6.8.18

மியான்ம‌ர்

மியான்ம‌ர் - நீண்ட‌ கால‌மாக‌ க‌ம்யூனிஸ்டுக‌ளின் வெற்றிக‌ர‌மான‌ ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ ஒரேயொரு தெற்காசிய‌ நாடு.

ப‌ல‌ மொழிக‌ள் பேசும் ப‌ல்லின‌ போராளிக‌ளை ஒன்று திர‌ட்டி போராடிய‌ ப‌ர்மிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி, அதே கார‌ண‌த்தால் உடைந்து போன‌து துர‌திர்ஷ்ட‌மான‌து. இறுதி வ‌ரையில் அர‌ச‌ ப‌டைக‌ளால் கைப்ப‌ற்ற‌ முடியாத‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தை வைத்திருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி, அதே பிர‌தேச‌த்தை சேர்ந்த‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தோற்க‌டிக்க‌ப் ப‌ட்ட‌து.

இந்த‌க் கிள‌ர்ச்சிக்குப் பின்னால், டெங்சியோபிங் த‌லைமையில் உருவான‌ முத‌லாளித்துவ‌ சீனா இருந்த‌து. ப‌ர்மிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் த‌லைவ‌ர்க‌ளுக்கு சீனாவில் அடைக்க‌ல‌ம் கொடுத்து விட்டு, முன்பிருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேசத்‌தில் குறுந் தேசிய‌வாத‌ ச‌க்திக‌ளை தூண்டி விட்ட‌து. முன்னாள் க‌ம்யூனிஸ்ட் போராளிக‌ள், தீவிர‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

மியான்ம‌ர் நாட்டில் ந‌ட‌க்கும் வ‌ல்ல‌ர‌சுப் போட்டி இன்று நேற்று தொட‌ங்கிய‌த‌ல்ல‌. பிரித்தானியா, இந்தியா, சீனா, அமெரிக்கா, ர‌ஷ்யா எல்லாமே க‌ட‌ந்த‌ கால‌த்தில் த‌ம‌து செல்வாக்கை செலுத்தி வ‌ந்துள்ள‌ன‌.

கால‌னியாதிக்க‌ கால‌ முடிவில் இருந்து தொட‌ரும் க‌தையின் புதிய‌ அத்தியாய‌மே ரொஹிங்கியா இன‌ப் பிர‌ச்சினை. இல‌ங்கையில் ந‌ட‌ந்து கொண்ட‌தைப் போல‌, இங்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம் இர‌ண்டு ப‌க்க‌மும் விளையாடுகிற‌து. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிற‌து.

Kalai Marx
ஆகஸ்டு 31, 2017

மனித சமூகத்தின் அவமானம்

அல்லா என்றொருவன் இருந்தால் மியான்மர் முஸ்லீம் படுகொலைகளை உடனடியாக நிறுத்தட்டும். அங்கு அன்பும் மகிழ்ச்சியும் பரவட்டும்.
 
ஆகஸ்டு 31, 2017
 
 

ஓடாத வண்டிக்கு 2 ஓட்டுநர்கள்

"ஓடாத வண்டிக்கு 2 ஓட்டுநர்கள்"

தமிழ்நாடு 
இபிஎஸ் / ஓபிஎஸ்
 
ஆகஸ்டு 28, 2017

தொடரும் ஜாதிக் கொடூரம்

இது 2017 ம் ஆண்டு. அதாவது அறிவியல் மிகவும் வளர்ந்து அதை அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கும் காலகட்டம். விண்வெளியை மனிதன் கைவசப்படுத்திக் கொண்டிருக்கும் காலம். பரந்து விரிந்து கிடக்கும் பூமியை மனிதன் தன் அறிவால் சிறிய பந்து போல் சுருக்கியுள்ள காலகட்டம்.

