1.11.17

Welcome சிவா

"இந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென்?
தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே"

'சுவேதாரண்யன்' என்ற பெயருடன் பூம்புகாரில் வாழ்ந்த பெரும் வணிகனுக்கு "மருதபிரான்" என்ற மகனாய் வந்து சேர்ந்து வளர்ந்து ஆளாகி கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வரும்போது மாட்டுச்சாணியின் சாம்பல்களை குவித்து வந்து "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" என செல்வம் குவிப்பது பயனற்றது என்ற ஞானத்தை உணர்த்திவிட்டுச் சென்றானாம் சிவன். இது நடந்ததாக வரலாறு சொல்வது 11-ம் நூற்றாண்டில். அதன் பின்னர் 'சுவேதாரண்யன்' என்ற அந்த பெரும் வணிகன் தன் உடைமைகள் பொன் பொருள் உறவுகள் அனைத்தும் துறந்து பட்டினத்தாராக காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து வாழ்வின் நிலையாமை பற்றி மக்களுக்காகப் பல பாடல்களைப் பாடி சிவனடி சேர்ந்தார்.

11-ம் நூற்றாண்டில் வந்துபோன சிவன் அதன்பின்னர் ஏனோ வரவில்லை. உலகமே; இந்தியாவே கார்ப்பரேட்களால் சூறையாடப்படும் இந்த காலசூழலில் இதேபோல் தனியார் முதலாளிகளுக்கு வாரிசாய் பிறந்து ஞானம் போதித்தால் நல்லது. யாரேனும் மெய்யான பக்தர்கள் நாட்டின் நிலையை அவருக்கு உணர்த்த முயற்சிக்க வேண்டும்.

பட்டினத்தாருக்கு ஞானம் போதித்த சிவன், அம்பானி அதானிகளுக்கும் லாப  வேட்கை கொண்ட எல்லா வணிகர்களுக்கும் கொஞ்சம் வகுப்பெடுக்க வேண்டும். இல்லையேல் இனி இம்மண்ணில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரம் என்னாவது? சுவேதாரண்யனை மட்டும் அப்படி அலையவிட்டது ஒருதலைப்பட்சமாகிவிடும் அல்லவா? இது சிவனுக்கு அழகா? இது நீதியா? இப்படி எண்ணுவது பிழையா?

அம்மா ஆதிலட்சுமி

தன் வாழ்நாள் முழுதும் மாடு மேய்த்தே எங்களை ஆளாக்கி விட்டுச் சென்ற என் அம்மா "ஆதிலட்சுமி" யின் 8-வது நினைவு நாள் இன்று. எனைப் பெற்றதில் ஒருபயனும் அறியாத எம் அம்மாவின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் எழும் குற்றவுணர்வுக்கு அஞ்சி உடன் வைத்துக்கொண்டே எப்போதாவது பார்க்கும் நிழற்படம்.

பட்டகடன் தீர்க்க, அம்மா பெயர் வைப்பதற்காகவேணும் எனக்கொரு மகள் பிறப்பாள்.

17.10.17

ராஜராஜ சோழப் பறையனார்

ஒரு மன்னர் என்பவன் தான் விரும்பிய பெண்ணையோ அல்லது வேறு நாட்டு இளவரசியையோ மணப்பான். அவனுக்கு மொழி இனம் பிரச்சினையில்லை. நாட்டின் எல்லை விஸ்தரிப்பும் கவிழாத ஆட்சி அதிகாரமும் தான் குறி.

ராஜா குலங்கெட்டவன் என்றொரு மொழி உண்டு. எந்தவொரு ராஜாவையும் இன்ன குலம் என்று தீர்மானமாய் சொல்லவியலாது. ஏனெனில் எல்லாருமே கலப்பில் உருவாகி வரும் வம்சம்தான். சிலருக்கு ஆண் வாரிசு இல்லையென்று பெண் வழி வாரிசுக்கும் மன்னர் பதவி சென்றிருக்கும். இப்படிப் பார்த்தோமானால் எல்லா வரலாற்று மன்னர்களுக்கும் இந்த அளவுகோல் பொருந்தும்.

ராஜராஜனுக்கு வருவோம்.

ராஜராஜன் எங்கள் ஜாதியென தேவர், வன்னியர், பள்ளர், கோனார், முத்தரையர், உடையார் என்று பலரும் விளம்பரம் செய்கின்றனர். இதெற்கெல்லாமும் உறுதியான சான்று இல்லை. அன்றைக்கு அவர்கள் எந்தெந்த பட்டப்பெயர் வைத்திருந்தார்களோ அப்பெயரெல்லாம் பின்னாளில் ஜாதி ஆனதில் அவரும் அந்த ஜாதிக்காரனாகி விட்டார்.

எல்லோரிடமும் தெலுங்கும் கன்னடமும் கலிங்க கலப்பும் உண்டு.

நிற்க, இப்போது பறையர் சமூகத்தினரும் ராஜராஜனை சொந்தம் கொண்டாடுவதை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில், எந்த வரலாறு கிடைத்தாலும் அதை சாதுரியமாக தனதாக மாற்றிக்கொள்பவர்களுக்கு இதுவொரு கடிவாளமாக இருக்கும். உண்மையில் யாரிடமும் எதற்கும் ஆதாரமில்லை. இத்தனைநாளாய் யார் யாரோ அவனை சொந்தம் கொண்டாடியபோது கண்டுகொள்ளாதவர்கள் பறையர்கள் உரிமை கொண்டாடும்போது மட்டும் குதிப்பது ஏன்?

மேலும் எல்லா ஜாதியும் தன் ஜாதியென ராஜராஜனைக் கொண்டாடினால்தான் இந்த ஆண்டஜாதி பஞ்சாயத்து முடிவுக்கு வரும்.

எல்லோருக்கும் பொதுவான ஆளாய் ராஜராஜனும் மாறுவான்.

இவ்வகையில் இதை ஆதரிப்பது மொத்த தமிழ்ச்சமூகத்திற்கும் லாபமே.

4.9.17

எச்ச ராஜா ஷர்மா

வடநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட "ஹரிஹர ராஜா ஷர்மா" என்ற இவர், தமிழ்நாட்டிலிருந்து யாரார் எவ்வளவு வரி கட்டியிருக்கிறீர்களோ அதையெல்லாம் கேட்டால் உடனே திருப்பித் தருகிறாராம். ஐயாவை அணுகவும். நல்ல மனிதர். அடிக்கடி "ஆன்ட்டி நேஷன் / ஆன்ட்டி மோடி" என்று எப்போதும் யாரையாவது திட்டும்படியான வெறிபிடித்த புதியவகை மனநோயால் பாதிப்புக்குள்ளானவர் என்பது மட்டும் எச்சரிக்கைக்கான தகவல்.

நாடு என்பது...

"நாடு என்பது மனிதர்களும் சகல உயிர்களும் வாழ்வதற்கானது. மீத்தேனும் ஹைட்ரோ கார்பனும் எடுப்பதற்காக அல்ல"

போராடுபவர்களின் கவனத்திற்கு...

போராடித்தான் எல்லாமும் பெற முடியும் என்பதுகூட பரிணாம வளர்ச்சி அடைந்து நெடுங்காலம் ஆகிறது. வரலாற்றில் இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. உயிரைக் கொடுத்து போராட வேண்டும் என்பது இன்றைக்கு அவசியமற்றதும் ஆபத்தானதும்கூட. போராடுகிறவர்கள் எப்படியாவது உணர்ச்சிவயப்பட்டு தானே சீக்கிரம் செத்துப்போக வேண்டும் என்றுதான் அடக்குமுறை சக்திகள் விரும்புகிறது. அல்லது அடக்குவதற்கே சம்பளம் தந்து சோறுபோட்டு வளர்த்துக்கொண்டிருக்கும் அதன் அங்கீகரிக்கப்பட்ட அடியாட்படைகளுக்கு வேலை கொடுக்க ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அரசு காத்துக்கொண்டிருக்கிறது.

உணர்ச்சிவயப்பட்டு போராடுகிறவர்களை ஊக்குவிக்காதீர்கள்; பின்னால் செல்லாதீர்கள்.

