11.2.14
மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்
அறிவியலோ இறப்பினை 'இதய துடிப்பு,
மூளையின் செயல்பாடு (மூளை தண்டு உட்பட), மற்றும் சுவாசம் உட்பட உடலின் அனைத்து முக்கியமான உறுப்புகளும் செயல்பாடுகளை நிறுத்துதல்' என்று வரையறுக்கிறது.
ஆனால் மதங்கள் எப்போதுமே அறிவியலுக்கு மாறுபட்டுதான் நிற்கின்றது. உயிர் என்பது உயிராலும் உடலாலும் பிணைக்கப்பட்ட ஒரு கூடு ஆகும். எப்போது அந்த உயிர் நாம் வாழ இது தகுதி இல்லாத பிண்டம் என்று உடலை விட்டு பிரிகிறதோ அதனையே நாம் மதங்கள் இறப்பு வருணிக்கிறது.
மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை மதங்கள் ரீதியா முதலில் நாம் பார்ப்போம்.
இந்து மதம் என்ன கூறுகிறது என்றால் இறப்பிற்குப் பின்னர் அவர்கள் தேவலோகம், வைகுண்டம், சிவலோகம், சொர்க்கம் அல்லது நரகம் சென்று தங்கள் செய்வினைக்கு ஏற்ப சென்றுவிடுவார்கள். அவர்களது பாவம் கழியும் வரை மீண்டும் மீண்டும் புவியில் மறு ஜென்மம் எடுப்பார்கள் என்று கூறுகிறது.
புத்த மதம் என்ன கூறுகிறது என்றால் மறு பிறவி என்பதையே அது ஆணித்தரமாகக் கூறுகிறது, அதற்கு சாட்சி தற்பொழுது அவர்கள் கடவுளாகப் பார்க்கும் தலாய்லாமாவே சாட்சி. அவர்கள் இறப்பிற்குப் பின் ஆன்மா மட்டுமே உடலை விட்டுப் பிரிந்து, வேறு ஒரு உடலில் சென்று சேர்ந்துவிடுகிறது என்று நம்புகிறார்கள்.
முஸ்லிம் மதத்திலும் மறு பிறப்பு என்று நம்புகிறார்கள்.
மரணத்திற்குப்பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயே கொஞ்சம் குழப்ப நிலைதான் உள்ளது. சிலர் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் "நித்திரையடைகிறார்கள்", அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும் அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள். வேறு சிலர் மரிக்கும் தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர் மனிதர்கள் இறக்கும்பொழுது, கடைசி உயிர்த்தெழுதலுக்கும் கடைசி நியாயத்தீர்ப்பிற்கும், இறுதியாக, தங்கள் நித்திய குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு "தற்காலிகமான" பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்படுகிறார்கள் என்று கோருகிறார்கள்.
சரி இனி நாம் அறிவியலின்
படி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்..
இறந்த பிறகு நமது உடலை ஒன்று எரிப்பார்கள், அல்லது புதைப்பார்கள்.
எரித்தால் 3 நிமிடங்களில் சாம்பல்
தான். அப்படிப் புதைத்தால்........?
கீழே காணலாம்.
இறப்பின் பொழுது என்ன நடக்கிறதென்றால்
இதயத் துடிப்பு நின்று விடுகிறது...
மூளை மற்றும் தண்டுவடத்தின் செயல்பாடு நின்று விடுகிறது
உடலின் தோல் பகுதி இறுகி சாம்பல் நிறமாக மாறிவிடும்.
அனைத்து சதைப் பகுதிகளும் தளர்ந்தது விடும்
குடல் மற்றும் சிறு நீர்ப்பை காலியாகத் தொடங்கும்..
உடல் பகுதிகள் அனைத்தும் விரைக்கத் தொடங்கும்..
உடலின் வெப்ப நிலையானது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1 முதல் 1.5 டிகிரி வரை வீழ்ச்சியுறும்.
முப்பது நிமிடங்களுக்குப் பிறகு
தோல் நிறமானது ஊதா நிறமாகி மேழுபோல் ஆகாத தொடங்கும்
உதடுகள், கை மற்றும் கால் விரல் நகங்கள் மங்கலாகி இரத்தப் போக்கு இல்லாமல் வெளிர்ந்துவிடும்.
