8.11.19

பெரியார் பிறந்த நாள் 2017 - கற்க கல்வி அறக்கட்டளை

பெரியாரின் பிறந்த நாள் பொருட்டு "கற்க கல்வி அறக்கட்டளை" சார்பில் இன்று கும்மிடிப்பூண்டி ஈழ அகதிகள் முகாமில் தமிழ் வழி கல்வி பயிலும் சுமார் 350 மாணவ மாணவிகளுக்கு தோழர்கள் கரு.அண்ணாமலை, வழக்கறிஞர் வாசு அவர்கள் தலைமையில் பெரியார், அம்பேத்கர், பிரபாகரன், திருவள்ளுவர், காமராசர் படங்கள் அச்சிட்ட நோட்டுப் புத்தகங்கள், தமிழ் அகராதி, புத்தகப் பைகள் வழங்கப்பட்டது.
17.09.2017 








பெரியார் பிறந்த நாள் 2017

ஜாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், கடவுள், புனிதம், நேரம் காலம், சகுனம், சொர்கம், நரகம், மோட்சம், பாவம், புண்ணியம், பூர்வ ஜென்மம், ஆன்மா, திதி, யாகம், மந்திரம், பேய், பில்லி, சூனியம், ஜாதகம், ஜோசியம், பரிகாரம், பூஜை, பிரார்த்தனை, சாமியார்....

தன் தும்பிக்கையின் பலத்தை மறந்து இரந்து வாழும் யானையைப் போல, தன் அறிவின் பலத்தை மறந்து பொய் புரட்டுகளுக்கு பயந்து வாழும் மனிதர்களின் எண்ணங்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் அத்தனை மூட நோய்களுக்கும் மருத்துவம் சொன்ன மாமனிதன்; அறியாமை இருளை விரட்ட வந்த பெருநெருப்பு ஐயா பெரியார் அவர்களின் 139 வது பிறந்த நாள் இன்று.
 
17.09.2017

பார்ப்பனீய குணம் என்பது இதுதான்

1176 மதிப்பெண் எடுத்த அனிதாவைக் கொன்ற "நீட் தேர்வு முறைகேட்டை" ஏற்காத யோக்கியன் ஒருவன் (எச்.ராஜா), 52 வாக்கு பெற்று தோற்றதும் வெட்கமே இல்லாமல் சொல்கிறான் தேர்தலில் முறைகேடு நடந்தது என்று.
 
17.09.2017

எச்.ராஜா ஷர்மா தோற்றது எப்படி?

இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது – எச்.ராஜா ஷர்மா

# ஆமாம், இத்தனை ஓட்டு உங்களுக்கு விழுந்தது எப்படி ஜீ? எங்களாலயும் ஏத்துக்க முடியல ஜீ.

எச் ராஜா தோற்றது எப்படி?

எச். ராஜாவை போட்டியின்றி தேர்ந்தேடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன, அய்யா மணி அவர்களை வாபஸ் பெறுமாறு மிரட்டலும் விடுக்கப்பட்டது எடப்பாடி அரசால். எக்காரணத்தை கொண்டும் எச். ராஜாவுக்காக பின் வாங்கமாட்டேனென்று மணி அவர்கள் உறுதியாக இருந்ததால், வாக்காளர்களை கல்வித்துறை மூலமாக மிரட்ட தொடங்கியது அரசு. இதை தக்க நேரத்தில் ஆசிரியர் வீரமணி அவர்கள் கண்டித்ததோடு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றார்.

நிலைமையை புரிந்து கொண்ட செயல் தலைவரும் இதை எதிர்த்து உடனடியாக அறிக்கை விட்டார். அதன் பிறகே எச்.ராஜா போட்டியிடும் விஷயமே ஊடகங்கள் உட்பட வெளிஉலகுக்கு தெரிந்தது. முன்கூட்டியே யாருக்கும் தெரியாததற்கு காரணம் ராஜா வேட்புமனுவை கூட அவர் பெயரில் வாங்கவில்லை.

சரியான நேரத்தில் செயல்பட்ட செயல் தலைவர் அவர்களுக்கும், ஆசிரியர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தமிழக சாரண, சாரணியரின் எதிர்காலம் காப்பாற்றப்பட்டுள்ளது.

Akila Ramakrishnan

16.09.2017




மனுநீதியை விரட்டியடிப்போம்...


16.09.2017

எம்.ஆர்.ராதாவை கைது செய்ய வலுவான ஆதாரம்

"சமூக வலைதளங்களில் நீதிமன்றத்தை விமர்சிப்பவர்கள் பற்றி ஆதாரம் கொடுங்கள்"

– வழக்கறிஞர்களுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவு..!

(எம்.ஆர்.ராதாவை கைது செய்ய வலுவான ஆதாரம்)
 
16.09.2017
 
 

திறமை... மதிப்பு...

"உன் திறமையை நிரூபிக்காதவரையில் உன் கோபத்தை உலகம் மதிக்காது"
 
15.09.2017

உங்களுக்குத் தெரியுமா?

8 கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே. 1.5 % இருக்கிற அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 41% (ஊதியம் - 47000 கோடி, பென்ஷன் - 21000 கோடி) செலவிடப்படுகிறது.

14.09.2017

இனமான நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு நன்றி...

இனமான நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு நன்றி...!!!

தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளான 17.09.2017 அன்று கும்மிடிபூண்டி தமிழீழ அகதிகள் முகாம் மற்றும் புழல் தமிழீழ அகதிகள் முகாமைச் சேர்ந்த தமிழ் வழியில் பயிலும் சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு "கற்க கல்வி அறக்கட்டளை" சார்பாக கல்வி உதவி வழங்க ரூபாய் 70 ஆயிரம் நன்கொடை அளித்த இனமான நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
13-09-2017
 
 

அம்பேத்கர்" என்பது ஒரு பிராமண ஆசிரியரின் பெயரல்ல...

"அம்பேத்கர்" என்பது ஒரு பிராமண ஆசிரியரின் பெயர் என்று சீமான் சொன்னது தவறான தகவல். இப்படி முத"அம்பேத்கர்" என்பது ஒரு பிராமண ஆசிரியரின் பெயர் என்று சீமான் சொன்னது தவறான தகவல். இப்படி முதலில் இதை கிளப்பிவிட்டது காவிப்படைகள்.லில் இதை கிளப்பிவிட்டது காவிப்படைகள்.னது தவறான தகவல். இப்படி முதலில் இதை கிளப்பிவிட்டது காவிப்படைகள்.
 
13.09.2017