1.10.12

திராவிடமன்றி இதை யார் செய்தது?

From Madhes on Cloudnine Facebook wall 

இன்னும் பத்து ஆண்டுகளில் வட நாட்டினரின் ஆக்கிரமிப்பு பெங்களூருவில் 75%ஐ கடந்துவிடும் என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.. இதே நிலை நம் சென்னைக்கு வர இன்னும் குறைந்தது 50 வருடங்களாவது தேவைப்படும்.. காரணம், அவர்களுக்கு (வடக்கத்தவர்களுக்கு) நம் மாநிலத்தில் மொழிப்பிரச்சினை சற்று அதிகம்.. அதனால் இங்கு இடம்பெயர சற்று தயங்குவர்.. இந்த நிலை பெங்களூருவில் இல்லை.. அங்கு பரவலாக இந்தி அதிகம் பேசப்படுவது அவர்களுக்கு ஒரு சௌகரியம்.. அஸ்ஸாமின் நிலை தெற்கத்திய மெட்ரோக்களுக்கு வரும் காலம் வெகு தொலைவிலில்லை.. நம் முன்னோர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்து வைத்த இந்தி எதிர்ப்புகளால் நம் தலைமுறை தப்பிவிட்டது... இது அரைகுறை அலசலாக தோன்றினாலும், ஆராய்ந்து பார்க்கும்போது உண்மை புலப்படும்!!

ஈழத்தைப்போல இங்கேயும்...

ஈழத்தில் இப்போது தமிழர்கள் போராடிக்கொண்டிருப்பதைப் போல நாளை வருங்காலத்தில் இங்கே நம் சந்ததியினர் இந்திக்காரர்களையும் இன்னபிற இனத்தார்களையும் எதிர்த்து உயிர் துறக்கவேண்டிய சூழ்நிலையை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கூடங்குளம் போராட்டம் தோற்கும் எனில் இது உறுதி...

கூடங்குள போராட்டக்காரர்களை அச்சுறுத்திய விமானப்படை...


உங்கள் கிராமத்தில் நடக்கும் காது குத்து, கல்யாணம், மஞ்சள் நீராட்டு, புதுக்குடித்தனம், கருமாதி... இத்யாதிகளுக்கு இங்கு மலிவான கட்டணத்தில் விமான சர்க்கஸ் செய்து காட்டப்படும். உடனே அணுகவும்....

கடலோர காவற்படை,
தமிழ்நாடு,
இந்தியா. 000 000.

( குறிப்பு : கொழும்பைத் தவிர எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளை நம்பி ஏமாறவேண்டாம் )

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

from தேடல் (In Search of ) facebook

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "தேடலின்" மனமார்ந்த நன்றிகள் ...!) — with Mani Maran.

ஒருவன் பெரியாரை கிண்டல்படுத்தி எழுதியிருந்தான் அவனுக்கு என் பதில்...

ஒருவன் பெரியாரை கிண்டல்படுத்தி எழுதியிருந்தான் அவனுக்கு என் பதில்...

"கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்று அவர் எல்லா மதத்தையுமேதான் சாடினார். பொதுவாக ஒரு மதத்தை எதிர்ப்பவர்
கள் இன்னொரு மதத்தை ஆதரிக்கிறவர்களாக இருப்பார்கள். ஆனால் பெரியார் எல்லா முட்டாள்தனங்களையுமே எதிர்த்தார். தெருவுக்குத்தெரு சிலை வைத்துவிட்டு திருவிழா நாளில் மண்டை உடைத்துக்கொள்வதும், சாதிக்கொரு சாமியும், அறிவுக்குப் பொருந்தாத கதைகளும், கடவுளின் பேரால் மதத்தின் பேரால் சாதியின் பேரால் மனிதனை மனிதன் இழிவாக நடத்துவதும் உலகில் எந்த மதத்தில் மண்டிக்கிடக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். எனக்குத் தெரிந்து பெரியாரை படிக்காதவர்களே அவரை விமர்சனம் செய்கிறார்கள். இஸ்லாமியர்களிலும் பெரியாரியவாதிகள் இருக்கிறார்கள். அவர் ஏதோவொரு இஸ்லாமிய நாட்டிலோ அல்லது கிறிஸ்தவ நாட்டிலோ பிறந்திருந்தாலும்கூட இப்படித்தான் இருந்திருப்பார். அவர் ஒரு மதத்திற்கு மட்டும் எதிரியல்ல, எல்லா முட்டாள்தனத்துக்கும் மூடப்பழக்கத்திற்குமேதான் எதிரி. காந்தியைக் கொன்ற பார்ப்பனர்கள் தன்னை ஏன் கொள்ளவில்லை என்பதற்கு அவர் சொன்னதைப் படித்துப் பாருங்கள். சில பெரியரியவாதிகளின் செய்கைகள் முட்டாள்தனமாக இருக்கலாம், அதற்கு காரணம் அவர்கள் முழுமையாக பெரியாரை படிக்காதவராகவோ, அல்லது பிழைப்புக்காக பெரியார் பெயரால் தன சுயநலத்தை மறைத்துக் கொள்பவர்களாகவோ இருக்கலாம். ஆனால் பெரியார் மகத்தான மனிதர். அறிவை விரும்புகிறவன் அறியவேண்டிய மனிதர். எத்தனைதான் தற்குறிகள் தோன்றினாலும் எக்காலத்திலும் அவர் புகழ் மங்கப்போவதில்லை.

