27.2.17

கடவுளின் பெயரால்...

ஜக்கி ஒரு முதலாளி
ஈஷா ஒரு வியாபார நிறுவனம்
ஆதியோகி ஒரு பெரிய முதலீடு

சிவனும் இல்லை
எவனும் இல்லை
இயற்கை எவ்வுயிர்க்கும்
நட்புமில்லை பகையுமில்லை

சாமியாருக்கும்
சாதாரண மனிதனுக்கும்
வேறுபாடு
ஒரு மயிருமில்லை

வருடத்தில் ஒருநாள்
இவனுக்கு சிவராத்திரி
வனவிலங்குகளுக்கோ இனி
வருடமெல்லாம் சிவராத்திரி

இயற்கையை வியந்துணரும்
அறிவுத்திறம் அற்றபேர்க்கு
இறைவன் கதைகளே
இணையில்லா சுயவின்பம்

ஜக்கி ஒரு முதலாளி
ஈஷா ஒரு வியாபார நிறுவனம்
ஆதியோகி ஒரு பெரிய முதலீடு

ஊரே காறித்துப்பும் அவன்
ஞானியல்ல
அற்ப குணங்களின் சாணி

21.2.17

ஒரு நாடோடியின் பாடல்

கமல்ஹாசன் அவர்களின் tweet போல, தெளிவான குழப்பமாக ஒரு கவிதை எழுத நினைத்தேன். அந்தளவுக்கு இயலவில்லை. எனினும் யாருக்கேனும் புரிந்தால் மகிழ்ச்சி.

*ஒரு நாடோடியின் பாடல்*

உலகை; வாழ்வை; இயற்கையை
ரசிக்க வந்ததை அவன் மறந்துவிட்டான்

நிரந்தரமானவன் என்று
நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு
மீண்டும் பிறந்து வரமாட்டோம்
என்பது மட்டும் ஒருநாள் புரிந்தது

ஜாதி மதம் இனம் மொழி
ஆன்மா இறை பண்பாடு
சுற்றம் நட்பு பகை துரோகம்
பாசம் தியாகம் உதவி
இலக்கியம் அறிவு ஆய்வு
பொருள் தேடல் புகழ்
மரியாதை கௌரவம் எல்லாமும்
வாழ்நாளை உறிஞ்சியதாக
உணர்ந்த வேளையில்
வாழ்வை ரசிக்கத் துவங்குகிறான்

அதேவேளை
சாம்பலாகவோ புழுவாகவோ
கூடியவிரைவில் அவன்
மாறியாக வேண்டிய காலம்
அவனை நெருங்கிவிட்டிருந்தது

நிறைவேறாத ஆசைகளுடனே
சவக்குழிக்குள் வைக்கப்படும்
அநேக பிணங்களை கவனிக்கிறான்

ஜாதி மதம் மது மண் பொன்னுக்காய்
வாழ்க்கையை வீணடித்துவிட்டதாய்
எலும்புக்கூடுகள் பேசிக்கொள்வதை
கூர்ந்து கேட்கிறான்

இலக்கற்று பறக்கும் காற்றாடிதான்
வாழ்வை ரசிப்பதாய்
முடிவுக்கு வருகிறான்

மௌனமும் புன்னகையும் பூத்த புத்தனின்
எட்டு பரிந்துரைகளை மட்டும்
மீதமிருக்கும் வாழ்க்கைக்கென
தற்காலிகமாக ஏற்கிறான்

இப்போதெல்லாம் அவன்
தன் புன்னகையைக் கொண்டு மட்டும்
உறுதிப்படுத்திக்கொள்கிறான்
தான் வாழ்ந்துகொண்டிருப்பதை

"காஸி"

17-02-2017 இன்று நண்பர் / எழுத்தாளர் சந்தோஷ் அவர்களுடன் palazzo-வில் இப்படம் பார்த்தேன்.

