30.12.16

தேர்தலில் ஜாதிவாரி அதிகாரம் தேவை...?

ஊழல் செய்யும் துணிவும் திறமையும் இருக்கிறவர்களால் தேர்தல் முறை நிரம்பி வழிகிறது. ஓடும் குதிரைகள் மீது பந்தயம் கட்டப்படுகிறது. 

கட்சி ஆரம்பிக்கவோ பிரச்சாரம் செய்யவோ தேர்தலில் நிற்கவோ யாருக்கும் தடையில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

அதேவேளை பிறக்கும் முன்னரே கீழானவர்களாய் முத்திரை குத்தப்பட்டோரை மாற்றாருடன் தயவுகூர்ந்து ஒப்பிட வேண்டாம்.

ஜாதி மத ஒழிப்புக் குரலின் பலம்..?

ஜாதி மதம் இல்லை என்று சொல்லப்படுவது போலியாகவே இருக்கட்டும். இது தேவையா என்றொரு கேள்வி எழுவதில் என்ன பிரச்சினை? இன்னும் எத்தனைக் காலத்திற்கு மக்கள் இந்த பேதங்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டே வாழப் போகிறார்கள்? 

ஜாதி மதம் காப்பாற்றப்படுவதில் ஆளும் வர்க்கத்திற்கு லாபமிருக்கிறது. மேல் இடத்தில் பிறந்தவர்களுக்கும் அவ்வாறே. இதை ஒழிக்கவேண்டிய தேவையும் அவசியமும் இவ்வாறானவர்களுக்கு இல்லை என்பதால் இதைப் பேசுவோரின் குரல் பலம் குறைந்தே காணப்படுகிறது. ஆனால் இந்த முறைகளினால் அடக்குமுறைகளுக்கு ஆளாகுபவர்களுக்கு என்ன லாபம்?

ஜாதிவாரி அதிகாரம் ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்க வேண்டும். கல்வியும் அறிவும் நிரம்பப் பெற்ற நாம் அதைத் தாண்டியும் சிந்தித்து நிரந்தர ஏற்பாடு அமைய பாடுபட நினைத்தால் ஒரு ஆபத்தும் நேர்ந்துவிடாது என்பது எனது பணிவான கருத்து.

வலுகுறைந்த கருத்துக்களான ஜாதி மத ஒழிப்பு சிந்தனையை போலி என்பதை என்னளவில் மறுக்கிறேன். 

ஏனெனில் அறியாமை மிகுந்த சமூகத்தில் பெருவாரியான மக்கள் தங்களுடன் வாழும் அறிவாளிகளை ஒட்டியே தாமும் சிந்தித்து நடப்பார்கள். அறிவாளிகள், அவர்களை தொலைநோக்கோடு பூரண சுதந்திர நல்வாழ்வை நோக்கி நகர்த்த சிந்தனையளவிலாவது அக்கறைப்பட்டு உழைக்க வேண்டும்.

ஜாதிதான் எல்லாமும்

"ஒருவரின் ஜாதியைக் கவனிக்காமல் தகுதியை மட்டும் கவனிக்கும் குணம் ஹிந்துக்களிடம் இல்லவே இல்லை. சுய ஜாதிக்காரன் தகுதியைத்தான் ஒவ்வொருவரும் பாராட்டுகிறார்கள். இதனால் ஹிந்துக்களின் ஒழுக்கமே கெட்டுவிட்டது. அவன் செய்தது சரியோ தவறோ எப்படி இருந்தாலும் சரி, அவன் என்ன ஜாதிக்காரன்? அவன் நல்லவனோ கெட்டவனோ எப்படி இருந்தாலும் சரி, அவன் என்ன ஜாதிக்காரன்? என்ற மனப்பான்மையே ஹிந்துக்களிடம் குடிகொண்டிருக்கிறது. பெருமை என்பது ஒழுக்கத்துக்கும் குணத்திற்கும் அல்லாமல் ஜாதிக்கே என்றாக இருக்கிறது. சுய ஜாதிகளின் நலனுக்காக ஹிந்துக்கள் தேசத் துரோகமே செய்து கொண்டிருக்கிறார்கள்"

- டாக்டர் அம்பேத்கர்

சசிகலா சம்மதம்

"பொதுச்செயலாளர் பதவியேற்க சசிகலா சம்மதம் தெரிவித்தார்" - செய்தி

ஒருவேளை மறுத்துவிடுவாரோ என்று நான்கூட பயந்தே போயிட்டேன். நல்லவேளை...

விமர்சனம்

விமர்சனங்களைக் கண்டு யாரேனும் அஞ்சினால் அங்கே ஏதோ தவறிருக்கிறது என்றே பொருள். 

இதேபோல விமர்சனங்கள் அவதூறாக இருக்கக்கூடாது என்பதும் முக்கியம்.

விமர்சனங்கள் எதன் மீதும் / யார் மீதும் எழ வேண்டும். 

விமர்சனங்களை யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது. 

விமர்சனம் என்பது ஜனநாயக உரிமை. 

விமர்சனம், ஒரு சமூக அக்கறையாளனின் பிறப்புரிமை. 

விமர்சனம், உண்மையைக் கண்டடையும் திசை.

மூடர்கள்

"வார்த்தைகளுக்குப் பயப்படுகிறவர்கள் மூடர்கள் என்பதுதான் எனது அபிப்பிராயம்" 

- டாக்டர் அம்பேத்கர்

ஏறு தழுவுதல் / ஜல்லிக்கட்டு

ஏறு தழுவுதல் என்பது ஊரையும் இளம் பெண்டிரையும் காக்க வலுவுள்ள இளைஞனை கண்டுபிடிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு விளையாட்டு. இதில் மாட்டின் திமிலை அணைத்தல் / தழுவுவது மட்டும்தான் நோக்கம். 

ஜல்லிக்கட்டு என்பது பிற்பாடு, மாட்டின் கொம்பில் பணத்தை கட்டி வைத்து மாட்டை அடக்குவோருக்கு பரிசு தரும் விளையாட்டு. இதில் முந்தைய நோக்கமில்லை. 

சங்க காலத்தில் முல்லைத் திணையில் நடத்தப்பெற்றது ஏறு தழுவுதலே. 

நாயக்கர் காலத்திற்குப் பிறகு அது ஜல்லிக்கட்டாக மாறியது. 

சல்லிக்காசு > ஜல்லிக்காசு > சல்லி > ஜல்லி

அவருதானாம்

ரெட்டிதான் இவர்கூட தொடர்பு வெச்சிருந்திருப்பாரோ...?

பெருச்சாளிகள் நியாயம் பேசினால்?

"தலைமைச்செயலகத்தைக் காப்பாற்ற அரசு தவறிவிட்டது. 

தமிழக மக்கள் பாதுகாப்பற்ற நிலை. 

மாநில அரசுக்கும் அதிகாரிகளுக்கும் 
எந்த மரியாதையும் இல்லை"

- ராமமோகன் ராவ்

# நியாயமான கோரிக்கைகளை இந்த மாதிரியான பெருச்சாளிகள் எழுப்பும்போதுதான் முற்றிலும் நீர்த்துப்போகிறது; மக்களிடம் எடுபடாமல் போகிறது.

அவரேதான் சொன்னார்

ராம் மோகன் ராவ் நல்லவராம். யார் சொன்னது? அவரேதான்.

வாழ்க்கை என்பது...

கொண்டாடிவிட்டுப் போவதுதான் வாழ்க்கை. 

அதீத ஆன்மீக ஆராய்ச்சி வாழ்க்கை விரயம்

அதிர்ச்சியா? அவமானமா?

பெங்களூரில் ராம்மோகன் ராவ் மகளுக்கு சொந்தமான 500 அடுக்குமாடி வீடுகள்!

வரிமானவரித்துறையினர் "அதிர்ச்சி"

நியாயமாகப் பார்த்தால் வருமான வரித்துறையினர் "அவமானம்" என்றுதானே செய்தி வரவேண்டும்.

மாமேதை பொன்னார்

மாமேதை பொன்னார் அவர்கள் உதிர்த்த சிந்தனை முத்துக்களில் சில...

01. கன்னியாகுமரியை கேரளாவுடன் இணைத்திருக்க வேண்டும்.

02. ஈழத்தமிழர்கள் சொந்த நாட்டுக்குப் போவது நல்லது. 

03. தமிழர்கள் கன்னடர்களைத் தாக்கக் கூடாது. 

04. காவிரியில் கர்நாடக உரிமை பாதிக்கப்படக் கூடாது. 

* தமிழ்நாட்டில் எவ்வளவோ பிற மொழி மக்கள் நிம்மதியாய் அமைதியாய் வாழ்கிறார்கள். சொந்த மக்களே தங்களுக்குள்  ஜாதிவெறியின் பேரால் சாகடிக்கப்படுகிறார்கள். அதெல்லாம் இவருக்கு உறுத்தவில்லை.

6000 கோடிக்கு 2 சிலை

இத்தனை கோடி பணத்தில் நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கொடுக்க முடியாது. இரண்டு சிலை வைக்க முடியும்.

போலோ
பாரத் மாதா கீ ஜே...!!!

28.12.16

"ஹேம்லெட்" - வில்லியம் ஷேக்ஸ்பியர்

ஹேம்லெட் என்பவன் டென்மார்க் நாட்டின் இளவரசன். அவனது தந்தையின் பெயரும் ஹேம்லெட்தான். அவர் இறக்கிறார். இதனால் மன்னரின் தம்பியான க்ளாடியஸ் அரசனாகப் பதவியேற்கிறான். இறந்த மன்னரின் மனைவியின் பெயர் ஜெர்ட்ரூட். இந்தப் பெண் தான் இளவரசன் ஹேம்லெட்டின் தாய். அவளையும் புதிய மன்னனான க்ளாடியஸ் மணம் புரிந்துகொள்கிறான். இந்தத் திருமணம் இளவரசன் ஹேம்லெட்டுக்குப் பிடிப்பதில்லை. (‘தந்தையை மணம்புரிந்தபோது அவள் அணிந்திருந்த செருப்பு இன்னும் புதியதாகவே இருக்கிறது; அது பழமையடைவதற்குள் தந்தையின் தம்பியை மணம்புரிந்துவிட்டாளே…’). இதனால் இளவரசன் ஹேம்லெட்டின் குணம் மாறுகிறது. மெல்ல மெல்ல கோபக்காரனாகவும் எடுத்தெறிந்து பேசுபவனாகவும் மாறுகிறான். கூடவே, தந்தை இறந்ததை எப்போதும் நினைத்துக்கொண்டு அவருக்காக துக்கமும் அனுஷ்டிக்கிறான். இது மன்னன் க்ளாடியஸுக்குப் பிடிப்பதில்லை.

மன்னன் க்ளாடியஸின் பிரதான ஆலோசகரின் பெயர் பொலோனியஸ். அவருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் லயர்டீஸ் (Laertes). அவன் ஃப்ரான்ஸுக்கு மேற்படிப்பு படிக்கப்போவதாகச் செல்கிறான். இளையவள் ஒஃபீலியா, ஹேம்லெட்டை விரும்புகிறாள். ஆனால் இது அவளது தந்தை போலோனியஸுக்குப் பிடிப்பதில்லை.

இந்த நிலையில் ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே ஒரு புதிரான உருவம் தென்படுகிறது. இந்த உருவம் யாரென்று பார்த்தால், அதுதான் இறந்த ஹேம்லெட் மன்னனின் பிசாசு என்பது தெரிகிறது. இந்த உருவம் ஹேம்லெட்டைச் சந்தித்து, தன்னைக் கொன்றது தனது தம்பி க்ளாடியஸ்தான் என்று சொல்கிறது. தனது மரணத்துக்குக் காரணமான தனது தம்பியை ஹேம்லெட் பழிவாங்கவேண்டும் என்றும் பேசுகிறது. ஆனால் இளவசரன் ஹேம்லெட்டுக்கு சந்தேகம். இந்த உருவம் உண்மையில் தனது தந்தைதானா? அவர் சொல்வது உண்மையா?

இதைக் கண்டுபிடிக்க ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறான் ஹேம்லெட். அந்த நாடகம் அரசன் க்ளாடியஸ் முன்னிலையில் நடத்தப்படுகிறது. அதில் வரும் மன்னன் ஒருவன், மன்னர் ஹேம்லெட் இறந்ததுபோலவே கொல்லப்பட, அதைப் பார்க்கும் க்ளாடியஸ் அதிர்ச்சி அடைகிறான். இந்த அதிர்ச்சியைக் கவனிக்கும் இளவரசன் ஹேம்லெட்டுக்குத் தனது தந்தையின் ஆவி சொன்னது உண்மைதான் என்று புரிகிறது. இதனால் தந்தையைக் கொன்ற க்ளாடியஸைக் கொன்றே ஆகவேண்டும் என்ற வெறி ஹேம்லெட்டின் மனதில் எழுகிறது. தனது தாயை சந்திக்கச் செல்லும் வழியில் ஒரு இடத்தில் க்ளாடியஸ் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை ஹேம்லெட் பார்க்கிறான். அவனைக் கொன்றுவிடலாம் என்று பின்னால் சத்தமில்லாமல் நின்றுகொண்டு வாளை ஓங்கும்போதுதான் க்ளாடியஸின் பிரார்த்தனையை ஹேம்லெட் செவிமடுக்க நேர்கிறது. செய்த பாவங்களை எப்படிப் போக்குவது என்று அரற்றிக்கொண்டிருக்கிறான் க்ளாடியஸ். இந்த நிலையில், பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கும் க்ளாடியஸைக் கொன்றால் அவன் இறந்தபின் நல்ல நிலைக்குச் சென்றுவிடுவான்; தனது தந்தை நரகத்தில் வாட நேரிடும் என்பதால் அவனைக் கொல்லாமல் தாயைச் சந்திக்கச் செல்கிறான் ஹேம்லெட்.