போராடுகிறவர்கள் நீண்ட நாள் சகல பலத்தையும் வளர்த்துக்கொண்டு அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருக்க வேண்டும்.

உயிரைக் கொடுக்கும் போராட்டங்கள் ஒரு சமூகத்தின் தற்கொலைக்கு சமம். இது ஒப்பற்ற தமிழின அறிவாளிகள் & உயிர்க்கொடையாளர்களின் இழப்பின் வருத்தத்தால் எழும் கருத்து.

நோகாமல் கச்சத்தீவைக் கைப்பற்றினானே சிங்களன், அந்த சாதுரியம் கொண்ட தலைமைகள் தமிழ் மண்ணில் உருவாக நம் அறிவும் உழைப்பும் பயனுற அமைய வேண்டும்.

அறவழியிலான போராட்டத்தை தீவிரப்படுத்துவதே பலம்.

தோழர் ஃபாரூக் படுகொலை

கோவையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட தோழர் ஃபாரூக் அவர்களின் படுகொலை தொடர்பாக 26-03-2017ம் நாளன்று நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் ஃபாரூக் அவர்களின் குடும்பத்திற்காக, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி / பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர்களிடம் தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டலம் சார்பாக அமைப்பாளர் தோழர் கரு.அண்ணாமலை மற்றும் தோழர்களுடன் 10000/- ரூபாய் நிதி அளிக்கப்பட்டது.

(உள்படம் : திவிக சென்னை மாவட்ட தலைவர் தோழர் உமாபதி மற்றும் தபெதிக தோழர்கள் செல்வம், பெரியார் மணிமொழியான், கரு.அண்ணாமலை, ஜெயசீலன் ஆகியோருடன் நான்)
 
- மார்ச் 28, 2017
 

 

மனிதநேயன் தோழர் ஃபாரூக்

கோவையில் முஸ்லிம் மதவெறி அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நமது தோழர் ஃபாரூக் அவர்களின் குடும்பத்திற்கு தம்மால் இயன்றளவு உதவ சில முகநூல் தோழர்கள் முயற்சி எடுத்தனர். தோழன் ஜேகே அவர்களின் முயற்சியால் ரூ 44,500/- ரூ திரட்டப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு நேற்று வழங்கப்பட்டது. இதில் என்னால் இயன்ற சிறிய பங்களித்தேன். தோழர் ஃபாரூக் சார்ந்த திவிக அமைப்பு வாயிலாகவும் இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக உதவிய அத்தனை மனிதநேயர்களுக்கும் பெரும் நன்றி.

இது விளம்பரப் பதிவு அல்ல.

உலகெங்கும் சூழ்ச்சிக்காரர்களால் மக்கள் சிந்தனையில் திட்டமிட்டு புகுத்தப்பட்ட திணிக்கப்பட்ட "புனிதம்" என்ற கருத்துக்களே இங்கு அநேகமான எல்லா பிரச்சினைகளுக்கும் வேராய் இருக்கிறது. மனிதனை மனிதன் வெறுக்கவும் சண்டையிடவும் சாகடிப்பதுமான தீவிர உணர்வையும், சிலருக்கு உடல் போகாமல் அதைக்கொண்டு பிழைக்கும் வழியையும் அப்புனிதங்கள் தலைமுறைதோறும் வளர்த்துக்கொண்டிருக்கிறது.

நாத்திகமே எல்லா புனிதங்களையும் உடைக்கும் ஒரே அறிவாயுதம். கடவுள்கள் இப்போது நேரில் வரமுடியாமல் இருப்பதற்கும், கடைசித் தூதர்கள் எப்போதோ வந்து போய்விட்டு அடுத்த தூதர்கள் இன்னமும் பூமிக்கு வராமல் இருப்பதற்கும் நாத்திக அறிவு வளர்ச்சியே காரணம். விபத்து நடந்தாலோ, தீவிர உடல் கோளாறு என்றாலோ, பாம்பு கடித்தாலோ யாரும் கோயிலையும் மசூதியையும் தேவாலயத்தையும் நம்பி செல்வதில்லை, மருத்துவமனையை நோக்கித்தான் ஓடுகிறார்கள். கூர்ந்து கவனித்தால் நாத்திக்கக்கூறு எல்லா மனிதர்களிடத்திலும் இருப்பதைக் கவனிக்கலாம். இதனால்தான் நம்பிக்கையாளன் முன்பும் வரமுடியாமல் இப்போது கனவில் மட்டும் வருகிறார்கள் கடவுள்கள்.

நாத்திகம் வளர்ந்த அல்லது கடவுளுக்கும் மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காத நாடுகளின் மக்கள் சமூக வாழ்க்கையை சற்று ஒப்பிட்டுப் பாருங்கள் சில உண்மைகள் புலப்படும்.

தோழர் ஃபாரூக் மாதிரியான நபர்கள் ஒரு சமூகத்தில் தோன்றுவது மிக அரிது. அவரைப்போல் இன்னொருவர் தோன்ற இன்னும் 30 வருடங்கள் ஆகலாம். எல்லாவகையிலும் அவரது குடும்பத்திற்கும் பன்முகத்தன்மை கொண்ட நம் சமூகத்திற்கும் இது ஈடுகட்டவியலாத பேரிழப்பே.

மக்களை மனிதர்களை இயற்கையை அமைதியை மகிழ்ச்சியை பகுத்தறிவை அறிவியலை நேசிக்கும் நாத்திகர்கள் இவ்வுலகில் அநாதைகள் அல்ல என்று நாம் வெளியுலகிற்கு காட்ட வேண்டிய அவசிய சூழல் இன்றைக்கு மிக தேவையாக வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் / சமூகத்தின் வளர்ச்சிப் பாதையின் எல்லா சுவடுகளிலும் ஏதோவொரு நாத்திகனின் அசாத்தியமான தியாகம் புதைந்துள்ளது.

தோழர் ஃபாரூக் அவர்கள் நம் காலம் கடந்தும் வரலாற்றில் இருப்பார். மதவெறியர்களுக்கு எதிராய் கருத்துகளால் போராடிக்கொண்டிருப்பார். அவர் தனி நபர் அல்ல. அவருக்கும் பின்னால் நாங்கள் ஏராளம்பேர் இருக்கிறோம் என்று பழமைவாதிகளின் முகத்தில் காறியுமிழும் கடமை இந்த மண்ணில் மாற்றத்தை அமைதியை அறிவை விரும்பும் ஒவ்வொரு முற்போக்கார்களுக்கும் உள்ளது. இவ்வகையில் தோழர் ஃபாரூக் குடும்பத்தினருக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். அப்படி முன்நின்று செய்பவர்களைப் பாராட்டுங்கள்.

பாசிசம் பல வடிவங்களில் வேரூன்றி பரவும் இச்சூழலில் தோழர் ஃபாரூக்-கிற்கு பின்னால் பெரும்படை உள்ளது என்பதை எல்லா கடவுளின் அடியாட்களுக்கும் தெரிவிக்கவே இப்பதிவு. வேறெந்த நோக்கமும் அல்ல.

மார்ச் 27, 2017

மாற்றத்திற்கான வலு

ஏதாவது ஒரு காரணம் கிடைத்தாலும் முற்போக்குவாதிகளின் மேல் வெறுப்பை உமிழ்பவர்கள் இக்கருத்தை கவனிக்கவும்.

மனித உரிமை மீறல், ஜாதிக் கொடுமை, ஆதிக்க அடக்குமுறைகளுக்கு எதிராக சுமார் 1000 வழக்குகளுக்கு மேலாக நடத்தி நியாயம் பெற்றுத்தந்த; எளிய மக்களுக்காக இன்னமும் களத்தில் போராடிக்கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய "எவிடென்ஸ் கதிர்" அவர்களின் கருத்து இது.

எதிர் பார்வை கொண்டவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வதே மாற்றத்திற்கு வலு.
 
 

3.9.17

எந்த ஹிந்துக்களுக்கான கட்சி?

"ஒரு தாழ்த்தப்பட்டவரைத்தான் தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம்" - கங்கை அமரன் குறித்து வானதி.