1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரின்போது விசாகப்பட்டினம் அருகே இருநாட்டு நீர்மூழ்கி கப்பல்களுக்கிடையே நடைபெற்ற மோதல் சம்பவம்தான் படத்தின் கதை. இதன்போது "காஸி" என்ற பாகிஸ்தானிய நீர்மூழ்கிக் கப்பலை இந்திய வீரர்கள் எவ்வாறு அழித்தனர் என்பதை மிக சுவாரசியமாக சொல்லியுள்ளனர்.

படம் சிறிதும் தொய்வில்லாமல் நகர்கிறது. புதியதொரு கதைக்களம் என்பதால் படம் முடியும்வரையில் ஆர்வத்துடனே பார்த்தேன். குடும்பத்துடன் பார்க்க ஒரு நேர்த்தியான படம். அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். தவறவிடாமல் கண்டுகளியுங்கள்.

முக்கியமாக ஒளிப்பதிவாளர் மதி அவர்களின் ஒளிப்பதிவு மிக மிக அருமை. மதி அவர்களின் ஒளிப்பதிவில் ஏதோ வசியம் ஒன்று இருப்பதை தொடர்ச்சியாக எல்லா படங்களிலும் உணர்கிறேன்.

படம் பார்த்து முடித்ததும் படத்தின் ஒளிப்பதிவாளர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. படம் பற்றிய எங்களது / அவரது கருத்துக்களை; அனுபவங்களை சுமார் 1.5 மணி நேரம் பகிர்ந்தது மிக மகிழ்ச்சி.

ஹிந்தி, தெலுகு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.




.

14.2.17

காதலர் தினம்

வாலன்டைன் என்ற துறவி சிரச்சேதம் செய்யப்பட்ட நினைவு தினத்தை (Feb 14), "காதலர் தினம்" என்று தமிழில் மொழி பெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை.

பெப்ரவரி 14, வாலன்டைன் தினம் என்று பெயரிடப்பட்டதற்கு கத்தோலிக்க திருச்சபையும் ஒரு காரணம். கிறிஸ்தவத்திற்கு முந்திய ரோமாபுரியில், மன்மத விழா என்ற பெயரில், காதல் களியாட்டங்களுக்கான ஒரு தினம் இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்த "காட்டுமிராண்டி கால காதலர் தினத்தை" மறக்க வைப்பதற்காக, கத்தோலிக்க துறவி படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் தினமாக அறிவிக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபைகளின் கட்டுப்பாடுகள் தளர்ந்த பின்னர், அது மீண்டும் காதலர் தினமாக மாறி விட்டது. எல்லா வகையான பண்டிகைகளிலும் பணம் பார்க்கும் வணிகத்துறை, அதனை "மதச் சார்பற்ற காதலர் தினமாக" மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தியது. ஒரு காலத்தில், மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப் பட்டு வந்த வாலன்டைன் தினம், உலகமயமாக்கல் காரணமாக பிற நாடுகளிலும் பரவி விட்டது.

ஆண் பெண் ஈர்ப்பு என்பது இயற்கையான ஏற்பாடு. அதில் மதத்தையும் ஜாதியும் புகுத்தி பிழைப்பு செய்யப்படும் நாடுகளில் "காதலர் தினம்" தீவிரமாக அதிகமாக கொண்டாடப்பட வேண்டியது அவசியமாகிறது.

அதேவேளை, காதலால் ஜாதி மத வேறுபாடுகள் ஒழியும் என்பது முழு உண்மையல்ல. எந்த குழந்தையும் ஏதாவது ஒரு ஜாதி அல்லது மதத்தால் அடையாளப்படுத்தப்படும் ஏற்பாடு மாற்றப்படாமல் இந்த நாட்டிலே இருக்கும்வரையில் இவைகள் காதலால் மட்டும் எப்படி ஒழியும்? காதல் திருமணங்கள் பெருகுவதால் ஜாதி மத இறுக்கம் தளரும் என்பதே உண்மை. ஆனால் அதுகூட ஓரளவாவது அறிவு ஏற்பட்டிருக்கிற இடத்திலேதான். ஜாதி மதம் ஒழிய சமூகத்தில் அறிவு ஒளி ஏற்றுவதும் தேவையான சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதுமே இறுதியானது.




இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் 03-ம் ஆண்டு நினைவஞ்சலி

13-02-2014

2006-ம் ஆண்டு இறுதியிலும் 2007-ம் ஆண்டு முதற்பாதியிலும் அவரிடம் உதவியாளராக இருந்தேன். தினசரி ஒரு சிறுகதையோ குறுநாவலோ கண்டிப்பாக படித்துவிட்டு ஒரு பக்கத்தில் எழுதிக் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு சேர்ந்த இரண்டாம் நாளே ஒரு நோட்டு வாங்கிக் கொடுத்தார். ஒரு அறை முழுதும் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். அப்போது நானும் நண்பர் Muthuganesan Ramanathan இருவர் மட்டும் உதவியாளராக இருந்தோம். முதன் முதலில் The Cow என்ற ஈரானிய படத்தை உடன் அமர்ந்து பார்க்கச் சொல்லி விமர்சனம் கேட்டார். அவருடன் பல நிகழ்வுகளுக்குச் சென்று கலந்துகொண்டது மறக்கவியலாத நினைவுகள். இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள்தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். எனது இலக்கிய வாசிப்பின் ஆர்வத்திற்கு இவ்விருவருக்கும் பங்கு இருக்கிறது.

"அவரது படங்களில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பதை கவனிக்கிறேன்"

12.2.17

OPS vs சசிகலா

மக்களை தே.....பையா என்று திட்டுகிறான் ஒரு (அம்பத்தூர்) எம்.எல்.ஏ.

எதுக்கு இவனுங்களுக்கு ஓட்டு போட்டோம்னு ஜனங்களுக்கும் தெரியல. எதுக்காக எம்.எல்.ஏ. ஆனோம்னு அவனுங்களுக்கும் தெரியல. 

ஆனால் எல்லாருமே சொல்றானுங்க "இதய தெய்வம் அம்மா காட்டிய வழி"ன்னு. 

இவனுங்களை எல்லாம் வெச்சிக்கிட்டுத்தான் " இரும்புப் பெண்மணி"ன்னு அந்தம்மா அவ்ளோ பில்டப் பண்ணுச்சா?

அம்மா காட்டிய வழி

மக்களை தே.....பையா என்று திட்டுகிறான் ஒரு (அம்பத்தூர்) எம்.எல்.ஏ.

எதுக்கு இவனுங்களுக்கு ஓட்டு போட்டோம்னு ஜனங்களுக்கும் தெரியல. எதுக்காக எம்.எல்.ஏ. ஆனோம்னு அவனுங்களுக்கும் தெரியல. 

ஆனால் எல்லாருமே சொல்றானுங்க "இதய தெய்வம் அம்மா காட்டிய வழி"ன்னு. 

இவனுங்களை எல்லாம் வெச்சிக்கிட்டுத்தான் " இரும்புப் பெண்மணி"ன்னு அந்தம்மா அவ்ளோ பில்டப் பண்ணுச்சா?

எழுக தமிழ்

மட்டக்களப்பில் நடைபெறும் "#_எழுத_தமிழ்" எழுச்சிக்கு வாழ்த்துக்கள்.

தொடரும் சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராய் தொடர்ந்து குரல் கொடுப்போம்.


பொறுப்பு ஆளுநர் ராவு அவர்களே...

ஜார்ஜை மாற்றிவிட்டு சென்னை காவல்துறை ஆணையராக "துரை சிங்கத்தை" நியமிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 

ஒவ்வொரு எம்.எல்.ஏ-வையும் ஓங்கி 1.5 டன் வெயிட்டு போட்டு உதைக்க இப்போதைக்கு அவரால் மட்டுமே முடியும்.

