17.5.14

வரலாறு


கி.பி. 1 - 20

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

கி.பி. 10

உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.

கி.பி. 21 - 42

குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 - 100

சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.

கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் ( martin,1928 ) செய்த உருமாற்றம்.

கி.பி. 53

ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.

கி.பி. 101 - 120

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.

கி.பி. 105

சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி. 107

ரோமப்பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.

கி.பி.120-144

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.

கி.பி.145-175

வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.

கி.பி.175-200

கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி)

மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும் நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்: பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை(மேலே இடம்), சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில் மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.

கி.பி.180

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.

கி.பி.200

இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.

கி.பி.250-275

வரகுண பாண்டியன் ஆட்சி

கி.பி.275-300

மாணிக்கவாசகர் காலம்.

கி.பி.300-700

தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.

கி.பி.300-700

தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.

கி.பி.358

துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்

கி.பி.400

மனுதர்மம் அமைக்கப்பட்டது.

கி.பி.419

பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.

கி.பி.450-535

தெற்கில் போதிதர்மர் காலம்.

கி.பி.570-632

முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்

கி.பி.590-631

சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.

கி.பி.600-900

வைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.

கி.பி.610

நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.

கி.பி.630-644

சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம்.

கி.பி.641-645

அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.

கி.பி.650

திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்

கி.பி.788

ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.

கி.பி.800

இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.

கி.பி.825

சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.

கி.பி.850

மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.

கி.பி.900

குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம்.

பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்).

கி.பி.900

இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.1000

உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்) இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்

கி.பி.1000

சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.

கி.பி.1000

பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.

கி.பி.1000

துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்.

கி.பி.1010

சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.

கி.பி.1017-1137

தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

கி.பி.1024

முகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.

கி.பி.1040

சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.

கி.பி.1150

வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1197

நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால் அழிக்கப்பட்டது.

கி.பி.1230-60

ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.

கி.பி.1232

போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.

கி.பி.1250

சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.

கி.பி.1268-1369

தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.

கி.பி.1272

மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.

கி.பி.1296

அலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.

கி.பி.1300

கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி.1311

தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.

கி.பி.1333-1378

மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.பி.1340

போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான்.

சம்புவராயர்கள்

சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.14

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் நாணயங்கள் " வீரசெம்பன் குளிகைகள்" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்".

கி.பி.1336

விஜய நகர அரசு(1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1336

அரிகரன் விஜயநகரஅரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப்புலவர்களும், காலமேகப்புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்

16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.

கி.பி.1336

விஜய நகர அரசு (1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1337

உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.

கி.பி.1350

தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1440

ஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கி.பி.1469-1538

சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்

கி.பி.1492

கிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கி.பி.1498

போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன் முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.

கி.பி.1500

திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.

கி.பி.1500

புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.

கி.பி.1500

உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.

கி.பி.1509

தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.

கி.பி.1510

போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.

கி.பி.1546

நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப்பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.

கி.பி.1565

விஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது.

கி.பி.1595

ஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.

கி.பி.1601

கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 - ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.

கி.பி.1619

யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன

கி.பி.1619

அமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர்.

கி.பி.1623-1659

திருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார்.

நாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார்.

அதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கி.பி.1627-1680

மராட்டிய மன்னன் சிவாஜியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.

கி.பி.1628 - 1688

திருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.

கி.பி.1650

சைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது.

கி.பி.1676 - 1856

சிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விஜய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரஸ்வதி மகாலைக் கட்டினார்.

வரலாறு

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் (ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.


கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்லகேமில் பிறந்தார்.

"சாதி இல்லை" என்று சான்றிதழ் பெறுவது அறிவுடமைதானா?

பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நண்பர், "நான் பொருளாதார ரீதியாக வளர்ந்துவிட்டதால் இட ஒதுக்கீட்டு சலுகை தேவையில்லை. என் பிள்ளைக்கு சாதி மதமில்லை என்று குறிப்பிட்டே பள்ளியில் சேர்க்கப்போகிறேன். இதனால் சாதி மதம் ஒழிந்துவிடும். இந்த சமுதாயத்துக்கு என்னாலான உதவி!" என்றார் பெருமையான தொனியில்.

இன்னொரு நண்பர், “மே,ஜூன் மாதம் வந்தாலே. இப்படி “புரட்சி” பேசுவது சிலருக்கு ஃபேஷன் ஆகிவிட்டது. இது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம்!” என்றார் பட்டென்று. மேலும் அவர்,

"ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைதான் இட ஒதுக்கீடு. அது சலுகை அல்ல!

இது பொருளாதாரத்தின் அடிப்படையிலானதும் அல்ல. சமூக ரீதியானது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களை , தங்களுக்குச் சமமானவர் என்று முற்பட்ட வகுப்பினர் ஒப்புக்கொள்கிறார்களா…. ?

தவிர இன்று இவரது பொருளாதாரம் வளமாக இருக்கலாம். இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என உத்திரவாதம் உண்டா? அப்படி இல்லாமல் இவரது பொருளாதாரம் கீழ் நிலைக்குச் சென்றுவிட்டால், அப்போது மீண்டும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற வழி உண்டா? கிடையாது!

சாதி வெறி நிலவுவது இந்த சமுதாயத்தில்தான். பள்ளி சான்றிதழ்களில் அல்ல. அதாவது, சமுதாயத்தில் நிலவி வரும், சாதி (சாதீய ஏற்றத்தாழ்வு) என்பது நோய். . அந்த நோயைப் போக்கும் மருந்துதான், சாதிவாரி இட ஒதுக்கீடு. 

“தலைவலி தைலத்திலேயே தலைவலி என்கிற வார்த்தை இருக்கிறது. ஆகவே தலைவலிக்குக் காரணமே, அந்த தைலம்தான்” என்பது எந்த அளவுக்கு அறியாமையோ, அதேபோலத்தான் சாதிவாரி ஒதுக்கீட்டுக்காக கல்விச்சாலையில் பெறப்படும் சாதி பற்றிய தகவல்களை எதிர்ப்பதும்.

சமுதாயத்தில் முளைத்து கிளத்து நிற்கும் சாதியை ஒழித்துவிட்டால் கல்விச்சாலையில் ஏன் சாதி தேவைப்படப்போகிறது? அதற்காகப் போராடுவோம்! 

உண்மையிலேயே சாதி ஒழிப்பில் தீவிரமாக இருப்பவர்...
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து தங்களது வாரிசுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். தாழ்த்தப்பட்டவர்களானால் அதிலும் தாழ்த்தப்பட்டிருக்கும் புதிரை வண்ணார், அருந்ததியினர் இனத்திலிருந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். சாதியை ஒழிக்கும் மிகச் சரியான வழி இதுதான்.

கல்விச் சாலைகளில் சாதியைக் குறிப்பிடுவதைத் தடுக்க இன்னொன்று செய்யலாம். குறிப்பிட்ட சாதி என்பதை எழுதாமல், பிற்படுத்தப்பட்டவர், மிக பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், அட்டவணை இனத்தவர் என்று மட்டுமே குறிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தலாம். அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தலாம். இதுதான் சாதியை பள்ளியிலிருந்து அகற்ற சரியான வழி.

தற்போதைக்கு இன்னொரு வழி இருக்கிறது. உரிய சாதிச் சான்றதழை முறையாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லை என்கிற நிலையில் பயன்படுத்தாதீர்கள். கல்லூரி அல்லது வேலைக்கு சேர முயற்சிக்கும்போது, சாதிச் சான்றிதழை இணைக்காமல் அனுப்புங்கள். அப்போது இட ஒதுக்கீட்டு உரிமை கிடைக்காது. இதுதான் சரி. 

