொடரவேண்டுமெனவே எதிர்பார்க்கிறேன். இதில் எமக்கு தனிப்பட்ட லாபமென ஒன்றுமில்லை. இரு தரப்பில் எல்லோரும் கூடி அமர்ந்து தயாரித்த தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொன்றாய் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய எனது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் "கோகுல கிருஷ்ணா யாதவ இளைஞர் அணி" தம்பிகளுமே பொறுப்பு.

தற்போது குறைவான ஒரு சிலரைத் தவிர எனது கிராமத்து பாமக-வில் அப்படியொன்றும் சாதி வெறியர்கள் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் இளைஞர்களிடத்தில் சாதியுணர்வு தானாய் கொழுந்துவிடுகிறது. எதிர்ப்புணர்வின் விளைவாய் இதேபோல் எதிர் தரப்பு இளைஞர்களிடமும் தீவிரமாய் கொழுந்துவிடுகிறது. பதிலுக்கு எங்கள் சாதிக்கென்று எந்த கட்சியுமில்லை என்பதும் இதற்குக் காரணமாயிருக்கலாம். இப்போது எம் தரப்பின் சில இளைஞர்கள் பெரியாரை படிப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. சாதீயக் கண்ணோட்டத்தில் எம் இளைஞர்களை துளிகூட சாதிரீதியாக நான் ஒருபோதும் நடத்தியதே இல்லை. எச்சாதியாயினும் தமிழ் இனவெறி உள்ளவர்களோடு என்றைக்குமே நான் ஒத்துப்போய்விடுகிறேன். இப்படியான தீவிர இளைஞர்கள் என் கிராமத்தில் உருவாக வேண்டுமென எதிர்பார்க்கிறேன். தகுதியுள்ளவர்கள் யார் பதவிக்கு வந்தாலும் எமக்கு எப்போதும் பிரச்னையில்லை. சாதிப்பெருமையை மட்டுமே கொள்கையாய் பேசி ஏமாற்றுபவர்களையே வெறுக்கிறேன்; எதிர்க்கிறேன். 

இதன் பொருட்டே பாமக-வை தொடர்ந்து விமர்சிப்பது எனக்கு அவசியமாகிறது. எல்லாம் கடந்து என் கிராமத்தின் எல்லா மனிதர்களையும் நான் நேசிக்கிறேன். யார் மீதும் எதன் பொருட்டும் எனக்குக் காழ்ப்புணர்வு இல்லை. 

எங்கள் ஊரைப்பற்றி முக்கியமான ஒன்று சொல்ல வேண்டுமானால், ஊருக்கு கிழக்கு நுழைவிலும் மேற்கு நுழைவிலும் ஒரு சக்கிலியர் குடும்பம் இருக்கிறது. அதாவது வன்னியர் பகுதியில் ஒன்றும், யாதவர் பகுதியில் ஒன்றும். இன்றுவரையில் அவர்கள் சாதிரீதியான அடக்குமுறைக்கு பயந்து இடம்பெயர்ந்து போகும்படி எப்போதும் ஆளாகவில்லை. கௌரவமாகவே வாழ்கிறார்கள்.

சாதி அரசியல் கலக்காதவரையில் தமிழர்கள் மிகவும் நல்லவர்களாகவே வாழ்கிறார்கள்...!

1.6.14

"ஓட்டுப்பிச்சைக்கு அடுத்த சாதி, ஆளறதுக்கு உங்க சாதி..!"

எந்தப் பக்கம் பார்த்தாலும் எல்லா சாதியிலயும் "என் சாதிக்காரந்தான் ஆளனும்... என் சாதிக்காரந்தான் ஆளனும்"னு ஆளாளுக்கு பதிவு போட்டுக்கிட்டு இருக்கீங்களே, உங்க சாதிக்காரன் ஆளாத இப்ப என்ன செத்தா போய்ட்டிங்க? உருப்படியா கொள்கைய பேசி ஓட்டு வாங்க துப்பில்லாம எப்பப்பார்த்தாலும் சாதிவெறிய கிளப்பி அடுத்த தலைமுறையவும் கெடுத்துக்கிட்டு. தமிழனா வாங்கப்பா...

பெரியார் என்ன கிழித்தார் இங்கே?

ஊர் சாதிக்காரர்களின் வீடுகளைவிடவும் கீழ்ச்சாதிக்காரர்கள் உயரமான வீடுகளை கிராமங்களில் கட்டமுடியாது என்பதும், பெரும்பாலான கிராமங்களில் இன்றும் தலித்துகள் தைரியமாக வெளியில் நடமாட முடியாது என்பதுமே ஏறக்குறைய வட இந்தியாவின் (உபி) நிலைமை. ஏனைய இடங்களில் நடக்கவில்லை என்பதல்ல, வெளிச்சத்திற்கு வராமலே பல கொடுமைகள் கேட்பாரின்றி அடங்கிப்போகிறது என்பதே உண்மை. கீழ்ச்சாதிக்காரர்கள் கறந்து விற்கும் பால் மேல்சாதிக்காரர்களின் பகுதிக்கு கொண்டு சென்று விற்க முடியாத உன்னத நிலை இன்னமும் குஜராத்திலும் நடப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

மீண்டுமொருமுறை யோசித்தேன்

நேற்று இரவு 12 மணிக்கு எனது அறைக்கு வந்தபோது வழியில் தெருக்களில் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளைப் பார்த்தேன். அலுவலகம் கிளம்பும்முன் நேற்றுகாலை அவரை நான் உயிருடன் பார்த்தேன். நடுத்தர வயதுக்காரர்தான். பக்கத்தில் மரண கானா பாட்டும் பறைச்சத்தமும் கேட்டுக்கொண்டிருக்க, நேற்றிரவு மீண்டுமொருமுறை மரணத்துக்குப்பின்னரான நிலை பற்றியும் நான் இல்லாமல் இருக்கப்போகிற இந்த பூமியைப் பற்றியும் யோசித்தேன்.

