வலுவுடையவன் வைக்கும் தனிப்பட்ட கருத்துக்கள்தான் சமூகத்தின் பொதுக்கருத்துக்களாக மாற்றம் பெறுகிறது.
நாம் யாரை மதிக்கிறோமோ, அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள்தான் நமக்குள் பொதுக்கருத்துக்களாக உருமாற்றமடைகிறது.
யார் கருத்தையும் யார் மீதிலும் திணிக்க முடியாது. அது சாத்தியமற்றது.
கருத்து மோதல்கள்தான் உண்மைகளை வெளிக்கொணருகிறது. வரலாற்றின் போக்கை கட்டமைக்கிறது.
எக்கருத்தாயினும் ஐயம் எழும்போது அதை ஆய்ந்து கனிவோடு பரிசீலனை செய்து கேள்வியெழுப்பும் தன்மையும் உடன் இருக்கும்படிச் செய்வதே கற்றோர்க்கு அழகு.
கற்றோருக்கும் கல்லாதோர்க்கும் ஒரு கருத்துக்களும் இருக்கலாம். ஆனால் இருவருக்கும் எப்போதுமே ஒரே கருத்துக்கள்தான் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது ஒரு வகையில் அச்சத்தின் வெளிப்பாடே.
தன் கருத்துக்கள் தாக்கப்படும்போதே ஒரு மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கிறான்.
மக்களைச் சிந்திக்க வைக்காமல் மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியாது. அரசியலிலும் இப்படித்தான்.
நம் மக்களும் சிந்திக்க வேண்டுமென்றால் அவர்கள் வசமுள்ள கருத்துக்கள் தாக்கப்படத்தான் வேண்டும்.
தாக்கக் கூடாது என்றால் நம் சமூகத்தில் 'மாற்றம் வேண்டும்' என விருப்பம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
நாம் என்ன செய்யலாம்?
No comments:
Post a Comment