கோவையில் முஸ்லிம் மதவெறி அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நமது தோழர் ஃபாரூக் அவர்களின் குடும்பத்திற்கு தம்மால் இயன்றளவு உதவ சில முகநூல் தோழர்கள் முயற்சி எடுத்தனர். தோழன் ஜேகே அவர்களின் முயற்சியால் ரூ 44,500/- ரூ திரட்டப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு நேற்று வழங்கப்பட்டது. இதில் என்னால் இயன்ற சிறிய பங்களித்தேன். தோழர் ஃபாரூக் சார்ந்த திவிக அமைப்பு வாயிலாகவும் இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக உதவிய அத்தனை மனிதநேயர்களுக்கும் பெரும் நன்றி.
இது விளம்பரப் பதிவு அல்ல.
உலகெங்கும் சூழ்ச்சிக்காரர்களால் மக்கள் சிந்தனையில் திட்டமிட்டு புகுத்தப்பட்ட திணிக்கப்பட்ட "புனிதம்" என்ற கருத்துக்களே இங்கு அநேகமான எல்லா பிரச்சினைகளுக்கும் வேராய் இருக்கிறது. மனிதனை மனிதன் வெறுக்கவும் சண்டையிடவும் சாகடிப்பதுமான தீவிர உணர்வையும், சிலருக்கு உடல் போகாமல் அதைக்கொண்டு பிழைக்கும் வழியையும் அப்புனிதங்கள் தலைமுறைதோறும் வளர்த்துக்கொண்டிருக்கிறது.
நாத்திகமே எல்லா புனிதங்களையும் உடைக்கும் ஒரே அறிவாயுதம். கடவுள்கள் இப்போது நேரில் வரமுடியாமல் இருப்பதற்கும், கடைசித் தூதர்கள் எப்போதோ வந்து போய்விட்டு அடுத்த தூதர்கள் இன்னமும் பூமிக்கு வராமல் இருப்பதற்கும் நாத்திக அறிவு வளர்ச்சியே காரணம். விபத்து நடந்தாலோ, தீவிர உடல் கோளாறு என்றாலோ, பாம்பு கடித்தாலோ யாரும் கோயிலையும் மசூதியையும் தேவாலயத்தையும் நம்பி செல்வதில்லை, மருத்துவமனையை நோக்கித்தான் ஓடுகிறார்கள். கூர்ந்து கவனித்தால் நாத்திக்கக்கூறு எல்லா மனிதர்களிடத்திலும் இருப்பதைக் கவனிக்கலாம். இதனால்தான் நம்பிக்கையாளன் முன்பும் வரமுடியாமல் இப்போது கனவில் மட்டும் வருகிறார்கள் கடவுள்கள்.
நாத்திகம் வளர்ந்த அல்லது கடவுளுக்கும் மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காத நாடுகளின் மக்கள் சமூக வாழ்க்கையை சற்று ஒப்பிட்டுப் பாருங்கள் சில உண்மைகள் புலப்படும்.
தோழர் ஃபாரூக் மாதிரியான நபர்கள் ஒரு சமூகத்தில் தோன்றுவது மிக அரிது. அவரைப்போல் இன்னொருவர் தோன்ற இன்னும் 30 வருடங்கள் ஆகலாம். எல்லாவகையிலும் அவரது குடும்பத்திற்கும் பன்முகத்தன்மை கொண்ட நம் சமூகத்திற்கும் இது ஈடுகட்டவியலாத பேரிழப்பே.
மக்களை மனிதர்களை இயற்கையை அமைதியை மகிழ்ச்சியை பகுத்தறிவை அறிவியலை நேசிக்கும் நாத்திகர்கள் இவ்வுலகில் அநாதைகள் அல்ல என்று நாம் வெளியுலகிற்கு காட்ட வேண்டிய அவசிய சூழல் இன்றைக்கு மிக தேவையாக வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் / சமூகத்தின் வளர்ச்சிப் பாதையின் எல்லா சுவடுகளிலும் ஏதோவொரு நாத்திகனின் அசாத்தியமான தியாகம் புதைந்துள்ளது.
தோழர் ஃபாரூக் அவர்கள் நம் காலம் கடந்தும் வரலாற்றில் இருப்பார். மதவெறியர்களுக்கு எதிராய் கருத்துகளால் போராடிக்கொண்டிருப்பார். அவர் தனி நபர் அல்ல. அவருக்கும் பின்னால் நாங்கள் ஏராளம்பேர் இருக்கிறோம் என்று பழமைவாதிகளின் முகத்தில் காறியுமிழும் கடமை இந்த மண்ணில் மாற்றத்தை அமைதியை அறிவை விரும்பும் ஒவ்வொரு முற்போக்கார்களுக்கும் உள்ளது. இவ்வகையில் தோழர் ஃபாரூக் குடும்பத்தினருக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். அப்படி முன்நின்று செய்பவர்களைப் பாராட்டுங்கள்.
பாசிசம் பல வடிவங்களில் வேரூன்றி பரவும் இச்சூழலில் தோழர் ஃபாரூக்-கிற்கு பின்னால் பெரும்படை உள்ளது என்பதை எல்லா கடவுளின் அடியாட்களுக்கும் தெரிவிக்கவே இப்பதிவு. வேறெந்த நோக்கமும் அல்ல.
மார்ச் 27, 2017

No comments:
Post a Comment