8.11.19

இங்க தமிழ் பிஜேபி நிலைமை?...

/// "பிற மாநிலங்களில் இருந்து குடியேறுபவர்கள், கன்னட மொழியை கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தாய்மொழியில் நாங்கள் பேசுவோம் என்று எதிர் பார்க்காதீர்கள்"

"கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே மெட்ரோ இரயில் நிலையங்களிலும், இரயில்களிலும் அறிவிப்புகள் செய்ய வேண்டும் என்று உளப்பூர்வமாக அறிவுரை செய்கிறேன்" ///

---- சி.டி. ரவி, பொதுச் செயலாளர், கர்நாடக பாரதீய சனதா கட்சி.

கர்நாடகால இருக்கற பாரதீய ஜனதாக்காரன் சரியாத்தான் இருக்கான். இங்கே தமிழ்நாட்டில இருக்கும் பாரதீய ஜனதாக்காரங்கதான் என்னமோ எச்.ராஜா மாதிரி இந்திக்கே பிறந்தவனுங்க மாதிரி பேசுறாங்க.

வெறும் பிரியாணி அண்டாவ எப்ப எப்படி தூக்கலாம்னு மட்டும் யோசிக்கிற நிலைமையிலதான் வெச்சிருக்காங்க இங்க...!
 
24.09.2017
 
 

இன்னும் எதிர்பார்க்கிறோம் ஜீ...

"குலக்கல்வி கொண்டுவந்ததைத் தவிர, ஹிந்தியை எதிர்த்தவர்களை அடக்கியது தவிர ராஜாஜி என்ன தவறு செய்தார்?"

- ஐயா சீமான்
 
23.09.2017

அடுத்த ராஜகோபாலாச்சாரி...

"நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல" - கமல்

அப்ப அடுத்த ராஜகோபாலாச்சாரி...????
(அப்படி ஆகாம இருந்தா சரிதான்)

23.09.2017

இதுவும் பொய்தானே...?

"ஜெ. இட்லி சாப்பிட்டார் என்று சசிகலாவிற்கு பயந்து பொய் சொன்னோம்" - திண்டுக்கல் சீனிவாசன்

இதேமாதிரி பிஜேபி இல்ல, எடப்பாடிதான் தமிழக முதல்வர்னு இப்ப சொல்றதும் பொய்தானே..?
22.09.2017

நிதி மன்றங்கள்

நீதிபதியை விமர்சித்தால் சிறையாம். யாரும் like செய்யாதீர்கள். களி தின்ன ஆசைப்படாதீர்கள்.
 
21.09.2017
 
 

கூடிய சீக்கிரம் அதையும் கூவித்தானே ஆகனும் ஓய்...

"பெரியார் பிறந்தநாளுக்கு மாலை அணிவிக்கவில்லை - சீமான்"

கரெக்ட், அடுத்ததா பிரபாகரன் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பன்னார்னு கேக்காம இருந்தா சரிதான். ஆனா உத்தரவுப்படி கூடிய சீக்கிரம் அதையும் கூவித்தானே ஆகனும் ஓய்.

21.09.2017

ஓஹோ ...

"எங்களைப் போல நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்" - ஓ.பி.எஸ்
 
21.09.2017

காவி என்றால் மட்டும் தேசபக்தர்களா?...

"மொத்தமாகவோ சில்லரையாகவோ மிகவும் குறைந்த விலைக்கு ஆயுதங்கள் வாங்க; மக்களின் நம்பிக்கை பெற்ற ஒரே கைராசியான நிறுவனம் " பாரத்மாதா கீ ஜே" ஸ்டோர். மாநிலமெங்கும் கிளைகள் உண்டு.

(இதுவே இவர்கள் கம்யூனிஸ்ட் கொடியுடன் இப்படி இருந்தால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி பிரியாணி அண்டா தூக்கும் குண்டர்களை வைத்து கதைகளை பரப்பி சுட்டுத்தள்ள உத்தரவிடுவார்கள். காவி அடையாளம் என்பதால் தேசபக்தர்கள்)
20.09.2017 


ஒலக தீர்க்கதரிசி...

19.09.2017


நாங்களும்தான் ஐயா...

"என்னை நான் முதலமைச்சராகவே நினைப்பதில்லை" - எடப்பாடி
 
18.09.2017