அங்கே தாயிடம் பேசிக்கொண்டிருக்கும்போது திரைச்சீலை மறைவில் ஏதோ சத்தம் கேட்கிறது. க்ளாடியஸ்தான் ஒளிந்திருக்கிறான் என்று நம்பி உணர்ச்சி வேகத்தில் அந்த உருவத்தைக் கொல்கிறான் ஹேம்லெட். ஆனால் அது அரசன் க்ளாடியஸின் ஆலோசகரான பொலோனியஸ் – ஹேம்லெட்டின் காதலி ஒஃபீலியாவின் தந்தை. இதன்பின் ஹேம்லெட்டின் உற்ற நண்பர்கள் இருவரைக் க்ளாடியஸ் ஹேம்லெட்டைக் கொல்ல அனுப்புகிறான். இங்லாண்ட் செல்லும் வழியில் அவர்கள் இருவரும் இங்க்லாண்டில் இறந்துவிட, கடல் கொள்ளையர்களால் பிடிக்கப்படும் ஹேம்லெட் பத்திரமாக டென்மார்க் அனுப்பப்படுகிறான் (இங்க்லாண்ட் மன்னருக்குப் போலிப்பெயரில் அவர்களைக் கொல்லும்படி ஹேம்லெட்தான் கடிதம் எழுதியிருப்பான்).

தனது தந்தை பொலோனியஸ் ஹேம்லெட்டால் கொல்லப்பட்டதை அறிந்த லயர்டீஸ் ஃப்ரான்ஸில் இருந்து பதறிக்கொண்டு வருகிறான். அப்போது தந்தை இறந்த வருத்தத்தில் ஆற்றில் விழுந்து ஒஃபீலியாவும் சாகிறாள். இந்த நேரத்தில் லயர்டீஸை சந்திக்கும் மன்னன் க்ளாடியஸ், பொலோனியஸைக் கொன்ற ஹேம்லெட் மீது லயர்டீஸ் வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு திட்டத்தைச் சொல்கிறான். ஒரு வாட்சண்டையில் இருவரும் மோதவேண்டியது; அந்த சண்டையில் லயர்டீஸிடம் இருக்கும் வாளில் விஷம் தடவப்பட்டிருக்கும் என்பதால் ஹேம்லெட் இறப்பது உறுதி. மீறி ஹேம்லெட் வென்றால், அவனுக்குக் கொடுக்கப்படும் ஒயினில் விஷத்தைக் கலந்துவிடவேண்டியது.

ஒஃபீலியாவின் கல்லறையில் இரண்டு வெட்டியான்கள் அவளது மரணத்தைப் பற்றிப் பேசும்போது அங்கே ஹேம்லெட் வருகிறான். அப்போது ஹேம்லெட்டின் சிறுவயதுத் தோழனான யோரிக் என்பவனின் மண்டையோடு கிடைக்கிறது. அந்த இடத்தில்தான் மரணம் பற்றி ஹேம்லெட் பேசும் உலகப்புகழ் பெற்ற Soliloquy ஒன்று வருகிறது. மண்டையோட்டைக் கையில் வைத்துக்கொண்டு லாரன்ஸ் ஒலிவியே நடித்த ஹேம்லெட் படத்தில் ஒரு புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்தப் போஸ் மிகவும் புகழ்பெற்றது.

இதன்பின்னர்தான் சண்டை துவங்குகிறது. ஹேம்லெட்டை விஷம் தோய்ந்த கத்தியால் குத்துகிறான் லயர்டீஸ். அதே கத்தியைப் பிடுங்கி லயர்டீஸையும் ஹேம்லெட் குத்திவிடுகிறான். அந்தச் சமயத்தில் விஷம் கலந்த ஒயினை ஜெர்ட்ரூட் தெரியாமல் குடித்துவிடுகிறாள். தாயின் மரணத்தைக் கண்ணுறும் ஹேம்லெட் கோபத்தின் உச்சத்தில் மன்னன் க்ளாடியஸை அதே கத்தியால் குத்திவிட்டு இறக்கிறான். மன்னனும் இறக்கிறான். அரச குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அங்கேயே உயிர் விடுகின்றனர். அப்போது அந்த நாட்டின் மீது படையெடுத்து வரும் நார்வேயைச் சேர்ந்த இளவரசன் ஃபோர்ட்டின்ப்ராஸ் அங்கு வந்து இந்த இறப்புகளைக் கண்டு, பின்னர் மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொள்வதோடு ஹேம்லெட் முடிகிறது.

- கருந்தேள் வலைப்பக்கம்

24.12.16

அருள்பாலிக்க வேண்டுதல்

IAS, IPS தேர்வெழுதி பதவிக்கு வரும் இந்த நாட்டின் ஆகச்சிறந்த பெரிய பெரிய அறிவாளிகளெல்லாம் அரசு பணத்தை திருடி சேர்ப்பதில் காட்டும் திறமையையும் மும்முரத்தையும் எளிய மக்களின் வாழ்வு மேம்பட உபயோகப்படுத்தும்படி #_சேகர்_ரெட்டியின் பாசத்திற்குரிய நண்பர் திருப்பதி வெங்கடாஜலபதி அவர்கள் அருள்பாலிக்கு வேண்டும்.

அந்தநாள் ஞாபகம்

தந்தை பெரியார் திக அறிவித்த கருவறை நுழைவுப் போராட்டத்திற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2012-ம் ஆண்டு இதே நாளில்; 23-12-2012 அன்று காலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய காவலர்களால் என் அறையிலிருந்து அழைத்து செல்லப்பட்டேன். நாள் முழுதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு; இரண்டு பிரிவின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டு; சைதாப்பேட்டை நீதிபதி வீட்டில் நேர் நிறுத்தப்பட்டு நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டேன். 6 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நிபந்தனை பிணையில் விடுதலை ஆனேன். 15 நாட்கள் தொடர்ந்து மேற்படி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தேன்.

23.12.16

வரலாற்றை எழுதுதல்...

எப்படி எல்லா வரலாறுகளும் ஆதிக்க வர்கத்திற்கு தோதாக திரிக்கப்பட்டதோ அதேபோல் அதை மறுக்கிறவர்களும் போதிய ஆதாரங்களை எடுத்தியம்பாமல் தமது சொந்த விருப்பு வெறுப்பின்பேரிலான கருத்துகளையே உண்மையைக் கண்டதுபோல் எழுதுகிறார்கள். ஒவ்வொருவரின் அனுபவ நுண்ணறிவும் வியக்கத்தக்கதே. அதேவேளை இதுதான் உண்மை என்று அழுத்திக் கூறுவதில் குறைந்தபட்ச சான்றுகளையாவது எடுத்தாளுவதுதான் ஏற்புடையது.

தேசிய இனம் - உட்பகை

தமிழினம் மட்டும் தான் உட்பகை, உள் முரணோடு இருப்பதாக நினைத்துக் கொள்வது ஒரு தாழ்வு மனப்பான்மை. (தமிழ்த்) தேசியவாதிகள் தம்து அரசியல் ஆதாயத்திற்காக  உண்டாக்கிய கட்டுக்கதை.

உலகில் எல்லா இனங்களும் உட்பகை, உள் முரண்பாடுகளுடன் வாழ்கின்றன. அந்தந்த இனங்களை சேர்ந்த தேசியவாதிகளும் இதே போன்ற கருத்துக்களை கொண்டவர்கள் தான். அது அவர்களது அரசியல் சித்தாந்தம் யதார்த்தம் அல்ல.

உலகில் உட்பகை, உள் முரண்பாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழும் ஒரு இனத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம். அப்படி ஒரு இனம் செவ்வாய் அல்லது வியாழன் கிரகத்தில் தான் இருக்க முடியும். 

அன்பான தமிழின உணர்வாளர்களே! ஒரு கற்பனை உலகில் வாழாமல் யதார்த்த உலகிற்கு வாருங்கள்.

- கலை மார்க்ஸ் முகப்புத்தகத்திலிருந்து

22.12.16

"கீதாரி" - சு. தமிழ்ச்செல்வி

ஊரூராய் நாடோடியாய் திரிந்து ஆடுகளை மேய்த்து கிடைபோட்டு பிழைப்பவர் இராமு கீதாரி. அவருக்கு இருளாயி என்ற மனைவியும் முத்தம்மா என்ற மகளும் இருக்கின்றனர். ஒரு பண்ணையில் அடிமையாக விடப்பட்ட வெள்ளைச்சாமி என்ற சிறுவன் மீது பரிதாபப்பட்டு தன்னுடன் அழைத்து வந்து மகனைப் போல் வளர்த்து ஆளாக்குகிறார். தன்னுடன் உண்டு உறங்கி அவன் ஆடு மேய்த்தாலும் அவனுக்கென தினசரி கூலி கணக்கு போட்டு சேர்த்து வைக்கிறார். ஒருநாள் இரவில் கடும் மழை பெய்யும் நேரத்தில், அவரது கிடைக்கு அருகே மனநிலை பாதித்த நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி கரிச்சா, வெள்ளச்சி எனும் இரட்டைப் பெண் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள். அடுத்த நாள் காலையில் ஊராரிடம் இத்தகவலை தெரிவிக்கிறார் ராமு கீதாரி. குழந்தைகளை நாம் வளர்க்கவேண்டி வருமோ என்று எண்ணி ஊராட்கள் தயங்கி நழுவ முயல, கஷ்டத்தோடு கஷ்டமாக தானே ஒரு குழந்தையை வளர்த்துக் கொள்வதாக சபையில் தெரிவிக்கிறார். அதன்பிறகு ஊரின் பெரும் புள்ளியான சாம்பசிவம் என்பவர் தானும் இன்னொரு பெண் குழந்தையை எடுத்து வளர்ப்பதாக சொல்கிறார். ஆனால் இப்போது தன்னால் குழந்தையை எடுத்துச் செல்ல இயலாது என்றும், சில வருடங்கள் கழித்து வந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்கிறார்.

கரிச்சாவும் வெள்ளச்சியும் பாசமாக இராமு கீதாரியின் வீட்டில் வளர்கிறார்கள். சொன்னபடியே சிறிது வருடங்கள் கழித்து ‘வெள்ளச்சி’ என்ற பெண் பிள்ளையை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் சாம்பசிவம். சாம்பசிவத்திற்கு இரண்டு மனைவிகள், நல்ல வசதியிருந்தும் வெள்ளச்சியைப் படிக்க வைக்காமல் வீட்டில் மீதமாகும் உணவுகளைத் தந்தும் மோசமாய் நடத்தியும் போட்டி போட்டுக்கொண்டு வீட்டு வேலை வாங்குகிறார்கள்.

கரிச்சா, இராமு கீதாரிக்கும் அவரது வளர்ப்பு மகன் வெள்ளைச்சாமிக்கும் உதவியாக வளசையில் இருக்கிறாள். கரிச்சா தான் வயதுக்கு வந்ததை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் தன் சகோதரியைப் பார்க்க ஓடுகிறாள். அவள் இருக்கும் நிலையறிந்து வருத்தப்படுகிறாள். கரிச்சாவைப் பெண் பார்க்க வரும் கூட்டத்தினர் வெள்ளைச்சாமியையும் அவளையும் இணைத்து தவறாகப் பேசிவிட்டுச் செல்கிறார்கள். இருவருக்கும் ஏதாவது வழிகாட்ட எண்ணும் ராமு கீதாரி, கரிச்சாவை வெள்ளைச்சாமிக்கே திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்தின்போது வெள்ளைச்சாமி ஆடு மேய்த்துக்கொண்டிருக்க ஆடு மேய்க்கும் கோலையே மணமகனாய் வைத்து திருமணம் செய்கிறார். இதுநாள் வரையில் தன் கிடையில் வேலைசெய்த அவனுக்கு கூலியாய் வந்த ஆடுகளை ஒதுக்கி இருவருக்கும் தனி வளசை போட்டுக் கொண்டு பிழைக்குமாறு சொல்லிவிட்டு, தன்னுடைய மகள் மருமகனோடு சேர்ந்து வாழ்கிறார். 

கரிச்சா, வெள்ளைச்சாமி திருமணத்தை அறிந்து, ‘அந்தப் பக்கம் உன்னோட அண்ணனே உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கும்போது என்னோட இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று சாம்பசிவம் வெள்ளச்சியை பாலியல் ரீதியாக துன்புறுத்த அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். சகோதரியின் ஈரப்பு கரிச்சாவை பெரிதும் பாதிக்கிறது. அடிக்கடி மனநிலை பாதித்த தன் அம்மாவை நினைத்துக் கொள்கிறாள் அவள். 
 
ஆரம்பத்தில் சுணக்கம் இருந்தாலும் கரிச்சாவும் வெள்ளைச்சாமியும் குழந்தை இல்லை என்கிற கவலையை தவிர்த்து எவ்வித சிக்கலுமின்றி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். சரியான மேய்ச்சல் நிலமின்மையால் இன்னொரு பகுதிக்கு கிடைகளுடன் நகர்ந்து செல்கிறார்கள். அங்கு சிறுவயதில் பிரிந்த தனது அண்ணனை சந்திக்கிறான் வெள்ளைச்சாமி. அதன்பிறகு குழந்தையின்மையை காரணம் காட்டி கரிச்சாவை விரட்டிவிட்டு தனது தங்கச்சியை திருமணம் செய்து வைக்க அண்ணனின் மனைவி முடிவு செய்து அதன்படியே காய் நகர்த்த, தன்மேல் உயிரையே வைத்திருந்த வெள்ளைச்சாமி இப்படி மனம் மாறிவிட்டானே என்று வருந்தி அவனைப் பிரிந்து ராமு கீதாரியிடம் மீண்டும் வந்து சேர்கிறாள் கரிச்சா. 

ராமு கீதாரியோ அப்போது பயங்கர பண நெருக்கடியில் மருமகனுடன் வாழ்ந்து வருகிறார். வெள்ளைச்சாமியிடம் தானே நேரில் தனியே சென்று எடுத்துச் சொல்லியும் அவன் அவரது வேண்டுகோளை உதாசீனம் செய்கிறான். அதில் மிகவும் வருத்தமடையும் ராமு கீதாரி, அவனை சபித்துவிட்டு வந்துவிடுகிறார். வெள்ளைச்சாமியின் இரண்டாவது திருமணம் ஏதோவொரு காரணத்தினால் நின்று விட்டாலும்கூட அவன் கரிச்சாவை அழைத்துச் செல்ல வராமல் போகிறான்.

வெள்ளைச்சாமியை பிரிந்து வந்த சில நாட்களிலே தான் கருவுற்றிருப்பதை அறிகிறாள் கரிச்சா. ராமு கீதாரியின் குடும்பத்திற்கு தொந்தரவாக இருக்க கூடாது என்று தனியாக கூலிக்கு ஆடு மேய்க்கிறாள். மகன் பிறந்த பிறகும் அவளது கணவன் அவளை வந்து பார்க்கவில்லை. என்ன கஷ்டம் நேர்ந்தாலும் வெள்ளைச்சாமியுடன் மீண்டும் செல்லவே கூடாது என்று வைராக்கியமாக இருக்கிறாள். மகனை வளர்த்து நன்றாக படிக்கவைக்க ஆசைப்படுகிறாள். ஆடுகளை கிடைபோட்டு தனியாக தங்கியிருக்கும் ஒருநாள் இரவு தொடர்ந்து மழை பெய்ய, ஒரு விஷக்கடியால் இறந்துபோகிறாள். செய்தியறிந்து செல்லும் இராமு கீதாரி அவளை அடக்கம் செய்துவிட்டு அவளது குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைச் சுமக்கிறார். 

