16.10.16

சமத்துவம்...

"உலகம், எல்லா மனிதனும் வாழ்வதற்கான ஓர் பொது இடம். அவ்வளவுதான். எந்த மனிதனின் அடையாளங்களிலும் புனிதம் என்று ஒன்றுமில்லை"
*

தன் நலம் பார்க்கும் தவறான ஆட்களால்; செயல்பாடுகளால்; தேர்தல் அரசியலால் இங்கே கம்யூனிசம் நீர்த்துப்போயிருக்கிறது என்பது உண்மைதான். அதனால் அதன் தத்துவம் தேவையற்றது என்று கருத முடியாது. 

செயல்படுத்துபவன், தலைமையேற்பவனைப் பொருத்து எல்லா கொள்கைகளின் மீதான பார்வையும் உருமாற்றம் அடைகிறது. 

உலக மக்கள் யாவரும் சமம், ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும், கருத்து முதல்வாதப் பார்வைகள் மாறி அறிவொளி பிறக்க வேண்டும், சுரண்டல் ஒழிக்கப்பட்டு அனைவர்க்கும் உழைப்பு உறுதி செய்யப்பட்டு உலகில் எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கப்பெற்று வாழ்வை அமைதியாகவும் மகிழ்வாகவும் அறிவுடனும் வாழ வேண்டும் என்று தனி ஒருவன் விருப்பம் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

No comments:

Post a Comment