நான் இந்து அல்ல, எனது பண்பாடு ஆரியமல்ல என்பதற்கான எதிர் குறியீடுதான் திராவிடம். இன்னும் குழந்தைப் பாடம் போலவே ஒரே கேள்வியிலேயே நிற்கின்றனர் பலரும். வரலாறு வெளிப்படையாய் இருக்கிறது. நிறைய பதில் தரும் புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. நாம் ஒவ்வொருவருக்கும் பல அடையாளங்கள் இந்த மண்ணிலே இயல்பாய் பிறப்பிலேயே போர்த்தப்பட்டுள்ளது. ஏதாவதொன்றை மறுக்கும்போது ஒரு அடையாளத்தின் பெயர் தேவைப்படுகிறது.
ஹிந்து - தமிழன்
திராவிடன் - தமிழன்
அவ்வளவுதான். தமிழனின் பிரச்சினை எல்லாவற்றுக்கும் இதுதான் காரணமென்பது பார்வைக்கோளாறு.
புலிகளே பின்னாளில் தங்களுக்குள் பிரிந்து வடக்கு கிழக்கு என்று சண்டையிட்டுக் கொண்டார்கள். அதற்காக ஈழப் போராட்டமே தவறு, புலிகள் இயக்கம் உருவானதே தவறு
என்பீர்களா?
No comments:
Post a Comment