ஆனால் இங்கோ கூட்டமாய் சென்று அப்பாவி மக்களின் குடிசையை இன்னமும் ஜாதியின் பேரால் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஜாதிவெறியை வளர்க்க கட்சிகள், தலைவர்கள், தொண்டர்கள். இத்தனை காவல் நிலையங்கள், இத்தனை நீதிமன்றங்கள் இருந்தும் இதெல்லாம் வெளிப்படையாக தொடர்ந்து நடக்கின்றன.

நாகரிகம் உள்ள, சிந்திக்கும் அறிவு உள்ள மனிதர்கள் யாரும் இதை எப்போதும் ஆதரிப்பதில்லை. இதையெல்லாம் நியாயமென்று எவன் பேசினாலும் அவன் மனித ஜென்மமே அல்ல.

தொடர்ந்து தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் தாக்கப்படுகின்றன; கொளுத்தப்படுகின்றன.

காஞ்சிபுரம் அருகே நல்லூரில் நடந்த இது ஏதோ இருதரப்பு மக்களுக்கிடையிலான பிரச்சினை மட்டுமல்ல. இன்றைய சமூகத்தின் அவமானம்.

இதைக் கண்டும் காணாமல், கண்டிக்காமல், தீர்வுக்கு வழி தேட முனையாமல், மாற்ற உழைக்காமல் எவர் தமிழ்த்தேசியம் பேசினாலும் அது ஏட்டு சுரக்காயே.

அனைத்து மக்களையும் அறிவுடையோர்களாக்கி, பூமியில் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு போக வைக்கும் கட்சியும் நற்சிந்தனை கொண்ட தலைவனும் ஆட்சியும் இங்கே ஏற்படும் காலம் எந்த காலமோ?
 
ஆகஸ்டு 27, 2018
 

 

இன்னும் மனிதர்களை மனிதர்களாக ஆக்காத 70 ஆண்டு சுதந்திரம்

"ஜாதி, மதம், பக்தி, காதல், புனிதம், பண்பாடு, கடவுள், விதி, நல்ல நேரம், கெட்ட நேரம், சூனியம், கற்பு, சொர்கம், நரகம், சகுனம், சடங்கு, முன்பிறவி, மறுஜென்மம்....

இயற்கையை தவறாக விளங்கிக்கொண்டு இப்படி எதற்கும் பயனற்ற அற்ப காரணங்களால் தினமும் நடக்கும் தனி மனித படுகொலைகளின் மூலம் இந்தியா ஒரு காட்டுமிராண்டிகளின் நாடு என்பது உறுதிபட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கே இருக்கும் கோயில்கள், கல்வி நிலையங்கள் எல்லாமும் தொழில் நிறுவனங்களாக இருப்பதன் வெளிப்பாடுதான் இது.

இந்த நாட்டின் 70 ஆண்டுகால சுதந்திரம் இன்னும் மனிதர்களை மனிதர்களாக உணர்த்தி யாவரையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்க சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. எளிய மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.
 
ஆகஸ்டு 26, 2017
 

 

'பெரியார் - காமராசர்' பிறந்தநாள் விழா 2017

'பெரியார் - காமராசர்' பிறந்தநாள் விழா
அனைவரும் வருக...!!!

“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார், க.க.நகர், சென்னை – 78.

நாள் : 06-09-2017 மாலை 6 மணி
இடம் : க.க. சாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை – 78

காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசை முழக்கத்துடன் துவங்கி சுமார் 1000 மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், திருக்குறள் புத்தகம், பள்ளிப் பைகள் மற்றும் ஊக்க விருதுகள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.

