தமிழ்நாடு என்ற மாநிலத்தை உருவாக்கியவரல்ல ஜெயலலிதா. இதற்கு முன்னர் ஏராளமான பேர் இங்கு முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். இனியும் ஏராளமான பேர் இருப்பார்கள். மக்களுக்கான தலைவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். இது வரலாறு.
மக்களுக்கும் மரியாதை இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மரியாதை இல்லை. மக்களாட்சி என்ற பேரில் மன்னராட்சி போல் நடந்தேறுகிறது நிகழ்வுகள்.
மக்கள் அரசாங்கத்தை மதிக்க வேண்டுமாம், ஆனால் மக்களை அரசாங்கம் மயிரளவுக்குக்கூட மதிக்காதாம்.
ஒரு மக்கள் பிரதிநிதியின் சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு ஒளிவுமறைவு? அனுமதி மறுப்பு?
இதில் வதந்தி, வழக்கு என்று பூச்சாண்டி காட்டி மக்களை பயமுறுத்தும் முதுகெலும்பில்லாத அடிமை ஊடகங்கள் வேறு.
நாட்டில் ஜனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் வளரவும் காக்கவும் பணியாற்றவேண்டிய காவல் துறை இதற்கு தலைகீழாய் செயல்படுகிறது.
நாட்டை வழி நடத்தும் நல்ல திறமையோடு அடுத்து ஏராளம்பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழர்கள் உணர்ந்து; தங்கள் தனிநபர் சாகசவாத தலைமைத்துவ அடிமைத்தன மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
எல்லா கட்சிகளிலும் நிரந்தர தலைவர்கள் முறைமை ஒழிக்கப்பட வேண்டும். உட்கட்சி ஜனநாயகம் முழுமையாக மலர வேண்டும். சாதி, மத, வாரிசு பின்னணி பாராமல் அறிவு மற்றும் செயற்திறமையின் அடிப்படையில் எல்லா கட்சிக்காரர்களும் தங்கள் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும்.