30.5.14

"யார் உயர்ந்த சாதி? அவனா நீயா அவர்களா?"

உனக்கும் அதிகாரமில்லை. அவனுக்கும் அதிகாரமில்லை. டெல்லிக்காரனுக்கு நீயும் அடிமைதான், அவனும் அடிமைதான். உன் மொழியை எவ்வளவு ஒடுக்க முடியுமோ அவ்வளவும் ஒடுக்கி உன் மொழியல்லாதவனை உனக்கு அதிகாரியாக உன் ஊருக்குள் அனுப்புகிறான் வேறொருவன். உன் சாதிதான் முன்னேற வேண்டுமென நீயும், அவன் சாதிதான் முன்னேற வேண்டுமென அவனும் என்னென்னெல்லாமோ செய்கிறீர்கள். அவன் அவன்சாதி அயோக்கியனை ஆதரிக்கிறான். நீ உன்சாதி அயோக்கியனை ஆதரிக்கிறாய். கோவணமும் இல்லாமல் இருக்கப்போகிற எதிர்காலத்தை எதிர்பார்த்தே உங்கள் அரசியல் ஆதரவு நகர்ந்துகொண்டிருக்கிறது. உங்களுக்காக உன் மண்ணில் இயங்கும் அலுவலகங்களில் உன் மொழியில்லை. உனக்காக வேலைசெய்பவர்கள் உன்னுடன் உன் மொழியை பேசவில்லை. கைபேசி நிறுவனங்களும் விமான நிலையங்களும் தொடர்வண்டி நிலையங்களும் அஞ்சல் அலுவலகங்களும் இதரபிற மைய அரசு அலுவலகங்கமே அவனும் நீயும் அடிமை நாய்கள் என்பதற்கான ஆதாரம்தான். "உன் மொழியை எவ்வளவு ஒடுக்க முடியுமோ அவ்வளவும் ஒடுக்கி உன் மொழியல்லாதவனை உனக்கு அதிகாரியாக உன் ஊருக்குள் அனுப்புகிறான் வேறொருவன்."

அவனும் நீயும் ஒரே மொழிதான் என்பதே உங்கள் அடையாளம். மொழிதான் உங்கள் சந்ததிகளை சிந்திக்கவைக்கும். உன் சந்ததிக்கும் அவன் சந்ததிக்கும் சோறுபோட வக்கற்றதாய் உன் மொழி மாறிவிட்டது. உங்கள் மீதும் உங்கள் சந்ததி மீதும் உண்மையான அக்கறையுள்ள அரசு ஏற்பட அவனை நீயும் உன்னை அவனும் நம்பித்தானாக வேண்டும். 

உங்கள் மண்ணில் நீயும் வளரவில்லை. அவனும் வளரவில்லை. ஆனால் "சௌகார்பேட்டைகள்" மட்டும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உபயோகப்படும்படியே மைய அரசு அலுவலகங்கள் உங்கள் மண்ணில் துவங்கப்படுகின்றது. 

யார் உயர்ந்த சாதி? நீயா அவனா அவர்களா?

28.5.14

முதுகுளத்தூர் வகுப்புக் கலவரமும் கீழ்வெண்மணிப் படுகொலையும்

முதுகுளத்தூர் வகுப்புக் கலவரத்திற்கும் கீழ்வெண்மணியில் 44 ஏழைத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டதற்கும் என்ன செய்து கிழித்தது பெரியாரியம்?

முதுகுளத்தூர் கலவரத்திற்கு காரணமான முத்துராமலிங்கத்தை எதிர்த்து நாடே பேச தயங்கியபோது அவரை கைது செய்யச் சொன்னது பெரியார். இதனால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. பின் கீழ்வெண்மணியில் 44 பேரை உயிரோடு கொளுத்திய அந்த நாயுடுவை சிறையிலிருந்து விடுதலையானதும் திட்டமிட்டு கொன்றதில் 11 பேர் திக-வினர், ஒருவர்தான் கம்யூனிஸ்டு. தேர்தலில் நின்று சீரழிந்தவர்களை பெரியாரியவாதிகளாக எண்ணி பெரியாரை விமர்சிப்பது நியாயமில்லாதது.

சாதியையும் பிறவி அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் வர்க்கப் புரட்சியை இந்தியாவில் நடத்த முடியாது என்றார் பெரியார். ஏழை வர்க்கத்திற்குள்ளேயும் பணக்கார வர்க்கத்திற்குள்ளேயும் சாதிப்பிரிவினை ஏற்றத்தாழ்வுகள் இல்லாமலா இருக்கிறது. மேல்சாதி பணக்காரன் கீழ்சாதி பணக்காரனையும், மேல்சாதி ஏழை கீழ்சாதி ஏழையையும் சமமாகப் பார்க்கிறானா? வர்க்க ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தால் வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் தானாகவே ஒழியுமென்ற கம்யூனிஸ்டுகளின் வாதத்தை பெரியார் ஏற்கவில்லை. அதனால்தான் கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் நடத்தப்பட்ட கீழ்வெண்மணி போராட்டத்தை ஒரு கூலி உயர்வுப் போராட்டமாகவே அதை விமர்சித்தார். 

கம்யூனிஸ்டு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டவர் பெரியார்தான். அதற்காக 6 மாத சிறைதண்டனையும் பெற்றார்.