எங்கும் எதிலும்...

"படைக்கிறவன் படைக்கிறவற்றுக்கு உண்மையாக இருத்தல் வேண்டும் - மாவோ."

# தற்காலத்தில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் விளம்பரத்திற்காக இயங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இவர்களால் மக்களுக்கு எந்தவிதத்திலும் லாபமில்லை. இவர்களைவிட சாதாரனவற்றுக்கும் எதிர்வினையாற்றும் சாமானியன் எவ்வளவோ மேலானவன்.

அமெரிக்கத் தூதரகம் முற்றுகை...!

அமெரிக்கத் தூதரகம் முற்றுகை...!

பர்மாவில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்காகவோ, சிறையில் அடைந்துகிடக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கவோ இவ்வளவு கூட்டம் கூடவில்லை. அமெரிக்காவை இங்கே எதிர்ப்பது சுலபம். இங்குள்ள ஆளுங்கட்சியை எதிர்க்க இவ்வளவு பேர் கூடுவார்களா? மக்களுக்காக முன்னுரிமை கொடுக்காமல் மதத்திற்காக கூடுவதெல்லாம் யாருக்கு பயனோ? இதே ஆவேசம் எல்லா அநியாயங்களுக்கு எதிராகவுமிருந்தால் மிக நல்லது.

இஸ்லாம் பற்றி பெரியார்...

இஸ்லாம் பற்றி பெரியார்...

முகம்மது, கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான், கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம். கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்?

- பெரியார், [14.06.1971- "உண்மை" இதழில்]

கடவுள் நம்பிக்கை என்பது உண்மையா?

கடவுள் நம்பிக்கை என்பது உண்மையா?

"கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இல்லையென்றால் மற்றவர்கள் நம்பிக்கையை ஏன் குலைக்கிறீர்கள்" என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமாகத் தெரியலாம். இதற்கு என் தாழ்மையான பதில் என்னவென்றால், "கடவுள் இருப்பதாக பலர் அறியாமல் சொல்வது எமது நம்பிக்கையை, அறிவை சீர்குலைப்பதாக இருக்கிறது", இதற்கு என்ன செய்வது?

ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள், உடல்நிலை சரியில்லை என்றால் நாம் கோயிலுக்குப் போகிறோமா? இல்லை மருத்துவமனைக்குப் போகிறோமா? நாம் எல்லோருமே பலவகைகளில் நாத்திகர்கள்தான். இதை யார் மறுத்தாலும் இதுதான் உண்மை.

மனசு வைக்குமா மழை ?!...

மனசு வைக்குமா மழை ?!...
( இதைப்பதிந்த நேரம் செப்டம்பர் 20, இரவு 2 மணி )