நிறுவனர்கள் :
வீ. பொற்கோவன்
குமணன்

தலைவர் :
வழக்கறிஞர் ப. அமர்நாத்

செயலாளர் :
கரு. அண்ணாமலை

துணைத் தலைவர் :
விநாயகமூர்த்தி மாசிலாமணி

துணைச் செயலாளர் :
ராமாபுரம் சுப்பிரமணியன்

பொருளாளர் :
விருகை செல்வம்

தேர்வுக்குழு உறுப்பினர்கள் :

ஜெயசீலன், மணிமொழியான், துரைராசு, கண்ணன், மணிபாரதி கிரேசி விஜயகுமார், மூவேந்தன், சிலம்பு சிவாஜி, தமிழ்ச்சிற்பி, குமார்

உதவி பெறுவோர் விவரம் :

கும்மிடிப்பூண்டி தமிழீழ அகதிகள் முகாம் – 300 மாணவ மாணவியர்கள்

புழல் தமிழீழ அகதிகள் முகாம் - 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி – 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி – 200 மாணவ மாணவியர்கள்

எம்.ஜி.ஆர். நகர் அரசு துவக்கப்பள்ளி – 100 மாணவ மாணவியர்கள்

தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் 1000 ரூ பரிசுத்தொகை

தமிழில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காமராசர் விருது மற்றும் 500 ரூ பரிசுத்தொகை

குறிப்பு :

பொதுவுடைமை இயக்கம் / திராவிட இயக்கம் / தமிழ்த்தேசிய இயக்கம் / சாதி மறுப்பு & சுயமரியாதை திருமணம் புரிந்தோர் / முற்போக்கு அமைப்புகள் / துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்களின் குழந்தைகளுக்கு உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும். (உதவி வேண்டுவோர், அரசு பள்ளிகள் / தமிழ்வழிக் கல்வி பயில்பவர்களாக இருத்தல் வேண்டும்.)

***

“கற்க” கல்வி அறக்கட்டளை, தமிழ்வழிக் கல்வி உதவி மையம் சார்பாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும்
கல்விப் பணிகளின் விவரம் :

தொடக்கம் : 10-05-2013

01. ரயில்வே (RRB) loco pilot தேர்வு சிறப்பு இலவசபயிற்சி – 2014

02. குடிமைப்பணி தேர்வுக்கு எழுதும் மாணவர்களுக்கு study circle –2015

03. உதவி ஆய்வாளர் தமிழ்நாடு காவல்துறை தேர்வு – இலவச பயிற்சி வகுப்பு –2015

04. அஞ்சல்துறை தேர்வு (postal dept ) - இலவச பயிற்சி வகுப்பு – 2015

05. 2015 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் மஞ்சைமகத்து வாழ்க்கை பள்ளி சீரமைப்பு - 2016

06. கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - இலவச பயிற்சி வகுப்பு –2016

07. 2016 புயலால் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி சீரமைப்பிற்கு தொகை 65,000 ரூபாய் மற்றும் 35,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. - 2016

08. குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி smart class –2017

08. துரைப்பாக்கம் கண்ணகிநகர் சிறுவர்களுக்கு மாலை நேர தனிப்பயிற்சி வகுப்புகள் –2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.

09. வியாசர்பாடி கன்னிகாபுரம் பள்ளி மாணவ மாணவியர்க்கு தனிப்பயிற்சி -2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.

தமிழ் மொழி வளரவும், தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவும், எளியோருக்கு உதவும் நல்லெண்ணமும் கொண்ட சமூக அக்கறையாளர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்கொடை வழங்குவதற்கான வங்கி விவரம் :

KARKA,
A/C NO : 62418336742,
STATE BANK OF HYDERABAD,
IFSC code – SBHY0020946

தொடர்புக்கு :

“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார்,
க.க.நகர், சென்னை – 78.

கரு.அண்ணாமலை : 94440 11124

குமணன் : 98413 55818
 
ஆகஸ்டு 24, 2017
 
 

அண்ணாதுரை பாடல் படப்பிடிப்பு

பாடல் படப்பிடிப்பு இனிதே முடிந்தது. நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டருடன்...
 
ஆகஸ்டு 24, 2017
 
 

கேவலமான அதிமுக

"வரலாறு காணாதளவு மிகக் கேவலமான நிலையில் தமிழக ஆட்சி"
 
ஆகஸ்டு 20, 2017
 
 

200 கீமீ-க்குள் 5 அணைகள்...?