#_சி_3_👌👌👌

நூற்றாண்டு பொய்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் 

இடையில் தர்மம் வெல்லும்

மீண்டும் சூது கவ்வும்

"ஒருபோதும் தர்மம் வெல்லாது

இறுதியில் விட்டு விட்டு சூதே கவ்விக்கொண்டிருக்கும்"

டிஜிட்டல் இந்தியா..?

இது Digital India என்கிறார்கள். 

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கூட்டமாக விமானம் ஏறி 2500 கிமீ அப்பால் சென்று சொன்னால்தான் "குடியரசுத் தலைவருக்கு" தெரியுமா? 

குடியரசுத் தலைவர் மாளிகையில் telephone, fax, TV, internet வசதியெல்லாம் இருப்பது எதற்கு?

பொறுப்பற்ற பொறுப்பு ஆளுநர்

தமிழக அரசியல் குழப்பம் / முதல்வர் யார்?

மாநில ஆளுநர்களுக்கு எப்போதாவதுதான் வேலை வரும். அந்த நேரத்திலும் அவர் busy ஆக இருப்பதாக காட்டிக்கொள்வது மிகக் கேவலமான நடைமுறை.

அம்மாவின் வழியில்

"அம்மா காட்டிய வழியில் அதிமுக-வின் வெற்றிநடை பயணம்"

பொறுப்பு (?) ஆளுநர்

தமிழக அரசியல் நிலவரங்களை பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் உன்னிப்பாக கவனித்தபோது எடுத்த படம்.

"ஆற்காடு" பெயர்க் காரணம்

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் ஒரு பாடலில் ஆற்காடு பற்றிய குறிப்பு உள்ளது. இது சோழர்கள் வசம் இருந்தபோது ஆத்தி என்ற மரங்கள் சூழ்ந்திருந்ததாம். அப்பூவைச் சூடிக்கொண்டுதான் போருக்குப் போவார்களாம் சோழப் படையினர். அம்மரத்திற்கு "ஆர்" என்று இன்னொரு பெயரும் உண்டு. 

ஆர் மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் இதன் உண்மையான பெயர் "ஆர்க்காடு" தான். 

பின்னாளில் ஏனைய ஊர்களைப்போலவே பெயர் மருவியது.

இதேபோல் "காட்டுப்பாடி" என்ற ஊர்தான் ஆங்கிலேயர்களால் "காட்பாடி" என்று அழைக்கப்பட்டது.

பரப்புரை

"இணையங்களில் ஹிந்து மதத்தை பரப்புங்கள்" - இராம கோபாலன்

பெருங்கனவு

"சொந்த ஊரில் இப்படி வாழும் ஒரு கனவு எல்லோர்க்கும் இருக்கக்கூடும் நகரத்தில்"

தமிழிசை எனும் விஞ்ஞானி

செய்தி : "போராட்டம் செய்த மாணவர்களால் பெண் காவலர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்கள்" - தமிழிசை சவுந்திரராஜன்.

"ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் பங்கெடுத்த நபர்களால் ஆண் காவலர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்கள்" - அது உண்மை எனில் இதுவும் உண்மைதான். 

தமிழிசை சவுந்திரராஜன், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர். ஒரு மாநில தலைவரே இந்த லட்சணத்தில் இருந்தா... 

வெளங்கிரும்.

Like வெறி

😂😂😂

இன்னும் இப்படி எழுதாததுதான் மிச்சம்...

"எம்பொண்டாட்டி ஓடிப்போய்ட்டா. எனக்கு like கிடைக்குமா?"

முடியல...

வெட்டி வேலை...?

எப்போதும் அரசியல் பற்றி முகநூலில் எழுதுவதும் விவாதிப்பதும் வெட்டி வேலை என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மை இதுவல்ல. முதலில் பேசுவதற்கான; எழுதுவதற்கான; கருத்து சொல்வதற்கான பயத்தை மக்களிடமிருந்து போக்கினால்தான் அவரவர் பிரச்சினைக்கு அவரவர்களே போராட முனைவார்கள். 

