அரசியல் அதிகாரம்...?
எங்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை திட்டமிட்டு மறுக்கும் அரசு குறித்து கேள்வி எழுப்ப மாட்டோம். போராட சிந்திக்க மாட்டோம். தலைமுறை தலைமுறையாய் ஆடு மாடு மட்டுமே மேய்த்து பெருமை பேசியே சாவோம். ஆடு மாடுகள் திருடு போகும்போதும் விபத்தில் இறக்கும்போதும் உதவ ஆளில்லாமல் தவிப்போம், அழுவோம். எதற்கும் காவல்துறையை, நீதிமன்றத்தை அணுகத் தயங்குவோம். செயல்திறன் இல்லாதவர்களையெல்லாம் தலைவன் என்று நம்பித் திரிவோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அநீதிகளுக்கு எதிராக எதிர்க்குரல் எழுப்ப அஞ்சி ஊமையாகவே இருந்து சமூக அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்க முனையாமல் ஜாதிப் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருப்போம். ஜாதி மத மூடத்தனத்திற்கு பல்லக்கு தூக்குவோம். எவனாவது அறிவு, சிந்தனை என்றால் கூட்டமாய் போய் ஆபாசமாய் சண்டையிடுவோம். கிருஷ்ணா கிருஷ்ணா என்று பேசியே எல்லாவற்றிலும் ஏமாந்துபோவோம். திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து எல்லோர் வீட்டுக்கும் அரிசி வருவதால் இதைப் பேசிப்பேசியே பிறவிப் பயன் அடைவோம். 2 MLA -வுக்கும் தகுதியில்லாமல் ஜாதி மதம் புராணம் என்பது பற்றியே காலத்திற்கும் காற்றில் கோட்டை கட்டிக்கொண்டிருப்போம். எங்கள் எதிர்காலத் தலைமுறைகளும் சிந்தனை அடிமைகளாகவே இருக்கத் தேவையான எல்லா வேலைகளையும் முனைப்பாய் செய்வோம்.13.06.2020
No comments:
Post a Comment