வாழ்நாளெல்லாம் நாடோடிகளாய் அலைந்து திரிந்து கடும் உழைப்பையும் தியாகத்தையும் தவிர ஒரு சுகமும் அறியாத கீதாரி சமூகத்தின் வலி மிகுந்த வாழ்வின் பதிவே இந்நாவல். 

துளியும் ஒப்பனையற்ற யதார்த்தமான எளியநடை எழுத்துக்களால் ஒவ்வொரு வரிகளிலும் கண்ணீரை வரவழைக்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி. அவரது எழுத்து ஆளுமையைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளில்லை.

எல்லா ஊரிலும் இன்னமும் இராமு கீதாரிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். காலம்தான் அவர்களுக்கு விடிவு தரவேண்டும். அவர்களின் விடிவுக்கு நம் வாழ்க்கை எவ்வகையிலாவது பயன்பட வேண்டும் என்ற வலியுடனே மனதின் ஓரமாய் இக்கதை உயிர்த்துக்கொண்டிருக்கிறது.

21.12.16

"கீதாரி" - சு. தமிழ்ச்செல்வி

இந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சு அடைக்கிறது. நான் எத்தனையோ புத்தகங்களையும் படங்களையும் பார்த்து உறங்காமல் தவித்திருக்கிறேன். இந்தப் புத்தகம் என்னைப் பாதித்தது கொஞ்சநஞ்சமல்ல. பொதுவாக சமீப காலங்களில் நான் எந்தப் புத்தகங்களைப் படித்தாலும் அதன் சுருக்கத்தை எனது www.edhir.blogspot.in என்ற வலைப்பக்கத்தில் பதிந்துவிடுவேன். ஆனால் ஒருவழியாக கண்ணீருடன் படித்து முடித்து இந்தக் கதைச் சுருக்கத்தை எழுத எண்ணியபோதெல்லாம், கரிச்சாவை ஆளாக்கியதுபோல் அவள் விட்டுவிட்டுப்போன அவளது பிள்ளையையும் ஆளாக்க தன் உடல் தளர்ந்த காலத்திலும் மனம் தளராமல் ஆடு மேய்க்கும் இராமு கீதாரியின் துயர வாழ்வு என்னையும் சுட்டுக் கொண்டிருந்தது. சுருக்கமாய் எதை எழுதுவது எதை தவிர்ப்பது என்று அவ்வப்போது ஏதோ எழுதியும் திருப்தியின்றி தவிர்த்துவிட்டேன்.

இந்நாவலைப்பற்றி தன் வலைப்பக்கத்தில் சுருக்கி எழுதியிருந்த காயத்ரி என்பவரின் பதிவை எடுத்து இங்கே பதிகிறேன். 

இலக்கிய ஆர்வமும் தேடலும் உள்ளவர்கள் கட்டாயமாக இந்நாவலை ஒருமுறை வாசியுங்கள். 
*

கீதாரி - இயற்கையின் மாற்றங்களையும் சீற்றங்களையும் ஒன்றேபோல வெட்ட வெளியில் எதிர்கொள்ளும் ஆட்டிடையர்களின் துயர்நிரம்பிய வாழ்க்கையைப் பேசுகிறது. 

ராமு கீதாரி, கரிச்சா என்று இரண்டு கதாபாத்திரங்கள். பூவிடைப்பட்ட நார் போல கதை முழுக்க விரவி நிற்கும் இவர்கள் இருவரையும் உருவி எடுத்துவிட்டால் நாவல் பொலபொலவென வெறும் சொற்களாய்க் கொட்டிவிடுமோவென பிரமை தட்டியது எனக்கு.

அதிலும்.. அந்தப் பெண்... அந்த கரிச்சா.. என்னவொரு மனோதிடம் அவளுக்கு! ஒரே பேற்றில் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுவிட்டு இறந்து போகும் புத்திசுவாதீனமற்ற தாயொருத்தியின் மகள் அவள். ராமு கீதாரியின் பாதுகாப்பில் வளர்கிறாள். உடன்பிறந்தவளை வேறொருவருக்கு தத்து கொடுக்கையில் பிரிவில் உருகுகிறாள்.. பூப்படையும் போது பக்கத்தில் பெண் துணையின்றி முதன்முறையாய் இறந்து போன தாயை நினைத்து கொண்டு தவிக்கிறாள்... சந்தர்ப்ப சூழ்நிலையால் அதுவரை தனக்கு 'சித்தப்பா'வாயிருந்த கீதாரியின் வளர்ப்பு மகனையே மணக்கிறாள்... தத்து கொடுக்கப்பட்ட உடன்பிறந்தவள், வளர்ப்புத் தந்தையாலேயே கற்பழித்துக் கொல்லப்பட்டாளென அறிந்து கதறுகிறாள்... குழந்தையில்லை என கணவனின் வெறுப்பிற்கு ஆளாகிறாள்... தாங்க முடியாத கணத்தில் துணிந்து அவனைப் பிரிந்து வருகிறாள்.. 5 வருடங்களாய் வாய்க்காத பிள்ளை வரம் வாய்த்தும் மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாள்... முதிர்ந்து தளர்ந்த கீதாரியை தன் பொறுப்பில் பராமரிக்கிறாள்.. தன் மகனை படிக்க வைக்க விரும்புகிறாள்... எதிர்பாராத நாளொன்றில் பாம்பு கடித்து இறந்து போகிறாள்.

கரிச்சாவையும் அவள் தமக்கை சிவப்பியையும் அவள் கணவன் வெள்ளைச்சாமியையும் எதிர்பார்ப்புகளற்ற அன்போடு வளர்த்து ஆளாக்கிய கீதாரி.. கரிச்சாவின் மகனோடு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்!

'இன்னமும் எவ்வளவு துன்புறுத்திவிடுவாய் நீ?' என வாழ்க்கையிடம் பந்தயம் கட்டிக் கொண்டது போலிருக்கிறார்கள் இருவரும். 

முளைவிதையின் உயிர்த்துடிப்பும் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழ்தலுக்கான வேட்கையும் நிரம்பிய நாவல் மனதின் இருள் மூலைகளில் வெளிச்சமாய்க் கசிகிறது!

என்றாலும் கதை முழுக்க அறியாமையின் கோரப்பற்கள் ஒவ்வொருவரையும் குரூரமாய்க் கிழித்தெறிவது பரிதாபமாயிருக்கிறது.

"ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போல பிழைப்பு நடத்தும் ஆட்டுக்காரர்கள் ஊமைகளாகவே எங்குமிருந்தார்கள். ரோஷம், அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒரு போதும் நினைப்பதேயில்லை. இவர்களை வலிய கூப்பிட்டு யாரேனும் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள். இவர்களின் இந்த பரிதாபமான நிலை கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாய் இருக்கும். ' யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக..போன வருஷம் மொத வருஷத்துல அவுக கொல்ல பயிறு பச்சயில எங்க ஆடுக மேஞ்சிருக்கும்.. அந்த கோவத்துல அடிக்கறாக.. அவுக அடிக்கறது ஞாயந்தான ?. நம்ம மேல தப்பிருக்கு.. பட்டுகிட்டுதான் போகனும்' என்று மிக இயல்பாக சொல்வார்கள்"

இந்த மனிதர்களை என்ன சொல்ல?

படித்து முடிக்கையில்....

குறைந்தபட்ச நியதிகள், ஒழுக்கங்கள், தேவைகள் ஆகியவற்றோடு அதிகபட்ச துயரங்களை எதிர்கொள்ளும் இம்மக்களின் வாழ்க்கை, படிக்கும்போதும் படித்தபின்னும் 'அய்யோ' வென்ற பதைபதைப்பையும் 'எத்துணை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு நம்முடையது' என்ற ஆசுவாசத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

அறிவு என்பது ஏட்டுச் சுரக்காயா?

// முகநூலில் மட்டும் சுற்றி கொன்டு மற்றவர்களிடம் கருத்தியல்ரீதியாக மல்லுக்கட்டுவதின் மூலமாக எந்த பயனும் இல்லை. ஏட்டுச் சுரக்காய் கூட்டுக்கு உதவாது //

மிக முரண்பாடான பார்வை இது. அறிவு என்பது ஏட்டுச் சுரக்காய் அல்ல. இன்று இணையம் & முகநூல் வழியில்தான் கருத்துக்களை வெகுவாய் பரப்ப இயலும். மக்களின் கவனம் இதிலேதான் குவிந்துள்ளது. முந்தைய தலைமுறையினரைவிட இந்தத் தலைமுறையினரை எளிதில் கூர்தீட்டலாம். இது பயன்படுத்துபவரைப் பொருத்தது.

முரண்பாடுகள்தான் வளர்ச்சியைக் கொண்டுவருகிறது.

கருத்துரீதியாக மல்லுகட்டுவதைவிட சிறந்த வழி எது?

20.12.16

சூத்திர ஆதிக்கத்திற்கு பெரியார் அடித்தளமிட்டாரா?

தமிழகம் ஒழுங்காய்த்தான் போய்க்கொண்டிருந்தது. என்றைக்கு ஜாதி சங்கம் ஆரம்பித்தால் அதிகாரத்தைப் பிடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டதோ அன்றைக்கிலிருந்துதான் இந்த பிரச்சினை ஆரம்பித்தது.

இதற்காக இதற்கென பாடுபட்டோரை குறைசொல்வது நியாயமில்லை.

இதுவும் இல்லாமல் இருந்திருந்தால் என்னாகியிருக்கும்?

பெரியார் ஆரம்பித்து வைத்தார். அடுத்து ஏன் யாரும் கொண்டுசெல்லவில்லை? அது யார் தவறு? எல்லாவற்றுக்கும் அவரே செய்திருக்க வேண்டுமெனில் மற்றவர்களுக்குப் பொறுப்பில்லையா?

பாதிக்கப்பட்டவர்களுக்காக நீங்கள் ஆதரிப்பவர்களின் எதிர்வினை என்ன?

அம்பேத்கர் எல்லோரிடமும் கொண்டு செல்லப்பட்டாரா?

இதற்கான அடுத்த செயல்திட்டம் என்ன?

ஒரே சமூக விடுதலைக்கு பாடுபட எதற்கு ஓராயிரம் அமைப்புகள்?

எல்லா தலித் அமைப்புகளும் ஓரணியில் திரண்டால் இங்கு அதிகாரம் அவர்கள் கையில்தான். இது ஏன் சாத்தியப்படவில்லை?

அதிமுகவில் 31 தலித் எம் எல் ஏக்கள் இருந்தும் ஊமைகளாய் இருக்கக் காரணம் என்ன, பெரியாரா? அம்பேத்கரா?

இதற்குமா பெரியார் பொறுப்பு?

சமூக நீதி போராட்டம் என்பது ஒரு தொடர்ச்சியான போராட்டம். அது அறியாமை ஒழிக்கப்படும்வரையில் நிற்கப்போவதில்லை. ஆதிக்க ஜாதிகளில் இருக்கும் ஜனநாயகவாதிகளின் துணையைப் படிப்படியாக பெருக்கி வளர்த்துதான் அவர்களின் ஆதிக்கத்தை வீழ்த்த முடியும்.

சமூகநீதி தோற்கிறதென்றால் நிகழ்காலத்தில் வாழும் நாம்தான் அதற்கு முழுப்பொறுப்பு. யாரைக் குறை சொன்னாலும் அது எஸ்கேப்பிசம்.

உங்கள் "செயற்திட்டம்" என்ன?

17.12.16

எளிமை

முதல்வர் ஓ.ப.செ-வின் ஐந்தாண்டு ஆட்சி நிறைவில் ஜெ. செல்லாக்காசாகிவிடுவார் என்பது மட்டும் நிச்சயம்.

நாட்டை ஆள ஏதோ "சிறப்புத் திறமை" தேவை என்பதுபோல தமிழக மக்களை நினைக்க வைத்து எதற்கெடுத்தாலும் "தான்" என்ற ஆணவத்துடனும் ஆடம்பர படோடாபத்துடனும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார் ஜெ.

ராம்குமார் மரண மர்மத்தைப் போலவே அவர் மரண மர்மத்தைப் பற்றியும் மக்கள் பேசுமளவுக்கான ஒரு வெளிப்படையான நிர்வாகமற்ற மோசமான சூழலுள்ள நாட்டையே அவர் விட்டுச் சென்றுள்ளதே இதற்கு சாட்சி.

எளிமையை மட்டுமே தன் பலமாகக் காட்டிகொண்டு ஆதாயம் தேட முதல்வர் ஓ.ப.செ முற்படாதவரையில் நல்லது.

எதிர்காலத்தில் ஏராளமான நல்ல முதல்வர்கள் தோன்றுவார்கள். மாபெரும் தலைவர்கள் என்று ஊரை ஏமாற்றியவர்கள் எல்லாம் ஒருநாளைக்கு சாயம் வெளுப்பார்கள்.

ஜெ. புதைத்த இடத்தில் 15 கோடி செலவில் மண்டபமாம்.

2516 என்றொரு ஆண்டு வரும். அப்போது நாமிருக்க மாட்டோம். அதுவரையில் எத்தனையோ முதல்வர்கள் ஆண்டுவிட்டு மறைந்திருப்பார்கள். எல்லோரையும் மெரினாவில் வைத்தோ அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்தோதான் கொண்டாட வேண்டுமா?

மெரீனா - உலகின் நீளமான கடற்கரையா? ஆடம்பரமான சுடுகாடா?

வாழ்ந்த முதல்வர்களைக் கொண்டாடுவதுதான் மக்களின் முக்கியப் பிரச்சினையா?

மாட்டுத் தொழுவத்தைப் போன்ற வீடுகளில் வாழும் மக்களைக் கொண்ட நாட்டில் ஒரு சமாதிக்கு செலவுத்திட்டம் 15 கோடியா?

மகாராணிபோல் ஒருவர் இருந்துவிட்டுப் போன இடத்தில் இப்படியொருவர் வந்திருக்கிறார். ஒப்பீட்டளவில் முதல்வர் ஓ.ப.செ-வின் இந்த எளிமை எனக்கு பிடித்திருக்கிறது.