ஒட்டுமொத்தமாக என் பிள்ளைக்கு சாதிச் சான்றிதழ் வேண்டாம். ஒதுக்கீட்டு உரிமை வேண்டாம் என்பது - உங்கள் வாரிசாக இருந்தாலும்- அடுத்தவர் உரிமையைப் பறிப்பதே ஆகும்.

இது முட்டாள்த்தனம் மட்டுமல்ல... அயோக்கியத்தனமும்கூட!"
என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் நண்பர்.

(டி.வி.எஸ். சோமு அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து)

பெரியார் அணிந்த பச்சைக்கல் மோதிரம்

பெரியார் ஒரு பெரிய பச்சைக்கல் மோதிரம் போட்டிருப்பார். கடைசிவரையில் எந்தச்சுழ்நிலையிலும் பெரியாரின் கையைவிட்டு அதைக் கழற்றவேயில்லை. இதைப்பற்றிய பல விமர்சனங்கள் 
உண்டு.

சோதிடர்கள் – பெரியாரின் நீண்ட ஆயுளுக்கும் பெரும் பணவசதிக்கும் காரணமாகப்பெரியாரின் இராசிப்படி ஒரு பெரும் ஜோதிடரானமுனிவர் சொற்படிப் பச்சைக் கல்லை அணிந்திருக்கின்றார் என்றார். சித்த மருத்துவரான ஒரு பெரிய சாமியார் என்னிடம் சொன்னார். ‘இரசவாதம் தெரிந்த ஒரு பெரிய முடிவர்பாதரசத்தைக் கல்லாகித் தனது தவ வலிமையால் அதற்குப் பச்சை நிறம்கொடுத்து – பெரியார் சாமியாராய்த் திரிந்த காலத்தில் அவருக்குக் கொடுத்தார். அந்தத் தவ வலிமைதான் பெரியாரை எந்த எதிரியும்; ஏவல்; பில்லி;சூனியம்; மாந்திரிகம்;தாந்த்ரிகம் எதனாலும் அசைக்க முடியவில்லை. என்றார். சீர்திருத்தக்காரர்களான சில நண்பர்களே ‘நகைப் பைத்தியம் கூடாது என்று பெரியார் ஏன் இந்த மோதிரம் போட்டார்’ என்று மேலே சொன்ன புகார்களை மறைமுகமாய் நம்புகிற மாதிரிப் பேசியதும் உண்டு.

தென்மாவட்டங்களில் பெரியாரின் சுற்றுப்பயணம், சீருந்து நாகர்கோவில் சாலையில் போய்க்கொண்டிருக்கின்றது. அய்யா எதைப்பற்றியோ ஆர்வமாய் பேசிக்கொண்டு வந்தார். நான் கன்னத்தில் கையூன்றியபடிக் கூர்ந்து கேட்டுக்கொண்டே வந்தேன். என் விரலில்புதியதாய் ஒரு பெரிய மஞ்சள் கல் வைத்த மோதிரம் போட்டிருந்தேன். பெரியார் அவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் புதிதாய்க் கடிகாரம்,மோதிரம், பேனா ஆகியவற்றை வைத்திருந்தால் குழந்தைபோல் வாங்கி அதன் விலை, தயாரிப்பு, சிறப்புகளைப் பற்றி விசாரிப்பார்.

என்னுடைய மோதிரத்தை வாங்கி அதன் பெரிய கல்லை உற்று உற்றுப் பார்த்துவிட்டு “என்ன விலை என்றார் நான் “இருபது ரூபாய்” என்று சொல்லி இரண்டு விரங்களைக் காட்டினேன். ” என்ன! இரண்டாயிரமா” என்றார். “இல்லை. வெறும் இருபது ரூபாய்” என்று சொல்லி, “என்னுடைய வீடு இருக்கும் உறையூர் பகுதியில்தான் இது போன்ற செயற்கை வைரக் கற்கள் தயாரிக்கிறார்கள்” என்பதையும் சொன்னேன்.

