8.11.19

எச்.ராஜா ஷர்மா தோற்றது எப்படி?

இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது – எச்.ராஜா ஷர்மா

# ஆமாம், இத்தனை ஓட்டு உங்களுக்கு விழுந்தது எப்படி ஜீ? எங்களாலயும் ஏத்துக்க முடியல ஜீ.

எச் ராஜா தோற்றது எப்படி?

எச். ராஜாவை போட்டியின்றி தேர்ந்தேடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன, அய்யா மணி அவர்களை வாபஸ் பெறுமாறு மிரட்டலும் விடுக்கப்பட்டது எடப்பாடி அரசால். எக்காரணத்தை கொண்டும் எச். ராஜாவுக்காக பின் வாங்கமாட்டேனென்று மணி அவர்கள் உறுதியாக இருந்ததால், வாக்காளர்களை கல்வித்துறை மூலமாக மிரட்ட தொடங்கியது அரசு. இதை தக்க நேரத்தில் ஆசிரியர் வீரமணி அவர்கள் கண்டித்ததோடு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றார்.

நிலைமையை புரிந்து கொண்ட செயல் தலைவரும் இதை எதிர்த்து உடனடியாக அறிக்கை விட்டார். அதன் பிறகே எச்.ராஜா போட்டியிடும் விஷயமே ஊடகங்கள் உட்பட வெளிஉலகுக்கு தெரிந்தது. முன்கூட்டியே யாருக்கும் தெரியாததற்கு காரணம் ராஜா வேட்புமனுவை கூட அவர் பெயரில் வாங்கவில்லை.

சரியான நேரத்தில் செயல்பட்ட செயல் தலைவர் அவர்களுக்கும், ஆசிரியர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தமிழக சாரண, சாரணியரின் எதிர்காலம் காப்பாற்றப்பட்டுள்ளது.

Akila Ramakrishnan

16.09.2017




No comments:

Post a Comment