15.8.15

ஹிந்து மதத்தில் ஜனநாயகம்...?

ஹிந்து மதம் என்ற ஒன்று கிடையாது. எல்லா மொழியினரின் வழிபாட்டு முறையையும் ஹிந்து மதமாக்கிவிட்டார்கள். அடிப்படையில் ஒன்றை மையப்படுத்தி இயங்கமுடியவில்லை என்பதால் மதக் கட்டுப்பாட்டை விதிக்க முடியாமல் போனது. கூடவே ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொருவர் தோன்றி இந்த பார்ப்பன பெருச்சாளிகளின் ஆணிவேரை அசைத்துவிட்டார்கள். அதை மீட்கத்தான் பிஜேபி, ஆர் எஸ் எஸ் என செயல்பட்டுக்கொள்டிருக்கிறான் அவன். பிராமண ஆதிக்கத்தை காப்பாற்றிக்கொள்வதே அதன் நிஜமான நோக்கம்.

ஏன் இஸ்லாத்தில் பத்வா விதிப்பதைப்போல ஹிந்து மதத்தில் இயலவில்லை என்றால், பல கேள்விகளுக்கு இந்த மதத்தில் பதில் கிடையாது. அம்பேத்கரின் புத்த தம்மத்தை படித்துப்பாருங்கள் ஒருமுறை. குறைந்தபட்சம் இவ்வளவு அறிவுக்கு ஒவ்வாத கதைகளும் பொய்யும் ஏற்றத்தாழ்வும் இந்தளவிற்கு எந்த மதத்திலும் இல்லை. எனவே இந்த பலவீனம் பல முற்போக்காளர்களை உற்பத்தி செய்கிறது.

மசூதியிலும் தேவாலயத்திலும் அனைவரும் சமமான வழிபாடு செய்யலாம். சிறப்பு தரிசனம் இல்லை.

இது கோயிலில் மட்டும் வந்தது ஏன்? கருவறைக்குள் வரக்கூடாது என்பது ஏன்?

No comments:

Post a Comment