அடுத்தடுத்து எளிமையான ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக வர வேண்டும். ஆனால், எளிமை மட்டுமே திறமையில்லை என்பதையும்; வாக்குறுதி எனும் ஏமாற்றுத்தனத்தால் பதவிக்கு வந்து போவோர்களை விசேஷமாய் எண்ணிக் கொண்டாடுவது தேவையற்றது என்பதையும் மக்கள் உணர வேண்டும்.




14.12.16

வாய்மை

ஒரு குற்றத்தை செய்ய ஒரு குற்றவாளி குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக்கொள்கிறான். திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள் பலநாட்கள் வேவு பார்க்கப்பட்டே நடத்தப்படுகின்றன. ஆனால் குற்றம் நடந்தவுடனே குற்றவாளிகளைப் பிடிக்கச் சொல்லி ஊடகங்களும் மக்களின் பொதுபுத்தியும் காவல்துறையை அழுத்துகின்றன. இந்த அழுத்தத்தின் காரணமாக குற்றவாளிகளை உடனடியாக பிடித்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும் காவல்துறை, போதுமான கால அவகாசம் எடுக்காமல் வழக்குகளை விரைவில் முடிக்கவும் மக்களையும் ஊடகங்களையும் திருப்திபடுத்தவும் யாரோவொரு அப்பாவியை குற்றவாளி ஆக்கிவிடுகிறது. பின்னர் அக்குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்று வெளியுலகிற்கு தெரிய வந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து விடுபட இயலாமல் போகிறது.

இதற்கு ராஜிவ் கொலை விசாரணையில் நடந்த ஜோடிப்புகளையே உதாரணமாகக் கொள்ளலாம்.

ஒரு வழக்கில் ஒரு நீதிபதி அளிக்கும் தீர்ப்பை அதே வழக்கில் மேல் நீதிபதி மாற்றி அளிக்கிறார். நீதி எப்படி மாறுபடும்? அப்படியானால் தவறு நீதித்துறையிலா? நீதி வழங்கும் முறையிலா? நீதிபதிகளிடமா?

நீதிபதிகளின் தனி விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே ஒரு வழக்கு பார்க்கப்படுகிறது. ஒரு தவறான தீர்ப்பு பல பாதிப்புகளை சமூகத்தில் உருவாக்குகிறது. எனவே தீர்ப்பு வழங்கப்படும் முன்னர் பலரால் விவாதிக்கப்பட்டு ஒரு முடிவுக்கு வருவது நல்லது என இப்படம் சொல்கிறது.

ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளிவந்த 12, 12 angry man என்ற படங்களின் தழுவல்தான் இப்படம்.

படம் எடுக்கப்பட்ட விதம் மிக சுமார். உள்ளடக்கம் மிக அருமை.

12.12.16

ஓ. பன்னீர்செல்வம்

ஜெ ஆட்சியைவிட இவரது ஆட்சி மிக எளிமையாக இருக்கும் என நம்பலாம். ஜெ அளவுக்கு மக்களை துச்சமாய் மதிக்க வாய்ப்பில்லை. பார்ப்போம். 

இந்த மாதிரியான எளிமைக்கு திமுக-வின் எல்லா மாவட்ட செ-க்களும் மாறிவிட்டால் தமிழ்நாட்டுக்கும் அந்தக் கட்சிக்கும் ரொம்ப நல்லது. இதையும் பார்ப்போம்.

மீண்டும் மாரடைப்பு

ஆன்மா என்று ஒன்று இருந்தால்...

விரட்டப்பட்டவர்கள் எல்லாம் கூடியிருப்பதைப் பார்த்து ஜெ.வின் ஆன்மாவுக்கும்கூட மாரடைப்பு வந்திருக்கலாம். 

"ஜெ.வுக்கு ஆழ்ந்த அனுதாபம்"

ஜூனியர் அம்மா

உலகிலேயே நோயாளிகளைப் பற்றி அறிவுப்பூர்வமான முறையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் திறமைகொண்ட தமிழகத்தின் ஜூனியர் அம்மா சி.ஆர்.எஸ்.

ஜெ. நாமம் வாழ்க
MGR நாமம் வாழ்க

தற்கொலையின் வரலாறு

தற்கொலையின் வரலாறு நெடியது. ஆதி இனக்குழு வாழ்க்கை முறையில் ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுவோடு சண்டையிடும். இதில் வெற்றிபெற்ற இனக்குழு, தோல்வியடைந்த இனக்குழுவை பெண்கள் தவிர்த்து மற்ற எல்லோரையும் கூண்டோடு அழிக்கும்.

தோல்வியுற்ற இனக்குழுத் தலைவன் முதலில் கொடூரமாக கொலை செய்யப்படுவான். மற்றவர்கள் கொலைக்கு பயந்து மலைகளில் இருந்து குதித்து கூண்டோடு தற்கொலை செய்து கொள்வார்கள்.

தலைவன் இறந்த பிறகு தாங்கள் இனிமேல் வாழ முடியாது என்ற எண்ணம் மேலோங்குவதால் தற்கொலைகள் நடந்தது. அதன் பிறகு அதிலுள்ள சிலர் தற்கொலைகளை தடுக்கும் நோக்கோடு, தலைவன் இறந்தாலும் ஊர் எல்லையில் நின்று நம் மக்களைக் காப்பார் என்று இறந்தவரின் உருவமாதிரியை செய்து, கையில் அருவாளைக் கொடுத்து ஊர் எல்லையில் நிறுத்தி வைத்தார்கள்.

தலைவன் ஊர் எல்லையில் எதிரியை வரவிடாமல் காக்கிறார் என்ற மன நிம்மதியோடு இருந்தார்கள். இதுவே அய்யனார் வழிபாட்டின் ஆரம்பம். அய்யனார் சிலைகள் ஊர் எல்லையில், கொடூரமான விழிகளுடன், சினத்தோடு நிற்பது இதனால்தான்.

இன்றும் அரசியல் தலைவர்கள் இறந்துவிட்டால் தொண்டர்கள் தற்கொலை செய்வது இந்த மனோபாவத்தின் தொடர்ச்சியே.

_ சூர்யா சேவியர்

இதுவும் மாறும்

உலகில் வரலாற்றின் போக்கு ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் மாறுகிறது. எல்லா வரலாறுகளும் அவரவர்களுக்குத் தெரிந்த உண்மை மட்டுமே. அவ்வளவுதான். 

எல்லாம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. 

இதுவும் மாறும்.

பெருமை..!!

 💪💪💪...

எப்படியாகிலும் பாடுபட்டு இந்த நாட்டை முன்னேற்றிவிட வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் நம் மக்கள் பிரதிநிதிகளை எண்ணினால் உண்மையிலேயே மிகவும் பெருமையாக உள்ளது. ஆனந்தக் கண்ணீர் வருகிறது. 

புரட்சித் தலைவர் நாமம் வாழ்க...!!
அம்மா நாமம் வாழ்க...!!

திருப்பதி மொட்டை...?

கி.பி.7 ம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் பரவிய காலத்தில் தான் இந்த நிலப்பரப்பில் கோவில்கள் கட்டப்பட்டன.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் கடுமையான மதமாற்றப் பணிகளை செய்து முடித்தனர். அவர்களுக்கு இணையான மதமாற்றத்தை உலகில் இதுவரை எவரும் செய்ததில்லை.

கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதற்கு ஒரே உதாரணம் ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவ மக்கள் தொகை 4% சதத்தை தாண்டாதது தான்.

கிறிஸ்தவம் இந்திய நிலப்பரப்பில் வளராமல் போனதற்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. அது யாதெனில் கிறிஸ்துவின் பிறப்பு குறித்ததும் கிருஷ்ணரின் பிறப்பு குறித்ததும் ஒன்றுதான்.

மதமாற்றம் செய்வது வேறு. மதம் மாறுவது என்பது வேறு. இங்கு அதிகாரம் மூலம் மட்டுமே மதம் மாற்றப்பட்டார்கள். மதம் மாறுவது என்பது தனிநபர் மனம் சார்ந்த தேடல் மட்டுமே.

ஒரு நடிகனின் ரசிகனாக இருப்பவனை மற்றொரு நடிகனின் ரசிகனாக மாற்ற முடியாது எளிதில்.

பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு வைதீகம் வந்து சேர்ந்தது. வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும். வைணவத்தின் இருகிய தன்மையை உடைத்ததே ராமானுஜரின் தென்கலை வைணவம். வடகலை இன்றும் வக்கிரங்களோடு வாழ்கிறது. ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை வடகலை வைணவர்களே.

இந்த நிலப்பரப்பெங்கும் இருந்த பௌத்த ஆலயங்கள் கி.பி.7 க்குப் பிறகு அப்படியே சைவ-வைணவ பங்குளாக பிரிக்கப்பட்டன.
திருப்பதி பெருமாள் கோவிலும் பௌத்த ஆலயமே.

இன்றுள்ள பெருமாள் சிலையின் அலங்காரத்தை அகற்றினால் உள்ளே புத்தரே இருப்பார். எந்த பெருமாள் கோவிலிலும் மொட்டையடிக்கும் வழக்கம் கிடையாது. பௌத்த வழக்கமே மொட்டையடித்தல்.

நேற்று ஒரு நண்பர் இதைப்பற்றி கடந்த பதிவில் கேட்டார். அவருக்காக இந்தப் பதிவு. உங்களுக்கு பயன்பட்டாலும் கூட.

புத்தரை தூக்கி எறிந்த சந்தோச முழக்கமே "கோவிந்தா... கோவிந்தா..." கோ என்றால் அரசன் என்ற பொருள் உண்டு. அந்த அரசன் புத்தனே.

இந்திய வரலாறு என்பது 
"பௌத்தத்திற்கும் -பார்பபனியத்திற்கும்" நடந்த யுத்தமே என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்து நினைவில் கொள்ளத்தக்கது.

இதுவே அங்குள்ள சிலை.

Surya Xavierr

அடுத்தது யார்?

👶🏻👶🏻👶🏻...

அடுத்த "அம்மா" கிடைத்துவிட்டார்.
அடுத்த "தோழி" யார்?

வதந்தி

"வதந்தி" என்று சொல்வது குறுகிய பார்வை. அதை "கருத்துச் சுதந்திரம்" என்று சொல்வதே சரியான பார்வை. 

"வதந்திகள்" பெருகினால்தான் உண்மை வெளியே வரும். பொய் பதைபதைக்கும். 

தொடர்ந்து எழுதுங்கள். இது நமது கருத்துச் சுதந்திரம்.

I mean... வசந்தியை நிறுத்திடாதீங்கோ

எம்.ஜி.ஆர்

தமிழக அரசியலில் எம்ஜிஆர் ஒரு கரும்புள்ளியாக இருந்தது தான் இன்று நாம் சந்திக்கும் பிரச்சனைக்கு காரணம்! 

அவரை அங்கீகரித்த அண்ணா மீதும் எனக்கு கோபமுண்டு, அரசியல் கொள்கை, செயலாற்றல், சமூக அரசியலுக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுதல் போன்றவற்றை எல்லாம் வைத்து சிந்திக்கும் மக்களின் அரசியல் அறிவை மழுங்கடிக்க செய்தது popularity மூடத்தனம்! 

இது ஒரு யுக்தியாகவே மாற, அதிதீவிரமான கொள்கை சார்ந்த திராவிட முன்னேற்ற கழகத்தில் எம்ஜிஆர் விலகிய பின்னரும் அரசியலை தக்க வைக்க, பிரபல மானவரை நிறுத்தி வாக்குகளை அறுவடை செய்யும் அரசியல் influence செய்ய ஆரம்பித்தது! 

அது ஏற்படுத்திய நம்பிக்கை, நாளை நாமும் அரசியல் செய்து விட முடியாதா, என விஷாலை போல காய் நகர்த்துகிற அளவு வந்து நிற்கிறது! 

அரசியலுக்கு உண்டான தகுதி வெறும் கல்வி மட்டுமே கிடையாது, களம், அரசியல் அறிவு, வரலாற்று அறிவு, சமூக புரிதலென இவையெல்லாமே தான்! 

எம்ஜிஆர் வந்தப்புறம் அதை செய்தார், இதை செய்தார் என்பதெல்லாம் அரசியல் வாதமல்ல, மக்கள் பணத்தை திட்டங்களுக்காக ஒதுக்கி நன்மதிப்பு பெறுவதெல்லாம் அரசியல் என்றால் ஐயாம் சாரி! tresuries ல் இருக்கும் மேலாளர் செய்து விடுவார் அந்த வேலையை! 

மக்களை சமூக சிந்தனைக்கு உட்படுத்தாமல் வாத்தியார் எதை செஞ்சாலும் சூப்பர் என சொல்கிற ஹீரோ வொர்ஷிப் தனமெல்லாம் அரசியலின் பெரும் பின்னடைவு! சமூகத்தை வெறும் உணர்வு பிண்டங்களாக பார்ப்பது எந்த பலனையும் தராது, சமூகத்தை அதன் பிடியில் இருந்து பார்த்தால் தான் யாருக்கு எதை செய்யவேண்டுமென்கிற புரிதல் வரும்! 

சினிமாவில் ரிக் ஷா காரனை வழிமறித்து பத்தடி வண்டியை தள்ளுவது, கிழவியை கட்டிப்பிடிப்பது, ஸ்கூலுக்கு போற குழந்தையை இடைமறித்து தூக்கி கொஞ்சி ஏன் லேட்டுன்னு அந்த குழந்தையை டீச்சர் கிட்ட அடிவாங்க விட்டதெல்லாம் அல்டரா கிம்மிக்ஸ்! திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் எல்லாம் நிஜ வாழ்விலும் நல்லவர்கள், தூய்மையானவர்கள் என்கிற அந்த தன்மையை விதைத்த உளவியல் மிகப்பெரிய சிக்கலாக இன்று வரை, ஒவ்வொரு நடிகனை கொண்டாடவும், திரை தாண்டி அவன் தனி வாழ்க்கையை புனித படுத்தவும் ஆயுத்தமானது என்பதை ரஜினி கமல் விஜய் அஜித் ரசிகர்கள் தங்கள் தலைவன் மீது சிறு விமர்சனம் வருவதை கூட தாங்கிக்கொள்ள இயலாத மனோநிலையில் இருப்பதை பாருங்கள்! இவர்களெல்லாம் அரசியலுக்கு வந்தால் கூட அதை அங்கீகரிக்க போகும் அந்த ஜுஸ்டிபிகேஷன் point பெரும்பாலான ரசிகர்கள் உள்ளவே ஊறி போய் கிடக்கிறது! 