ஒரு ஹிந்துவைத்தான் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம் என்று சொல்லக்கூட வானதி சீனிவாசனுக்கு அறிவில்லை. இதில்வேறு இவர்கள் ஹிந்துக்களுக்காக கட்சி நடத்துகிறார்களாம்.

எந்த ஹிந்துக்களுக்கான கட்சி? யார் அந்த "விசேஷ" ஹிந்துக்கள்?

இந்த பூமி

"இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ, ஒரு நாட்டிற்கு உடையதோ அல்ல; ஏன், மனிதர்களின் கூட்டுச் சொத்துமல்ல.

நாம் இந்த பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்குக் கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில் அடுத்த தலைமுறைக்கு இதைக் கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது"

- மாமேதை கார்ல்_மார்க்ஸ்
 

செய்வீங்களா?...

இரட்டை இலையை முடக்கிவிட்டார்களாம். சாவுறவரைக்கும் ரெட்டெலைக்குத்தான் ஓட்டு போடுவேன்னு சிலர் இருப்பாங்களே இப்ப அவங்க என்ன பன்னுவாங்களோ? So sad... யாரும் இதுக்காக அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது.

அப்படியே அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம்ன்ற முறையையும் ஒழிச்சிட்டீங்கன்னா எல்லாரும் யோசிச்சு ஓட்டு போடுவாங்க, நாடும் நல்லாருக்கும் ஆபிசர்.

செய்வீங்களா?...

இதெல்லாம் ரொம்பப் பழசு ஜீ

"கடவுள் இல்லை" என்று சொல்பவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலுக்கு அனுப்ப போராடுவது ஏன்? - கங்கை அமரன், BJP வேட்பாளர்.

# "சசிகலா கும்பல் என்னுடைய சொத்தை மிரட்டி பிடுங்கிக் கொண்டார்கள்" என்று நீங்கள் வெளியிட்ட செய்தி அறிந்து உங்களுக்கு நியாயம் கிடைக்க, சொத்தே இல்லாத நாங்களெல்லாம் WhatsApp & Facebook ல் உங்களுக்கு ஆதரவா கருத்து பதிந்து பகிர்ந்தோமே எதற்கு ஜீ? உங்க சொத்தில் எங்களுக்கு பங்கு இருப்பதனாலா? அதுமாதிரிதான் ஜீ.

வேற மாதிரி கேள்வி கேட்க try பண்ணுங்க. இதெல்லாம் ரொம்பப் பழசு ஜீ.
 
 

ராயல்டி

எல்லா பாடகர்களுக்கும் "ராயல்டி" வேண்டுமாம்.

அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் இலவச ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, கட்டாய ஓய்வூதியம் ஆகியவை வழங்க அரசு முன்வர வேண்டும். இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் இங்கே வழி பிறக்கவில்லை. அதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

எல்லா விவசாயிகளும் உழைப்பதை நிறுத்திவிட்டு பாட்டுப் பாட பயிற்சி எடுத்துக்கொண்டு அதற்கான வாய்ப்பு தேடி பாடி வாழ்வதுதான் இனி அவர்களுக்கு நல்லது.
 
 

சேதுமணி மாதவன்

போலீசின் இன்னொரு முகம் / இவனைத் தெரிந்துகொள்ளுங்கள் / சேதுமணி மாதவன்

2007-ல் தஞ்சையில் பணியாற்றிய இவன் அகிலா எனும் ஒரு மென்பொருள் பொறியாளரை விசாரணை என்ற பேரில் தனியாக அழைத்துச் சென்று சட்டவிரோதமாக சிறைவைத்து (டெம்பிள் டவர் ஓட்டலில்) பல நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்து அவர் வீட்டாரிடம் பல லட்சங்களை பிடுங்கினான். கொடுமை தாங்க இயலாத நிலையில் அந்தப்பெண் சிறைவைக்கப்பட்ட விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைக்க வேண்டிய வழக்கு சில இயக்கங்களின் தொடர் நடவடிக்கைகளால் உயிரோடு இருந்தது.

நீண்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு அந்த தியாகி (அப்படித்தான் தஞ்சையில் அப்போது போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது) புழல் சிறைக்கு அனுப்பப்பட்டான். உடனே நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்கு போனான். பிறகு அவனது ”தகுதி” காரணமாக மீண்டும் பணியில் சேர்ந்து இன்றுவரை “மக்களை காக்கும்” காவல் ஆய்வாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறான். கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து எல்லா பெண்களும் இவனிடமே புகார் கொடுக்க வேண்டிய நிலையில் அரசு இவரை வைத்திருந்தது.

இப்போது தஞ்சை மகளிர் நீதிமன்றம் இவனுக்கு 10 ஆண்டு தண்டனை விதித்திருக்கிறது. தஞ்சை ம.க.இ.க தோழர்கள் இந்த வழக்குக்காக எடுத்த முயற்சிகளையும் அலைச்சலையும் நாம் பாராட்ட வேண்டும். இதற்காக போராடிய எல்லா தோழர்களுக்கும் நன்றி.

மக்களுக்கான பாதுகாப்பு அரசிடம் இல்லை, மக்களுக்காக போராடும் தோழர்களிடம்தான் இருக்கிறது என்பதற்கான மற்றுமோர் ஆதாரம் இது.

தமிழக பிரச்சினைக்காகப் போராடிய பல தமிழ் அமைப்பினர்களை கொடூரமாகத் தாக்கியதும் இந்த நாய்தான்.
 
 

மதம் ஒரு அபின்

ஒரு தீவிர இசுலாமிய மத உணர்வாளர் என்னுடன் தொடர்ந்து தீவிரமாய் விவாதித்துக்கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் இறைவேதமே தீர்வென்றார்.

இறுதியாக...

"முஸ்லீம் மதத்தில் பிறந்து, உலகின் எல்லா மக்களுக்கும் பயனளிக்கும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஒரு 4 அறிவியல் அறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்" என்று கேட்டேன்.

"அப்படி தோன்றிய அறிவியல் அறிஞர்களின் மதங்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?" என்று திருப்பிக் கேட்டார்.

"மதம் ஒரு அபின்" என்று சும்மாவா சொன்னார் மார்க்ஸ்...?

தோழர் பாரூக் படுகொலை

"மனிதன் என்னதான் எப்படித்தான் முயற்சித்தாலும் 150 ஆண்டுகள் வாழ முடியாது. சராசரியாக 65 ஆண்டுகள் மட்டும் வாழ வாய்ப்புண்டு. அதையும் நோயின்றி அமைதியாய் மகிழ்ச்சியாய் அனுபவித்து வாழ்ந்துவிட்டுப் போகும் அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சிக்காமல் எப்போதும் ஜாதி, மதம், கடவுள், சடங்கு சம்பிரதாயம், நேரம் காலம், பிரார்த்தனை, பஜனை, துதி என்று பலவாறான சிக்கல்களை நாளும் நாளும் உயிரூட்டி வளர்த்தபடி வாழ்வை வீணாக்குகிறான்.

ஜாதி மத மற்றும் இன்னபிற வெறியின் பேரால் சீக்கிரத்தில் சுடுகாட்டுக்குப் போய் படுத்துக்கொள்வதில் மட்டும் ஏனோ மனிதர்கள் எப்போதும் ஆர்வமாய் இருக்கிறார்கள்.

பிணத்துக்கு உயிர் கொடுக்கும் மந்திரங்களோ கடவுள்களோ மதமோ ஜாதியோ புனித நூல்களோ அதிசய சக்தியோ ஒரு hair-ம் இல்லை உலகில். ஆனால் உயிருடன் உள்ளவர்களை முழுமையாய் வாழவிடாமல் கூடியவிரைவில் கொல்வதற்கான ஆயுதங்களாக மட்டும் இவைகள் தயாராக காத்திருக்கின்றன.

கற்பனை என்றவொரு வசதி இருப்பதால்தான் கண்டதையும் நம்புகிறான் மனிதன்.

பொருள்முதல்வாதப் பார்வையிலான நாத்திக அறிவு சமூகத்தை மேம்படுத்தும். மகிழ்ச்சியான வாழ்வுக்கு நாத்திகமே ஒளிவிளக்கு.

