பலரும் இன்று 'இட ஒதுக்கீடு' என்பது தேவையற்றது என்றும் இதனால் 'திறமைக்கு வாய்ப்பில்லை' என்றும் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.
இது மிகவும் விசமத்தனமானது. என்றைக்கு நாமெல்லோரும் வேலை கிடைக்காமல் பீ அள்ளவும் குப்பை பொறுக்கவும் சாக்கடை சுத்தம் செய்யவும் வேலை கேட்டு அரசுக்கு விண்ணப்பிக்க தயாராகிறோமோ அதுவரைக்கும் இடஒதுக்கீடு அவர்களுக்கு அவசியம்தான். அதாவது இதையெல்லாம் அவர்கள்தான் செய்யவேண்டும் என்ற நிலையும், பிறப்பால் அவர்கள்மீது சுமத்தப்பட்டு இழிவும் இல்லாமல் மாறும்வரையில்.
கீழ்ச்சாதி என்று ஒதுக்கப்படும் ஆண்களும் பெண்களும் சர்வசாதாரணமாய் பிற சாதிக் குடும்பங்களில் மருமகன்களாகவும், மருமகள்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் இந்நாட்டில் இடப்பங்கீடு அனைவருக்கும் கட்டாயம் தேவை.
பூணூல் / குடுமி சிந்தனாவாதிகளின் மூளைச்சலவைக்கு பலியாகாதீர். வரலாற்றை மனிதாபிமானத்தோடு புரட்டிப்பாருங்கள்.
No comments:
Post a Comment