எம்ஜிஆரின் வருகைக்கு பின்னர் தான் தமிழகத்தில் பிரச்சாரங்கள் போக்கு மாறியது, மேடை பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம், தெருக்கூட்டம் எல்லாம் மாறி வெள்ளை தோலுக்கு முண்டி அடித்து கொண்டு போய் நின்ற மூடர்கூட்டம் உருவானது, தீப்பொறியான சமூக அரசியல் பேச்சை கேட்டு பழகியிருந்த மக்கள் "உங்களை பார்த்தா மட்டும் போதும்" அரசியலுக்கு தயாரானார்கள், நாலு கம்யூனிஸ்ட் காரன் நா வறண்டு ஆளே இல்லாமல் கத்தி கொண்டிருக்கு நயன்தாராவை பார்க்க முட்டி மோத பார்க்க ஓடியது எல்லாம் இங்கிருந்து உற்பத்தியான கூட்டம் தான். 

கலையும் இலக்கியமும் ஜனரஞ்சகமாக அரசியல் செய்ய பயன்பட, எம்ஜிஆருக்கு பின் அதுவே அரசியலானது! 

இந்த சமூகத்து அரசியலே இரண்டு தான், ராஜாஜியா, பெரியாரா என்பது தான், இவை இரண்டுக்கும் இல்லாமல், எல்லோருக்குமான அரசியல் செய்ய ஆரம்பித்த நடுநிலை சிம்மல் தான் எம்ஜிஆர், இந்தியா மாதிரியான நாட்டில் எல்லோருக்குமான அரசியல் கொள்கையெல்லாம் வாய்ப்பே இல்லை, அது நாடகம், அது போலி! நடுநிலை என்றாலே அங்கே நசுக்கப்படுவது விளிம்பு நிலை மக்கள் தான்! 

எம்ஜிஆர் ideologically கன்பூஷியன்!

- வாசுகி பாஸ்கர்

மக்கள் முடிவு செய்யட்டும்

சசிகலாவோ அல்லது வேறு யாரோ அதிமுக-வின் பொதுச்செயலாராகவோ அல்லது தமிழக முதல்வராகவோ ஆகக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. யாரும் என்ன பதவிக்கு வேண்டுமானாலும் வர  மக்களாட்சியில் உரிமையுள்ளது. இது ஜெ.வுக்காக மக்கள் செலுத்திய வாக்கில் உருவான ஆட்சி. இவர்களுக்காக அல்ல. இவர்களின் பலம் என்ன? இவர்களை மக்கள் ஆதரிக்கிறார்களா? என்பதை இவர்கள் புரிந்துகொண்டு நடக்க, ஆட்சியைக் கலைத்துவிட்டு மக்களிடம் முன் கூட்டியே அறிவித்துவிட்டு ஒரு தேர்தலில் நின்று வரவேண்டும். இதுதான் ஜனநாயக முறையிலானது.

ஜெ.வுக்கு மாற்றாக மக்கள் தம்மை ஏற்றுக்கொண்டார்களா? என்பதை உணராமல் 'மகாகணம் பொருந்திய சர்வ வல்லமை'யாக தங்களை இவர்களே எண்ணிக்கொண்டால் தமிழ்நாட்டின் எதிர்காலம் மிக மோசமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

செய்வார்களா?
இவர்கள் செய்வார்களா?

(இப்பதிவை தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் பின்னூட்டத்தில் வந்து நகைச்சுவை காட்ட வேண்டாம்)

சந்தேக மரணங்கள்

"அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமையை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தருவதே சுதந்திரம்"

*
ராஜீவ் மரணம்
சங்கர ராமன் மரணம்
ராமஜெயம் மரணம்
இளவரசன் மரணம்
கோகுல்நாத் மரணம்
சுவாதி மரணம்
ராம்குமார் மரணம்
கோகுலப்பிரியா மரணம்
அப்துல் கலாம் மரணம்
அப்பல்லோ 75 நாட்கள் விவரம்
.
.
.

மக்களுக்கும் அதிகாரத்திற்கும் இடையில் ஏதோவொரு திரை இருக்கிறது. வெளிப்படையான திறந்த நிர்வாகம் இன்னும் ஏற்பட்டதாய் தெரியவில்லை.

எம்.எல்.ஏ & எம்.பி-க்களால் கூட நடந்ததைக் கேட்க தைரியமில்லை. இதில் தனிமனிதனுக்கு எப்போது தைரியம் வருவது?

1947 ல் வாங்கிய சுதந்திரம் நடுவழியிலேயே நிற்கிறது. கடைசி எளிய மனிதனுக்கும் தடையில்லாமல் சென்று சேர வேண்டும். 

எப்போது? 

#_சுதந்திரம்

"அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமையை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தருவதே சுதந்திரம்"

நியாயம் - அவமானம்

"நியாயத்தைப் பேச விரும்புபவர்கள் அவமானத்தை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்"

வீ எ வெ பு ஜனகராஜ்கள்

👶🏻👶🏻👶🏻... 

எல்லா கட்சியின் எம்.எல்.ஏ-க்களும் அவரவர் தொகுதிகளுக்கு ஒழுங்காய் சேவை செய்தால் கண்டவர்களுக்கு எல்லாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. கட்சி வெளியே தள்ளினாலும் சொந்த செல்வாக்கில் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள வழியுண்டு. செலவு செய்ததை சம்பாதிப்பதிலேயே கவனம் இருப்பதுதான் பிரச்சினையே. தொகுதிக்குப் பணி செய்யும் பழக்கம் அறவே இல்லாததால்தான் தலைமைகளிடம் தானாய் வளைகிறது முதுகெலும்பு.

ஆனால் தெறிக்கும் மீசைகளுக்கும் வெளுப்பான உடுப்புகளுக்கும் மட்டும் குறைச்சலில்லை.

உறுதி வேண்டும்

"என் காலில் யாரும் விழவேண்டாம் - முதல்வர் ஓ.ப.செ"

வரவேற்கிறோம்... 🙏

எனினும் முக்கியமாக "இனிமேல் நான் யார் காலிலும் விழமாட்டேன்" என்று நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக டெல்லியின் காலடியில் தமிழ்நாட்டை விழவைக்க மாட்டேன் என்று.

சோ - சிவலோகம் சென்றார்

"இவருடைய இறப்பு நாட்டின் நலனுக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நல்லது"

*
"ஒரு மனிதரின் இறப்பு குறித்து நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. ஆனால் இவருடைய இறப்பு நாட்டின் நலனுக்கு மிகவும் நல்லது"

அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்கும் 27% இட ஒதுக்கீட்டை நடமுறைபடுத்திய மறைந்த பிரதமர் "உயர்திரு. வி.பி.சிங்" அவர்களின் மறைவு குறித்து துக்ளக்கில் வெறுப்புடனும் திமிருடனும் "சோ" எழுதியது. 

இதையே அவர் சாவுக்கு இப்படி எழுதுகிறோம்...

"இவருடைய இறப்பு நாட்டின் நலனுக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நல்லது"

போதும் நிறுத்துங்கள்

✋✋✋...

கவர்னர் மாளிகையில் கைத்தடி ஊன்றி நடந்த, 80 வயது முதியவரான கவர்னர் சென்னாரெட்டி, தன்னை மானபங்கம் படுத்தியதாக, தான் பெண் என்பதையும், தமிழ் நாட்டின் முதல்வர் என்பதையும் மறந்து ஒரு பொய்புகாரை சொன்னவர் யார்??

ஐபிஎஸ் சந்திரலேகா என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்க வைத்ததும் இல்லாமல் அதற்கு உதவிய மும்பை கூலிப்படையை சேர்ந்த சுர்லாவை காப்பற்ற போராடியது எந்த பெண்மணி???

எம்ஜியரை மோர்ல விஷம் வைத்து கொன்றார் என்று அவரின் மனைவியான ஜானகி என்ற பெண்ணின் மீது அபாண்ட பழிபோட்டவர் யார்??

எம்.ஜி.ஆரின் உதவியாளர் முத்து என்பவர் மீது கஞ்சா கேஸ் போட்டு பழிவாங்கியவர் யார்??

சசிகலா கணவர் நடராஜனுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்ற காரணத்தினால் செரினா என்ற பெண்ணின் மீது பொய் கஞ்சா வழக்கு போட்டு கைது செய்து கொடுமைப்படுத்தி, கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் ஓட விட்டது எந்த பெண்மணி???

 உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் வீட்டுக்கு மின் இணைப்பையும் குடிநீர் இணைப்பையும் நிறுத்தியது யார்?? 

வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் விஜயன் மீதான தாக்குதல், தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மீதான தாக்குதல், அமைச்சர் ப.சிதம்பரம் மீது தாக்குதல்... இதெல்லாம் யாருடைய உத்தரவு???

நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்டது எந்த பெண்மணி??

ஆடிட்டரை செருப்பால் அடித்து துவைத்தது எந்த லேடி??

அப்பல்லோ மருத்துவமனை மூத்த மருத்துவர் கருணாநிதி என்பவரை, சிவந்தி ஆதித்தனை பார்க்க வந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் காலணிக்கு மேல் மேலுரை மாட்டி வார்டிற்குள் வரும்படி சொன்னதற்காக, பொய் வழக்கு போட்டு இரவோடு இரவாக  சிறைக்கு அனுபியவர் யார்??

தனக்கு எதிராக பேசினார்கள், எழுதினார்கள் என்று சொல்லி நூற்றுகணக்கான அவதூறு வழக்குகளை போட்டது எந்த அயன் லேடி???

தருமபுரியில் மூன்று மாணவிகளை (பெண்களை) உயிருடன் கொளுத்திய குற்றவாளிகளை காப்பற்ற சாட்சிகளை மிரட்டியது எந்த பெண்மணி???

தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகர் மீதே வழக்குப் போட்டு, அவர் சம்பந்தம் வைத்துக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு மிகப்பெரிய மன அதிர்ச்சியை அளித்தவர் எந்த லேடி??

நடு இரவில் வீடு புகுந்து அரசு அலுவலர்களை அள்ளிச் சென்ற போது அவர்களுடைய மனைவிகளின் குரல் இவருக்கு பெண்குரலாக தெரியவில்லையா??

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், ஆயிரகணக்கான சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்காமல், பலரை தற்கொலைக்கு தள்ளியது எந்த பெண்மணி??

"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று ஈழத்தமிழர்கள் படுகொலையைப் பற்றிச் சொன்னது யார்?

எழுவர் விடுதலைக்கு தீர்மானம் போட்டுவிட்டு அவர்களை பரோலில் விட மறுத்தது யார்?

சமச்சீர் கல்விக்கு முதலில் முட்டுக்கட்டை போட்டது யார்?

அண்ணா நூலகத்தை மூட முயற்சித்தது யார்?

ஒருஜாதிக்கு குருபூஜை நடத்த அனுமதி கொடுத்து பிற ஜாதிகளுக்கு 144 போட்டது யார்?

பிரச்சாரத்தின்போது வெயில் கொடுமையால் இறந்தவர்களைப் பற்றிப் பொய்யை பரப்பியது யார்?

பார்வையற்றோர்களை போலிசைவிட்டு சுடுகாடுவரை விரட்டி அடித்தது யார்?
.
.
.
நல்லதை பாராட்டுகிற / தவறுகளை விமர்சிக்கிற நியாயமான பார்வைகொண்ட அறிவுள்ள மக்கள் பெருக வேண்டும்.

அனுதாபங்களை மட்டுமே மூலதனமாக்கி அரசியல் நடப்பது இங்கே மாற வேண்டும். 

இவ்வளவுதான் நம் நோக்கம்.

அடுத்தது தீபா-வாமே...??

👶🏻👶🏻👶🏻...


யாரோ "கிருஷ்ணமூர்த்தி"ன்னு ஒரு வழக்கறிஞராம். 75 நாளுக்கு முன்னாடி செவ்வாய் கிரகத்துக்கு போனவர் நேத்துதான் சென்னைக்கு வந்திருக்கிறாராம். சசிகலாவை ஒழித்துவிட்டு ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை தலைவராக்கனுமாம். 


தமிழர்களுக்காக என்னென்ன தியாகமெல்லாம் இதுவரை அந்தத் தீபா செஞ்சுருக்காங்கன்றத சொல்வாருன்னு உத்துக் கேட்டேன். ஒன்னுமில்லை. 



கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ

RIP JJ

ஜெ.வைப் புகழ்ந்து சட்டசபையில் உருகி உருகி பாட்டுபாடினார். அடுத்த நாட்களில் ஜெ. அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். 

தொகுதிக்கு வரமாட்டீர்களா? என்று தொலைபேசியில் கேட்ட தன் தொகுதி ஆள் மீது புகார் தந்து கைது செய்ய வைத்தார்.

ஜெ. வின் இறுதி யாத்திரையில் "கருணாஸ் MLA" எவ்வளவு சோகமாய் இருக்கிறார் பாருங்கள். 

"நாய்போல் இருந்தவனுக்கு இந்த வாழ்வு தந்தவர்" என அவரே ஜெ.வைப் புகழ்ந்து சட்டசபையில் பேசினார். 

அப்பேர்ப்பட்ட ஜெ.வுக்கே இவ்வளவு மரியாதை என்றால் வாக்களித்த தொகுதி மக்களை எந்தளவு மதிப்பார்?

பாவம் "மக்களாட்சி"

சிவலோகப் பதவியில் "சோ"

"தமிழ் செம்மொழி ஆனால் அரிசி பருப்பு விலை குறைந்துவிடுமா?"

"தமிழ் படித்தால் சட்டி சுரண்டத்தான் போக வேண்டும்"

"விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்"

"ஈழப்போரை இந்தியா ஆதரிக்கவேண்டும்"

*
தன் ரத்தம் புத்தி எல்லாம் தீவிர தமிழின வெறுப்புகொண்ட நகைச்சுவை நடிகர் "சோ" சிவலோக பதவி அடைந்தார்.

மாமனிதரின் நினைவுநாள்

டிசம்பர் 06, 

மாமனிதர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்

"நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை"

ஜெய்பீம்....!!!

ராணுவம் என்ன செய்தது அப்போது?

ஜெ. இறப்புக்கு ராணுவம் குவிப்பு.

