23.5.16
பிரபாகரன் வழியா? வரதராஜ பெருமாள் வழியா?
22.5.16
வீரம் / பிறவி வீரம் / ஜாதி
19.5.16
"தொடத்தொட தங்கம்" - இந்திரா சௌந்தர்ராஜன்
குழந்தைகளின் கைமாறு
பெற்றோர்கள் குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள்.
மன அழுத்தம், குடும்ப நெருக்கடி, களைப்பு, சலிப்பிலிருந்து பெற்றோர்களை குழந்தைகள் காப்பாற்றுகிறார்கள்.
2.5.16
ஹார்மோன் பொம்மை
என்னை தவறாய் எண்ணாதே
முன்னர்
மணிக்கணக்கில் பேசியதற்கும்
இப்போது
பேசாமலே இருப்பதற்கும்
நான் காரணமல்ல
நான்
ஹார்மோன்களால் ஆட்டுவிக்கப்படும்
ஒரு பொம்மை
18.4.16
கற்பனையல்ல நிதர்சனம்
இந்நூற்றாண்டின் கடைசியில் அல்லது அடுத்து வரும் நூற்றாண்டில்; விண்வெளியில் சுற்றும் இப்பூமியைச் சுற்றி வட்டமிட்டுக்காட்டும் பல விண்வெளிச் சுற்றுலா நிறுவனங்கள் சர்வ சாதாரணமாய் மேல் நாடுகளில் தோன்றி இருக்கக்கூடும்.
அதே சமயம்...
ஜாதி; மதம்; கடவுள்; பக்தி; கட்சியின் பேரால் சிந்திக்க இயலாத பல்லாயிரம் கொத்தடிமைகளை உற்பத்தி செய்து யாரோ சிலரின் சொகுசுக்காக மட்டும் அதிதீவிர பிற்போக்குத்தனமான மாபெரும் மனித உற்பத்தித் தொழிற்சாலையாக மாறியிருக்கக் கூடும் இந்தியா.
14.4.16
மாமனிதர் அம்பேத்கர் பிறந்தநாள்
ஒடுக்கப்பட்டவர்களின் மேல் இயல்பிலேயே இந்த சமூகம் உருவாக்கி வைத்த வெறுப்பால் பலரும் அம்பேத்கரைப் படிக்கத் தவறுகின்றனர். கிராமத்தில் இருந்தவரை அம்பேத்கரைப் பற்றி எனக்குத் தெரியாது. சென்னை நகரம்தான் அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தியது.
ஹிந்து மதம் - விதி - கர்ம வினை என்று ஒரு காலத்தில் எதையெதையோ கண்மூடித்தனமாய் நம்பிக்கொண்டிருந்தேன். இவர் எழுதிய (Buddha and his Dhamma) "புத்தரும் அவர் தம்மமும்" என்ற புத்தகத்தை வாசித்த பின்னரே என்னிலிருந்து ஹிந்து என்ற உணர்வு அறுந்து போனது.
இந்த உலகில் ஒரு மனிதரின் உழைப்பால்; சிந்தனையால் பல கோடிப்பேர்களின் வாழ்க்கை பயனடைந்துகொண்டிருப்பது இவர் ஒருவராலேயே என்று நினைக்கிறேன். என்றைக்கும் உலக வரலாற்றில் வாழப்போகும் மாமனிதர் அம்பேத்கர்.
என்னுள் அறிவொளி ஏற்றியவர்களில் ஒருவர். மனப்பூர்வமாக அம்பேத்கர் அவர்களை மதிக்கிறேன்.
ஜெய்பீம்...!!!
16.3.16
Honour Killing...? ஆணவக்கொலை...
"கௌரவக் கொலை" என்பது "ஆணவக் கொலை" என்று தமிழில் சரியாக மாற்றப்பட்டு குறிக்கப்படுகிறது.
இன்னும் ஆங்கிலத்தில் "Honour killing" என்றே குறிப்பிடப்படுகிறது.
Contumely killing...
Impudent killing...
எது சரியெனத் தெரியவில்லை. ஆனால் honour killing என்பதை கட்டாயம் மாற்றி எழுதுவது அவசியமானது.
13.3.16
மக்கள் போராளி ஜக்கி
ஜக்கியென்ன ஏழைகளுக்காகவா பள்ளி நடத்துகிறார்?
அதில் படிப்பது யார் வீட்டுப் பிள்ளைகள்?
படிக்கவும்; விவசாயம் செய்யவும் கடன் கேட்டு வரும் விவசாயிகளைக் கேவலப்படுத்தி அலைக்கழிக்கும் வங்கிகள் சாமியார்களைத் தேடிப்போய் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்குகிறது. அதுவும் 1,15,65,000 ரூபாய். (ஒரு கோடியே பதினைந்து லட்சத்து அறுபத்து ஐந்தாயிரம் ரூபாய்)
விவசாயிகள் உயிர் வாழ்வதை பாரமாக நினைக்கும் ஒரே துறை இந்த வங்கிகள்தான்.
ஆமாம், அவர்கள் ஏன் இவ்வளவு அவலங்களையும் தாங்கிக்கொண்டு இன்னமும் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள்?
எல்லோரும் ஜக்கி மடத்தில் சேர்ந்துவிடலாம், அல்லது ஜக்கிபோல விவசாயிகளும் சாமியார்கள் ஆகிவிடலாம்..!!!
