4.9.17

போராடுபவர்களின் கவனத்திற்கு...

போராடித்தான் எல்லாமும் பெற முடியும் என்பதுகூட பரிணாம வளர்ச்சி அடைந்து நெடுங்காலம் ஆகிறது. வரலாற்றில் இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. உயிரைக் கொடுத்து போராட வேண்டும் என்பது இன்றைக்கு அவசியமற்றதும் ஆபத்தானதும்கூட. போராடுகிறவர்கள் எப்படியாவது உணர்ச்சிவயப்பட்டு தானே சீக்கிரம் செத்துப்போக வேண்டும் என்றுதான் அடக்குமுறை சக்திகள் விரும்புகிறது. அல்லது அடக்குவதற்கே சம்பளம் தந்து சோறுபோட்டு வளர்த்துக்கொண்டிருக்கும் அதன் அங்கீகரிக்கப்பட்ட அடியாட்படைகளுக்கு வேலை கொடுக்க ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அரசு காத்துக்கொண்டிருக்கிறது.

உணர்ச்சிவயப்பட்டு போராடுகிறவர்களை ஊக்குவிக்காதீர்கள்; பின்னால் செல்லாதீர்கள்.

போராடுகிறவர்கள் நீண்ட நாள் சகல பலத்தையும் வளர்த்துக்கொண்டு அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருக்க வேண்டும்.

உயிரைக் கொடுக்கும் போராட்டங்கள் ஒரு சமூகத்தின் தற்கொலைக்கு சமம். இது ஒப்பற்ற தமிழின அறிவாளிகள் & உயிர்க்கொடையாளர்களின் இழப்பின் வருத்தத்தால் எழும் கருத்து.

நோகாமல் கச்சத்தீவைக் கைப்பற்றினானே சிங்களன், அந்த சாதுரியம் கொண்ட தலைமைகள் தமிழ் மண்ணில் உருவாக நம் அறிவும் உழைப்பும் பயனுற அமைய வேண்டும்.

அறவழியிலான போராட்டத்தை தீவிரப்படுத்துவதே பலம்.

No comments:

Post a Comment