“எந்த வித்தியாசமும் அசலுக்கும் போலிக்கும் தெரியலையே” என்றார் பெரியார், “போலிக்குப் பெருமையே அது தான்யா” என்றேன்.

இது தான் சரியான சமயம் என்று பெரியாரிடம் கேட்டனர். அது வண்டிக்குள் எப்போதும் இருக்கும். பலரின் சந்தேகமும் கூட, ஆம்! பெரியாரின் பச்சைக் கல் மோதிரம் பற்றியச் சந்தேகம்தான். அய்யாவிடம் கேடகப் பலருக்கும் பயம். பெரியார் தம் மோதிரததை ஒரு முறை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டார். “அதுவா” என்றார்.

கொஞ்சம் சகஜ நிலையில் இருக்கின்றார் என்று கண்டு கொண்ட நண்பர் தென்பாதி பெரியசாமி (கலைஞரின் புகைப்படக் கலைஞர் சிங்காரத்தின் தம்பி மாமனார்) மோதிரம் பற்றிப் பலரும் எழுப்பும் சந்தேகங்களை மெல்லக் கூறினார். “அப்படியா.. நாசமாப்போச்சு.. போ.. இதை ஏன் முதலிலேயே எங்கிட்ட கேக்கலே” என்றார் பெரியார்.

“எங்க கோயமுத்தூர் ஜில்லாவுல வெள்ளக் கோவில்லே ஒருசெட்டியார் மஞ்ச நோட்டீசு குடுத்திட்டார்…(இன்சால்வென்சி). அவரோடு சொத்தெல்லாம் ஏலம் போச்சு.. நானும் போயிருந்தேன். அப்ப தங்கள்ம் ஒரு பவுன் பதின்மூன்று ரூபாய்!(ரூ.13). அப்ப இந்தப் பச்சைக் கல்லும் ஏலத்துக்கு வந்தது. இந்தப் பச்சைக் கல் மோதிரம் போட்டப்புறம் தான்செட்டியார் திவாலாயிட்டார் என்று யாரும் ஏலம் கேட்கலே. சர்க்கார் மதிப்பு அப்போ இருநூற்றுப் பதினைஞ்சு ரூபாய். நான் ஒரு ரூபாய் கூட்கொடுத்து இருநூற்றிப் பதினாறுக்கு வாங்கினேன். பலபேரு இதபை போட வேண்டாம். செட்டியாரைத் திவாக்கின கல்லுன்னாங்க. நான் என்னதான் ஆகுதுன்னு பாப்போமேன்னு மோதிரமாக்க் கட்டிப்போட்டேன்…. எங்க வீட்டில் சில பேருக்குத் திவால் பயம்.. நடந்தத்து என்ன தெரியுமா? எனக்குப் பணம் குவியுது… குவியுது.. என்ன பணறதுன்னே தெரியலே.. குவியுது..” என்றார், சிறுபிள்ளபிள்ளை போல .


= திருச்சி செல்வேந்திரன் எழுதிய நூலிலிருந்து .

இந்தியாவின் வரி வகைகளும் - நேர்மையும்


1) கேள்வி : என்ன பன்னிட்டு இருக்கீங்க?
பதில் : வியாபாரம்.
வரி : அப்படியா PROFESSIONAL TAX கட்டுங்க.!

2) கேள்வி : என்ன வியாபரம் பன்றீங்க?
பதில் : பொருட்களை விற்கிறேன்.
வரி : அப்படியா SALES TAX கட்டுங்க!!