கர்நாடகாவில் தமிழர்களும் தமிழர்களின் வாகனங்களும் தொடர்ந்து தாக்கப்பட்டபோது ஏன் அவர்கள் ராணுவத்தை அனுப்பவில்லை?

தமிழக ஊடகங்கள்

👶🏻👶🏻👶🏻....

"மழையில் நனைந்த புதிய 2000 ரூபாய் தாள்களாய் தமிழக ஊடகங்கள்"


பாண்டே தனியாளில்லை

ஜெ. மரணத்தை முன்கூட்டியே அறிவித்து திரும்ப பெறுகிறார் ரங்கராஜ் பாண்டே.

மத்திய அரசு மற்றும் உளவுத்துறையின் ஆசீர்வாதம் பெற்ற மிகச் சிறந்த ஊடகவியலாளர் மாண்புமிகு #_பாண்டே

தமிழக மக்கள் எப்போது? எதெதை? எப்படி? எவ்வாறு? சிந்திக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு உருவாக்கும் சிந்தனை சிற்பி இந்த மாண்புமிகு #_பாண்டே

மாண்புமிகு #_பாண்டே மீது கை வைக்க யாருக்கேனும் வலு இருக்கிறதா? டெல்லியே அலறுமன்றோ..!!

ஒருவேளை மாண்புமிகு  #_பாண்டே வை வெளியேற்றினால் தந்தி மீது பல வழக்குகள் பாயக்கூடும். முடக்கப்படவும் கூடும். 

ஏனென்றால்....
மாண்புமிகு "பாண்டே தனியாளில்லை"

வைகோ அப்பல்லோவுக்கு ஆதரவு

👼...

"திமுக-வை சமாளிக்க வைகோ-வை பயன்படுத்தி தமிழகத்தில் விளையாட வருகிறது ஹிந்துத்வா. 

தான் மிகப்பெரிய கோமாளி என்பதை நிரூபிக்க வைகோ-விற்கு கடைசியாக ஒரு சிறந்த வாய்ப்பு"

மக்களாட்சியின் பலவீனம்

"தங்களுக்கு இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும் மக்கள் எளிமையாய் மறந்துவிடுகிறார்கள். இதுவே மக்களாட்சியின் மிகப்பெரிய பலவீனம். அடுத்தடுத்து பதவி அதிகாரத்திற்கு வருபவர்களுக்கு இது மிகவும் வசதியாய் ஆகிவிடுகிறது. எவ்வளவுதான் ஊழல், எதேச்சதிகாரம், சுயநலம், ஆணவப்போக்கான செயல்பாடு இருந்தாலும் வரலாற்றில் அவர்களுக்கும் இடம் கிடைத்துவிடுகிறது"

ஜெ. உடல் நிலை...?

#_டிச_06

"புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாள். மசூதியை இடிக்க திட்டமிட்டு இந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்தநாள் பின்னாளில் அம்பேத்கர் நினைவுநாள் என்பதைவிட மசூதி இடிப்பு நாளாக பலராலும் அறியப்பட்டது. 

இனி இந்தநாளில் மசூதி இடிப்பு மட்டுமே நினைவுகொள்ளப்படக் கூடாது என இன்றைய நள்ளிரவை எதிர்பார்த்து மத்திய உளவுத்துறை காத்திருக்கிறதோ என்ற ஐயம் எழுவதை தடுக்க இயலவில்லை.

ஏனெனில் ஹிந்துத்வ எதிர்ப்புக் குரலை ஒலிப்பதில் இந்தியாவிலேயே தமிழ்மண் தான் முதன்மையானது"

(டிச 05 மதியம் எழுதியது)

நீங்கள் மாற்றிவிட்டீர்களா?

Dear Mr. Modi Ji...

வேறு வழியில்லாததால் மக்கள் "e-transaction"-க்கு மாறுகிறார்கள்; விரைவில் மாறிவிடுவார்கள். "e" திருடர்களினால் மக்களின் பணம் வங்கிக் கணக்கிலிருந்து திருடு போனால் அலைச்சலின்றி அவர்களின் அவசரத் தேவைக்கு உடனடியாகக் கிடைக்க உங்கள் அரசின் "e-system" நிர்வாகத்தை துரிதமாக தயார்படுத்திவிட்டீர்களா?

வெளிநாடுகளை உதாரணம் சொல்கிறீர்கள்? அங்கிருப்பதாகச் சொல்லப்படுவதைப்போல் மக்கள் திருட்டு கொடுக்கும் பணத்திற்கு "இன்ஷூரன்ஸ்" முறையை செயல்படுத்திவிட்டீர்களா?

பதில்...??

எல்லோரையும் பொருளாதார நிபுணர்களாக்கிவிட்டார் திருவாளர் மோடி. 

01. உலகில் முதன் முதலில் பணத்தை எதன் அடிப்படையில் எல்லா நாடுகளும் அச்சடித்து வெளியிட்டார்கள்? 

02. ஒரு நாடு அவ்வப்போது தன் தேவைக்கேற்ப பணம் அச்சடிக்க முடியுமா? முடியாதா? எப்படி முடியும்? ஏன் முடியாது?

03. வருடா வருடம் ஒவ்வொரு நாட்டிலும் பணம் அச்சடிக்கிறார்களா? எதன் அடிப்படையில்? எவ்வளவு?

04. பிற நாடுகளுக்கு தெரியாமல் ஒரு நாடு தேவையான பணத்தை அச்சடிக்க முடியுமா? முடியாதா? யாரேனும் கட்டுப்படுத்துகிறார்களா? யார்? எப்படி?

நியாயவிலைக் கடைகள் மூடல்

அடுத்ததாக, உங்கள் வங்கிக் கணக்கில் 10000 ரூ போடப்போகிறோம் என்ற பேரில் கிராமத்து மக்களிடம் பிரச்சாரம் செய்து "Direct Benifit Transfer" என்ற விண்ணப்பத்தை படிக்காத மக்களிடமும் ஆங்கிலத்தில் வழங்கி ஒப்புதல் பெறும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் நியாயவிலைக் கடைகளை மூட.

இதில் கையெழுத்து போட்டு ஒப்புதல் தருபவர்களுக்கு மாதம் ஒரு சிறிய தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வெளிச் சந்தையில் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மானியங்கள் நிறுத்தப்படும். நாளடைவில் ரேஷன் கடைகள் மூடப்படும்.

அப்பல்லோவில் ஜெ

🙇🏻...
தங்கள் பங்களாக்களுக்கு ஓய்வெடுக்கச் சென்றால் ஏதாவது விமர்சனம் வரும் ஆதலால் அனுதாபத்தையும் தேடிக்கொண்டு பெரும்புள்ளிகள் ஓய்வெடுக்க தோதான சிறந்த இடமாக "மருத்துவமனை"கள் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ? டாட்

மழை

"நகரங்களுக்கும் சேர்த்தே பொழிகிறது
கிராமத்தில் மழை"

திரையரங்கில் தேசிய கீதம்

01. யுவர் ஆனர்... 

அப்படியே அடுத்ததாக, இல்லத்தரசிகளுக்கு தேசபக்தி ஊட்ட டிவியில் ஒவ்வொரு "சீரியல்" ஆரம்பிக்கும்போதும் தேசியகீதம் ஒளிபரப்ப உத்தரவிடுமாறு சங்கத்தின் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

02. ஜட்ஜ் ஐயா....,

அப்படியே அடுத்ததா, நீங்கெல்லாம் உங்க சீட்ல உக்கார்றதுக்கு முன்னாடி கட்டாயமா தேசிய கீதம் பாடிட்டுதான் உக்காரனும்னு ஒரு சட்டம் போடுவீங்கன்னு சங்கத்தின் சார்பாக எதிர்பார்க்கிறோம்.

03. யுவர் ஆனர்...

அடுத்ததா எல்லா மருத்துவமனையிலும் இப்டியொரு சட்டம் போட்டு தேசிய உணர்ச்சியை ஊட்ட முயல வேண்டாமென சங்கத்தின் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். கை கால் ஒடைஞ்ச நோயாளிகள் எல்லாம் பாவம்ங்கய்யா. 

நன்றிங்கய்யா... 🙏🙏🙏

தேச பக்தி...??

01. தேசக்கொடியைக் கொளுத்தினால் சிறை மற்றும் ஓராண்டு குடியுரிமை விலக்கு என்று அறிவித்துள்ளது அமெரிக்கா. 

(இதுவரையில் அமெரிக்கர்கள் தங்கள் உள்ளாடைகளில்கூட அமெரிக்க தேசியக் கொடியை பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

02. திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

(பள்ளி, கல்வி, அரசு அலுவலகங்களில் மட்டும் என்பதால் இதுவரையில் மக்கள் மரியாதையோடு பாடிவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

மைய அரசின் திமிர்

⚖️......
வங்கி படிவங்களை மக்களின் சொந்த மொழியில் வைக்காத நாட்டில்; அப்படிவங்களை நிரப்பவே இன்னும் வெகுஜனங்கள் திணறும் நாட்டில் இந்த "digital money transaction" -ஐ திணிப்பது எவ்வளவு திமிரான மனோபாவம்? 

"எல்லா நாடுகளையும் சுற்றுமுன் முதலில் அனைத்து மாநில கிராமங்களையும் பிரதமர் ஒருமுறை சுற்றிப்பார்த்தால் நல்லது"

ஒரு தமிழ்ப்புலவனின் கெத்து...!!

😍😍... பரிசு கேட்பதிலும் ஒரு தமிழ்ப்புலவனின் கெத்து... 💪💪

#_புறநானூறு_266, (எட்டுத்தொகை)

பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்,
 கயங்களி முளியும் கோடை ஆயினும்,
 புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
 கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை
 நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம்
 
 நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்!
 வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி!
 சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,
 ஆசாகு என்னும் பூசல்போல,
 வல்லே களைமதி அத்தை- உள்ளிய
 
 விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்,
 பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
 அறிவுகெட நின்ற நல்கூர் மையே!

**
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடாநிலை.

பொருள் :

மாமழை பெய்யாமல் களிமண்ணும் வெடித்துகிடக்கும் கடுங்கோடைக் காலத்திலும் ஆம்பல் பூக்கும் நீர் வளம் படைத்த கழனி நாடு உடைய; வானுயர்ந்த குடைகளும் பரந்த வெற்றியும் குதிரைகளும் உள்ள சென்னி மன்னனே..., அறிவுள்ள சபைக்குச் சென்ற ஒருவன் அது இல்லாததால் அறிவுடையோரை தன் துன்பத்திற்கு துணை செய்யக் கோரினால் செய்வாரன்றோ..! அதேபோல் அறிவுடனும் ஐம்புலனும் குறைவற்ற நல்லுடலில் தோன்றியும் அது பயன் கொள்ளாதவாறு விருந்தினனைக் காண்கையில் விருந்தூட்ட வழியின்றி ஒளிந்து வாழ்கிறேனே என் அறிவுகெட. இதற்கு துணை செய் மன்னா....

6.12.16

ஜெ. அவர்களுக்கு நன்றி...

🙏🙏🙏

"நடந்தது என்ன?" என்ற பேரில் நீங்கள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற அந்த 75 நாட்களிலும் நடந்த அனைத்தும் இனி விதவிதமாக விரைவில் வெளியே வரும். 

உங்களுக்கு யார் யார் உண்மையாய் இருந்தார்கள்? யார் யார் துரோகம் செய்தார்கள்? என்பது உங்களை ஆராதித்த மக்களுக்கு தெரியவரும், ஆனால் இது உங்களுக்குத் தெரியப்போவதில்லை. 

தெரிந்துகொண்ட மக்களும் ஒரு கதையாய் அதை எளிமையாய் கடந்துபோய் விடுவார்கள். அவர்கள் போராடப்போவதில்லை. ஏனெனில் போராட அவர்களை நீங்கள் பழக்கவில்லை. 

இதுவரையில் உங்களுக்குச் சேவகம் செய்த அதிகார வர்க்கம் இனி வேறு யாருக்கோ சேவகம் செய்வார்கள். எளிய மக்கள்தான் உங்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே எளிய மக்களுக்கோ, சமூக அக்கறையாளர்களுக்கோ, வாக்களிக்கும் அடிமட்டத் தொண்டனுக்கோ எந்த அதிகாரமும் இல்லை என்பது உங்களுக்கேத் தெரிந்த உண்மைதான். 

நிறைகுறைகளால் உங்களை அளவிடுவதைத் தவிர்த்துவிட்டு வெறும் அனுதாபத்தால் அளவிட விரும்பவில்லை. ஏனெனில், உங்கள் மீதான எங்கள் அனுதாபம் எந்த பெருச்சாளிக்கேனும் அரசியல் பிழைப்புக்கான மூலதனம் ஆகக்கூடும். 

உங்கள் உடலைச் சுமந்து செல்லும் வாகனத்தை பார்க்கையில் ஒரு எண்ணம் தோன்றியது. உங்களுக்கு தமிழ் மக்கள் தந்த ஒப்பீடில்லாத மகத்தான ஆதரவுக்கு ஈடாய் நீங்கள் எவ்வளவோ மாற்றங்களை நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கலாம். 

"69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க உறுதியாக நின்றதற்கும்; காவிரி ஆணையை அரசிதழில் இடம்பெற செய்ததற்கும்; ஒப்புக்காவது சட்டமன்றத்தில் தமிழீழத்திற்கு ஆதரவாக தீர்மானம் இயற்றியதற்கும்; சங்கரமட சாமியாரை கைது செய்ததற்கும்; லாட்டரியையும் தனியார் சாராயக்கடைகளை ஒழித்ததற்கும்; MLA, MP, மா.செ-க்களை எல்லாம் அடக்கி வைத்திருந்ததற்கும்..."

பெரும் நன்றி... 🙏🙏🙏

28.11.16

குழப்பம் ஏன்?

🙇
புதிய ரூபாய் தாள்களை அச்சடித்ததில் ஏன் இவ்வளவு குழப்பம்?

01. ஆக்சுவலி எங்க திட்டம் என்னன்னா..., இப்டி அடிச்சாதான் "இது செல்லுமா செல்லாதா? மறுபடியும் எப்ப செல்லாதுன்னு அறிவிச்சிடுவாங்களோ"ன்ற பயத்தால இனிமே யாரும் பதுக்கிவைக்க மாட்டாங்கல்ல. அதான்...

