2.10.16

நவீன தற்கொலை

"நவீன தற்கொலை" -  க.சி. பழனிக்குமார்
(கவிதைத் தொகுப்பு)

கடந்த மாதம் மதுரை சென்றிருந்தபோது நண்பர்களுடனான சந்திப்பொன்றில் அறிமுகமாகி இப்புத்தகத்தை எனக்கு அளித்தார் நண்பர் பழனிக்குமார். இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக அம்பேத்கர் பெரியார் வாசக வட்ட பொறுப்பாளர். மேலும் "தமிழ்ப் புனைகதைகளில் அடித்தள மக்களின் பண்பாட்டு அரசியல்" என்ற தலைப்பின் கீழ் தமிழியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். 

இன்று இக்கவிதைப் புத்தகத்தை வாசித்தேன். ஒரு தேர்ந்த படிப்பாளியின்; அனுபவசாலியின்; நாடோடியின் வாழ்வனுபவமாய் இவரது கவிதை உலகம் விரிகிறது. அதிதீவிர இலக்கிய வார்த்தைகள் கொண்ட கவிதைகளைக் காட்டிலும் எளிமையான கவிதைகளே வெகுவாய் ஈர்ப்பதை ரசித்தேன். 

புத்தகத்திலிருந்து ஒரு கவிதை...

#_காத்திருப்பு

தனிக்காட்டு அரசனாக
திமிறி எழுந்து வளர்ந்து
நடனமிடும் ஒற்றைப்பனையில்
காய்த்துக் குலுங்கும் நொங்குக் குலைகள்
காத்துக்கிடக்கின்றன
திருட்டுக் கரம்பிடித்த 
அரிவாளுக்காக

வெளியீடு : சந்தியா பதிப்பகம்,
விலை : 50 ரூ


No comments:

Post a Comment