3) கேள்வி : பொருட்களை எங்க இருந்து வாங்கறீங்க?
பதில் : பக்கத்து மாநிலம் அல்லது நாட்டிலிருந்து.
வரி : அப்படியா CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTRO கட்டுங்க

4) கேள்வி : வியாபரத்தில் என்ன கிடைக்குது?
பதில் : லாபம்.
வரி : அப்படியாINCOME TAX கட்டுங்க

5) கேள்வி : லாபத்தை எப்படி பங்கிடுவிங்க?[/size]
பதில் : dividendஆக பங்கிடுவோம்.
வரி : அப்படியாDIVEDENT DISTRIBUTION TAX கட்டுங்க!

6) கேள்வி : எங்க உங்க பொருட்களை உற்பத்தி பண்ணுறீங்க?
பதில் : தொழிற்சாலையில்.
வரி : அப்படியா EXCISE DUTYகட்டுங்க!

7) கேள்வி : உங்களுக்கு அலுவலகம் / தொழிற்சாலை / சேமிப்பு கிடங்கு இருக்க?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா MUNICIPAL & FIRE TAX கட்டுங்க!

8)கேள்வி : உங்களிடம் அலுவலர்கள் இருகிறார்களா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா STAFF PROFESSIONAL TAX கட்டுங்க

9) கேள்வி : லட்சங்களில் வியாபாரம் பண்ணுறீங்களா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா TURNOVER TAX கட்டுங்க
பதில் : இல்லை.
வரி : அப்படியா MINIMUM ALTERNATE TAX கட்டுங்க

10) கேள்வி : வங்கியிலிருந்து 25,000க்கு மேல் பணம் எடுக்குறீங்களா?
பதில் : ஆமாம் சம்பளம் போடுறத்துக்கு.
வரி : அப்படியா CASH HANDLING TAX கட்டுங்க!

11) கேள்வி : உங்கள் வாடிக்கையாளர்களை விருந்திற்க்கு எங்கே அழைத்து போவீர்கள்?
பதில் : ஓட்டல்
வரி : அப்படியா FOOD & ENTERTAINMENT TAX கட்டுங்க

12) கேள்வி : வியாபரத்துக்காக வெளியே போறீங்களா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா FRINGE BENEFIT TAX கட்டுங்க!

13) கேள்வி : ஏதாவது சேவை அளித்து / பெற்று கொண்டிற்களா?
பதில் :ஆமாம்.
வரி : அப்படியா SERVICE TAX கட்டுங்க!

14) கேள்வி : உங்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது?
பதில் : பிறந்த நாள் பரிசு.
வரி : அப்படியா GIFT TAX கட்டுங்க

15) கேள்வி : Do you have any Wealth?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா WEALTH TAX கட்டுங்க!

16) கேள்வி : Tension குறைக்க என்ன செய்வீர்கள் ?
பதில் : சினிமா அல்லது ரிசாட்
வரி : அப்படியா ENTERTAINMENT TAX கட்டுங்க

17) கேள்வி : நீங்க எதாவது வீடு வாங்கி இருக்கீங்களா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா STAMP DUTY & REGISTRATION FEE கட்டுங்க

18) கேள்வி : எவ்வாறு பயணிப்பிற்கள்?
பதில் : பேருந்து.
வரி : அப்படியா SURCHARGE கட்டுங்க

19) கேள்வி : வேற எதாவது வரி இருக்கா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX கட்டுங்க!!!

20) கேள்வி : எப்பவாவது தாமதமா வரி கட்ட தாமதித்து இருக்கிறீர்களா?
பதில் : ஆமாம்
வரி : அப்படியா INTEREST & PENALTY கட்டுங்க

21) இந்தியன் :: நான் இப்ப சாகலாமா??
பதில் :: கொஞ்சம் பொருங்க நாங்க புதுசா FUNERAL TAX போடபோறோம்!!!

(நன்றி: Surya Born To Win முகநூல் பக்கத்திலிருந்து)

ஈழத்தமிழருக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?...