02. ஆக்சுவலி எங்க திட்டம் என்னன்னா..., கள்ள நோட்டு எது நல்ல நோட்டு எதுன்னு எப்பவுமே அரசேதான் கண்டுபுடிக்கனுமா? அரசாங்கத்துக்கு வேற வேலையே இல்லையா? இப்டி குறையா அச்சடிச்சாதான் ஜனங்க எப்பவுமே உஷாரா சோதிச்சிப் பார்த்து வாங்குவாங்க.

இந்த தொலைநோக்கு பார்வை இல்லாதவங்கதான் குறை சொல்றாங்க.

🏃🏻🏃🏻🏃🏻......


மாவீரர் தினம்

இன்று நவ. 27 மாவீரர் நாள்

தம் மக்களுக்காகப் போராடி தங்களை தியாகம் செய்த அத்தனை தமிழ் போராளிகளுக்கும் #_வீர_வணக்கங்கள். 

புலிகளின் தியாக உணர்வை உலகத்திற்கு தெரிவித்த நிழற்படங்களுள் ஒன்று...

Chitchor - இதயத் திருடன் (ஹிந்தி)

இந்தப் படப் பாடல்களுக்காக கே.ஜெ.யேசுதாஸ் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது. பிரபலமான பாடல் "கோரிதரா" ஹிந்தி பாடலை மறக்க முடியுமா?

மிகவும் எளிமையான கதைதான். 

ஒரு கிராமத்தில் பாலம் அமைப்பதற்காக ஒரு இஞ்ஜினியர் (அமோல் பலேகர்) வருகிறார். அவரைத் தன் மகளுடன் (ஜரீனா வகாப்) பழகவிடுகிறார் மகளின் பெற்றோர். இருவருக்கிடையேயும் காதல் மெல்ல மலர்கிறது. போகப்போகத்தான் தெரிகிறது அமோல் எஞ்ஜினியர் இல்லை, சூப்பர்வைசர்தான் என்று. ஒருகட்டத்தில் இஞ்ஜினியரே (விஜயேந்திர காட்கே) வரும்போது, தன் மகளிற்கு அவரை மணம் முடித்துவைக்க விழைகின்றனர் பெற்றோர். அமோலும், ஜரீனாவும்கடைசியில் சேர்கிறார்களா அல்லது ஜரீனா, விஜயேந்திர காட்கேயைக் கைப்பிடிக்கிறாரா என்பதுதான் கதையின் க்ளைமாக்ஸ்.

பாசு சட்டர்ஜியின் இயக்கத்தில் இப்படம் 1975-ல் வெளிவந்தது.

இழி பிறவிகள்

இன்றைக்கு குறிப்பிட்ட சில கூடாரங்களைச் சேர்ந்த சிலர் தங்கள் முகநூலில் தலைவர் பிரபாகரன் அவர்களையும் புலிகளையும் கேவலமாக எழுதியிருப்பதைக் கவனிக்கிறேன்.

என்ன எழுதினாலும் இந்தக் "கேவலமான இழிபிறவிகளுக்கு" ஒரு மயிரும் புரியப்போவதில்லை என்பதால் அப்பதிவுகளை அமைதியாகக் கடக்கிறேன்.

தோழர் அஜிதா

மக்களையும் மண்ணையும் ஆழமாய் நேசிக்கும் உண்மையான மானுட / தேசப் பற்றாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மேடைகளில் நடிப்பவர்கள் மரியாதை செய்யப்படுகிறார்கள்.

"அரசு என்பது ஆளும் வர்க்கத்தினருக்கான அடியாட்படை - மார்க்ஸ்"

பிடல் காஸ்ட்ரோ மறைவு

638 முறை அமெரிக்காவின் கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரும் தலைவலியாய் இருந்த புரட்சிக்காரன். கியூபாவில், அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம். பள்ளிகள் மருத்துவமனைகள் நடத்த தனியார்களுக்கு அனுமதியில்லை. 

உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பதே எங்களின் பெருமை .

"வாழ்க அவர்தம் வரலாறும் புகழும்..."

2016 தலைவன் பிறந்தநாள்

காவல்துறை கெடுபிடிகளை மீறி 25 நள்ளிரவு 12 மணிக்கு "தலைவன் பிரபாகரன்" அவர்களின் பிறந்தநாள் விழா.

தற்போது ராயப்பேட்டையில் "தந்தை பெரியார் திராவிடர் கழக" தோழர்களுடன்...


25.11.16

பலே பலே சர்தார் ஜீ...

🤓... 
தன் 10 ஆண்டு பதவிக்காலத்தில்கூட பேசாத மன்மோகன் சிங் இப்போது இப்படி பேசிய காரணம் என்ன? ஏதோ மக்கள் மீதிருக்கும் அக்கறை என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். 

தேர்தலிலே நிற்காமல் புறவாசல் வழியாக உலகவங்கியின் செல்வாக்கினால் பதவிக்கு வந்தவர் அவர். முன்னாள் உலக வங்கி ஊழியரும்கூட. பதவிக்காலத்திலும் ஓய்வூதியம் பெற்றாராம். மேலும் காங்கிரஸ் மீதான சீக்கியர்களின் கோபத்தைத் தணிக்கவும் வாய்த்த பனம்பழம். 

சரி ஏன் மக்களுக்காக இப்போது மட்டும் திடீரென அக்கறைப் படுகிறார்? முதலில் இந்தியாவை உலக அரங்கில் பல ஒப்பந்தங்களின் பேரில் விற்பனை செய்ய ஆரம்பித்ததே அவர்தான். அதன் தொடர்ச்சிதான் திருவாளர் நரேந்திர மோடி ஜீ. இன்னும் சில மாதங்களில் மக்கள் என்ன நிலைமைக்கு ஆளாகப் போகிறார்கள் என்ற உண்மை அவருக்குப் புரிந்திருப்பதால் எல்லாவற்றுக்கும் காரணம் என்ற "உதைபந்து" தன்மீது திரும்பிவிடக் கூடாது என்ற உஷார் முன்னேற்பாடுதான் இது.

சுருக்கமாக சொன்னால்,
மோடி சிக்கிக்கொண்டார்...
மன்மோகன் தப்பித்துக்கொண்டார்...

23.11.16

இசுலாமிய எதிர்ப்பு தேவையற்றதா?

இசுலாமிய மதவெறியை நாம் கண்டிக்கத் தவறினால் அது இயல்பாக எல்லோரையும் இந்துத்வத்தின் பக்கம் செல்ல வைக்கும். நாமும் தனிமைப்படுவோம். இந்து மதவெறி, இசுலாமிய மதவெறி இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியதே. இசுலாமியர்கள் பெரியாரிஸ்டுகளுடன் இணைவதெல்லாம் பொதுநலத்திற்காக அல்ல. அவர்களுக்கு இந்து எதிர்ப்பு பேசுபவர்கள் வேண்டும். அவ்வளவுதான். எதையுமே எதிர்க்கத் தேவையில்லாத அளவுக்குத்தான் இஸ்லாம் இருக்கிறதா? 

வேலூரில் மேல் விஷாரம் என்றொரு பகுதி. நகராட்சியில்கூட உருதுவில்தான் தீர்மானம் போடுகிறார்களாம். இங்கு அரபுமொழி மட்டுமென்ன அறிவியலையா வளர்க்கிறது? தமிழ் இசுலாமியர்களைத் தவிர யாரும் தமிழை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. 

இந்துமத எதிர்ப்பு வேசம் கட்டும் இவர்களில் பெரும்பாலோனோர் மத வெறியர்கள்தான். அவர்களை விமர்சிக்கும்போது பூனைக்குட்டி வெளியே வருவதைக் கவனிக்கலாம். 

விமர்சனங்கள் எதன் மீதானாலும் வரவேற்பதே அறிவுடைமை.

வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதுதான் பெரியாரியத்தின் முதன்மைப் பணி. 

இசுலாமியனோ இந்துவோ யாருடனும் நட்பாக இருக்கலாம். ஆனால் விமர்சனம் என்றால் விமர்சனம்தான்... இரு மத நம்பிக்கையுமே இங்கு தேவையில்லாத ஆணிகள்தான்...

தஸ்லிமா நசுரீனின் "லஜ்ஜா" நாவலைப் படியுங்கள். உலகெங்கும் மதவெறிக்கு ஒரே முகங்கள்தான். அது சிறுபான்மையாக இருக்கும்போது தன்னை மறைத்துக் கொள்கிறது. 

உலகில் நாத்திகர்களைக் கொல்லச் சொல்லும் மதங்கள் எதெது?

பெரியாரிஸ்டுகளுடன் இருக்கும் இசுலாமியர்கள் தஸ்லிமாவை அழைத்து வந்து தமிழ்நாட்டில் கூட்டம் போட்டால் ஆதரிப்பார்களா? 

இஸ்லாம் சரியான மார்க்கமென்றால் நாம் ஏன் எல்லோரையும் இஸ்லாமியராக மாறச்சொல்லி பிரச்சாரம் செய்யக்கூடாது? ஏன் இந்த எழவெடுத்த இந்து மதத்திலேயே எல்லாரையும் இருக்க வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருப்பது ஏன்? 

இந்த 50 ஆண்டுகளில் தீண்டாமைக்குள்ளான அனைவரையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியிருக்கலாமே. 

பெரியார் ஏன் அதைச் செய்யவில்லை? 

(எனக்கு பாடம் எடுக்க வேண்டாம், யாரேனும் இதற்கு பதில் மட்டும் தெரிவித்தால் போதும்)

19.11.16

கனவு...

சரியோ... தவறோ... ஒரு நாடு சிக்கலில் அகப்படும்போது கோடானு கோடி தொண்டர்களை வைத்துக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

வெறுமனே விமர்சனம் செய்வதையா? அல்லது அடுத்த தேர்தல் வரும் வரை அரசியல் செய்ய காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பதையா? அல்லது மக்களுக்காக களத்தில் இறங்கி உதவி செய்வதையா?

பதவியில் இல்லாத கட்சிகளால் நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன லாபம்?

அரசியலில் இருப்பவர்களுக்கெல்லாம் வருமானம் எங்கிருந்துதான் வருகிறது?

சரியும் அரசு நிர்வாகத்தை சீர் செய்ய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் சொல்லி மக்களை நெருக்கடிகளிலிருந்து மீட்க துணை நிற்பதை தவிர்த்துவிட்டு வெறும் காட்டுக்கூச்சல் போடுவது மட்டும் ஏன்?

இவர்கள் எல்லாரும் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் மட்டும் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிடுமா?

ஜாதியின் பேரால் மதத்தின் பேரால் இனத்தின் பேரால் மூளைச் சலவை செய்யும் மேடைப்பேச்சின் பேரால் ஆளாளுக்கு லட்சக் கணக்கான முட்டாள்களைப் பிடித்து வைத்துக்கொண்டு செயல் வடிவம் இல்லாமல் போடும் கூச்சலால் மட்டும் என்ன நன்மை?

எவ்வளவு நெருக்கடியிலும் மக்கள் சகிப்புத் தன்மையுடன் அரசிடம் பணிந்து போகக் காரணம் எதிர்க்கட்சிகளின் மீதுள்ள வெறுப்பினாலும்தான். 

அந்தந்த பகுதியிலுள்ள எல்லா கட்சி பொறுப்பாளர்களும் குறைந்தபட்சம் வங்கிகளின் வரிசைகளையாவது நெறிப்படுத்த முனையலாம். அல்லது ஆளுங்கட்சியைவிட தாங்கள் எப்படி சிறந்தவர்கள் என்பதை இயன்ற வழியில் செயலில் நிரூபித்துக் காட்டலாமே.

அடுத்த தேர்தல் எப்போது வரும்?, இருப்பவனை தள்ளிவிட்டு மடத்தை எப்போது பிடிக்கலாம்? என்பதே எல்லாக் கட்சிகளுக்கும் நோக்கமாயிருக்கிறது. 

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 05% பேர் நேரடியாக முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார்கள். இவர்கள்தான் அரசுப் பணத்தை கொள்ளையடிப்பதும் சுரண்டிப் பிழைப்பதும். அல்லது பொதுவாழ்க்கை என்ற பேரில் டெண்டர் எடுப்பதும் கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் செய்வதும் இவர்கள்தான். 

ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இவர்களேதான் மாறிமாறி வருகிறார்கள். 

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களாட்சிக்கு இரு கண்கள். ஆனால் இரண்டும் நம் நாட்டுக்கு எப்படி இருக்கிறது?

நாட்டில் குழப்பம் நீடிக்க வேண்டும், ஒன்று சேர்ந்து போராடினால் எவனாவது பேரெடுத்துவிடுவான் என்பதே எல்லா கட்சிகளின் எதிர்பார்ப்பாய் தெரிகிறது. 

தேர்தல் முடிவு தெரிந்ததிலிருந்து அடுத்தத் தேர்தல் தேதி அறிவிக்கும் வரையில் எல்லா கட்சிகளையும் தடை செய்துவிட வேண்டும். கொடிக்கம்பங்களை இல்லாதொழிக்க  வேண்டும். பொதுப்பிரச்சினைகளுக்காக மட்டும் மக்கள் இணைந்து போராட உரிமை இருக்க வேண்டும். நிரந்தர தேர்தல் சின்னங்கள் ஒழிக்கப்பட வேண்டும். பதவிகளை திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். 

திருடர்கள் அதிகாரத்திற்கு வருகிறார்கள். அல்லது அதிகாரத்திற்கு வந்ததும் திருடர்களாகிவிடுகிறார்கள். 

சுயமாய் சிந்தித்து வாக்களிக்கும் மக்கள் உருவாகுமளவுக்கு அறிவியல் கல்வியை பரவலாக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் மக்களை பிளவுபடுத்தி பகை வளர்க்கும் ஜாதி மத இன அமைப்புகள் இயங்குவதையாவது முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.

17.11.16

சந்தர்ப்பவாதிகள் யார்?

😇😇...
ராணுவத்தை சுய லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதிகள் யார்?

சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஒரு ஆன்மீக மாநாடு நடத்தினார். அதில் இந்திய இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு பாலம் அமைத்தல், பந்தல் அமைத்தல் போன்ற வேலைகளை செய்தார்கள்.  தனிநபர்களுக்கு  இந்திய இராணுவத்தை பயன்படுத்தலாமா? என்று கேட்டபோது, இந்திய இராணுவம் ஒன்றும் சும்மா வேலை செய்யவில்லை. சம்பளம் வாங்கிக்கொண்டுதான் வேலை செய்கிறார்கள், அதிலொன்றும் தவறில்லையே என்றார்கள் பிஜேபி பக்தர்கள். அப்போது யாரும் இதுகுறித்து கண்டிக்கவே இல்லை. ஆனால் இப்போது...

