6.8.18

தமிழ்...

'பாராளுமன்றத்துலகூட தமிழ் பேச அனுமதி இல்லையாம்'

என்ன ....க்கு இங்க அந்த தேர்தல வெக்கிறானுங்க? இவனுங்களும் அங்க போய் தூங்கறானுங்க?
 
ஆகஸ்டு 10, 2017

கடவுள்...?

இந்த "சேட்டுகளுக்கு" மட்டும் விசேஷமாய் படியளக்கிறவன் எந்த கடவுள்?
ஆகஸ்டு 08, 2017

திராவிடர் இயக்க எதிர்ப்பு

வரலாற்றைத் திருத்தும் துவக்கப்புள்ளி திராவிட இயக்கத்திலிருந்து துவங்குகிறது. அதைத் தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கு பலமில்லாத நிலையில் அதை குறை சொல்வது நியாயமில்லை.

05% கூட திராவிடக் கருத்தியலில் யாருமில்லை. 95% வீதம் மக்களை ஆள்வது பார்ப்பனீயக் கருத்தியலே. இதை எதிர்க்க தமிழ்த்தேசியத்தில் என்ன அடங்கியுள்ளது? அப்படி பலம் வாய்ந்ததாக அறிவியல்பூர்வமாக இருந்தவொன்று எப்படி பார்ப்பனீயத்தாலும் திராவிடத்தாலும் வீழ்ந்தது?

சிந்திக்க வைக்காத கருத்துக்கள் இல்லாத எதையும் எப்படி கருத்தியலாக இருக்கவியலும்?

பாவம் மக்கள். அவர்களின் கற்பனையான கண்மூடித்தனமான அறியாமையில் கட்டமைக்கப்பட்டுள்ள பார்ப்பனீய ஆன்மீக உலகிலிருந்து விடுவிக்க ஆளைக் காணோம். நாள், நட்சத்திரம், நேரங்காலம், மந்திரம், சூனியம் என்று பயந்துகொண்டு இன்னமும் சமூகம் மாறாமல்தான் கிடக்கிறது.

தேர்தல் அரசியல் முறையின் சீரழிவையும் திராவிடக் கருத்தியலுடன் இணைத்து விமர்சிப்பது, எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்பவர்களுக்கு அவசியமானதாக இருக்கலாம். இந்த மாற்றத்தையும் கொண்டுவர ஆளில்லாமல் கிடந்த சமூகம் இது என்று புரிந்தவர்களுக்கு இது தேவைப்படுவதில்லை.

மொழியை தீவிரமாக வளர்ப்பதால் மட்டும் ஒரு சமூகம் மேன்மையடைந்துவிடுமா?

திராவிட கட்சிகளின் அதே தேர்தல் சீரழிவுப்பாதை அரசியலில் நின்றுகொண்டு சிலரும் தமிழ்த்தேசியவாதம் பேசுகிறார்களே எது சரி?

தமிழ்த்தேசியம் என்பது அரசியல் விடுதலையா? பண்பாட்டு விடுதலையா? இந்தியாவின் காலணியாகவும் பார்ப்பனீய பண்பாட்டு காலணியாகவும் இருப்பவர்களுக்கு யாரேனும் ஏதேனும் கொஞ்சமாவது செயலில் செய்துகாட்டிவிட்டு பெரியாரை விமர்சிக்கட்டும்.
 
ஆகஸ்டு 08, 2017
 
 

அண்ணாதுரை பட இயக்குநர் குழு






இயக்குநர் சீனுவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடங்களில் நடிக்கும்; விரைவில் திரைக்கு வரவிருக்கும் "அண்ணாதுரை" திரைப்படத்தின் படப்பிடிப்பில் எங்கள் இயக்குநர் குழு....

ஆகஸ்டு 04, 2017

ஆடிப் பெருக்கு...?

ஆடிப்பெருக்குக்கு நல்வாழ்த்தாம்.

ஆத்துல தண்ணி வந்தா மகிழ்ச்சியடைவதில் நியாயம். ஆறே வறண்டு கிடக்கும்போதும் மகிழ்ச்சி என்றால் இதை என்னவென்பது?...

ஆகஸ்டு 03, 2017

சீமான் - உறவுகள் இன்னும் உழைக்க வேண்டும்...



இவ்வாறான பல மேடைப் பேச்சாளர்களை தமிழகம் கண்டுவிட்டது. இதிலொன்றும் புதிதில்லை. தலைவர் பிரபாகரனுக்கு மேடைப்பேச்சு என்ற பலமில்லை. அவர் நிறைய பேசியதே இல்லை.

இப்போதைய நெருக்கடிக்கு தேவை, களப்பணி மட்டுமே. அதில் மிகவும் பின்தங்கியுள்ளது நாம் தமிழர். இப்போதைக்கு எதையும் குறை சொல்லிக்கொண்டிருப்பதுதான் முகநூல் தம்பிகளின் முதன்மை பணியாக உள்ளது. இவர்களை முதலில் திருத்தினாலே மேலும் ஆதரவு கூடும். ஆனால், காலம் ஏற்படுத்தித் தந்திருக்கிற ஒரு அரசியல் வெற்றிடத்தை நாம் தமிழர் தவறவிடுவதாகவே தோன்றுகிறது.