ஆட்சி செய்யும் பலரையும் இப்படித்தான் கடந்த காலத்தில் பயந்து பேசாமல் இருந்ததால்தான் திருடர்கள் எல்லாம்கூட இரும்பு தலைவர்களாய் காட்சி அளித்தார்கள்.

அடுத்தவர்களுக்கு பிரச்சினை வரும்போது நாம் குரல் கொடுக்கத் தவறினால் நமக்கு பிரச்சினை வரும்போதும் இதே நிலைதான் நீடிக்கும்.

நீங்கள் ஏதோவொரு  போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்றாலும்கூட பரவாயில்லை. எதுபற்றியும் கருத்து சொல்ல பயப்படாதீர்கள். 

யாரைக்கண்டு எதைக்கண்டு மக்கள் பயப்படுகிறார்களோ, எது அல்லது யார் மக்களை அச்சமூட்டுகிறார்களோ அதை கருத்துக்களால் உடையுங்கள். இது வேறு யாருக்கோ நீங்கள் செய்யும் உதவி மட்டும் அல்ல, இந்த நாட்டிலே உங்களுக்குப் பின் வாழப்போகும் உங்கள்வீட்டு பிள்ளைகளுக்குமான ஒரு பாதுகாப்பான சுதந்திர ஏற்பாடுதான்.

விமர்சனமே ஒரு போராட்டம்தான். தினசரி உங்களுக்கு நியாயமாகத் தோன்றும் ஒரு 4 சம்பவங்களையாவது விமர்சியுங்கள். இதற்கும்கூட உங்கள் கல்வியும் அறிவும் பயன்படவோ தைரியமூட்டவோ உதவவில்லை எனில் போராடுகிறவனையோ விமர்சிக்கிறவனையோ கண்டு முகம் சுளிக்காதீர்கள். குறைந்தபட்சம் ஊக்கமாவது படுத்துங்கள். அவர்கள் உங்களுக்காகவுமே அதை செய்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இன்றைக்கு நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம், வசதிகள் எல்லாம்கூட இப்படி கண்ணுக்குத்தெரியாத பல பேர்களின் உழைப்பிலிருந்து கிடைத்ததுதான்.

இதன்மூலமே போராட ஒன்று கூடுவதற்கான அரசின் தடைகளை உடைக்க முடியும். மக்களின் போராட்ட உணர்வை தக்கவைக்க முடியும். 

மக்கள் "ஒன்றுகூடி போராடும்" சுதந்திரத்தை தொடர்ந்து பாதுகாத்தால் எல்லோரும் இனி தனித்தனியாக போராட வேண்டிய அவசியமில்லை. 

99% வீதம் உள்ள பொதுமக்கள், வெறும் 05% வீதம் உள்ள பணக்காரர்களையும் 01% வீத எண்ணிக்கை உள்ள ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கண்டு பயப்படத் தேவையில்லை. அவர்கள்தான் மக்களைக் கண்டு பயப்பட வேண்டும். நமக்கு ஒத்துவராத சட்டங்களை எதிர்க்கவோ மாற்றவோ தடுப்பதற்கு அவர்கள் யார்?

பணத்துக்கும் அதிகாரத்துக்கும் அடங்கிப் போகும் ஊடகங்கள் உள்ள நாட்டிலே எளிய மக்களின் பலம் "விமர்சிக்கும் உரிமை" ஒன்று மட்டும்தான். இதையும் நாம் பயன்படுத்தாது போனால் நாளை நம் பிள்ளைகளும் அடிமைகளாகத்தான் வாழ முடியும்.

எனவே...

மௌனத்தை கலையுங்கள்...!
அநீதிகளை தொடர்ந்து விமர்சியுங்கள்...!!
போராடுபவர்களை ஊக்கப்படுத்துங்கள்...!!!

குட்டி தீவிரவாதி

😂😂😂

தலையில் ஆயுதத்துடன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட "ஒரு குட்டி தீவிரவாதி"

கமிஷ்னர் ஜி...