இந்த நேரம் சென்னையில நல்ல மழை பெஞ்சிட்டு இருக்கு. எனக்கு தூக்கம் வரல. ஏன்னா...,

எங்கப்பா 2000 வருசத்துலயும், அம்மா 2009 வருசத்துலயும் செத்துப் போய்ட்டாங்க. எங்களுக்கு கிராமத
்துல ஒரு ஆறு ஏக்கர் பூமி இருக்கு. தண்ணியில்லாத வானம் பார்த்த பூமி. எங்க தாத்தா வெட்டிவெச்ச கிணறு பாறையாப் போச்சி. மழைகாலத்துல அதுல தேங்குற தண்ணியில வருசம் ஒரு போகம் கேழ்வரகு, கம்பு, சோளம் பயிரிடுவாங்க. எங்கப்பா அம்மா உசுரோட இருக்கும்போது கடைசியா 1998 ம் வருசம் அதுல பாதி நிலத்துல நெல் பயிர் நட்டாங்க. அதுக்குப் பிறகு எங்க யாருக்கும் விவசாயம் தெரியாததால இத்தனை வருசமா எங்க நிலம் தரிசாவே கெடந்துச்சி. முள் செடிங்க அடர்த்தியா வளர்ந்து கிடக்கும். அப்பப்ப ஆளை வெச்சி வெட்டுவோம். ஊர்ல இருக்குற ஆடு, மாடுகளுக்கு இதுதான் மேய்ச்சல் இடமா இருந்துச்சி. இந்த சமயத்துல எங்க பக்கத்து நிலத்துக்காரங்க எல்லாரும் நல்ல விலை வருதுன்னு அவங்கவங்க எடத்த வித்துட்டாங்க. அத வாங்குன வாலாசாப்பேட்டை பாயி ஒருத்தரு எல்லாத்தையும் வீட்டு மனையாக்கிட்டாரு. எங்க தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா சம்பாதிச்ச எடத்த விக்க எங்களுக்கு விருப்பமில்ல. அத என்ன பண்றதுன்னும் தெரியாம அப்படியே விட்டுட்டோம். கடந்த சனவரி மாசம் ராணுவத்துல பொறியாளரா 25 வருஷம் வேலை பார்த்த அண்ணன், வேலைக்காலம் முடிஞ்சி ஓய்வுல வந்துட்டாரு. ரொம்ப சின்ன வயசுலேயே குடும்பத்த பிரிஞ்சி வேலைக்குப் போனவரு. அவரு ஒருத்தரு மட்டும் இல்லேன்னா 7 பேர் இருந்த எங்க குடும்பம் ரொம்ப தள்ளாடியிருக்கும். என்னை டிப்ளமோ மின்னணுவியலும், என் தம்பிய Msc, Mtech-ம் அவருதான் படிக்க வெச்சாரு. அடுத்தும் அரசாங்க வேலைக்கே போக நெனச்சவரு, தரிசா கெடக்குற நிலத்தை ஏதாவது பண்ணலாம்னு முடிவுபண்ணி, தண்ணி கெடைக்குமான்னு அஞ்சுதடவைக்கும் மேல சோதனை செஞ்சி பார்த்து, ஆழ்துளை கிணறு போட்டாரு. 3 எடத்துல போட்டதுல, ஒண்ணுத்துல மட்டும் 400 அடியில 1 அங்குல அளவுக்கு தண்ணி கிடைச்சிருக்கு. மழைக்காலம்தானேன்னு அந்த தண்ணிய நம்பி நிலம் முழுக்க உழுது குழி தோண்டி, மா, மாதுளம், கொய்யா, சப்போட்டா செடிகள் ஏறக்குறைய 1000 செடிகள் வெச்சிருக்கராம். எங்க நிலத்துல தண்ணி கிடைக்கனும்கிறது செத்துப்போன எங்க முன்னோருங்க எல்லாருக்கும் கனவாவே இருந்துச்சி. ஆனா வசதி இல்லாததால அவங்களால எதுவும் பண்ணமுடியாமப் போச்சி. இப்ப கிடைச்ச தண்ணியில தினமும் 200 செடிகளுக்குதான் தண்ணி பாய வெக்க முடியுதாம். எல்லா செடிகளுக்கும் ஒரு தண்ணி பாயவே ஒருவாரம் ஆகுதாம். இப்ப ஊர்ல மழையே பெய்யலையாம். ஒரு 200 செடிகள் காய்ஞ்சிட்டதுன்னும், மழை பெய்ஞ்சதும் மிச்சத்த வெக்கணும்னு சொன்னாரு. எங்க ஊருல பெய்யாத மழை இங்க இப்ப பெய்ஞ்சிகிட்டு இருக்கு. இந்த மழை எங்க ஊருலயும் பெய்யணும். எங்க அண்ணன் வெச்ச செடிங்க எல்லாம் நல்லா வளரணும். எங்க முன்னோர் காலத்துல ஒரு போகம் மட்டும் பசுமையா கிடந்த எங்க பூமி இனி எப்பவுமே பசுமையா இருக்கணும்.

மனசு வைக்குமா மழை ?!...