28.1.15

திராவிடன் / தமிழன்

கிறித்தவர்கள், இசுலாமியர்கள் தவிர்த்த ஏனைய தமிழர்களில் 95 சதவீதம்பேர் இன்றைக்கும் தினசரி ராகுகாலம் எமகண்டம் என பார்ப்பனீய பண்பாட்டுப்படியே தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஹிந்து என்ற அடையாளம் தமிழர்களின் மேல் திணிக்கப்பட்ட ஒன்றுதான் என்பது வரலாற்று அறிவுள்ளவர்களுக்கு தெரியும்தான். இப்படித்தான் இசுலாமும் கிறித்தவமும்கூட. இருந்தும் இவற்றிலிருந்து இவர்களை மீட்டெடுக்கும் பணியை முன்னெடுக்காமல் தமிழுக்கு திராவிடம் எதிரி சிண்டு முடித்து பிரச்சாரம் செய்துகொண்டிருப்போரை என்னவென்பது?

பார்ப்பனீய கலாச்சாரங்களை / மத வழக்கங்களை பின்பற்றாதவர்களுக்கும், அதை எதிர்ப்பவர்களுக்குமான ஒரு அடையாளக் குறியீடுதான் "திராவிடம்" என்பது.

என்னை நீங்கள் தமிழனா என்று கேட்டால் ஆம் என்பேன். ஹிந்துவா என்று கேட்டால் திராவிடன் என்பேன்.

இதில் எங்கே ஏமாறுகிறேன் நான்? என்னை எப்படி ஏமாற்றுகிறான் வடுகன்?

திராவிடத்தின் பேரால் வடுகன் ஏமாற்றுகிறான் என்றால் சௌகார்பேட்டை சேட்டும் சௌராஷ்டிரனும் மார்வாடியும் வடநாட்டானும் பார்ப்பானும் யார் பேராலே ஏமாற்றுகிறார்கள்?

26.10.14

மாணவர்கள் தாக்குதல்

ஒறவுகளே... டாஸ்மாக் கடை முன்னாடி கல் தடுக்கி விழுந்தாலும் உலகம் நம்மை போதையில விழுந்தான்னுதான் பேசும்.

சரிங்கண்ணே நீங்க எதுக்கு டாஸ்மாக் கடை பக்கமா போனீங்களாம்?

ஒருமுறை கேட்டுப்பாருங்கள்


உறக்கம் வராத இந்த ராத்திரியில், மனிதரில் இத்தனை நிறங்களா என்ற படத்தில் ஷ்யாம் இசையில் ஜானகியும் வாணிஜெயராமும் சேர்ந்து பாடிய "பொன்னே பூமியடி" என்ற பாடலை என் பால்யகால கிராமத்து நினைவுகளோடு தொடர்ச்சியாக 20 தடவையாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். mp3 கோப்பாக இணையத்தில் முழுமையாக கிடைக்கவில்லை. யூ ட்யூப்-லிருந்துதான் தரவிறக்கம் செய்தேன். ஏகாந்தவேளையில் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இசை மிகப்பெரிய போதையேதான்...!

(அதிகம் கேட்டிராத உங்களை மயக்கும் பாடல் ஏதேனுமிருந்தால் எனக்கு பரிந்துரை செய்யுங்கள் நண்பர்களே)

மூச்...

லட்சம் பிரச்னைய வெச்சிக்கிட்டு தமிழர்களுக்காக போராடுற அண்ணண் சீமானுக்கு புலிப்பார்வை பட நிகழ்ச்சியில என்ன வேலைன்னு நீங்கவெல்லாம் கேட்கக்கூடாது...

காலமும் மாறவில்லை, களமும் மாறவில்லை

சிங்களர்களுக்கு கோபம் வந்தால் மீதம் இருக்கிற தமிழர்கள் நிலை என்னாகும் என முன்பொருமுறை கலைஞர் பேசினார். சிங்களர்களுக்கு கோபம் வராமல் போராடவேண்டுமென்றார். 

இப்போது கத்தி படத்திற்கு எதிராக போராடும் மாணவர்களைப் போல, படத்திற்கு ஆதரவாக "போராளி விசய்" ரசிகர்களும் போராட்டம் செய்தால் என்னாகும் என பச்சைத்தமிழன் சீமான் பேசுகிறார்.

தமிழனுக்கு ஆதரவாக காலமும் மாறவில்லை, எதிரான களமும் மாறவில்லை.

இப்படியும் இருக்கலாம்தான்

காதலியிடமும் மனைவியிடமும் பலரும் பணிந்து பம்மிப்போவதற்கு காரணம், நம்மளயும் ஒருத்தி காதலிக்கிறாளே / கல்யாணம் பண்ணிக்கிட்டாளே என்ற ஆச்சரியமாகவும் இருக்கலாம்.

இந்த நூற்றாண்டில் மாறலாம்...

இந்தியன் என்று கூறிக்கொண்டு நம்மை ஆண்டுகொள்ள நாமே ஹிந்திக்காரர்களிடம் குனிந்துகொள்வது பெரும் வெட்கக்கேடு. இந்த நூற்றாண்டில் இது மாறலாம்.

ஆகச்டு 15

சின்ன வயதில் கொடியேற்றி மிட்டாய் வாங்கி சாப்பிடும்போது இருந்த தேச வரலாற்று அறிவை அப்படியே பொத்தி பொத்தி பலரும் பாதுகாத்து வருவதை சிறப்புக் கண்ணாடிகள் எதுவுமின்றி இன்று ஆங்காங்கே வெறுங்கண்ணாலேயே காணலாம்...

என்னென்ன?

ஆதிகால முட்டாள்தனங்களிலிருந்து நம் நாட்டு மக்கள் விடுபட இந்த நாடு எடுக்கும் முயற்சிகள் என்ன?

மிகச்சரியான சிந்தனை