கமிஷனர் சார்...!

ஒரு போலீஸ் தீ வெச்சதுக்கு எல்லா போலீசையும் கொறைசொல்லக் கூடாதுன்றீங்களே, ஒருத்தன் தேசிய கொடிய அவமதிச்சதுக்காக, எவனோ ஒருத்தன் பின்லேடன் படத்த வைச்சிருந்ததுக்காக போறவங்க வர்றவங்க, பொதுமக்கள்னு சகட்டுமேனிக்கு அடிச்சி மண்டைய ஒடச்சீங்களே அது எந்த ஊரு நியாயம் சார்?... 

ஒங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா சார்?...

அறிவு பெருத்த புண்ணிய பூமி

😂😂😂😂😂

Comments-ஐப் பார்த்து சிரிப்பை அடக்க முடியல சாமி.

"தில் இருக்கிற ஆம்பளையா இருந்தா / பொம்பளையா இருந்தா / உண்மையான பக்தனா இருந்தா இதை share பண்ணுங்க". பாம்பு அசைவதை பாருங்க....

விடுமுறைகள் நல்லது

"ஒரு குழந்தை தினமும் பள்ளிக்கூடம் சென்று 100% வீத வருகைப் பதிவு வாங்கி, வருட கடைசியில ஒரு கோப்பை வாங்குவது பெருமையில்லை.

கல்யாணம், காது குத்து, இழவு, திருவிழா  என்று  எல்லா இடத்திலேயும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் நாகரிகம், பண்பாடு, உறவுகளின் வலிமை, ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல், அழுகை, சிரிப்பு என்று நிறைய தெரிய வரும்.

இந்த சமூகம் ஒரு நாளில் நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதை, அந்த விடுமுறை எடுக்காத நாளில் அந்த வகுப்பறை கற்றுக் கொடுத்து விடாது.

(படித்ததில் மனதைத் தொட்டது)

மெரீனாவில் பின்லேடன்

மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாறுவேடத்தில் வந்த பின்லேடன் இவர்தானாம். 

"தமிழ்நாட்டை எப்படியெல்லாம் சீர்குலைக்கலாம் என்று அவர் ஆழ்ந்து சிந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்"

RSS அபாயம்

தமிழர்களே...!!!

"ராம ராஜ்ஜியம்" அமைய கனவு கண்டு அதற்காகவே வாழ்ந்த காந்தியையே படுகொலை செய்தவர்கள் அவர்கள். 

ஆர்.எஸ்.எஸ்-ல் இருக்கும் சகோதரர்களே உங்கள் நலனெல்லாம் அவர்களுக்கு தூசு. அடியாட்கள் தேவைக்கு மட்டும்தான் நீங்கள். அவர்கள் பிற மதங்களுக்கு மட்டும் எதிரியல்ல; ஹிந்து மக்களுக்கும்தான் எதிரி. 

பூணூல் ஆதிக்கமே அவர்கள் லட்சியம்.

மக்களுக்காக கவலைப்படாமல் மதத்திற்காக கவலைப்படுபவர்கள்.

எல்லோரும் ஹிந்துக்கள் என்றால் அவாள்களுக்கு மட்டும் ஏன் பூணூல்? உலகில் ஒரு குழந்தையின் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் மதம் வேறெது? 

ஹிந்து நாடாக இருந்த நேபாளம் எந்தளவு முன்னேறியிருக்கிறது? 

கர்மா என்பது பொய். போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் மகுடி.

அம்பேத்கருக்கு உணவில் விஷம் வைக்க ஏற்பாடு செய்தவர் சாவர்க்கர்.

காஷ்மீர் இந்தியாவுடன் இணையக்கூடாது என்று அப்போது மன்னர் ஹரிசிங்கிற்கு ஆலோசனை சொன்னவர்கள். 