இணையத்தில் திமுகவினர் ஈழத்தமிழர்களுக்காக இரண்டுமுறை ஆட்சியை இழந்தவர் கருணாநிதி என்று பசப்பி வருகிறார்கள். பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி இப்படி புலம்பியதுண்டு, அதை அவரது தொண்டரடி பொடிகளும் பின்பற்றி பேசுகிறார்கள்.. அதற்காகவே உண்மையில் எதற்காக ஆட்சியை இழந்தார் கருணாநிதி என்பதை பின்னோக்கி பார்க்க வேண்டிய சூழல் தற்பொழுது வந்துள்ளது..

1977: முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி அலகாபாத் நீதிமன்றம் தேர்தலில் முறைகேடு செய்ததற்காக இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கிறது. ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் பெரும் கூட்டம் இந்திராவை பதவி விலக சொல்லி போராட்டம் நடத்துகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து இந்திரா உச்சநீதிமன்றம் செல்கிறார். ஜூன் 24 அன்று உச்சநீதிமன்றமும் இந்திராக்கு எதிரான தீர்ப்பை வழங்குகிறது. அன்று இரவே இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. இந்திராவிற்கு எதிராக முழு அளவில் செயல்பட்ட ஜெயபிரகாஷ் நாராயணனோடு கை கோர்க்கிறார் கருணாநிதி. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து 1976 ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் தேதி இந்திராவின் கட்டளைக்கு இணங்க ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1980 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்றும்… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்றும்... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தார் என்று பொய்யை மட்டுமே எழுத தெரிந்த கலையை பெற்றிருக்கும் எந்த உபிக்கள் எழுதினாலும் காறித்துப்புங்கள்.

(முகநூலிலிருந்து)

மோடி, லேடி, கேடி, பேடி எவருக்கும் என் வாக்கு கிடையாது.. - மே 17 திருமுருகன் காந்தி


பாஜக, காங்கிரஸ்,திமுக எனும் பகைவரை வீழ்த்த அதிமுக என்றுமே ஆயுதமாக எனக்கு தோன்றியதில்லை. 

கடந்த தேர்தலில் அதிமுக நமது எதிர்ப்பினை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினையே அது தொடர்ச்சியாக எடுத்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதே கிடையாது. மாறாக தமிழின ஆதரவாளர்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறைகள் நடத்தப்படவே செய்தன. கடந்த வருடம் மே மாத இனப்படுகொலை நினைவேந்தல் தமிழகத்தில் எங்குமே நடத்த அனுமதிக்கப்படவில்லை.. 

இலங்கை மீது பொருளாதாரத்தடை , சிறப்பு சித்திரவதை முகாம் அகற்றல் என எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை... ஆனால் பிரபாகரன் படம் வைக்கப்படக் கூடாது என்பது முதல் முல்லைப்பெரியாற்று போராட்டத்தில் தாக்குதல், இடிந்தகரை மக்கள் மீதான தாக்குதல், பரமகுடி கொலைகள், கெயில் குழாய் எதிர்ப்பு மக்கள் மீது தாக்குதல் 

மற்றும் மீத்தேன் எதிர்ப்பில் “மக்கள் அச்சம்” என்றே பேசுகிறார், கூடன்குளம் போன்று “ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது, அதில் எம்.எஸ் சாமிநாதன் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். நியூட்ரினோ திட்டம் குறித்தான நிலைப்பாடு எதிராகவே இருக்கிறது. இவ்வாறு தமிழின வாழ்வுரிமைக்கு எதிரான நிலைப்பாடுடனேயே அதிமுக (திமுகவும்) இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்தே பல்வேறு விடயங்களில் தமிழினக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகிறார். 

கரசேவையில் இருந்து, மதமாற்ற தடுப்புச் சட்டம், இடஒதுக்கீடு எதிர்ப்பு என பெரும்பாலனவற்றில் பாஜகவிற்கு இணையாக இருக்கிறது அதிமுகவின் நிலைப்பாடு. இந்துத்துவத்திற்கும் அதிமுகவிற்கும் வித்தியாசம் இருப்பதாக அவர்கள் என்றுமே காட்டியது கிடையாது. 