"தோழர் பாரூக்கின் படுகொலை மனித இனத்தின் அவமானம்" 
- மாரச் 20, 2017
 

தயங்காதே பெண்ணே...

பெண்ணே...!!!
சம்மதிக்கத் தயங்காதே
உனது மதம் அன்பைத்தான் போதிப்பதாக
அவர்களே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
இனியும் பயம் எதற்கு?

எது உண்மை?

"உறவுகளுடன் வாழ்வதைப் போல ஒரு சொர்க்கமுண்டா?" என்று நேற்று ஒருவர் பதிவு போட்டிருந்தார். "உறவுகள் எல்லாமே வேஷம்தான்" என்று அவரே இன்று ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

அதற்குள் என்ன நடந்திருக்கும்?

எது உண்மை?

பரிணாமம்

பரிணாமம் குறித்தான புரிதல் இல்லாதவர்கள் கேட்கும் பொதுவான கேள்வி “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” குரங்கிலிருந்து மனுசன் வந்த மாதிரி ஒரு படத்தை காட்டி, மேலும் படிக்கும் போது எங்களுக்கு அப்படி தான் சொல்லி கொடுத்தாங்கன்னு சொல்லி. இப்ப இருக்குற குரங்கு ஏன் இன்னும் மனுசனாகல, அல்லது எப்ப மனுசன் ஆகும்னு கேக்குறாங்க.

அறிவியல் வகுப்பில் சொல்லி கொடுக்கும் ஏன் பரிணாமம் குறித்தான புரிதல் பரவலா போய் சேரலன்னு யோசிச்சேன். பள்ளி முடிந்ததும் யாரும் யாரிடமும் பரிணாமம் குறித்தோ, அறிவியல் குறித்தோ பேசுறதில்ல. அதில் பெரும்பாலோனோர்க்கு ஆர்வமும் இல்ல. தினம் அவர்கள் சந்திக்கும் வார்த்தைகள். சாமி கும்பிட்டியா?, இன்னைக்கு புரட்டாசி விரதம், இன்னைக்கு சஷ்டின்னு எல்லாமே ஆன்மீகம் சம்பந்தமா தான். அம்மணகட்டையா சுத்துற ஊருல நாம மட்டும் எப்படி துணி உடுத்தி சுத்துறதுன்னு அறிவியல் படிச்ச பயபுள்ளைங்கலும் பெரும்பான்மை பொதுபுத்தியில் பக்தி பழமா சுத்திகிட்டு இருக்காங்க. இது தான் மத வெறியா மாறுது.

பரிணாமம் என்பது நம் கண்களால் பார்த்து உணர கூடிய மாற்றமல்ல, அதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்துக்கொள்ளும். அவைகள் விட்டுசென்ற சுவடுகள் தான் பரிணாமத்திற்கான ஆதாரம். அவைகளை கூட அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். விவாதித்து அதில் இருக்கும் அதிக பட்ச சாத்தியகூறுகளை ஆராய்ந்தால் போதும். பரிணாமம் எந்த அளவு உண்மை என்பது உங்களுக்கு புரியும்.

குரங்கிலிருந்து மனிதன் என்பதில் உள்ள குரங்கு ஒரு பொது பெயர். குரங்கிற்கும் நமக்கும் மூதாதையர் ஒன்றே என்பதன் சுருக்கம் அது. அந்த இனத்திலிருந்து வேவ்வேறு பாதையில் பிரிந்த உயிர்கள் தங்கள் வாழும் சூழலுக்கேற்ப தம்மை தகவமைத்து கொண்டன. அதனால் குரங்கில் கூட இத்தனை வகையில் உள்ளன. அத்தனை வகை குரங்குகளும் பரிணாமம் குறித்து நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடும். மாற்றம் என்பது என் தேவையை பொறுத்து என்பதே.

காங்கோ ஏரியாக இருந்து நதியாக மாறியபொழுது இரு பக்கமும் பிரிந்த சிம்பன்சி வகையில் ஒன்று இன்று போனோபோ வகை சின்பன்சியாக மாற்றம் அடைந்துள்ளது. கற்றலில் சின்பன்சியை விட வேகமாக உள்ளது. குரங்குகள் குரல்,,முக பாவனை,, உடல்மொழி மூலம் தகவல் தொடர்பு கொள்கிறன்றது. மனிதனின் இவ்வளவு வேக வளர்ச்சிக்கு காரணம் நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு புரியவைக்க மொழியை கண்டுபிடித்ததே. மொழி இல்லையென்றால் நாம் இன்னும் கற்கால மனிதர்களாக தான் இருந்திருப்போம்.

மனிதர்களில் சீனா பகுதிகளில் குளிர் அதிகம் என்பதால் வேர்வையில் இருந்து கண்ணை பாதுகாக்க வேண்டிய புருவ அடர்த்தி தேவையில்லாமல் போயிற்று, ஆப்பிரிக்க பகுதிகள் அதிக வெயில் காரணமான தோலில் மெலனின் அதிகமானது. நான் குத்தும் பச்சை என்னோடு அழிந்து போனால் முடிந்து போனது. அது என் சந்ததினர்கும் தொடர்ந்தால் அது தான் ஜெனடிக்கல் மியூட்டேசன். பலர் ஜெனடிக்கல் மியூட்டேசனை ஏற்றுக்கொள்வதில்லை. அது செயற்கையாக நடப்பதாக அவர்கள் வாதம். அணு கதிர் வீச்சும், ஜி.டிநாயுடுவின் ஊசி போட்டு பழசுவையும் மாற்றும் கடந்த நூறு ஆண்டுகளில் நடந்தது. ஆனால் ஜெனிடிக்கல் மியூட்டேசன் காலம் காலமாக உள்ளது. அது பரிணாமத்தின் ஒரு அங்கம்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆரஞ்சு, சாத்துகுடி, எலுமிச்சை சுவையிலும் உருவத்திலும் மாற காரணம் ஜெனிடிக்கல் மியூட்டேசன். ஒரு உறுப்பின் பயன்பாடும் பரிணாமத்தில் முக்கியமானது. குரங்குகள் முன்னங்காலை, காலாகவும் பயன்படுத்துகிறது, கையாகவும் பயன்படுத்துகிறது. மனிதனுக்கு அடுத்து குரங்கு, குரங்குக்கு அடுத்து முன்னங்காலை கையாகவும் பயன்படுத்தும் விலங்கு கரடி. இந்த பயன்பாடு அவற்றின் தோற்றத்தையும், வாழ்க்கை முறையையும் மாற்றும். அதுவே பரிணாம மாற்றம்.

உருவம் சிறுத்தல் அல்லது பெருத்தல், உறுப்பு இழத்தல் அல்லது பெறுதல் என்று நிகழும் மாற்றங்கள் நம்மால் உணர முடியாது. அந்த மாற்றங்களுக்கு அவை பல நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்/. அதே நேரம் அந்த மாற்றம் கண்டாயமல்ல என்பதையும் உணருங்கள். இந்த மாற்றங்கள் உடல் மற்றும் உயிர் வாழ தேவையை பொறுத்து அமைகிறது. எந்த மெனக்கெடுலும் இல்லாமல் இந்த அமைப்பிலேயே எல்லாம் கிடைக்கும் போது மாற்றத்திற்கான அவசியம் இல்லாமல் போயிகிறது. பல லட்சம் வருடங்களாக ஜெல்லி மீன் அப்படியே தான் இருக்கு. சுறா மீன் அளவில் மட்டும் சுருங்கியுள்ளது.

கூர்ந்து கவனித்தால் நம் கண் முன் காணப்படும் பரிணாம சுவடுகளை பலவற்றை காணலாம். முட்டையிட்டு பால் கொடுக்கும் ப்ளாட்டிபஸ் ஒரு பரிணாம எச்சம். பார்வை இழந்த வெளவால். கால்களை இழந்த சாலமெண்டர்கள் எல்லாமே பரிணாமத்தின் எச்சம் தான்.