தேசியக்கொடியை அங்கீகரிக்காமல் எதிர்த்தவர்கள். இன்றைக்கு இவர்கள் தேசபக்தி பாடம் எடுக்கிறார்கள்.

மதம், மேல்ஜாதி தவிர வேறு எதற்கும் குரல் கொடுக்காதவர்கள்.

BC / MBC மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க எதிர்த்தவர்கள்.

உயர் ஜாதி அல்லாதவர்கள் பதவிகளுக்கு வருவது பொறுக்காமல் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்ட காத்திருப்பவர்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் தங்கள் ஆதிக்கம் போய்விடும் என்று தீயாய் வேலை செய்கிறவர்கள்.

தமிழக கோயில்களில் தமிழ் நுழையவும் எதிர்த்தவர்கள். இன்னும் பல கோயில்களில் இதே நிலைதான். 

ஆர்.எஸ்.எஸ்-ல் இருக்கும் தமிழர்களே.., 

பாகிஸ்தானை எதிரி ஆக்கினார்கள். சிங்களவனை நண்பன் என்கிறார்கள். மதவெறி ஊட்டி தங்களை வளர்த்துக்கொள்ள முஸ்லிமை பொது எதிரி ஆக்குகிறார்கள்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என ஹிந்துக்களுக்குள் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதைப்பற்றி தந்திரமாக மூச்சுவிடாமல் முஸ்லிம்களை மட்டும் குறிவைக்கிறார்கள். 

இத்தனை ஆண்டுகளாக இந்த இந்திய நாட்டிலே மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக இவர்கள் போராடிய தகவல் உண்டா?

தமிழ்நாட்டில் போராடிய தகவல்கள்?

பட்டியலிடுங்கள் பார்ப்போம்.....

போராட்டம் கொண்டாட்டம்

கவனிக்க...

போராட்டம் என்றாலே தன்னை வருத்திக் கொண்டுதான் போராட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படியும் போராடலாம். இந்த நாட்டிலே இயங்கும் ஜனநாயக சக்திகள் இனி மக்களுக்காக போராட வேண்டாம். போராட ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கு எதிரான ஆதிக்கத்தை முறியடித்து மக்கள் கூடும் உரிமையை உறுதிப்படுத்தினாலே போதுமானது.

மக்கள் பிரச்சினையை மக்களே பார்த்துக்கொள்வார்கள்.

பீட்டா பவர்...?

மெரினாவுக்கு தடை போட்ட தைரியசாலிகளுக்கு பீட்டாவுக்கு தடைபோட தைரியம் வராதது ஏன்?

143 Vs 144

பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று மெரீனாவில் "143" நடைமுறைக்கு வரும் என்பதால் 12-ம் தேதி வரையிலேயே 144 தடை உத்தரவு. 

"நீதான் தைரியமான ஆளாச்சே அன்னிக்கு போட்டுப் பார்க்கலாமில்ல"

காணவில்லை அறிவிப்பு

சுவாதி கொலைக்கு wanted-ஆக வந்து "நாங்களும் நீதிபதிகள்தான்" என்று வண்டியில் ஏறி தாங்களாய் வழக்கு எடுத்துக்கொண்ட அந்தப் புண்ணிய மூர்த்திகளை மெரீனா தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் யாரேனும் பார்த்தீர்களா?

தமிழ் விரோதி

"பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்கள் தேச விரோதிகள்" - காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்று கோரிக்கை வைத்த "தமிழ்நாட்டு விரோதி" நிர்மலா சீதாராமன்.

கவர்னர்...