வேறொரு கோணத்தில் பார்க்கும் பொழுது, காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கும், அதிமுகவிற்கும் எதிரியாக இருக்கிறது. மைய அரசிற்கும், மாநில அரசிற்கும் முரண் இருக்கும் பொழுது, மாநில அரசானது, ’மக்கள் சார்ந்து’ நிற்பதாக கட்டிக்கொள்கிறது. ஆனால் இக்கட்சிகள் மாநிலம்-மத்திய அரசில் அதிகாரம் பெறும் பொழுது ’இந்திய தேசிய’ நலனே மாநில மக்கள் மீது திணிக்கப்படுகிறது. ஏனெனில் மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கையாகவும் மாறுகிறது. தமிழர் விரோத மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் ஊடாக நடைமுறைப்படுத்துகிறது. 

இதையே 2009இல் திமுக அரசின் வழியாக பார்க்க முடியும். 2009இல் இருந்த மத்திய அரசு என்பது காங்கிரஸ் அரசு என்பது மட்டுமல்ல அது ’திமுக’வின் அரசும் கூட. அதனாலேயே காங்கிரஸ் அரசின் இனப்படுகொலை திட்டத்தினை நடைமுறைப்படுத்த திமுகவின் தமிழக அரசு தமிழர்களை ஒடுக்கியது. திமுகவின் துரோகத்தின் புள்ளிகள் இங்கே இணைகின்றன. 

மத்திய-மாநில ஆட்சிகளுக்கு இடையேயான முரண்கள் முடிவிற்கு வரும் பொழுது ஒடுக்கப்படுவது தமிழக மக்களே.. திமுகவிற்கும், அதிமுகவிற்கும் பெரிதும் வித்தியாசம் கிடையாது. பெரும் வணிக கட்சிகளாக மாறி நிற்கும் இவைகள் தனது அடிப்படை மக்கள் விரோத்தன்மையிலிருந்து மாறிவிடாது. 

தேர்தலில் வாக்களிப்பது ’முழுமையான மாற்றத்தினை’ கொண்டுவரும் என்கிற எண்ணத்தினை விட்டு வெளியே வரவேண்டும். கொள்கை திட்டங்கள் ஏதும் மாறப்போவதில்லை. இது ஒருவகையான பழிவாங்கல் என்பதைத் தாண்டி நாம் பெரிதும் சாதித்துக்கொள்வது ஏதும் இல்லை.. ஏனெனில் திமுக. அதிமுகவிற்கு நன்கு தெரியும், தம்மைத் தவிர வேறெருவரும் மாற்றுகிடையாது என்று. இந்தச் சக்கரம் உடைக்கப்படவேண்டும். 

தேர்தல் முடிந்தபிறகு நிபுணர் குழு அறிக்கையைக் கொண்டு மீத்தேன் திட்டம் அமுலுக்கு வரும் பட்சத்தில் முல்லைபெரியாறு-கூடன்குளத்தில் நிகழ்ந்ததைப் போன்ற ஒடுக்குமுறை தஞ்சையில் நிகழும் பட்சத்தில் பெரும்பான்மையான பலத்தினைக் கொண்டிருக்கும் அதிமுக நம்மை ஜனநாயகமாக கையாளும் எனக் கருதமுடியாது. 

நீங்கள் வாக்களிக்கவேண்டுமென்று முடிவெடுத்தால், பெரியக் கட்சிகளைத் தாண்டி வேறு ஏதேனும் மாற்று வேட்பாளர், எளியவர், மக்கள் போராளி உங்கள் தொகுதியில் இருந்தால் வாக்களியுங்கள். அப்படியாரும் இல்லையெனில், நீங்கள் வாக்களிக்காமல் போவதால் ஏதும் குடிமுழுகிப் போய்விடாது.. 

