தாய்மொழி வேறாக இருந்தாலும்கூட கர்நாடகாவில் பிறந்து வளரும் எந்தவொரு குழந்தையும் கன்னடம் எழுதப்படிக்கத் தெரியாமல் வளரமுடியாது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் குழந்தைகள்கூட தமிழை எழுதப்படிக்கத் தெரியாமல் வளரும் நிலை உள்ளது.
இதைக்கூட மாற்ற வக்கில்லாமல் எதற்கெடுத்தாலும் தமிழுக்காக மயிரைப் பிடுங்கினேன் மட்டையைப் பிடுங்கினேன் என்று போலியாய் தமிழ்ப்பற்றை வெளிக்காட்டும் நரிகளையெல்லாம் ஓட ஓட இம்மண்ணைவிட்டு விரட்டியடிக்கும் ஒரு தீவிர தமிழ் வெறி இளைஞர் கூட்டம் இனி வரவேண்டும். இதுவே இனி இங்கு அரசியலாக்கப்பட வேண்டும். வலுவின்றி கிடக்கும் சொந்தத்தாயை பலப்படுத்த நினையாமல் ஹிந்திய தேசியம் பேசி மயங்கும் அரைவேக்காட்டுத்தன்மை இனியாவது நம் சகோதரர்களுக்கு மாறவேண்டும்.
No comments:
Post a Comment