வாழ்வில் உனது ஒரே பிரச்சினை-நீ பிறந்த மதம், நீ பிறந்த சமுதாயம், நீ பிறந்த குடும்பம் மட்டும்தான்.
ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லை என்பது துரதிஷ்டவசமானது. இதுவரை அப்படித்தான். இது ஒன்றுதான் வழி.
இப்படி நீ ஒரு குறிப்பிட்ட மதத்தில், ஒரு குறிப்பிட்ட கொள்கைகளுடன் குறிப்பிட்ட ஒழுக்கக் கேடுகளுடன் பிறந்தால் அந்த உன்னுடையது அல்லாத அனைத்து கருத்துகளும் உன் மனதில் ஒட்டிக் கொண்டு பதிவாகி விடுகின்றன.
பிறகு நீ சரி எது தவறு எது என்று பிரித்துப் பகுத்துப் பார்க்கும் பார்வையை முற்றிலும் இழந்து விடுகிறாய்.
இதுதான் உன்னை முக்தி ஞானம் பெறவிடாமல் தடுக்கும் பிரச்சினை. வேறெந்தப் பிரச்சினையும் இல்லை.
நீ முதலில் உனது அனைத்து அறிவையும் வெளியே துரத்த வேண்டும். உனது சமய உணர்வுகள் என்று நீ நினைப்பவை அனைத்தும் துரத்தப்பட வேண்டும்.
நீ ஒரு சிறு குழந்தையைப் போல் தெளிவாக, தூய்மையாக இருக்க வேண்டும். நீ இந்துவாக, முஸ்லீமாக, கிறிஸ்துவனாக இல்லாமல் ஒரு மனிதனாக, புதிதாகப் பிறந்தது போல இருக்க வேண்டும்.
உனது துவக்க காலத்திலிருந்து நீ அடைக்கப்பட்டுள்ள அனைத்து ஜெயில்களும் உனக்கு மிகவும் பழகி விட்டதால், அவை சிறைகள் என்பதையே நீ மறந்து விட்டாய், அவை அழகிய இல்லங்களாய் உள்ளன.அவை அப்படிப்பட்டதல்ல.
இந்தச் சிறைகளிலிருந்து தப்பித்து வருவதற்கு மிகப் பிரமாதமான துணிச்சல் தேவை. ஆனால் ஒவ்வோர் ஆணுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்தத் துணிச்சல் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.
அதற்கு வெறும் ஒரு அழைப்புதான் தேவைப்படுகிறது. ஓர் ஊக்குவிப்புதான் தேவை. சமுதாயத்திடமிருந்து கொஞ்சம் ஆதரவு, நண்பர்கள் தேவை.
நீங்கள் தனிமையில் இல்லை என்பதற்காக இதே பாதையில் இதே புரட்சியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களும் உள்ளனர் என்று அறிந்தால் போதும்.
-- ஓஷோ
No comments:
Post a Comment