செய்தி : மேகாலயா கவர்னர் ஷண்முகநாதன் மீது பாலியல் குற்றச்சாட்டு / பதவி விலகல்

# கவர்னருக்கு என்று ஏதேனும் முக்கியமாக வேலை இருந்திருந்தால் அவர் அதை பார்த்திருப்பார். செய்வதற்கான வேலைகள்தான் என்னென்ன? 

அப்பல்லோவில் 75 நாட்களாய் கிடந்த ஒரு மாநில முதல்வரின் நிலையை அறிய ஒரு 1 மணி நேரம் மட்டுமாவது செலவிடக்கூட இயலாதபடி ஓய்வே இல்லாமல் கவர்னர்களுக்கு அப்படி என்னதான் வேலை? அதுவும் மேகாலயாவை கண்காணிக்க தமிழ்நாட்டுக்காரர் எதற்கு? அவர்களின் கலாச்சாரம் உரிமைகளுக்கு இன்னொரு மொழிக்காரரின் அனுமதியும் மறுப்பும் எதற்கு? இப்படித்தான் தமிழ்நாட்டுக்கு வேற்றுமொழி கவர்னர்கள் நியமிக்கப்படுவதும். திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் மட்டும்தான் இம்முறையை எதிர்த்து இந்தியாவில் குரல் கொடுத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க, புதுச்சேரியின் மகாராணி போல கிரண்பேடி நடந்துகொள்வதை கவனியுங்கள். 

அறவழி போராட்டங்களுக்கே மண்டைகளையும் எலும்பையும் உடைக்கும் போலிசு இருக்கும் நாட்டில் இப்படி அவர்மீதும் பலரும் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளால் அவர் நிலை என்னாகுமோ என்று நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது.

ஜார்ஜ் ஜி...

நீங்கள் தைரியமான நபர். சகல அதிகாரங்களும் உங்களிடம் குவிந்து கிடக்கிறது. நீங்கள் நினைத்தால் சென்னையில் யாருடைய மண்டையையும் எலும்பையும் உடைக்கலாம். நீதிமன்றம் எல்லாம் உங்களுக்கு ஒரு ஈடே அல்ல. சகல அதிகார வர்க்க ஆதரவும் தங்களுக்கு இருக்கையில், யாரால் உங்களை என்ன செய்துவிட இயலும்? 

ஆனாலும் ஏன்  உண்மையை மாற்றிச் சொல்கிறீர்கள்? எதற்கு பயம்?

மீண்டும் மக்கள் ஒன்றுகூடி போராடுவது ஏன் நியாயமாக பணி செய்யும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அச்சம் தருகிறது?

"சுதந்திர கிடைத்த நாள்" என்று ஆகஸ்ட் 15-ம் தேதியை ஏன் மக்களைக் கொண்டாடச் சொல்கிறார்கள் உங்கள் நண்பர்கள்?

அநாதைகள்...?

மெரீனாவில் மாணவர்களைத் தாக்கிய காவல்துறையினருக்கு 10000 ரூ பரிசு. தாக்கப்பட்ட மீனவர்கள் நாடற்ற அநாதைகள்...??

1947-ல் அரசியல்வாதிகளுக்கும் மத ஜாதியவாதிகளுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் மட்டும்தான் சுதந்திரம் பெற்றார்களோ...?

மாண்புமிகு முதல்வர் ஜி...

திமுக-வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியின் கணக்கு விவரங்களைக் கேட்டதால் எழுந்த பிரச்சினையால்தான் அதிமுக-வை தொடங்கினார் என்று பலரும் பேசுகிறார்கள். இப்போதைய அதிமுக புள்ளிகளிடம் கணக்கு கேட்க ஆளில்லை என்பதும் கேட்டால் நீங்கள்கூட சொல்ல மாட்டீர்கள் என்பதும் வேறு விடயம். அதை விடுங்கள்.

சேகர் ரெட்டியும் ராம் மோகன் ராவும் மாட்டிக்கொண்டதாக மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள். அவர்களின் கணக்கு விவரங்களை ஒளிவுமறைவில்லாமல் விசாரித்து துரிதமாக வெளியிட ஒரு ஆணையிடுங்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டிலாவது கட்சி அவர் வழியில் நடக்கட்டும்.

நிலையாமை

"இறந்துபோனவர்களின் முகநூல் பக்கங்களை கவனிக்கையில் புத்தனின் மௌன முகம் நினைவுக்கு வருகிறது"