மனிதனிம் அடுத்த பரிணாம மாற்றம் என்ன என்பதும் பலரின் கேள்வியாக இருக்கு. முன்னரே சொன்னேன். பரிணாம மாற்றம் என்பது கட்டாயமல்ல. அது தேவையை பொறுத்து அமையும். அறிவியலை புரிந்துகொள்ள அறிவியலை பேசுங்கள், படியுங்கள், விவாதியுங்கள் முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அறிவியலை பயன்பாட்டிற்கு மட்டும் வைத்துக்கொள்வேன் என்பது அந்த கண்டுபிடிப்பாளருக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

அறிவியல் ஒன்றே மனிதம் வளர்க்கும். அறிவியல் ஒன்றே பிரிவினை போக்கும், அறிவியல் ஒன்றே மனிதத்தை மேம்படுத்தும்.

- Raj Arun

தினமலம்

மனநோயாளிகளின் குழுமம்தான் "தினமலர்"

தமிழ்நாட்டில் உள்ளவர்களையும் தங்களைப்போலவே இப்படி கீழ்த்தரமாக சிந்திக்க வைக்கும்படி மாற்றுவதுதான் அதன் தொலைநோக்கு செயற்திட்டம்.

நியாயம், நீதி, சமூக அக்கறை, மாற்றம், விழிப்புணர்ச்சி என்று ஒன்றுமேயில்லாத எண்ணக் கழிவுகள்தான் இந்த நாளிதழ்.

கூடுமானவரையில் இதை வாங்குவதையும் படிப்பதையும் நிறுத்துவது மூளைக்கு நல்லது.

உதவி இயக்குநர் சரவணன்

 
பிணவறையின் அருகே இருந்து இயக்குநர் ஒருவர் நடந்ததைச் சொன்னார். உடல் சிதற பெருங்கோரமாய் நடந்தேறிய அந்த விபத்து பற்றி கேட்க கேட்க மனசு மிகவும் கணத்தது. இறந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை.

வெறும் கனவுகளைச் சுமந்தவர்களைக் கொன்றுவிட்டு இந்தக் காலம் அப்படி என்ன சாதிக்கப்போகிறது? யாருடைய வருகைக்காக வாழ்பவர்களைக் கொல்கிறது? இந்தப் பரந்த கோமான்களின் உலகத்தின் ஒரு ஓரமாய் எளியவர்களும் கனவான்களும் வாழ்வதில் அதற்கு என்ன பிரச்சினை?
 
மார்ச் 08, 2017

தேவை வாக்கெடுப்பு

அமெரிக்காகாரன் சுட்டாலும் சொரணையில்லை, இலங்கை ராணுவம் சுட்டாலும் சொரணையில்லை. சீனாகாரன் உள்ளே வந்து சவால்விட்டாலும் சொரணையில்லை, பாகிஸ்தானிடம் மட்டும் கம்பு சுற்றுவதில் வெட்கமில்லை.

திரையரங்குகளில் தேசிய கீதம் ஓடவிட்டுத்தான் தேச உணர்வை காப்பாற்றியாக வேண்டிய அளவுக்கு வந்துவிட்டது நிலைமை.

தமிழ்நாடும் இந்தியாவும் கூடியவிரைவில் விவாகரத்து பெற பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாவதுதான் தமிழர் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

இந்தியாவுடன் இணைந்திருக்கலாமா? வேண்டாமா? எது உங்கள் விருப்பம்? என்று தற்போது ஜனநாயக ரீதியிலான வாக்கெடுப்பைத் துவங்க வேண்டும்.

பெரும்பான்மை மக்கள் கருத்திற்கு மரியாதை கிடைக்க வேண்டும். மக்களின் எண்ணங்களை ஆட்சி நடத்துபவர்கள் அறிய வேண்டும்.

Hair India


இப்படி ஒவ்வொருவராய் அவ்வப்போது சுடுவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்குள் புகுந்து எல்லா மீனவர்களையும் ஒரே வீச்சில் சுட்டுக் கொன்றுவிடலாம் இலங்கை ராணுவம்.

கேட்க ஆளில்லை என்றான பின்பு ஏன் இந்த லட்சுமண விளையாட்டு?

இந்தியக் கொடி கட்டி வரும் மீனவனைச் சுட்டு இந்தியாவை மயிரளவும் தாம் மதிக்கவில்லை என்று நீண்ட நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான் சிங்களன் அங்கே.

உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவம், அணு ஆயுத ஏவுகணை பலம் என்று உள்ளூருக்குள் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் தரகர்கள் இங்கே.

விவசாயிகளுக்கு?...



SBI அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர்கள், அவர்தம் உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர் அலுவலக அத்தனை அதிகார மையங்களும், நில அளவையாளர்களும், அனைத்து வங்கிகளும் ஒட்டுமொத்தமாக பயமின்றி சுரண்டுவது விவசாயிகளை மட்டும்தான்.

இரவு பகலாய் ஓய்வின்றி உழைக்கும் காவலர்களுக்காக கீழே அறிவிக்கப்பட்டுள்ள இதுமாதிரியான சலுகைகளைப் போல விவசாயிகளுக்கும் வழங்குவதே நியாயமானது.

டீசல் & பெட்ரோல் மட்டும்தான் விலை உயர்கிறதா?

ஆட்டோ கட்டணம், வாடகை கார்கள் கட்டணம், பேருந்து கட்டணம், சரக்கு லாரிகள் கட்டணம், காய்கறிகள் விலை, உணவுப் பொருட்களின் விலை, உணவகங்களின் கட்டணம், சினிமா கட்டணம், தேநீர் விலை, எல்லா வணிகப்பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் இப்படி நாட்டில் இருக்கும் 99% வீத விலைவாசிகளை ஏற்ற சுலபமான ஒரே வழி..., பெட்ரோல் டீசல் விலையை மட்டும் ஏற்றுவதே.

ஆதலால் டீசல் & பெட்ரோல் மட்டும்தான் விலை உயர்ந்துள்ளது என்று அமைதியாக இருக்க வேண்டாம்.

என்னதான் தீர்வு?

கேள்வி:

இன்றைய நிலையில் தமிழ்நாடு தொடர்ந்து இந்தியாவால் சூறையாடப்படுகிறது. இதற்கு என்னதான் தீர்வு?


பதில்:

01. படிப்படியாக அறவழியில் தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களை முடக்குதல்.

02. தனித்தனி நாடுகள் அடங்கிய; சுய ஆட்சி அதிகாரம் அடங்கிய United States Of India உருவாக்குதல்.

03. மாநிலங்களுக்குள் பகையை வளர்க்காமல் அனைத்து தேசிய இனங்களையும் அவர்கள் சுரண்டப்படுவதை உணர்த்தி இந்நோக்கத்திற்கு அணிதிரட்டுதல்.

இதுதான் தற்போதைய சூழலில் தீர்வு.

இந்தியன்

"நானொரு இந்தியன். தமிழ் மண்ணை நாளடைவில் நிரந்தரமாக பாலைவனமாக்குவதும், தமிழ் மக்களை எனது நிரந்தர அடிமைகளாக்குவதும்தான் எனது இலக்கு"

கவிஞர் சுந்தா நினைவேந்தல்


ஒரு விவசாயிக்கு முதல் எதிரி

ஒரு விவசாயிக்கு முதல் எதிரி அவனது பக்கத்து வரப்புக்காரன் / பக்கத்து நிலத்துக்காரன். அதற்குப்பிறகுதான் வியாபாரி, கார்ப்பரேட், அரசு எல்லாமும்.

வாழ்வில் உனது ஒரே பிரச்சினை



வாழ்வில் உனது ஒரே பிரச்சினை-நீ பிறந்த மதம், நீ பிறந்த சமுதாயம், நீ பிறந்த குடும்பம் மட்டும்தான்.

ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லை என்பது துரதிஷ்டவசமானது. இதுவரை அப்படித்தான். இது ஒன்றுதான் வழி.

இப்படி நீ ஒரு குறிப்பிட்ட மதத்தில், ஒரு குறிப்பிட்ட கொள்கைகளுடன் குறிப்பிட்ட ஒழுக்கக் கேடுகளுடன் பிறந்தால் அந்த உன்னுடையது அல்லாத அனைத்து கருத்துகளும் உன் மனதில் ஒட்டிக் கொண்டு பதிவாகி விடுகின்றன.