இரத்த ஓட்டம இல்லாமல் உடலானது நீல நிறத்திலிருந்து கருப்பாக மாறத் தொடங்கும் இதற்க்கு கன்றல் (Lividity) என்று பெயர்.
கை மற்றும் கால்கள் நீல நிறமாக மாறத் தொடங்கும்.
இரண்டு கண்களும் மண்டையோட்டினுள் புதிய ஆரம்பிக்கும்.
நான்கு மணி நேரத்திற்குப் பிறகு
உடலின் வெப்பநிலை குறைந்து குறைந்து சில்லென்று ஆகிவிடும். இதற்க்கு rigor mortis என்று பெயர்.
உடலில் உள்ள இரத்தம் உறைந்து கரு ஊதாவாக மாறத் தொடங்கிவிடும்.
உடல் சில்லென்று ஆகுவதாலும், இரத்தம் உரைவதாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கெல்லாம் உடலானது இறகி விரிக்க ஆரம்பித்துவிடுகிறது.
12 மணி நேரத்திற்குப் பிறகு
உடலின் வெப்ப நிலை மேலும் குறைந்து இரிகிவிடும்.
24 மணி நேரத்திற்குப் பிறகு
உடலின் வெப்ப நிலையானது சுற்றுச் சூழல் வெப்ப நிலைக்குத் திரும்பும்.
ஆண்களின் விந்த்கத்தில் உள்ள விந்து மரணமடைந்து விடும்.
தலை மற்றும் கழுத்து இப்போது ஒரு பச்சை-நீல நிறமாக தோன்றும்.
பச்சை-நீல நிறம் உடல் முழுவதும் பரவத் தொடங்கும்.
முகத்தின் அமைப்பானது மாறி, அடையாளம் மாற ஆரம்பிக்கும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு
உடலின் வாயுக்கள் விரிவடைந்து உடலானது வீங்கி விரிக்கும்.
உடலானது பெரியதாகி அழுகத் தொடங்கும். இது குளிர் பிரதேசத்தில் மெதுவாகவும், வெப்பப் பிரதேசத்தில் வேகமாவும் நடைபெறும்.
திரவங்கள் வாய், மூக்கு, கண்கள், காதுகள் மற்றும் மலக்குடல் மற்றும் சிறுநீர் ஆகியவை கசியத் தொடங்கும்..
உடலில் உள்ள முடிகள் அனைத்தும் உதிரத் தொடங்கும்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு
தோல், முடி, நகங்கள் ஆகியவை உடலிலிருந்து உதிரத் தொடங்கும்.
உடலின் அதிக அழுத்தத்தைத் தாங்காமல் தோலின் மீது வெடிப்பும், பிளவும் தோன்றும்.
எலும்புகள் அனைத்தும் மண்ணில் மக்க ஆரம்பித்து விடும்.
உடலின் பல் மட்டுமே எஞ்சி இருக்கும். ஏனெனில் இது மட்டும் தான் உடலில் மிகவும் வலிமையானப் பொருள்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு
வேற என்னங்க நடக்கும் புதைத்த இடத்தில் புள் முளைக்கத் தொடங்கிவிடும்..
பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்...
இலங்கையின் வட
கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழீழப் பகுதியில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும்
தமிழர்கள் மீது இனவெறி பிடித்த இலங்கை அரசு பல்வேறு வகைகளில் சொல்லொணா
அடக்குமுறைகளை ஏவி இலங்கையிலிருந்து தமிழர்கள் அனைவரையும் முற்றிலுமாக அழிக்கும்
வண்ணம் செயல்பட்டு வருவதுயாவும் இவ்வுலகம் அறிந்ததே. அதன் உச்சகட்டமாக 2009 ஆண்டு
போர் என்ற பெயரில் குழந்தைகளென்றும், பெண்களென்றும், வயதானவர்களென்றும்,
நோயாளிகளென்றும் பாராமல் ஈவிரக்கமின்றி சுமார் 2 லட்சம் தமிழர்களையும் அவர்கள்தம்
இருப்பிடங்களையும் அழித்தொழித்தது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இந்த
இனப்படுகொலையின் பின்னனியில் காந்தி தேசம் என்று தம்மை உலகில்
அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்தியாவும் செயல்பட்டதை அறிந்து இந்த நாட்டை எமது
நாடென்று நம்பிக்கொண்டிருக்கும் ஏழு கோடி தமிழர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தோம்.