’மாற்றம்’ வேண்டுமெனில் போராட்டக்களத்திற்கு வாருங்கள். தேர்தல் தலைவலிக்கு மட்டுமே மருந்து, மூளைக்காய்ச்சலுக்கு அல்ல...
ஏனெனில் இந்தியாவை நடத்துவது கட்சிகள் அல்ல, 6000க்கும் அதிகமான உயர்சாதி அதிகாரிகள். இவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களே பெரிய கட்சிகளாக மாற அனுமதிக்கப்படுகிறது. அவர்களே வெற்றி பெறவும் முடிகிறது. இயன்றவரை பெரிய கட்சிகள் எவரும் பெரும்பான்மை இல்லாத நிலையை ஏற்படுத்துங்கள்

இவர்கள் அனைவரும் நாளை அவசியப்பட்டால் பாஜக, அல்லது காங்கிரஸுடன் கூட்டணி வைக்கவே செய்வார்கள்... அதற்கான வாய்ப்புடனேயே அதிமுக இருக்கிறது.. 

வலிமையான திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக சாமானிய மக்களை ஒடுக்கும். மக்களுக்கான அவசர காலத்தில் நேரில் சந்திக்க இயலாத தலைவர்கள் வெற்றி பெற்றால் என்ன? தோற்றால் தான் என்ன?

இப்பெரிய கட்சிகள் பலமற்று இருக்கும் பொழுதுதான் நாம் வலிமை பெருகிறோம். 

தோல்வி வைத்தியம் ’டி.ஆர்.பாலு’வில் இருந்து துவங்கட்டும் ...,

சரவணா ஸ்டோர்ஸ்...!




சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’

‘‘திருவண்ணாமலை பக்கம்..’’

‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’

‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’

‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’

‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’

‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’

‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’

‘‘சாப்பாடு?’’

‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’

‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’

‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’

‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’

‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’

‘‘உட்காரவே கூடாதா?’’

‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’

- யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.

‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’

‘‘5,500 ரூபாய்.’’

‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’

‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’

‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’

‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’

‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’

‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’

‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’

‘‘ஆமாம்.’’

‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’

‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’

‘‘லீவு எல்லாம் உண்டா?’’

‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’

‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’

‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’

‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’

‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’

‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’

‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’

‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’

‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’

‘‘தெரியலை..’’

‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’

‘‘நெல் விவசாயம்..’’

‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’

‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’

‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’

‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’

‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’

‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’

‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’

‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’

- கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.

(இணையத்திலிருந்து)

(கலப்பட) தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் - அதிர்ச்சியான தகவல்!

ஆமாம். கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது - முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை.

தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! சரி,வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை …

பின் எப்போது தான் கூடுகிறது ?

கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது …

கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் .
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது ”மினரல் ஆயில்’.இதற்கு நிறமோ, மணமோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் …
பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான்என்பது வேதனையான விஷயம் தான்.

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் .

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?

தோல் வறண்டு போகும்
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்
முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
அரிப்பு வரும் .
ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது ..
தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள்
..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்.
குறிப்பு : நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும். கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும்
என்பது மறுக்க முடியாத உண்மை.



தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்:-

உணவே மருந்து -- | Read | Like | Share |

ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது - முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை.

தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! சரி,வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை …

பின் எப்போது தான் கூடுகிறது ?

கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது …

கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் .
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது ”மினரல் ஆயில்’.இதற்கு நிறமோ, மணமோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் …
பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான்என்பது வேதனையான விஷயம் தான்.

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் .

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?

தோல் வறண்டு போகும்
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்
முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
அரிப்பு வரும் .
ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது ..
தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள்.
டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெயை வாங்காதீர்கள்.

குறிப்பு : நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும். கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர, கருக்க உதவும்
என்பது மறுக்க முடியாத உண்மை.

(இணையத்திலிருந்து)

உலகம் தோன்றியது எப்படி – விண்வெளி பயணம் போகலாமா ?

http://www.vinavu.com/2014/03/14/journey-through-the-universe-documentary/