"ராணுவ வீரர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தனிப்பட்ட பகையா? அதுபோல் நாட்டுக்காக பணக் கஷ்டத்தை சகித்துக்கொள்ள முடியாதா?" என்கிறார்கள்.

தமிழ் மீனவர்களை சுடும்போது இலங்கைக்கு எதிராகவும்; அருணாச்சல மாநிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த சீனத்துக்கு எதிராகவும் அமைதி காத்துவிட்டு பாகிஸ்தான் எல்லையில் மட்டும் ராணுவத்தை தியாகம் செய்யவைத்து தேசபக்தியை பரப்புகிறார்களே ஏன்?

உறுப்பு இழந்த, காயமடைந்த ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை வெட்டியது யார்? ஏன்?

இவர்களின் செயற்திறனற்ற திட்டங்களுக்கு ராணுவத்தை இழுப்பது ஏன்? 

மீண்டும் எந்தவொரு கார்ப்பரேட் சாமியார்களின் மார்க்கெட்டிங்கிற்கும் ராணுவம் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதி உண்டா?

உலகிலேயே ஒரு நாட்டின் ராணுவத்தை தனியாருக்கு சேவகம் செய்ய வைத்தவர்கள் இன்று தங்களை நிறுத்திக்கொள்ள "ராணுவ வீரர்களை" இழுப்பது கீழ்த்தரமான அரசியல் விளம்பரம் அல்லவா?

43 ஆண்டுகாலமாக நீளும் ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையான "ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்" திட்டத்தை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை? சமீபத்தில்கூட இதற்காக போராடி டெல்லியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் உயிர் துறந்தார். கார்ப்பரேட் முதலாளிகளின் தள்ளுபடி கடன்களைவிடவும் இதற்கான தொகை குறைவுதான். 

ராணுவத்தை, சாமியார்களுக்கு சேவகம் பார்க்க வைத்ததைக் கண்டிக்காத பிஜேபி ஆட்களுக்கு இப்போது மட்டும் ராணுவத்தின் மீது ஏனிந்த திடீர் அக்கறையோ?

கடவுள் மறுப்பு தேவையா?

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம் அல்லவா, ஏன் கடவுளையும், மதத்தையும் தொடர்ந்து  விமர்சிக்க வேண்டும் , அவமானப்படுத்த வேண்டும் ? எங்கள் நம்பிக்கைகளில் ஏன் குறுக்கிட வேண்டும் ? 

இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் பலரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  உண்மையில் பெரும்பாலான மக்களுக்கு இது பற்றியெல்லாம்  கவலையில்லை. பக்தியை லாபமாக , வாக்காக , அதிகாரமாக  மாற்ற நினைக்கிறவர்களுக்குத்தான் இது எப்போதும் தலையாயப் பிரச்சனை.

கடவுளை, பக்தியை, வழிபாடுகளை, உங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்பதென்பது பகுத்தறிவு என்கிற திமிரிலோ, தனித்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவோ , உங்களை சங்கடபடுத்தி அதன்வழி குரூர மகிழ்ச்சி கொள்ளவோ இல்லை. பகுத்தறிவின் அடிப்படையே மானுட நலனும் சமத்துவமும்தான்.

உங்கள் பக்தி எல்லோருக்குமானதாகவும்  அன்பை, சமத்துவத்தை பரப்புவதாகவும் இருக்குமானால் அது குறித்து கவலையில்லை . ஆனால் மதங்கள் அப்படித்தான் இருக்கிறதா?

* பெரும்பாலான ஆண்களும் , ஒட்டுமொத்த பெண்களும் கடவுள் இருக்கும் கருவறைக்கு போக தகுதியில்லாததாக உங்களை ஒரு மதம் சொல்லுமானால், அதை ஏனென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. 

* உலகின் சரிபாதி இருக்கும் பெண்களை ஆலய குருக்களாகவோ , ஒரு பெண்ணை போப்பாண்டவராகவோ தேர்ந்தெடுக்க பெண்களுக்கு தகுதியில்லை என்று ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏனென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

* ஒற்றை வார்த்தையில் திருமணத்தை முறிக்க கூடிய அதிகாரத்தை ஆணுக்கு கொடுக்கும் பாகுபாடு , பெண்களை தங்களின் விருப்ப வாழ்கையை தேர்ந்தெடுக்க உரிமை தராத ஒரு கட்டமைப்பு ,கடவுளை தொழும் மசூதிகள் , தர்காக்களில் எல்லாம் பெண்களை அனுமதிக்க முடியாது, நீங்கள் தனியே தொழுது கொள்ளுங்கள என்றெல்லாம் ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏன் என்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. 

அன்பையும்  சமத்துவத்தையும் தான் உங்கள் மதங்கள் போதிக்கிறதென்றால், வரலாற்றின் சிலுவைப்போர்கள் தொடங்கி , இஸ்லாமிய அடிப்படைவாத தற்போதைய வன்முறைகள் , இந்தியாவில் நடைபெற்று வரும் 
இந்து – இஸ்லாம், இந்து - கிறிஸ்தவ வன்முறைகள் வரை தொடர்வதற்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா காரணம் ? மூடநம்பிக்கைகளில் சிக்க வைத்து,  மனிதனை உருத் தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கும் கருவி மதம் தவிர்த்த வேறு ஏதேனும் ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா?

மதம், பக்தி, நம்பிக்கை இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விருப்பமாக இருக்குமானால் , அது நான்கு சுவர்களுக்குள் இருக்குமானால் அதில் தலையிட நிச்சயம் யாருக்கும் உரிமையில்லை . 

ஆனால் பிரம்மாண்ட மேடைகள் போட்டு  முடமான கால்களை கடவுள் நடக்க வைக்கிறார் என பிரசங்கம் என்றபெயரில் மூளைச் சலவை  செய்வதும்,
கடவுளின் சிலைகளை ஊர் முழுக்க சுற்றிசுற்றி வலம் வருவதன் வாயிலாக பெருமைப்படுவதும், 
மார்க்க விளக்க கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்துவதும் , 
பள்ளி, கல்லூரி ஒன்று விடாமல் எல்லா கடவுளர்களுக்கும் வாழ்த்து பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் , 
அடிப்படைவசதிகளான கழிப்பிடங்கள், மருத்துவமனைகள் , கல்வி நிலையங்கள்  எல்லாவற்றையும் விட வழிபாட்டுதலங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருக்குமானால் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. ஏனெனில் இதெல்லாம் நான்கு சுவர்களுக்குள் இல்லை; நாம் வாழும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

"இல்லை இல்லை இவையெல்லாம் எங்கள் உரிமை, நாங்கள் பின்பற்றியே தீருவோம் என்று சொன்னால் , உங்கள் தவறுகளை உங்கள் நலனுக்காக சுட்டிக் காட்டுவதும் எங்கள் உரிமையென்றே சொல்ல வேண்டி வரும் . "

" இல்லை இல்லை மதம் அப்படி எல்லாம் சொல்லவில்லை நீங்கள் தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்வீர்களானால் , 
வன்முறைகளில் ரத்தம் பார்க்க ஆயுதம் ஏந்திய ஏந்தும் மதவாதிகளுக்கு,
கருத்து சொன்னதற்காக உயிர் பறிக்கும் அடிப்படைவாதிகளுக்கு முதலில் ஒழுங்காக உங்கள் மதத்தைப் பற்றி  புரியவையுங்கள். அதற்குப் பிறகு கடவுள் மறுப்பாளர்கள் பற்றி கேள்வி எழுப்பலாம்." 
ஒரே கேள்வி மீதமிருக்கிறது.

சகமனிதனைக் கொன்று தீர்ப்பதன் மூலம்தான் உங்கள் கடவுள்களை மகிழ்விக்க முடியும் என்றால் அவரென்ன கடவுளா இல்லை கொள்ளைக் கூட்டத் தலைவனா ?

- யாரோ

மார்க்சிய இயங்கியல்

"பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன. இந்தப் பிரபஞ்சத் தொடர்பு சம்பந்தப்பட்ட விஞ்ஞானமே இயக்கவியல். மேலும் மனித சிந்தனை, மனித சிந்தனைக்கு வெளியே உள்ள புற உலகம் ஆகியவற்றின் இயக்கம் பற்றிய பொதுவான விதிகளைக் கொண்ட விஞ்ஞானமே இயக்கவியல்" - ஏங்கெல்ஸ்

மார்க்சிய இயங்கியல் விதிகளில் மிக முக்கியமானவை...

01. தனித்து இருப்பது என்று எதுவும் இல்லை. அனைத்தும் சார்பு தன்மை உள்ளவையே. இறுதியானது என்று எதுவுமில்லை. மாறாதது எதுவுமில்லை.

02. எதிர்மறைகள் ஒன்றுபடுகின்றன. போராடுகின்றன. தீவிர நிலைகளில் ஒன்று ம்ற்றொன்றாக மாறுகின்றது.

03. அளவு மாற்றம் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பண்பு மாற்றம் அளவு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

04. ஒரு நிலையை மறுத்து எதிரான மற்றொரு நிலை எழுகின்றது. குறிப்பிட்ட சூழ்நிலையில் இரண்டு நிலைகளும் ஒன்றிக் கலந்து புதிய நிலை ஏற்படுகின்றது.

05. வளர்ச்சி என்பதில் பழைய நிலையின் அம்சமே மீண்டும் திரும்ப வருவது போலத் தோன்றும். ஆனால் அந்த அம்சம் மேம்பட்ட அம்சமாக இருக்கும். அதாவது வளர்ச்சி என்பது ஒரு வட்டம் போல புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் திரும்புவதில்லை. திருகு சுற்றுப் போல மேலேமேலே ஏறிச் சுழன்று செல்லும்.

06. மனதில் உள்ள கருத்துதான் அனைத்துப் பொருட்களையும் படைத்தது அல்லது கடவுள் தான் உலகத்தைப் படைத்தார் என்பது தவறான கருத்து. பொருள் என்பது படைக்கப்படவே இல்லை. அது எப்போதும் இருந்து வருகின்றது. எனவே பொருளைக் கருத்தும் படைக்கவில்லை, கடவுளும் படைக்கவில்லை. கடவுள் இல்லை.

07. கருத்தைப் படைப்பதே மூளை என்ற பொருள்தான். கடவுள் என்ற கருத்தையும் கற்பனையையும் கூட மனித மூளைதான் படைத்தது. என்வே முதன்மையானது பொருளா அல்லது கருத்தா என்றால் பொருள்தான் முதன்மையானது. கருத்து இரண்டாம் பட்சமானது.

08. சமூகம் உட்பட எல்லாமே இயங்குகின்றன. மாறுகின்றன. மாறாதது எதுவுமில்லை. மாறுவதே மாறாதது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சில விதிகளின்படியே மாறுகின்றன.

இவ்வாறு "பொருளே முதன்மையானது. அனைத்துமே இயங்குகின்றன; மாறுகின்றன" என்று பகரும் தத்துவமே "இயக்கவியல் பொருள்முதல்வாதம்" என்ற மார்க்சிய கோட்பாடாகும்.

“கம்யூனிசம்” ஓர் எளிய அறிமுகம் – இரா.பாரதிநாதன்

பொதுவாக கம்யூனிசம் என்றாலே “சாத்தியமற்ற கற்பனை” என்று சட்டென பகடி செய்யும் பலரையும் நான் சிறுவயது முதலே கண்டிருக்கிறேன். அப்படி பகடி செய்யும் அவர்களெல்லாம் அதைப் படித்து உள்வாங்கி அலசி ஆராய்ந்துவிட்டு பின்னர்தான் விமர்சனம் செய்கிறார்களோ என்றும் நினைத்ததுண்டு. ஆனால், அப்படியெதுவும் இல்லை என்று பின் வளர்ந்த நாட்களில் புரிந்துகொண்டேன். 

மார்க்சியத்தை புரிந்துகொள்ள அறிவு மட்டும் போதாது, சமூக மாற்றத்தை விரும்பும் உள்ளார்ந்த ஆழ்ந்த தேடல் இருக்க வேண்டும் என்பதே முக்கியமான அடிப்படையாக நான் உணர்கிறேன். உலகில் எந்தவொரு அரசியல் தத்துவமும் இந்தளவுக்கு அறிவியல் பூர்வமான சமூகப் பார்வையை மக்களுக்குக் கொடுக்கிறதா எனத் தெரியவில்லை. இயற்கையையும் சமூக வரலாறையும் கட்டுக்கதைகளின்றி சொல்லும் சமூக அறிவியல் கல்வியான மார்க்சியத்தை நியாயப்படி பள்ளிகளில் பாடமாக்கியிருக்க வேண்டும். ஆனால் ஏறக்குறைய உலகின் எல்லா குழந்தைகளையுமே ஆளும் வர்க்க கருத்துக்களின் ஒற்றைச் சார்பாக தயாரித்து ஆளாக்கி மதம் தோய்த்து சகல வழிகளிலும் அவர்களை சுரண்டவே வழிவழியாய் முனைப்பு காட்டுபவர்கள் இதற்கு எக்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லைதான். 
 
சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் ஒருமுறை மார்க்சிய அடிப்படையை படிப்பது நல்லது. அப்படியான தேடலுடன் என் நட்பு வட்டத்தில் யாரேனும் இருந்தால் இந்த எளிமையான புத்தகம் அவர்களுக்கு துணை செய்யும். மிக அருமையான இந்தப் புத்தகத்தைப் பற்றி; எழுத்து நடை பற்றி; உள்ளடக்கம் பற்றி சுருக்கமாய் சொன்னால் “மிக மிக அருமை”.

புத்தகத்தின் விலை : ரூபாய் 150/- 
ஆசிரியர் : இரா.பாரதிநாதன்,
வெளியீடு : புலம் பதிப்பகம், 98406 03499.

புத்தகத்தின் பின்குறிப்பு…

"துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வு எனவும், மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு, ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்டதாக இருக்கிறது? பாவ புண்ணியக் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முடங்கிவிடுவதா? இல்லை அறிவியல்பபூர்வமான விடையைக் கண்டடைவதா? அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்று சேருமிடம் மார்க்சியமின்றி வேறில்லை. அத்தத்துவத்தை எளிய மொழியில் யாவருக்கும் புரியும் வகையில் தொழர் பாரதிநாதன் அவர்கள் தந்திருக்கிறார். 

மார்க்சியத்தை புரிந்துகொள்ள முயலும் தொடக்கநிலை வாசகர்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும்"
x