3.9.17

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்ன?

நண்பர்களின் புரிதலுக்காக...

ஹைட்ரோ_கார்பன் திட்டம் என்றால் என்ன?

ஹைட்ரோ கார்பன் என்பது பூமிக்கு அடியில் இருக்கக்கூடிய மீத்தேன், குருடாயில், பென்டேன், புரோட்டேன், ஈத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆக்சிஜன் பட்டவுடன் தீப் பிடிக்கக்கூடிய அனைத்து கரிம பொருட்களையும் குறிப்பிடும் சொல்தான் ஹைட்ரோ கார்பன்.

மீத்தேன் எடுப்பு திட்டம் என்பது இதில் ஒரு சிறு துளிதான்.

இதுவரை தமிழகத்தில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதா?

ONGC நடைமுறையில் எடுத்து வருகின்ற அனைத்தும் ஹைட்ரோ கார்பன் தான். ONGC எங்கெல்லாம் கால் பதித்ததோ அங்கெல்லாம் குடிக்க நீர் இன்றி, புதிய புதிய நோய்களில் மக்கள் அவைதியுருவதை நாம் பார்க்கலாம்.

விவசாயம் முற்றிலும் அழிக்கப்படும்.

இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாற்றப்படும் என்பது உறுதி. ஆகவே நாம் நடைமுறையில் உள்ள ONGC-யையும், நடைமுறைப்படுத்த உள்ள புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் விரட்டியடிக்கும் வரை போராடுவதே நம் வாழ்வாதாரங்களுக்கு பாதுகாப்பு.

இந்தியா எந்தவொரு திட்டத்தையும் தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் சோதனை செய்து பார்க்க காரணம்; செயற்திறனற்ற அட்டைகத்தித்தனமான வெறும் அறிக்கை வெளியிடுவதையும் மேடைப்பேச்சையும் மூலதனமாகக்கொண்ட, அடையாள அரசியல் நடத்தும், உண்மையான மக்கள் அக்கறையற்ற அரசியல் தலைமைகள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருப்பதே.

இந்நிலை மாறாத வரையில் / மாற்றப்படாத வரையில் மேலும் ஆபத்துகள் தொடரும்.

No comments:

Post a Comment