3.9.17

தோழர் பாரூக் படுகொலை

"மனிதன் என்னதான் எப்படித்தான் முயற்சித்தாலும் 150 ஆண்டுகள் வாழ முடியாது. சராசரியாக 65 ஆண்டுகள் மட்டும் வாழ வாய்ப்புண்டு. அதையும் நோயின்றி அமைதியாய் மகிழ்ச்சியாய் அனுபவித்து வாழ்ந்துவிட்டுப் போகும் அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சிக்காமல் எப்போதும் ஜாதி, மதம், கடவுள், சடங்கு சம்பிரதாயம், நேரம் காலம், பிரார்த்தனை, பஜனை, துதி என்று பலவாறான சிக்கல்களை நாளும் நாளும் உயிரூட்டி வளர்த்தபடி வாழ்வை வீணாக்குகிறான்.

ஜாதி மத மற்றும் இன்னபிற வெறியின் பேரால் சீக்கிரத்தில் சுடுகாட்டுக்குப் போய் படுத்துக்கொள்வதில் மட்டும் ஏனோ மனிதர்கள் எப்போதும் ஆர்வமாய் இருக்கிறார்கள்.

பிணத்துக்கு உயிர் கொடுக்கும் மந்திரங்களோ கடவுள்களோ மதமோ ஜாதியோ புனித நூல்களோ அதிசய சக்தியோ ஒரு hair-ம் இல்லை உலகில். ஆனால் உயிருடன் உள்ளவர்களை முழுமையாய் வாழவிடாமல் கூடியவிரைவில் கொல்வதற்கான ஆயுதங்களாக மட்டும் இவைகள் தயாராக காத்திருக்கின்றன.

கற்பனை என்றவொரு வசதி இருப்பதால்தான் கண்டதையும் நம்புகிறான் மனிதன்.

பொருள்முதல்வாதப் பார்வையிலான நாத்திக அறிவு சமூகத்தை மேம்படுத்தும். மகிழ்ச்சியான வாழ்வுக்கு நாத்திகமே ஒளிவிளக்கு.

"தோழர் பாரூக்கின் படுகொலை மனித இனத்தின் அவமானம்" 
- மாரச் 20, 2017
 

No comments:

Post a Comment