போலீசின் இன்னொரு முகம் / இவனைத் தெரிந்துகொள்ளுங்கள் / சேதுமணி மாதவன்
2007-ல் தஞ்சையில் பணியாற்றிய இவன் அகிலா எனும் ஒரு மென்பொருள் பொறியாளரை விசாரணை என்ற பேரில் தனியாக அழைத்துச் சென்று சட்டவிரோதமாக சிறைவைத்து (டெம்பிள் டவர் ஓட்டலில்) பல நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்து அவர் வீட்டாரிடம் பல லட்சங்களை பிடுங்கினான். கொடுமை தாங்க இயலாத நிலையில் அந்தப்பெண் சிறைவைக்கப்பட்ட விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைக்க வேண்டிய வழக்கு சில இயக்கங்களின் தொடர் நடவடிக்கைகளால் உயிரோடு இருந்தது.
நீண்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு அந்த தியாகி (அப்படித்தான் தஞ்சையில் அப்போது போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது) புழல் சிறைக்கு அனுப்பப்பட்டான். உடனே நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்கு போனான். பிறகு அவனது ”தகுதி” காரணமாக மீண்டும் பணியில் சேர்ந்து இன்றுவரை “மக்களை காக்கும்” காவல் ஆய்வாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறான். கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து எல்லா பெண்களும் இவனிடமே புகார் கொடுக்க வேண்டிய நிலையில் அரசு இவரை வைத்திருந்தது.
இப்போது தஞ்சை மகளிர் நீதிமன்றம் இவனுக்கு 10 ஆண்டு தண்டனை விதித்திருக்கிறது. தஞ்சை ம.க.இ.க தோழர்கள் இந்த வழக்குக்காக எடுத்த முயற்சிகளையும் அலைச்சலையும் நாம் பாராட்ட வேண்டும். இதற்காக போராடிய எல்லா தோழர்களுக்கும் நன்றி.
மக்களுக்கான பாதுகாப்பு அரசிடம் இல்லை, மக்களுக்காக போராடும் தோழர்களிடம்தான் இருக்கிறது என்பதற்கான மற்றுமோர் ஆதாரம் இது.
தமிழக பிரச்சினைக்காகப் போராடிய பல தமிழ் அமைப்பினர்களை கொடூரமாகத் தாக்கியதும் இந்த நாய்தான்.

No comments:
Post a Comment