சீமானைப் போலவே கரு.பழனியப்பனும் சிறந்த பேச்சாளர்தான்.

சமூக மாற்றத்திற்கு பாடுபட்டு முன்னம் தங்களின் உயிர் உடைமைகளை தியாகம் செய்தவர்கள் எல்லாம் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமையை என்ற ஒன்றை மட்டுமே கொண்டிருக்கவில்லை, கூடுதலாக தீவிர செயல்பாடும்.

தமிழர் வாழ்வுரிமை கட்சி அளவுக்குகூட நாம் தமிழர் கட்சி ஏனோ போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.

உறவுகள் இன்னும் உழைக்க வேண்டும்.

ஆகஸ்டு 03, 2017

நடிகர் தனுஷ் உதவி. அரசு அசிங்கப்பட வேண்டும்...




பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆளுக்கு 50 ஆயிரம் என 80 லட்சம் ரூபாய் உதவி செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

முதலில் இதற்கு இந்த அரசு அசிங்கப்பட வேண்டும். மனிதர்களிடம்தான் அதையும் எதிர்பார்க்க முடியும் என்பதால் இதுவும் வாய்ப்பில்லை.

தனுஷின் உதவியைப் பாராட்டுவோம். விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் ஏதேனுமாவது செய்பவர்களை விமர்சிப்பது நியாயமில்லை. அதே சமயத்தில் இது தனுஷின் அரசியல் முதலீடு ஆகாதவரையில் நல்லதே. இப்படி ஆராயாமல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் பொம்மையானதால்தான் விவசாயிகளுக்கு இந்த நிலை.

அரசியலுக்கு வருவது தனுஷின் பிறப்புரிமை. அதை இப்படி தொடர்ந்து விவசாயிகளுக்கான குரலாகவும் போராட்டங்களில் பங்கெடுப்பாகவும் மாற்றினால் நல்லதே.

ஆகஸ்டு 02, 2017

கௌரவம்...?

"உனது சாவு செய்தி கேட்டுகூட வர நேரமில்லாமல் தவிர்க்கப்போகிறவர்கள் முன் நீ எவ்வளவு கௌரவமாய் வாழ்ந்தும் என்ன பயன்?"

"நீ நீயாகவே இரு"

ஆகஸ்டு 02, 2017

சினிமா தொழிலாளர்கள் போராட்டம்...?

அவுட்டோர் ஷூட்டிங்கில் ஒரே ஒரு நாள் மட்டும் 'ஜிம்மி ஜிப்' வைத்தால், 5 பேருக்கு ஒருநாள் வேலைக்கான தினக்கூலி ( ஒரு பேட்டா ) 10,200 ரூபாய்.

சென்னையில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்குச் செல்ல பயணப்படி ( ரெண்டு பேட்டா ) 5 பேருக்கு 20,400 ரூபாய்.

வேலை முடிந்து படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை திரும்ப மீண்டும் பயணப்படி ( ரெண்டு பேட்டா ) 5 பேருக்கு 20,400 ரூபாய்.

ஆக...

ஒரேவொரு நாள் வேலைக்கான தினக்கூலி
5 பேருக்கு 10,200 ரூபாய்.

வந்து போக அதே 5 பேருக்கும் பயணப்படி 40,800 ரூபாய்.

மொத்தத்தில் ஒருநாள் வேலைக்கு 5 பேருக்கும் செலவிட வேண்டியது 51,000 ரூபாய்.

இதுபோன்ற 2 பயணப்படிகளை 1 என குறைக்கும்படி தயாரிப்பாளர்கள் கோருகிறார்கள்.

அதேபோல் 12 மணி நேரம் 1 கால்ஷீட் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தொழிலாளர்கள் தரப்பில் நிறைய நியாயம் உள்ளதுதான். ஆனால், எல்லா தயாரிப்பாளர்களும் நிரந்தர முதலாளிகள் அல்லர். எல்லா சங்கங்களும் தங்களை சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக நடிகர்களின் சம்பளத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முதலில் தெளிவானதொரு மணிகட்ட வேண்டும்.

ஆகஸ்டு 02, 2017

தோழர் கொளத்தூர் மணி கைது

எல்லா போலீசையும் பிஜேபியிலோ அல்லது அதிமுகவிலோ அல்லது ஏதேனுமொரு ஜாதி சங்கத்திலோ நேரடியாக இணைத்துவிடலாம். இன்னமும் முக்காடு எதற்கு?

தமிழக அரசு, முன்பைவிடவும் மிகக் கேவலமாக மாறிக்கொண்டிருப்பதன் இன்னொரு உதாரணம்.

ஆகஸ்டு 01, 2017