பிறகு நீ சரி எது தவறு எது என்று பிரித்துப் பகுத்துப் பார்க்கும் பார்வையை முற்றிலும் இழந்து விடுகிறாய்.

இதுதான் உன்னை முக்தி ஞானம் பெறவிடாமல் தடுக்கும் பிரச்சினை. வேறெந்தப் பிரச்சினையும் இல்லை.

நீ முதலில் உனது அனைத்து அறிவையும் வெளியே துரத்த வேண்டும். உனது சமய உணர்வுகள் என்று நீ நினைப்பவை அனைத்தும் துரத்தப்பட வேண்டும்.

நீ ஒரு சிறு குழந்தையைப் போல் தெளிவாக, தூய்மையாக இருக்க வேண்டும். நீ இந்துவாக, முஸ்லீமாக, கிறிஸ்துவனாக இல்லாமல் ஒரு மனிதனாக, புதிதாகப் பிறந்தது போல இருக்க வேண்டும்.

உனது துவக்க காலத்திலிருந்து நீ அடைக்கப்பட்டுள்ள அனைத்து ஜெயில்களும் உனக்கு மிகவும் பழகி விட்டதால், அவை சிறைகள் என்பதையே நீ மறந்து விட்டாய், அவை அழகிய இல்லங்களாய் உள்ளன.அவை அப்படிப்பட்டதல்ல.

இந்தச் சிறைகளிலிருந்து தப்பித்து வருவதற்கு மிகப் பிரமாதமான துணிச்சல் தேவை. ஆனால் ஒவ்வோர் ஆணுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்தத் துணிச்சல் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

அதற்கு வெறும் ஒரு அழைப்புதான் தேவைப்படுகிறது. ஓர் ஊக்குவிப்புதான் தேவை. சமுதாயத்திடமிருந்து கொஞ்சம் ஆதரவு, நண்பர்கள் தேவை.

நீங்கள் தனிமையில் இல்லை என்பதற்காக இதே பாதையில் இதே புரட்சியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களும் உள்ளனர் என்று அறிந்தால் போதும்.

-- ஓஷோ

கற்காலம் முடிந்துவிடவில்லை

மக்கள் பொதுவாக பரிணாம வளர்ச்சி அடைந்தபடி இருந்தாலும் இதில் மிகவும் சொற்பமான சிலர் மட்டும்தான் தன் அனுபவ அறிவால் சிந்தனையிலும் பேச்சிலும் நடத்தையிலும் தொடர்ந்து தங்களை முதிர்ச்சியாக வழிநடத்திக்கொண்டு சமூகத்தையும் அடுத்த பரிணாமத்திற்கு இழுத்து செல்கிறார்கள். காட்டுமிராண்டி காலம்தொட்டு வளர்ந்து வந்த எல்லா நிலையிலும் இன்றும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு புள்ளியிலும் நின்றுகொண்டு மேற்படி நகர்ந்து வராமல் வாழ்கிறார்கள்.

நகரத்தில் ஒரு 4 பேர் முன்னேறிவிட்டு உலகம் முன்னேறிவிட்டதாய் எண்ணிக்கொள்கிறார்கள். நம்புகிறார்கள்.

டெல்லியிலும் நகரங்களிலும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் தேர்தலில் வென்று அதிகாரத்தை அடைந்ததும் இந்த நாடும் முன்னேறிவிட்டதாகத்தான் எண்ணிக்கொள்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் இந்தியா விளம்பரமும் இவ்வகைதான். ஒரு விவசாயி தன் நகையை 26000 க்கு அடமானம் வைத்து ATM ல் பணம் எடுத்தபோது வராமல் போன 8000 ரூபாயைத் திரும்ப பெற 30 நாட்களாக அலைந்தும் பயனின்றி தவித்ததற்காய், இன்று ஒரு நகர வங்கியொன்றின் மேலாளரை சந்தித்து முறையிட்டும் பொறுப்பான பதில் இல்லை. மேற்படி நியாயம் கிடைக்க ஒரு புகார் மனு எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன்.

சொல்ல வருவது என்னவென்றால், கற்கால வாழ்க்கையிலிருந்து மனிதன் முன்னேறிய ஒவ்வொரு முறையான வாழ்க்கை முறையிலும் இன்னமும் ஒரு கூட்டமும் அல்லது பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சமூகம் சீரான வளர்ச்சி பெறவில்லை.

ஜாதி மதச் சண்டைகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ஊழல், அதிகார மீறல், ஏமாற்றுதல் என்ற எல்லாமும் இன்னமும் பரிணாம வளர்ச்சி பெறாத மக்களின் உதாரணங்கள்தான்.

எல்லாவிதமான நிறை குறை கொண்ட மனிதர்களுடன்தான் நாம் வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியுள்ளது.

மனிதர்களை வெறுக்காதீர்; ஒதுக்காதீர். அவர்கள் மாறுவதற்கான வாய்ப்புக்கு, ஒரு மாற்று ஏற்பாட்டுக்கு துணையாய் இருங்கள்.

இயன்றவரையில் இயற்கையை கொண்டாடுங்கள்...!

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்ன?

நண்பர்களின் புரிதலுக்காக...

ஹைட்ரோ_கார்பன் திட்டம் என்றால் என்ன?

ஹைட்ரோ கார்பன் என்பது பூமிக்கு அடியில் இருக்கக்கூடிய மீத்தேன், குருடாயில், பென்டேன், புரோட்டேன், ஈத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆக்சிஜன் பட்டவுடன் தீப் பிடிக்கக்கூடிய அனைத்து கரிம பொருட்களையும் குறிப்பிடும் சொல்தான் ஹைட்ரோ கார்பன்.

மீத்தேன் எடுப்பு திட்டம் என்பது இதில் ஒரு சிறு துளிதான்.

இதுவரை தமிழகத்தில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதா?

ONGC நடைமுறையில் எடுத்து வருகின்ற அனைத்தும் ஹைட்ரோ கார்பன் தான். ONGC எங்கெல்லாம் கால் பதித்ததோ அங்கெல்லாம் குடிக்க நீர் இன்றி, புதிய புதிய நோய்களில் மக்கள் அவைதியுருவதை நாம் பார்க்கலாம்.

விவசாயம் முற்றிலும் அழிக்கப்படும்.

இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாற்றப்படும் என்பது உறுதி. ஆகவே நாம் நடைமுறையில் உள்ள ONGC-யையும், நடைமுறைப்படுத்த உள்ள புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் விரட்டியடிக்கும் வரை போராடுவதே நம் வாழ்வாதாரங்களுக்கு பாதுகாப்பு.

இந்தியா எந்தவொரு திட்டத்தையும் தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் சோதனை செய்து பார்க்க காரணம்; செயற்திறனற்ற அட்டைகத்தித்தனமான வெறும் அறிக்கை வெளியிடுவதையும் மேடைப்பேச்சையும் மூலதனமாகக்கொண்ட, அடையாள அரசியல் நடத்தும், உண்மையான மக்கள் அக்கறையற்ற அரசியல் தலைமைகள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருப்பதே.

இந்நிலை மாறாத வரையில் / மாற்றப்படாத வரையில் மேலும் ஆபத்துகள் தொடரும்.

ஹைட்ரோ கார்பன்

உங்களுக்கு அவசரமாக தேவைப்படுகிறது என்றால், சென்னை சவுகார்பேட்டையில் இருந்து மீத்தேன் & ஹைட்ரோ கார்பன் எடுத்துக்கொள்ளுமாறு அன்புடன் ஆவலுடன் கேட்டுக்கொள்கிறோம்.

That's all your honour...

பார்ப்பன சொம்புகளின் கவனத்திற்கு

தமிழிசை / கிருஷ்ணசாமி போன்ற பார்ப்பனரல்லாத அனைத்து சொம்புகளும் கவனிக்கவும். எவ்வளவுதான் சொம்படித்தாலும் மேட்டுக்குடி சமூகத்தின் பொதுப்புத்தி இதுதான்.

