உண்மையான அக்கறையுடன் தமிழ்த்தேசியம்
பேசுபவர்களை நான் விமர்சிப்பதில்லை. ஆதரிக்கிறேன். பாராட்டுகிறேன். ஆனால்
"தமிழர்களிலும் நாங்கள்தான் ஆளத் தகுதியுடையவர்கள்" என்ற சாதீய
மனோபாவத்தோடு "தமிழ்த்தேசியத்தின்" பின்னால் ஒளிந்துகொண்டு பெரியாரை
சகட்டுமேனிக்கு தவறாய் விமர்சிக்கும் அறிவாளிகளைத்தான் விமர்சிக்க
நினைக்கிறேன்.
பெரியாருக்கு மாற்றாக அவர்களது சாதியில் யாரேனும் ஒரு சிந்தனைச் சிற்பி இருந்தால் ஆதரிக்காமலேயா இருப்போம் நாங்கள்.
அப்படியானவர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் குறிப்பிடும் உங்கள் தலைவரின்
சிந்தனையை (?) சொல்லுங்கள். விவாதிப்போம். இந்த காட்சியைப் பாருங்கள்.
உங்கள் சாதியில் இப்படி யாராவது (பெரியாரியத்திற்கு நிகராக) மக்களை
சிந்திக்க வைத்தவர்கள் தோன்றியிருந்தால் சொல்லுங்கள்.
பிறகு நாம் சேர்ந்தே 'பெரியாரை எதிர்ப்போம்'
http://www.youtube.com/watch?v=ZTVPK9tSY6g#t=376&hd=1
நன்றி: தோழர் வே.மதிமாறன் அவர்களுக்கு
பிறகு நாம் சேர்ந்தே 'பெரியாரை எதிர்ப்போம்'
http://www.youtube.com/watch?v=ZTVPK9tSY6g#t=376&hd=1
நன்றி: தோழர் வே.மதிமாறன் அவர்களுக்கு
No comments:
Post a Comment