12 வயது சிறுவன்
பாலச்சந்திரனின் படுகொலையைக் கண்டு கொந்தளித்து உலகத் தமிழர்களும், தமிழக அனைத்து மாணவ
மாணவியர்களும், தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களும், தமிழக அரசும் ஓரணியில்
நின்று தமிழ்நாட்டில் சிங்கள விளையாட்டு வீர்ர்கள் விளையாடக்கூடாதென்றும்,
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாதென்றும், இனப்படுகொலைக்கு நீதி
வேண்டியும், தனித் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும்
போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இம்மாதிரியான போராட்டங்களை
வலுவிழக்கச்செய்யும் நோக்கில் இலங்கையில் சகஜநிலை திரும்பிவிட்டதாக ஒட்டுமொத்த
உலகையும் ஏமாற்ற தான் போடும் நாடகங்களுக்கு பணத்தாசை பிடித்த சுயநல தமிழர்களையே
பகடைகாய்களாக்கி பயன்படுத்தி வருகிறது இனவெறி இலங்கை அரசு. ஓராயிரம்
இந்துக்கோவில்களுக்குமேல் இடித்து தரைமட்டமாக்கி மக்களின் மத உரிமையில்கூட
இனவெறியை உமிழும் இலங்கை, தற்போது அம்மாதிரியான ஒட்டு வேலைக்கு தமிழீழப்பகுதியான
வவுனியாவில் சில தமிழ் துரோகக் குழுக்களால் நடத்தப்பெறும் ஒரு அம்மன் கோவில்
விழாவிற்கு சென்று நிகழ்ச்சி நடத்த தமிழகத்தைச் சார்ந்த பிரபல பின்னனி பாடகரான
“மாணிக்க விநாயகம்” அவர்கள் செல்லவிருக்கும் செய்தியை அறிந்து உணர்வுள்ள உலகத்
தமிழர்கள் அனைவரும் பெரும் வருத்தமடைகிறோம். இலங்கைக்கெதிராக மதுரையில் சாதாரண
மேடைக் கலைஞர்கள் வெளிப்படுத்திய தமிழ் உணர்வும், தமிழ்த் திரையுலகம் காட்டிய
எதிர்ப்புணர்வும் திரு.மாணிக்க விநாயகம் அவர்களுக்கும் இருக்குமென்று உறுதியாக
நம்புகிறோம். உலக அரங்கில் தனிமைப்பட்டு நிற்கும் இலங்கைக்கு ஒத்தூதும்
இம்மாதிரியான செயல்களில் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கலைஞர்கள் பங்கேற்பது
தமிழக அரசையும், தமிழக மாணவர்களையும், ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் அனைவரையும்
அவமானப்படுத்துவதோடு மட்டுமன்றி அவர்களின் இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவதற்கு
ஒப்பாகும். திரு.மாணிக்க விநாயகம் அவர்கள் சானல்-4 தொலைக்காட்சி ஆவணங்களைக்
கண்டிருப்பார் என்றும், அவர் உணர்விலும் தமிழராகத்தான் இருப்பார் என்றும் உறுதியாக
நம்புகிறோம். எனவே தெரிந்தோ தெரியாமலோ உலகை ஏமாற்றும் இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு
பகடையாகும் இப்பயணத்தை திரு.மாணிக்க விநாயகம் அவர்கள் ரத்து செய்யவேண்டுமென்றும்,
இனி எதிர்காலத்திலும் இம்மாதிரியான தமிழர் விரோத / துரோக நிகழ்ச்சிகளில்
பங்கெடுக்கக்கூடாதென்றும் உணர்வுள்ள உலகத் தமிழர்களின் சார்பாகவும் தந்தை பெரியார்
திராவிடர் கழகத்தின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
கரு.அண்ணாமலை,
வடக்கு மண்டல அமைப்பாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
Subscribe to:
Posts (Atom)