1176 மதிப்பெண் எடுத்த மாணவியையும் தகுதியில்லை என்று மருத்துவம் படிக்கவிடாமல் சாகடிக்கும் ஆதிக்க வெறி பிடித்த அதிகார அரசியல் நாய்களே, 12ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் எதற்கு? பொதுத்தேர்வு நடத்துவது என்ன மயிருக்கு?

பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் ஒரு மாநிலத்திற்கும் இது அவமானமில்லையா?

ங்கோ...... எடுபிடி ஆட்சி நடத்துற நீங்க எல்லாரும் சாவுங்கடா, பொதுமக்கள்கிட்ட ஆளுக்கு ஒரு ரூபா கேட்டு 7 லட்சம் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்....

2.9.17

அனிதா MBBS

12 ஆண்டுகளாய்
நீ கற்ற கல்வி
பயனற்றுப் போனது கண்ணே...!!!

கல்வித்துறையை
மதிப்பெண்களால் காறி உமிழ்ந்த
'உனக்கா தகுதியில்லை?'
மருத்துவம் படிக்க

தமிழ்நாடு அச்சடித்த புத்தகங்களுக்கு
தகுதியில்லை
தமிழ்நாடு நடத்தும் பள்ளிகளுக்கு
தகுதியில்லை
தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு
தகுதியில்லை
பொதுத்தேர்வு நடத்தியவர்களுக்கு
தகுதியில்லை
உன் விடைத்தாளை திருத்தியவர்களுக்கு
தகுதியில்லை
இதற்கு அமைச்சனாய் இருப்பவனுக்கும்
தகுதியில்லை

தகுதியில்லாத எல்லோருமே
இன்னும்
உயிரோடுதான் இருக்கிறார்கள்
நீ மட்டும் ஏன் தங்கையே?

போய் வா கண்ணே

எங்கள் பிள்ளைகளுக்கு
உன் பெயர் சூட்டுகிறோம்
நீட்டை ஒழிக்கப் போராடுகிறோம்
அவர்களை
மருத்துவம் படிக்க வைக்கிறோம்

27.8.17

சமூகத்தின் அவமானம்

இது 2017 ம் ஆண்டு.

அதாவது அறிவியல் மிகவும் வளர்ந்து அதை அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கும் காலகட்டம். விண்வெளியை மனிதன் கைவசப்படுத்திக் கொண்டிருக்கும் காலம். பரந்து விரிந்து கிடக்கும் பூமியை மனிதன் தன் அறிவால் சிறிய பந்து போல் சுருக்கியுள்ள காலகட்டம்.

ஆனால் இங்கோ கூட்டமாய் சென்று அப்பாவி மக்களின் குடிசையை இன்னமும் ஜாதியின் பேரால் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதிவெறியை வளர்க்க கட்சிகள், தலைவர்கள், தொண்டர்கள். இத்தனை காவல் நிலையங்கள், இத்தனை நீதிமன்றங்கள் இருந்தும் இதெல்லாம் வெளிப்படையாக தொடர்ந்து நடக்கின்றன.

நாகரிகம் உள்ள, சிந்திக்கும் அறிவு உள்ள மனிதர்கள் யாரும் இதை எப்போதும் ஆதரிப்பதில்லை. இதையெல்லாம் நியாயமென்று எவன் பேசினாலும் அவன் மனித ஜென்மமே அல்ல.

தொடர்ந்து தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் தாக்கப்படுகின்றன; கொளுத்தப்படுகின்றன.

காஞ்சிபுரம் அருகே நல்லூரில் நடந்த இது ஏதோ இருதரப்பு மக்களுக்கிடையிலான பிரச்சினை மட்டுமல்ல. இன்றைய சமூகத்தின் அவமானம்.

இதைக் கண்டும் காணாமல், கண்டிக்காமல், தீர்வுக்கு வழி தேட முனையாமல், மாற்ற உழைக்காமல் எவர் தமிழ்த்தேசியம் பேசினாலும் அது ஏட்டு சுரக்காயே.

அனைத்து மக்களையும் அறிவுடையோர்களாக்கி, பூமியில் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு போக வைக்கும் கட்சியும் நற்சிந்தனை கொண்ட தலைவனும் ஆட்சியும் இங்கே ஏற்படும் காலம் எந்த காலமோ?

காட்டுமிராண்டிகளின் நாடு

"ஜாதி, மதம், பக்தி, காதல், புனிதம், பண்பாடு, கடவுள், விதி, நல்ல நேரம், கெட்ட நேரம், சூனியம், கற்பு, சொர்கம், நரகம், சகுனம், சடங்கு, முன்பிறவி, மறுஜென்மம்....

இயற்கையை தவறாக விளங்கிக்கொண்டு இப்படி எதற்கும் பயனற்ற அற்ப காரணங்களால் தினமும் நடக்கும் தனி மனித படுகொலைகளின் மூலம் இந்தியா ஒரு காட்டுமிராண்டிகளின் நாடு என்பது உறுதிபட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கே இருக்கும் கோயில்கள், கல்வி நிலையங்கள் எல்லாமும் தொழில் நிறுவனங்களாக இருப்பதன் வெளிப்பாடுதான் இது.

இந்த நாட்டின் 70 ஆண்டுகால சுதந்திரம் இன்னும் மனிதர்களை மனிதர்களாக உணர்த்தி யாவரையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்க சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. எளிய மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.

20.8.17

பார்வை மாற வேண்டும்

சாதியை ஒழிக்க வழி என்ற அம்பேத்கரின் நூலை மிக ஆய்ந்து படியுங்கள். அவர் தெளிவாக விளக்கியுள்ளார். பிற மக்களை குறை சொல்வதால் எதுவும் மாறிவிடாது. அவர்களும் ஜாதி என்ற கற்பனையில் அறியாமையில் வாழ்கிறார்கள், தொடர் அறிவு பிரச்சாரம் ஒன்றே மாற்றத்திற்கு வழி என.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமையை யாவரும் ஏற்கும் நிலையை நோக்கி வழிகோல வேண்டும். ஒரே ஜாதியில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஜாதி வெறியர்களுக்கு எதிராக திருப்பி வெறிநாய்களை தனிமைபடுத்த வேண்டும்.

இயக்குநர் ரஞ்சித் அடிக்கடி சொல்வதைப்போல "கலந்துரையாடல்" நடக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள்  மட்டும் அல்லாது யாருக்கு அநீதி நடந்தாலும் வலுவாக குரல் கொடுத்து அவர்களுக்காகவும் போராடி கலக்க வேண்டும். எல்லோரையும் பொது அநீதிக்கு எதிராக திரும்பும் மனநிலைக்கு கொண்டுவர வேண்டும். ஆதிக்க ஜாதியில் பிறந்த ஜனநாயகவாதிகளை குறைசொல்வதை விட்டுவிட்டு அந்த எண்ணிக்கையை மேலும் கூட்ட வேலை செய்ய வேண்டும். அவர்களினூடாகத்தான் அங்கு ஊடுருவ முடியும்.

விமர்சனத்தை ஆக்கப்பூர்வமாக வைப்பதே மாற்றத்திற்கான வழி.

18.8.17

இட ஒதுக்கீடு

எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா, ஆனா எனக்கு சீட்டு கிடைக்கல, என்னை விட கம்மி மார்க் எடுத்த பொண்ணு டாக்டர் சீட் கிடைச்சிருச்சு. பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு முறை வரணும்

இந்த பதிவு எழுதிய தோழருடன் அந்தபக்கம் விவாதம் ஓடுது. ஆனா அது அவர் ஒருவர் மனநிலை மட்டுமல்ல. பல சங்கிகளும் அப்படி தான் பேசிட்டு திரியுங்க

எனக்கு கிடைக்கல என்பதில் எவ்வளவு வலி. ஆனால் பல நூறு ஆண்டுகளகாக செருப்பு அணியக்கூடாது, மேல் சட்டை அணியக்கூடாது, பெண்கள் மேலாடை அணியக்கூடாது. பண்ணையம் என்னும் அடிமை தொழில் தான் செய்யவேண்டும் என்று ஒடுக்கிவைக்கப்பட்ட அந்த சமூகத்தில் ஒரு பெண் டாக்டர் ஆவது அந்த சமூகத்திற்கே எவ்வளவு வலி நிவாரணி..

