25.8.15

எண்ணங்களே உலகைத் தகவமைக்கிறது

மக்கள் நம்பிக்கொண்டிருப்பதைப் போல சர்வ பலம் வாய்ந்த கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால்... அப்படி இருப்பதாக எண்ணிக்கொள்வது கற்பனை.

எந்த மதத்துக் கடவுள் சரி? ஏன் இத்தனை மதங்களைப் படைத்தார் கடவுள்? நாத்திகர்களை ஏன் படைத்தார்? எல்லோருக்கும் சோதனை கொடுத்து என்ன சாதிக்கப்போகிறார் கடவுள்?

சர்வ பலம் வாய்ந்த கடவுள் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

மனிதர்களை யோக்கியனாக படைக்க இயலாத அல்லது விரும்பாத கடவுள் பாவ புண்ணியத்திற்கு பலன் கொடுப்பானேன்? சொர்க்கம் நரகம் உண்டாக்கி வைத்திருப்பானேன்?

மறுபிறப்பு என்பது பொய். நாம் மறுபடியும் தோன்றப்போவதில்லை. நிகழ்காலமே நிஜம். மற்றது யாவும் கற்பனையே.

"அவரவர் நம்பும் கடவுளின் பலம் என்பது, அவரவர் அறிவுக்கேற்ற கற்பனைத் திறனைப் பொருத்ததே"

No comments:

Post a Comment