வாலன்டைன் என்ற துறவி சிரச்சேதம் செய்யப்பட்ட நினைவு தினத்தை (Feb 14), "காதலர் தினம்" என்று தமிழில் மொழி பெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை.
பெப்ரவரி 14, வாலன்டைன் தினம் என்று பெயரிடப்பட்டதற்கு கத்தோலிக்க திருச்சபையும் ஒரு காரணம். கிறிஸ்தவத்திற்கு முந்திய ரோமாபுரியில், மன்மத விழா என்ற பெயரில், காதல் களியாட்டங்களுக்கான ஒரு தினம் இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்த "காட்டுமிராண்டி கால காதலர் தினத்தை" மறக்க வைப்பதற்காக, கத்தோலிக்க துறவி படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் தினமாக அறிவிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபைகளின் கட்டுப்பாடுகள் தளர்ந்த பின்னர், அது மீண்டும் காதலர் தினமாக மாறி விட்டது. எல்லா வகையான பண்டிகைகளிலும் பணம் பார்க்கும் வணிகத்துறை, அதனை "மதச் சார்பற்ற காதலர் தினமாக" மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தியது. ஒரு காலத்தில், மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப் பட்டு வந்த வாலன்டைன் தினம், உலகமயமாக்கல் காரணமாக பிற நாடுகளிலும் பரவி விட்டது.
ஆண் பெண் ஈர்ப்பு என்பது இயற்கையான ஏற்பாடு. அதில் மதத்தையும் ஜாதியும் புகுத்தி பிழைப்பு செய்யப்படும் நாடுகளில் "காதலர் தினம்" தீவிரமாக அதிகமாக கொண்டாடப்பட வேண்டியது அவசியமாகிறது.
அதேவேளை, காதலால் ஜாதி மத வேறுபாடுகள் ஒழியும் என்பது முழு உண்மையல்ல. எந்த குழந்தையும் ஏதாவது ஒரு ஜாதி அல்லது மதத்தால் அடையாளப்படுத்தப்படும் ஏற்பாடு மாற்றப்படாமல் இந்த நாட்டிலே இருக்கும்வரையில் இவைகள் காதலால் மட்டும் எப்படி ஒழியும்? காதல் திருமணங்கள் பெருகுவதால் ஜாதி மத இறுக்கம் தளரும் என்பதே உண்மை. ஆனால் அதுகூட ஓரளவாவது அறிவு ஏற்பட்டிருக்கிற இடத்திலேதான். ஜாதி மதம் ஒழிய சமூகத்தில் அறிவு ஒளி ஏற்றுவதும் தேவையான சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதுமே இறுதியானது.

No comments:
Post a Comment