செய்தி:

"காவிரியில் 200 கீமீ-க்குள் 5 அணைக்கட்டுகள். தமிழ்நாடு பாலைவனமாகிறது."

அதிமுக எந்த மாநில கட்சி? 
எதிர்க்கட்சின்னு ஒன்னு இருக்கா? 
தமிழ்நாட்ல மொத்தம் எத்தனை கட்சிகள்? தலைவர்கள்? 
எதுக்குய்யா இன்னும் இத்தனை கட்சிகள்?...
 
ஆகஸ்டு 19, 2017
 
 
 
 

சங்கிகளின் இடஒதுக்கீட்டுப் பார்வை

எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா, ஆனா எனக்கு சீட்டு கிடைக்கல, என்னை விட கம்மி மார்க் எடுத்த பொண்ணு டாக்டர் சீட் கிடைச்சிருச்சு. பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு முறை வரணும்

இந்த பதிவு எழுதிய தோழருடன் அந்தபக்கம் விவாதம் ஓடுது. ஆனா அது அவர் ஒருவர் மனநிலை மட்டுமல்ல. பல சங்கிகளும் அப்படி தான் பேசிட்டு திரியுங்க

எனக்கு கிடைக்கல என்பதில் எவ்வளவு வலி. ஆனால் பல நூறு ஆண்டுகளகாக செருப்பு அணியக்கூடாது, மேல் சட்டை அணியக்கூடாது, பெண்கள் மேலாடை அணியக்கூடாது. பண்ணையம் என்னும் அடிமை தொழில் தான் செய்யவேண்டும் என்று ஒடுக்கிவைக்கப்பட்ட அந்த சமூகத்தில் ஒரு பெண் டாக்டர் ஆவது அந்த சமூகத்திற்கே எவ்வளவு வலி நிவாரணி..

எதுக்கு பல நூற்றாண்டுகளா போகனும். இப்பவும் பல கிராமங்களில் இரட்டை குவளை இருந்துட்டு தான் இருக்கு. ஒடுக்கப்பட்ட பிரிவினரை வயசு வித்தியாசம் இல்லாமல் சிறுவன் கூட பெயர் சொல்லி அழைக்கும் அவலம். சாதி பெயருடன் கெட்டவார்த்தை சேர்த்து அழைக்கும் அவலம். ஊர் தெருவுக்குள் பிணம் எடுத்துசெல்லக்கூடாது. சாமி ஊர்வலம் அவர்கள் தெருவுக்கு வராது என்று எத்தனை பிரிவினைகள்

யாரோ ஒருத்தர் பொருளாதாரரீதியா வளர்த்துட்டாருப்பா, நீங்க அந்த வீட்டில் பெண் எடுத்துக்கொள்கிறீர்களா? அல்லது பெண் கொடுக்கமுடியுமா? இப்போ உங்களுக்கு எது தடை? அதான் அவர்கள் பொருளாதாரரீதியா மேலே தானே இருக்காங்க. அப்போ தடை வேற சாதி/ அப்படி தானே. அது எந்த சாதியாக இருந்தாலும் நீங்கள் சாதி பார்ப்பீர்களேயானால் அந்த சாதிய சிந்தனை உங்களை விட்டு அகலும் வரை சாதியரீதியான இடஒதுக்கீடு இருந்தே தீரும்.

ஒரு சாதி மறுப்பாளன் ஏன் சாதியரீதியிலான இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் எங்கிறார்கள். சாதியின் பெயரால் ஒரு சமூகத்தை ஒடுக்கி வைத்து, தாழ்ந்தபட்டவர் என்ற மனநிலைக்கு தள்ளிய பொழுது அந்த புத்தி இருக்கவேண்டும். நான் சாதிமறுப்பாளனா ஆக்க்கரணமே உங்களை போன்ற ஆதிக்கசாதிவெறி பிடித்த சாக்கடைகள்

Raj Arun
 
ஆகஸ்டு 18, 2017