எதுக்கு பல நூற்றாண்டுகளா போகனும். இப்பவும் பல கிராமங்களில் இரட்டை குவளை இருந்துட்டு தான் இருக்கு. ஒடுக்கப்பட்ட பிரிவினரை வயசு வித்தியாசம் இல்லாமல் சிறுவன் கூட பெயர் சொல்லி அழைக்கும் அவலம். சாதி பெயருடன் கெட்டவார்த்தை சேர்த்து அழைக்கும் அவலம். ஊர் தெருவுக்குள் பிணம் எடுத்துசெல்லக்கூடாது. சாமி ஊர்வலம் அவர்கள் தெருவுக்கு வராது என்று எத்தனை பிரிவினைகள்

யாரோ ஒருத்தர் பொருளாதாரரீதியா வளர்த்துட்டாருப்பா, நீங்க அந்த வீட்டில் பெண் எடுத்துக்கொள்கிறீர்களா? அல்லது பெண் கொடுக்கமுடியுமா? இப்போ உங்களுக்கு எது தடை? அதான் அவர்கள் பொருளாதாரரீதியா மேலே தானே இருக்காங்க. அப்போ தடை வேற சாதி/ அப்படி தானே. அது எந்த சாதியாக இருந்தாலும் நீங்கள் சாதி பார்ப்பீர்களேயானால் அந்த சாதிய சிந்தனை உங்களை விட்டு அகலும் வரை சாதியரீதியான இடஒதுக்கீடு இருந்தே தீரும்.

ஒரு சாதி மறுப்பாளன் ஏன் சாதியரீதியிலான இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் எங்கிறார்கள். சாதியின் பெயரால் ஒரு சமூகத்தை ஒடுக்கி வைத்து, தாழ்ந்தபட்டவர் என்ற மனநிலைக்கு தள்ளிய பொழுது அந்த புத்தி இருக்கவேண்டும். நான் சாதிமறுப்பாளனா ஆக்க்கரணமே உங்களை போன்ற ஆதிக்கசாதிவெறி பிடித்த சாக்கடைகள்

Raj Arun (வால்பையன்)

ஆன்மீகம் / அறிவியல்

ஒருவனை விஷப்பாம்பு தீண்டிவிட்டால் உடனடியாக ஆடுதீண்டாப்பாளையை தின்னக் கொடுத்து விஷத்தை முறிக்கச் செய்து அவன் உயிரைக் காப்பாற்றலாம். அதே அவனிடம் ஆடுதீண்டாப்பாளையை நினைத்துக்கொண்டே இருக்கச் சொன்னால் விஷம் முறியுமா? உயிர்தான் பிழைக்குமா?

உழைப்பவர்களும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களும்தான் இந்த பூமியின் எல்லா நல்ல / தீய விளைவுகளுக்கும் காரணம். இந்த உலகை; வாழ்க்கையை முழுமையாய் ரசிக்க மதங்களோ ஆன்மீகமோ தேவையில்லை. குறைந்தபட்ச அறிவியல் பார்வையே போதுமானது.

மத தத்துவங்கள் தங்கள் புரூடாக்களுக்கு ஒவ்வொரு தலைமுறையிலும் விதவிதமான முகமூடிகள் அணிந்துகொண்டே தப்பிப் பிழைத்து வருகிறது.

அறிவியலோ மிக நேர்மையாக தன் குறைகளை ஒப்புக்கொண்டு தன்னை புனரமைத்துக்கொண்டே இருக்கிறது.

"எண்ணங்களே வாழ்வை மாற்றும் என்பது ஆன்மீகம். எண்ணிக்கொண்டே இருப்பதனால் மட்டும் வாழ்க்கை மாறிவிடாது, அதன்மீது 'போதிய' உழைப்புச் சக்தியை செலுத்தினாலே மாறும் என்பது அறிவியல்."

அறிவியல் யதார்த்தமானது. ஆன்மீகம் யாதார்த்தத்திற்கு எதிரானது.

- வி மூ

17.8.17

'பாரதிராஜா' போலி மீட்பர்

'பாரதிராஜா' - போலி மீட்பர்
- B.R.மகாதேவன்,
பக்கம் 112, விலை 100 ரூ, நிழல் வெளியீடு.

ஒரு இயக்குநரை சந்திக்கச் சென்றிருந்தபோது அவர் அலுவலகத்தில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். படித்துவிட்டுத் தருவதாய் வாங்கி வந்தேன். வாசித்தேன்.

இதில் பாரதிராஜா அவர்கள் இயக்கிய "கருத்தம்மா, முதல் மரியாதை, மண் வாசனை, வேதம் புதிது, பதினாறு வயதினிலே" என்ற திரைப்படங்களைக் குறித்து விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் என்பது ஒரு இயக்குநரின்; கதாசிரியனின் கற்பனை உலகம். அதற்குள் சொல்லப்பட்ட நியதிகளை வைத்து மட்டும் ஒருவருக்கு பிடித்துள்ளது / பிடிக்கவில்லை அல்லது இன்னும் இப்படி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று விமர்சனம் வைப்பது தவறில்லை. ஆனால் அவர் எப்படி இப்படி யோசித்திருக்கலாம்? இப்படித்தான் யோசித்திருக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு அவர்களே தனியாக படம் இயக்கலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை.

இப்புத்தகத்தில் முன்வைக்கப்படும் சில விமர்சனங்கள் யாதெனில்...

* பாரதிராஜாவின் படங்களில் இருப்பது அசலான கிராமங்கள் இல்லை. அவரது கற்பனையில் உருவான போலியான கிராமங்கள்தான். கதாபாத்திரங்களும் அவ்வாறே. கிராமத்துப் படங்களை அவருடைய படங்களை வைத்து அளவிடுதல் கூடாது.
* 16 வயதினிலே மிக சாதாரணமான படம்.
* அவசியமே இல்லாதபோதும் ஜாதி அடையாளங்களை கதாபாத்திரங்களுக்கு வெளிப்படையாக வைக்கும் வழக்கத்தை கொண்டுவந்தது அவர்தான்.
* இரவு பகல் காலங்கள் பெரும்பாலும் அவர் படங்களில் குழப்பமாகவே காட்டப்பட்டிருக்கும்.
* எந்தப் பிரச்சினையை முக்கியமாக எடுக்கிறாரே அதை நேர்மையாக அணுகாமல் அதிலிருந்து நழுவி வேறொரு முடிவுடன் வழக்கமான தன் அருளுரையுடன் படத்தை முடித்திருப்பார்.
* கிராமங்களில் ஜாதி சார்ந்த பிரச்சினைகளே இல்லாதபடி மறைத்திருப்பார்.
* வேதம் புதிது தெளிவான சிந்தனையில்லாத படம்.
* கருத்தம்மா - சிசுக்கொலையை அழுத்திச் சொல்வதிலிருந்து விலகி நிற்கும் படம்

இப்படி பலவாறாக மேற்சொன்ன படங்களைப் பற்றி விமர்சனம் வைக்கிறார் புத்தக ஆசிரியர். வெறும் விமர்சனம் மட்டும் வைக்காமல், அப்படங்களின் மையப் பிரச்சினை எதுவோ அதை இப்படிக் கையாண்டிருக்கலாம் என்றும் எழுதியிருக்கிறார். அதில் சில நன்றாகவும் இருக்கிறது.

நாம் மிகவும் ரசித்த படங்களை ஒருவர் எந்தக் கோணத்தில் விமர்சனம் வைத்திருக்கிறார் என்று அறியும் ஆவலே இந்தப் புத்தகத்தை வாசிக்க வைத்தது. சில ஏற்புடையதாகவும் பல ஏற்கத்தக்கதல்லாததாகவும் இருக்கிறது.

பல்வேறு விமர்சன கோணங்களை விரும்புபவர்கள் ஒருமுறை வாசிக்கலாம். விரயம் ஒன்றுமில்லை.